Breaking News

‘தெய்வத்தைப் பார்த்து ஆசி பெற்றுவிட்டேன்!’ – தூத்துக்குடி ரசிகரின் பரவசம்

தெய்வத்தைப் பார்த்து ஆசி பெற்றுவிட்டேன் – தூத்துக்குடி ரசிகரின் பரவசம்

msc P2_1 copy

மீபத்தில் (பிப்ரவரி 16) தலைவர் ரஜினியை அவரது ராகவேந்திரா திருமண மண்டப அலுவலகத்தில் சந்தித்து ஆசி பெற்றார் தூத்துக்குடி ரசிகர் பி கணேசன்.

தலைவரைப் பார்த்துவிட்டு வந்த பரவசத்தில் அவர் சொன்னது..

‘நம் தெய்வத்தைப் பார்த்து, ஆசி பெற்றுவிட்டேன்.. வாழ்வில் மறக்க முடியாத பாக்கியம் இது!”

-என்வழி ஸ்பெஷல்

சொர்க்கமும் நரகமும்…! – சூப்பர் ஸ்டார் சொன்ன குட்டிக் கதை -5

December 15, 2012 by  
Filed under Celebrities, Entertainment, Rajini

சொர்க்கமும் நரகமும்…! – சூப்பர் ஸ்டார் சொன்ன குட்டிக் கதை -5

சென்னை: இந்த உலகில் உண்மையான சொர்க்கமமும் நரகமும் வெளியில் எங்கும் இல்லை, அவரவர் குடும்பத்தில்தான் இருக்கிறது, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினி, ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகையில் ஒரு குட்டிக் கதையை குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், “நண்பர்களே… இந்த உலகத்தில் யார் ஒருத்தன் வீட்டை, பெற்றோரை நல்லா வச்சிருக்கானோ அவன் சொர்க்கத்துல இருக்கான்னு அர்த்தம்.

எமலோகத்தில், எது சொர்க்கம் எது நரகம்னு ஒரு பேச்சு வந்தப்போ, எமன் சொன்னாராம், பூலோகத்துல போய்ப் பாருங்க, உங்களுக்கே தெரியும்னு சொல்லி தன்னோட அஸிஸ்டன்ஸை (கிங்கரர்கள்) அனுப்பி வச்சாராம்.

அவங்களும் பூமிக்கு வந்தாங்களாம். ஒரு வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்க பார்த்தா வீடே நிம்மதி இல்லாம இருக்கு. பிள்ளைங்க திட்டிக்கிறாங்க. அந்த அப்பா அம்மாவை திட்டறாங்க. ஒரே சண்டை, சச்சரவு…  குடும்பத்தினர் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்களாம். கிங்கரர்களால் ஒரு செகன்ட் கூட இருக்க முடியல. இதான் நரகம்னு காட்டினாங்களாம். அடுத்து இன்னொரு வீட்டுக்குப் போய் பார்த்திருக்காங்க.

அங்கே பெத்தவங்களுக்கு அவ்வளவு மரியாதை. குடும்பமே அன்போட, பண்போட நடந்துக்கறாங்க. இதான் சொர்க்கம்னு சொன்னாராம் எமன்.

ஆக, நரகமோ சொர்க்கமோ… அது நம் வீட்டை நாம் வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. எனவே குடும்பத்தைக் கவனியுங்கள்.

அதனால்தான் என் பிறந்த நாளை ஒவ்வொரு ரசிகரும் தன் தாய் தந்தையரை விழுந்து வணங்கி கும்பிட்டு கொண்டாடினால் மகிழ்வேன் என்றேன்,” என்றார்.

-வினோ
என்வழி ஸ்பெஷல்

வருகிறார் தலைவர்… மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திக்கிறார் – எஸ்பி முத்துராமன் தகவல்!

July 22, 2011 by  
Filed under Rajini

வருகிறார் தலைவர்… மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திக்கிறார் – எஸ்பி முத்துராமன் தகவல்!

 

சென்னை: புதிய அவதாரமெடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரசிகர்களின் பல நாள் கனவை விரைவில் அவர் நிறைவேற்றப் போகிறார்.

இத்தனை நாளும் தலைவர் தங்களைப் பார்ப்பாரா என ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இனி மாவட்டம்தோறும் அவரே வந்து ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார்.

இந்த தகவலை ரஜினிக்கு மிக நெருக்கமான இயக்குநர் எஸ்பி முத்துராமன் நேற்று திருப்பூரில் அறிவித்தார்.

தலைவர் ரஜினி உடல் நலம் பெற்றுள்ளதை அடுத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் உள்ள சாமுண்டிபுரம் ரஜினிகாந்த் திருமண மஹாலில் நடந்தது.

