Breaking News

இது ‘ரஜினி சர்டிபிகேட்’!

May 2, 2009 by  
Filed under Cinema

அயன் – ரஜினி தந்த சர்டிபிகேட்!

சென்சார் சர்டிபிகேட் மாதிரி… இப்போது வரும் படங்களுக்கெல்லாம் அவசியம் தேவைப்படுவது ரஜினி சர்டிபிகேட்! அந்த சர்டிபிகேட்டும் எல்லாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைத்துவிடாது… படத்தில் சரக்கு முறுக்காக இருக்க வேண்டும்!

muhurat-chitram59

சூர்யா நடித்த அயன் படத்தை கடந்த வாரம் ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, படத்தை ரசித்துப் பாராட்டியது குறித்து சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தோம்.

ரஜினி படம் பார்க்க வந்ததை ரகசியமாக வைத்திருந்தனர்.

ஒரு புகைப்படம் கூட எடுக்கவிடவில்லை. காரணம் சன் டிவியில் இந்த விஷயத்தை அயன் ப்ரமோஷனுக்காகப் பயன்படுத்த முடிவு செய்திருந்ததுதான்.

அதன்படி வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு ‘சன்’னில் அயன் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

திரையுலப் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் அயன் படத்தைப் பாராட்டினர்.

நிகழ்ச்சியின் உச்ச கட்டமாக சூப்பர் ஸ்டாரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.

அவர் கூறியதாவது:

“சன் பிக்சர்ஸ் அயன் பெண்டாஸ்டிக் படம். சிவாஜி மாதிரி பிரமாண்டமான படம். சூர்யா அருமையா பண்ணியிருந்தார். ஆக்ஷன் காட்சிகளில் பிரமிக்க வச்சிருந்தார். கேவி ஆனந்த், ஹார்ரிஸ், கலாநிதி என அருமையான டீம்.

சாதாரண படத்தையும் பிரமாதமாக தூக்கிவிடும் சன்டிவி கையில் அயன் மாதிரி ஒரு படம் கிடைச்சா எப்படி இருக்கும்… அது இந்தப் படத்தோட வெற்றியில் தெரிகிறது.

என்னுடைய வாழ்த்துக்கள்”, என்றார் ரஜினி.

அயன்… ரசித்துப் பார்த்த ரஜினி!

April 25, 2009 by  
Filed under Rajini

அயன்… ரசித்துப் பார்த்த ரஜினி!

ஏவிஎம் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அயன் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் சௌந்தர்யாவுடன் பார்த்தார்.dsc_0232

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் புதன்கிழமை மாலை ரஜினியும் சௌந்தர்யாவும் வந்தனர். ரஜினி இந்தப் படத்தைப் பார்க்கப் போகும் தகவல் படத்தின் ஹீரோ சூர்யா, இயக்குநர் ஆனந்த் யாருக்கும் சொல்லப்படவில்லை.

காரணம்… ‘பிஸியா இருப்பாங்க. விட்டுடுங்க. நான் படம் பார்த்துட்டு பேசிக்கிறேன்’ என்று ரஜினி கூறிவிட்டதுதான்.

ஆனால் ரஜினியுடன் சன் நெட்வொர்க் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா உள்ளிட்ட முக்கிய அலுவர்கள் வந்திருந்தனர்.

படத்தை ரஜினி மிகவும் ரசித்துப் பார்த்தார். குறிப்பாக, சூர்யா ஒரு ரஜினி ரசிகனாக மாறி உற்சாகமாகப் போடும் குத்தாட்டம், ஆண்டவன் ஆட்டம் என திரையில் தோன்றும் தனது படப் பெயர் போன்றவற்றை ஜாலியாக ரசித்த ரஜினி, ‘அட, இதுகூட நல்லாருக்கே…’ என்று சிரித்தாராம்.

