நீதானே என் பொன்வசந்தம்: இளையராஜா- கவுதம் மேனனின் 30 நொடி மாஜிக்!
February 16, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, Videos
நீதானே என் பொன்வசந்தம்- 30 நொடிகளில் கிறங்கடித்த ட்ரெயிலர்!
எப்போது விழுந்தோம்… என்பதே தெரியாத அளவுக்கு கிறங்கடிக்க வைக்கும் இரண்டு விஷயங்கள்… காதலும் இசையும்!
இந்த இரண்டும் நம்மைத் தழுவும் நேரமெல்லாம் அந்த கிறக்கத்திலேயே கிடந்துவிடலாம் போலிருக்கும். இளையராஜா – கவுதம் மேனன் கூட்டணியின் முதல் படமான நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ் – தெலுங்கு ட்ரெயிலர்கள் இளஞர் சமுதாயத்தை இன்ப அதிர்வுக்குள்ளாக்கியுள்ளன என்றால் மிகையல்ல.
தமிழ் ட்ரெயிலரில், ‘நீதானே என் பொன்வசந்தம்’ பாடலின் ஆரம்ப வரிகள் பேஸ் கிடாரில் இசையாய் வழிய, மனசுக்கு அப்படியே ஜிவ்வென்றாகிவிடுகிறது.
‘ஏதோ வெல்லிப்போயிந்த மனசு’ தெலுங்கு ட்ரெய்லரில் கண்மணி அன்போடு பாடலின் இசை. கொடைக்கானலின் குளுமை தலையிலிறங்குவது போன்ற பரவசம்.
தமிழில் ஜீவா – சமந்தா, தெலுங்கில் நானி – சமந்தா நடிக்கும் இந்தப் படம், இந்தியிலும் உருவாக்கப்படுகிறது. மூன்று மொழிகளிலுமே இளையராஜா இசையமைக்கிறார்.
காட்சியமைப்பும், அந்த இசையும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டின் மனதை வருடும் இசையாக, காதலைக்கொண்டாடும் படமாக நீதானே என் பொன்வசந்தம் அமையும் என்பதற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளன இந்த ட்ரெயிலர்கள்!
தமிழ்
தெலுங்கு
-என்வழி ஸ்பெஷல்











அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்