இந்த விழாவை திருப்பூர் மாவட்ட தலைமை ரஜினி நற்பனை மன்றம் மற்றும் மாநகர, ஒன்றிய, கிளை மன்றங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

திருப்பூர் தலைமை மன்ற செயலர் எம் ரவிக்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அவர் பேசும்போது, “ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.

ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள்தான் தெய்வங்களாக நின்று காத்தார்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார்.

ரஜினிகாந்த் கேமிராவுக்கு முன்பு நன்றாக நடிப்பார். கேமிராவுக்கு பின்னால் மற்றவர்களை போல அவருக்கு நடிக்கத் தெரியாது. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடிகிறது. ரசிகர்கள் அனைவரும் மனம் மகிழும் வண்ணம் அவர் பல புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார்,” என்றார்.

-இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான செய்தி, என்வழிக்கு ராஜ்பகதூர் அளித்த பேட்டி மற்றும் படங்கள் விரைவில்…

-என்வழி ஸ்பெஷல்

தலைவர் ரஜினி- ரசிகர் சந்திப்பு… ஒரு கற்பனை பேட்டி!

July 16, 2011 by  
Filed under Fans Activities

தலைவர் ரஜினி- ரசிகர் சந்திப்பு… ஒரு கற்பனை பேட்டி!

ண்பர்களே, பலமுறை என்னை வியக்க வைப்பது ரஜினி ரசிகர்களின் அபார எழுத்துத் திறன். ஒரு தொழில்முறை எழுத்தாளனைக் கூட திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு பிரமாதமாக எழுதுகிறார்கள்.

நேற்று நமது தளத்தில் கமெண்ட் பகுதிக்கு வந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பை இங்கே தருகிறேன்.

தலைவர் வந்துவிட்டார், அடுத்து எப்போது ரசிகர்களைப் பார்ப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கையில், நமது ரசிகர் ஒருவர் ‘தலைவர் – ரசிகர் சந்திப்பை’ கற்பனையிலேயே நடத்தி முடித்துவிட்டார்.

சந்திப்பு கற்பனைதான் என்றாலும், தலைவரும் ரசிகர்களும் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பதை அவர் எழுதியிருக்கும் விதம்… ரசிகர்களின் உணர்வில் ரஜினி எந்த அளவு ஊறிப் போயிருக்கிறார் என்பதற்கு ஒரு சாம்பிள்!

அதிலும் இதில் தலைவர் சொல்வது போல வரும் ஒரு குட்டிக்கதை மிகப் பொருத்தம். இதை எழுதிய எப்பூடி-க்கு வாழ்த்துகள்  (அனுப்பிய ராம்ஸுக்கும் நன்றி)

இனி அந்த கற்பனை சந்திப்பு….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் சமயத்தில் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளும் அதற்கு ரஜினிகாந்த் கொடுக்கும் பதில்களும் என் கற்பனையில். (ரஜினியைப் பிடிக்காதவங்க தயவு செய்து இப்பவே எஸ் ஆயிடுங்க, அப்புறம் உங்க வயிறு மற்றும் ‘பிற’ பாகங்களில் ஏற்படும் எரிவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல)

ரஜினி இரு கைகளையும் தலைமேல் கூப்பி வணங்கியபடி உள்ளே வருகிறார், ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கிறார்கள் (சில நிமிடங்களில் அமைதி)…

ரஜினி : எப்டி இருக்கிறீங்க ராஜாக்களா?

ரசிகன் : நீங்க எங்க முன்னாடி நேர்ல நிக்கிறதை பாக்கிறப்போ எங்களது இப்போதைய மனநிலை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது, இப்ப உங்க உடல்நிலை எப்படி இருக்கு ?

ரஜினி : உங்க வேண்டுதலாலும், மருத்துவர்களின் அக்கறையாலும், குடும்பத்தவர்களின் அரவணைப்பினாலும், அந்த ஆண்டவனோட ஆசியினாலும் ரொம்ப நல்லாயிருக்கேன்.

ரசிகன் : சிங்கப்பூர்ல ஓய்வெடுத்ததையும், இப்போ சென்னைக்கு திரும்பியதையும் எப்பிடி ஃபீல் பண்ணிறீங்க தலைவா?

ரஜினி : ம்ம்ம்.. சிங்கப்பூர்ல ரெஸ்ட் (Rest) எடுத்தது அழகிய பூங்காவில ஓய்வெடுத்த மாதிரியும், இப்ப சென்னையில வந்திறங்கியது அம்மா மடியில தலைவைச்சு படுத்திருக்கிற மாதிரியும் தோணுது.