சண்டைக் காட்சிகளில் சூர்யா எடுத்துள்ள முயற்சிகளை வெகுவாகப் புகழ்ந்த ரஜினி, படத்தின் ஒவ்வொரு காட்சியமைப்பும் தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக சன் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

உடன் வந்திருந்த சௌந்தர்யாவும் படம் மிகவும் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக உள்ளதாகப் பாராட்டினார்.

அயன் படம் குறித்த தனது கருத்தை சன் தொலைக்காட்சிக்கு சிறிய பேட்டியாகவே வழங்கியுள்ளார் ரஜினி. இதனை தனியாக விரைவில் ஒளிபரப்பவுள்ளது சன்.

சூர்யா மற்றும் கேவி ஆனந்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் ரஜினி. இதுபற்றி மேலதிக தகவல்களை ஓரிரு நாட்களில் தருகிறோம்.

அயன் – திரைப்பட விமர்சனம்

April 6, 2009 by  
Filed under Cinema

அயன் – விமர்சனம்

நடிப்பு: சூர்யா, பிரபு, தமன்னா, ஜெகன், கருணாஸ், ஆகாஷ்தீப் சைகல், பொன்வண்ணன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: எம்எஸ் பிரபு

வசனம்: சுபா

கதை, திரைக்கதை, இயக்கம்: கே வி ஆனந்த்

தயாரிப்பு: ஏவிஎம்

உரிமை & வெளியீடு: சன் பிக்சர்ஸ்

நியாயமாக இந்தப் படத்துக்குதான் குருவி என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் இயக்குநர். ஆனால் விஜய் முந்திக் கொண்டுவிட்டார். (மற்றபடி அந்தப் படத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை!)

சூர்யாவிடமிருந்து சற்றும் எதிர்பாராத ஒரு ‘க்ளாஸ் ஆக்ஷன்’ படமாக வந்திருக்கிறது அயன். மனதை சிலுசிலுக்க வைக்கும் காதல், உடலை முறுக்கேற்றும் சேஸிங்- சண்டைகள், இதுவரை தமிழ் ரசிகனின் கண்கள் பார்த்தறியாத ரம்யமான காட்சிகள்…

-நிச்சயம் இந்தக் கோடையின் முதல் உருப்படியான வரவு அயன்.

கதை புதிதல்ல… ஆனால் களமும் நிகழ்வுகளும் நிச்சயம் புதிதுதான். வழக்கமான ஆக்ஷன் மசாலாவாகவே இருந்தாலும் அதைச் சொல்லும் நேர்த்திதான் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும். அந்த வகையில், இடைவேளைக்குப் பின் இரண்டு பாடல்களில் ஹாரிஸ் ஜெயராஜ் சோதித்தாலும், சூர்யா-பிரபு-தமன்னாவின் நடிப்பு இருக்கையில் அமர வைத்து விடுகிறது.

தந்தையின் நண்பர் பிரபுவிடம் விசுவாசமிக்க ‘குருவி’யாக வேலை பார்ப்பவர் சூர்யா. எம்எஸ்ஸி கம்ப்யூட்டர் புலி. பர்மா பஜாரில் நம்பர் ஒன் கடத்தல் குழு.

திருட்டு விசிடியிலிருந்து காங்கோ வைரம் வரை கஸ்டம்ஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாகக் கடத்தி வருவதில் நிபுணர் (கேட்ச் மி இஃப் யு கேன்? …அப்ப நீங்க சினிமா புலிதான்!).

பிரபுக்கு தொழில் கற்றுக் கொடுத்தவர் ஒரு மார்வாடி. அவர் நல்லவராக இருந்தாலும் அவரது மகன் ஆகாஷ்தீப் சைகல், பிரபுவின் முதலிடத்தைப் பறிக்க முயற்சிக்கிறார்.