ரசிகன் : உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போகுமின்னு எந்த ரசிகனுமே எதிர்பார்க்கல, எல்லோருமே உங்களை ஒரு Magic Man ஆகவே பார்க்கிறார்கள், யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போனதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

ரஜினி : ஹ…. ஹஹா…… இதுக்கு எப்டி பதில் சொல்றது, யெஸ்; இப்படி உடம்புக்கு முடியாம போகுமின்னு நான் நினைக்கல, பட் எது வந்தாலும் அதை தைரியமா ஃபேஸ் பண்ணித்தானே ஆகணும் ஹ…ஹஹா….

ரசிகன் : சிங்கப்பூருக்கு போறதுக்கு முன்னாடி உங்க வாய்ஸை எங்களுக்காக ஆடியோவா கொடுத்தீங்க, அந்த வாய்ஸை கேட்டு கலங்காத எந்த ரசிகனுமே இருக்க மாட்டான்; அந்த நிலையிலயும் “பணம் வாங்கறேன் ஆக்ட் பண்றேன், அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கனா… உங்களுக்கு நான் என்னத்த கொடுக்கிறது” என்று சொன்னீங்களே சார், உங்களை மாதிரி ஒரு மனிதனுக்கு ரசிகனா இருக்க நாங்கதான் குடுத்து வைத்தவர்கள், நாங்க உங்ககிட்ட எதையுமே எதிர்பார்க்கல, நீங்க நல்லாயிருந்தா அதுவே போதும்.

ஜினி : நோ…. நோ …. ஒரு வருசமா? இரண்டு வருசமா? 35 வருசமா என் கூடவே இருக்கிறீங்க, என் மேல நீங்க பிரியமா இருக்கிறது எனக்கு தெரிஞ்சதுதான், ஆனா எனக்கு உடம்புக்கு முடியாம போனப்போ நீங்க பட்ட அவஸ்தையை அறிந்தபோது என் மனதில தோன்றியதைத்தான் நான் சொன்னேன். நிச்சயமா என் ரசிகர்கள் பெருமைப்படுறமாதிரி நான் நடந்துப்பேன்; கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கண்ணுங்களா…

ரசிகன் : எங்களுக்கு எப்பவுமே உங்க ரசிகர்கள் என்கிறதில பெருமைதான், அதிலும் நாங்க உங்க கிட்ட வியந்து நோக்கும் ஒரு விஷயம், உங்களை வலிந்து சிலர் சீண்டும்போதும் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் புன்னகைதான்!! எப்டி தலைவா உங்களால மட்டும் முடியிது ?

ரஜினி : ஹ…. ஹஹா..

ரசிகன் : நீங்க நோயில் இருந்து மீண்டதற்கு ரசிகர்களின் பிரார்த்தனைதான் முக்கிய காரணம் என்று கூறியதற்கு, சில நாத்திகர்கள் ‘அப்புறம் எதுக்கு மருத்துவமனைக்கு சென்றீர்கள்’ என்று கேட்டார்கள்; அதற்க்கு உங்களுடைய பதில்தான் என்ன?

ரஜினி : ஒரு குட்டிக்கதை; ஒரு ஊர்ல ஒருத்தனுக்கு கடவுள் பேர்ல ரொம்ப பக்தி, எல்லாமே கடவுள் பாத்துக்குவாரெங்கிறது அவன் வாதம். ஒருநாள் மிகப்பெரிய வெள்ளம் ஊருக்க வந்திச்சு; ஊர்ல எல்லோருமே குடி பெயர்ந்தாங்க, இவன் மட்டும் கடவுள் காப்பாத்துவார் என்று சொல்லி அங்கேயே இருந்தான். அவன் காலளவில் வெள்ளம் வரும்போதும், இடுப்பளவில் வெள்ளம் வரும்போதும், கழுத்தளவில் வெள்ளம் வரும்போதும் பலபேர் அவனை தங்க கூட தப்பிச்சு வருமாறு கேட்டும் அவன் அசையவே இல்லை ‘என்னை கடவுள் காப்பாத்துவாரு’ என்று சொல்லி சொல்லி கடைசியில இறந்தே போனான்.

இறந்தவன் நேரா கடவுள் கிட்ட போயி ‘உன்னை எவளவு நம்பினன் என்னை எமாத்தீட்டியே’ன்னு கேட்கிறான்.

அதுக்கு கடவுள் சொல்றாரு, ‘பூமியில உள்ள எல்லாருக்குமே நான் நேரில் சென்று உதவுவது சாத்தியமா? உனது வேண்டுதலை ஏற்று உன்னை காப்பாற்றுவதற்காக நான் அனுப்பிய கருவிகள்தான் உன்னை காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு வெள்ளத்தில் மீட்க்கவந்த மனிதர்கள். நீ அவர்களை ஏற்றுக்கொள்ளாதது உன் தவறன்றி எனதல்ல,’ என்றார்.

அதேபோலத்தான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் அனுப்பிய கருவிகள்தான் மருத்துவமனையும், டாக்டர்களும். உங்களது பிரார்த்தனை மட்டுமே என்னை காப்பாற்றும் என்று நான் வீட்டிலே இருப்பது வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனது செயலை போலல்லவா ஆகிவிடும்!!

ரசிகன் : ராணா?

ரஜினி : கண்டிப்பா ராணா வருவான், கொஞ்சம் லேட்டாகினாலும் லேட்டஸ்டா வருவான், ஹ…. ஹஹா……

ரசிகன் : அதிமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் எங்களுக்காக நீங்க சிரமப்படவேண்டாம், நீங்க ஸ்கிரீன்ல வந்தாலே போதும், உங்க உடல்நிலை எங்களுக்கு ‘ராணா’விற் பெரிது.

ரசிகன் : நீங்கள் எங்களிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?

ரஜினி : கேள்வியல்ல ஒரு ஆச்சரியம்தான்; ஹ…. ஹஹா…… இவளவு கேள்வி கேட்டீங்க, அரசியலை பற்றி எதுவுமே கேட்கல; அதுதான் ஆச்சரியம்!! ஹ…. ஹஹா…..

ரசிகன் : எங்களுக்கு இப்ப முக்கியம் உங்க உடல்நிலைதான், அரசியலுக்கு வருவது என்பது சாதாரண விMயமல்ல என்பது எங்களுக்கும் புரியுது. எல்லாத்திற்க்குமே ஒரு நேரம் வரவேண்டும், நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான்.

ரசிகன் : இறுதியாக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ரஜினி : உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று தெரியல, ஆனா டெஃபினட்டா (Definite) நான் ஏற்க்கனவே சொன்ன மாதிரி நம்ம ஃபான்ஸ் (Fans) எல்லோருமே தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி ஏதாவது பண்ணுவேன். எல்லாருமே ஃபர்ஸ்ட்டு (First) உங்கள கவனியுங்க, அப்புறம் உங்க குடும்பத்தை கவனியுங்க, நல்லதே நினைங்க, நல்லதே செய்யுங்க… எல்லாமே நல்லதா அமையும், ஆண்டவன் இருக்கான், God bless You!

(ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டி அடிக்கிறார்கள்!)

-என்வழி

‘ரசிகர்களை மதிக்கும் ரஜினி, பிறந்த நாளுக்குக் கூட அழைப்பதில்லையே… சரியா?

December 12, 2010 by  
Filed under Questions

பொதுவாக ரஜினியின் பிறந்த நாளன்று வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள் இரண்டு…

ஏன் இந்த ஆண்டும் ரசிகர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் ரஜினி… ரசிகர்களை மதிக்கும் அவர், தன் பிறந்த நாளுக்குக் கூட அழைப்பதில்லையே… இது சரியா?

இதற்கு ஏற்கெனவே இரு வேறு சந்தர்ப்பங்களில் ரஜினி கூறியிருப்பதை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்:

ரசிகர்: ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?

ரஜினி: பாருங்க… வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். சராசரியா ஆளுக்கு 400 ரூபாய் என்றால் கூட இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ட். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொது மக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை. (1995 தூர்தர்ஷன் பேட்டி)

தங்கள் பிறந்த நாளன்று தங்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

ரஜினி: என்னோட பிறந்த நாளன்னிக்கு, நான் ஏன் பிறந்தேன்னு யோசிக்க எனக்கு நேரம் வேணும். அன்னிக்குதான் தனிமையில உட்கார்ந்து நான் அதைப் பத்தி யோசிப்பேன். அதனால அன்னிக்கு என்னைப் பார்க்கறது ரொம்ப கஷ்டம்… (2008, நவம்பர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு)

-ரஜினியை, அவரது பிறந்த நாளன்று பார்க்க முடிவதில்லை, அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள முடியவில்லை என ஏங்கும் ரசிகர்களுக்காக ரஜினி இருவேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ள பதில் இது!

இந்த பிறந்த நாளன்று எங்கிருப்பார் ரஜினி?

அது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அப்படியே தெரிந்தாலும், அவர் ரகசியமாக இருக்கட்டும் என்று நினைப்பதை வெளியிடுவது சரியல்லவே!

-என்வழி

Related Posts with Thumbnails