அதற்காக பிரபு – சூர்யாவை முடிந்தவரை போட்டுக் கொடுக்கிறார் போலீசில். ஒரு முறை அப்படி ஒரு திருட்டு விசிடி சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது, பிரபுவுக்காக போலீஸில் சரணடைகிறார் ஜெகன். வெளியில் வந்ததும் பிரபுவுக்கு இன்னொரு விசுவாசமிக்க குருவியாக மாறுகிறார். சூர்யாவும் அவரும் நண்பர்களாகிறார்கள். ஜெகனின் தங்கை தமன்னா. முதல் அறிமுகத்திலேயே, காதல் பூக்கிறது இருவருக்கும். அதை கண்டுகொள்ளாமல் விடுகிறார் ஜெகன். கண்ணெதிரிலேயே காதல் முற்ற, சந்தோஷமாக அனுமதிக்கிறார். டிக்கெட் எடுத்துக் கொடுத்து மாயாஜாலுக்கு படம் பார்க்க அனுப்புகிறார்.

அந்த தருணத்தில்தான், அவர் மார்வாடிக்காக வேவு பார்க்க வந்த குருவி என்ற உண்மையைக் கண்டுபிடிக்கிறார் சூர்யா. அந்த நிமிடமே ஜெகனை நட்பை வெட்டி விடுகிறார், கூடவே தமன்னாவின் காதலையும்.

ஆனால் அதே நண்பன் வேறொரு சமயத்தில் தன்னைப் போலவே குருவியாய் மாறி குடல் கிழிபட்டு மலேஷியாவில் உயிர்விட, பழி சூர்யா மீது விழுகிறது. காதலியே போலீசில் புகார் தருகிறார்.

அதன் பிறகு… நடப்பதையெல்லாம் இங்கேயே சொல்லிட்டா எப்படி… தியேட்டர்ல போய் படம் பார்க்க வேணாமா!

எடுத்த எடுப்பிலேயே, இந்தப் படம் ஒரு ஹைடெக் ஆக்ஷன் மசாலா என்பதைச் சொல்லிவிடுகிறது எம்எஸ் பிரபுவின் காமிரா.

தமிழ் ரசிகர்கள் பார்த்தறியாத காங்கோவிலும், நமீபிய பாலைவனத்திலும் காட்சிகள் விரியும்போது ‘அட’ சொல்ல வைக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்த பாலைவனத்துக்கு நடுவே நீண்டு செல்லும் சாலை… அந்த சாலையில் இதமாய் விரையும் திறந்த வாகனம். அதன் நடுவில் ஷாம்பெய்ன் பாட்டில்.. மெத்தைகள்… அருகில் அழகிய காதலி… ரசனைக்கார மனிதர் இயக்குநர் ஆனந்த்!

அதேபோல காங்கோ நாட்டின் நிலையற்ற அரசியல் சூழலையும் மக்கள் வாழ்நிலையையும், இந்த நெடும் படத்துக்குள் ஒரு குறும்படமாய் காட்சிப்படுத்திய விதம் கமர்ஷியல் ஆனந்துக்குள் புதைந்துள்ள இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டுகிறது.

கோடையில் கல்லூரி விடுமுறைக்கு முந்தைய இனிய அவஸ்தைகள் மாதிரி, தமன்னா-சூர்யா காதல் காட்சிகளில் கவிதையும் இளமையும் வழிகிறது.

அதேநேரம் ஆப்ரிக்க முரடர்கள் துரத்தும் அந்த மூன்று நிமிட சேஸிங் காட்சி தமிழில் இதுவரை வராதது. மாற்று நடிகர்களை வைத்துக் கொள்ளாமல் இந்தக் காட்சியில் சூர்யா செய்திருக்கும் சாகஸம் அவரது திறமைக்கு இன்னுமொரு சான்று.

இப்படி பாராட்ட நிறைய உண்டு…

ஆக்ஷன் காட்சிகளில் ஒரு நடிகர் எப்படி தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதை சூர்யாவைப் பார்த்து இன்றைய இளம் நாயகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ‘ஒரு நல்ல ஆக்ஷன் நடிகர் ரிஸ்க் எடுக்க தயங்கக் கூடாது… ஆனால் பாதுகாப்பு முக்கியம்!’ என்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி. சூர்யா அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.

விமானத்தில், உடன் வரும் ‘பீட்டரிடம்’ ஹைடெக் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவதிலாகட்டும், அடுத்த நொடியே ரஜினியின் ‘ஆண்டவன் ஆட்ட’ கட்அவுட்டுக்கு முன் பக்கா லோக்கலாக இறங்கி ஆடுவதாகட்டும்… கிடைத்த இடத்திலெல்லாம் சிக்ஸர் அடிக்கிறார் சூர்யா!

நடிப்பு, தோற்றம் இரண்டிலுமே தமன்னாவிடம் நல்ல முன்னேற்றம். அசின், நயன்தாராக்களுக்கு நல்ல மாற்று. அவர்கள் வகித்த இடத்துக்கும் தகுதியான பெண்தான்.

கலைந்த தலை, ஒரு வார தாடி, மனம் நிறைந்த அன்புடன் வரும் பிரபுவைப் பார்க்கும்போது ஏனோ மனம் நிறைவாய் உணர்கிறது. பொருத்தமான தேர்வு. உனக்கும் எனக்கும் படத்துக்குப் பின் மனம் கவரும் இன்னொரு அழுத்தமான பாத்திரம்.

ஜெகனுக்கு நல்ல வாய்ப்பு… சரியாகப் பயண்படுத்திக் கொண்டிருக்கிறார். கருணாஸ் கண்கலங்க வைக்கிறார், அந்த ஒரே காட்சியில்.

கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன் மீண்டும் தன்னை ஒரு பண்பட்ட நடிகராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்னும்கூட பொருத்தமான ஒருவரை போட்டிருக்கலாமே என்று சொல்ல வைக்கிறது வில்லன் ஆகாஷ்தீப் சைகலின் சுமாரான நடிப்பு.

ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபுவும் எடிட்டர் ஆண்டனியும் கேவி ஆனந்தின் இடது வலது கரங்கள் மாதிரி… கச்சிதமான வேலை!

இரண்டு பாடல்கள் ரசிக்க முடிகின்றன. அது கூட அந்த வித்தியாசமான நடன அமைப்பு மற்றும் காட்சிகளுக்காக. மற்றபடி ஹாரிஸ் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். பின்னணி இசையில் ‘தம்’ போதாது சாரே!

இப்போது கூட தாமதமில்லை, இடைவேளைக்குப் பின் வரும் இரண்டு பாடல்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் வெட்டி வீசலாம்…!

மற்றபடி சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள், இடைவேளைக்குப் பிந்தைய மெதுவான நகர்வு இவற்றைத தவிர பெரிதாக எந்தக குறையும் இல்லாத படம். இரண்டரை மணிநேரம் எந்தக் கவலையும் இல்லாமல், ரசித்து அனுபவிக்க தைரியமாகப் பரிந்துரைக்கலாம்.

இதுவரை சன் பிக்சர்ஸ் மார்க்கெட்டிங் செய்ததிலேயே உருப்படியான படமும்கூட!

பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்!

-சாம்

அசத்தும் ‘UNCENSORED’ அயன்!

March 25, 2009 by  
Filed under சும்மா தமாசு

அசத்தும் UNCENSORED அயன் ஸ்டில்கள்!!

ஹிஹிஹி… சும்மா தமாசு!

இது ஃபாரின் அயனுங்னா…

இது லோக்கலுங்ணா…

இது… கோலிவுட் ‘அயனு’ங்னா… இப்படியும் தேய்க்கலாம்…

இல்ல…

இப்படியும் தேய்ச்சுக்கலாம்!

ஹிஹிஹி… :)

Related Posts with Thumbnails