Breaking News

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ‘பெப்பே’ காட்டும் ப்ளாக்பெர்ரி!

October 19, 2011 by  
Filed under வணிகம்

உலகெங்கும் 100 டாலர் இலவசம்… ஆனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுமில்லை – ப்ளாக்பெர்ரியின் மோசடி!

டந்த வாரம் தொடர்ந்து மூன்று தினங்கள் ப்ளாக் அவுட் ஆனது ப்ளாக்பெர்ரி. இந்த நாட்களில் அந்த செல்போன் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

காரணம், மின்னஞ்சல், வங்கிப் பரிவர்த்தனைகள், ஃபேஸ்புக் என பல்வேறு பயன்பாடுகளுக்கும் இவர்கள் இந்த ப்ளாக்பெர்ரியை மட்டுமே நம்பியிருந்ததுதான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு படிப்படியாக ப்ளாக்பெர்ரி சேவைகள் பழைய நிலைக்குத் திரும்பின. ஆனால் இந்த மூன்று நாட்களும் பட்ட அவதியை எப்படி ஈடுகட்டுவது? வாடிக்கையாளர்கள் பொறுமையோடு இதை சகித்துக் கொண்டதற்கு என்ன பரிசு?

இதற்கு உடனடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது ப்ளாக்பெர்ரியைத் தயாரித்து வழக்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம். அதன்படி உலகமெங்கும் உள்ள தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 100 டாலர்கள் இழப்பீடாக வழங்குவதாகக் கூறியது. இந்த இழப்புத் தொகை பணமாக இல்லாமல், செல்போனில் சார்ஜ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் ப்ளாக்பெர்ரி சேவை வழங்கும் டெலிபோனிகா நிறுவனம் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் கட்டணத்தைக் கணக்கிட்டு வாடிக்கையாளர் கணக்கில் சேர்த்துவிட்டது.

யுஏஇ நாட்டில் இந்த சேவையை அளிக்கும் எடிசாலட், சேவை பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளதோடு, கூடுதலாக மூன்று தினங்களுக்கு இலவசமாக சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூன்று நாட்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளன.

ஆனால், ப்ளாக்பெர்ரி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் போன்றவர்கள் மட்டும் இந்த இழப்பீடு பற்றி வாயைத் திறக்க மறுக்கிறார்கள்!

இத்தனைக்கும் யுஏஇ போன்ற நாடுகளில் உள்ளதை விட இரு மடங்கு ப்ளாக்பெர்ரி வாடிக்கையர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏர்டெல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கு எந்த வகையில் நஷ்ட ஈடு தரப்போகிறார்கள் என்பதை இதுவரை அறிவிக்கவே இல்லை.

இதுகுறித்து ப்ளாக்பெர்ரி நிறுவனத்திடம் விசாரித்தபோது, பதில் கூறாமல் மழுப்பியுள்ளனர். எங்கள் பார்ட்னர் நிறுவனங்களோடு தொடர்புடைய விஷயங்களை  பேசுவதாக இல்லை என்று மட்டும் பதில் கூறிவிட்டது அந்த நிறுவனம்.

வோடபோன் நிறுவனமும் இதுகுறித்து எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் சண்டைபோட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு மட்டும் இழப்பீடாக மூன்று ப்ளாக்பெர்ரி செட்களை கொடுத்து அமைதியாக்கிவிட்டார்களாம். அந்த நிறுவனம் அதிக அளவில் வோடபோன் ப்ளாக்பெர்ரியை பயன்படுத்தியதால் இந்த சலுகையாம்!

ஏர்செல், ரிலையன்ஸ் போன்றவையும் ப்ளாக்பெர்ரி சேவை அளித்தாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையர் இருப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.

ப்ளாக்பெர்ரியின் வருமானம் அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளில் குறைந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வருவாயைக் கொட்டும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அந்த நிறுவனம் பெப்பே காட்டியுள்ளது எந்த வகை நியாயம் என்கிறார்கள் ப்ளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள்!

நன்றி: தட்ஸ்தமிழ்

தியேட்டர் இல்லை, நஷ்ட ஈடு தொல்லை, வெளிநாட்டில் முட்டுக்கட்டை, பலமிக்க சக்திகளின் மிரட்டல்… பெரும் சிக்கலில் காவலன்!

January 7, 2011 by  
Filed under Popcorn

தியேட்டர் இல்லை, நஷ்ட ஈடு தொல்லை, வெளிநாட்டில் முட்டுக்கட்டை… பெரும் சிக்கலில் காவலன்!

ன் திரையுலக அனுபவத்தில் இப்படியொரு நெருக்கடியை முன்னெப்போதும் சந்தித்திருக்கமாட்டார் விஜய். காவலன் படம் அவ்வளவு சோதனைகளை அடுக்கடுக்காக அவருக்கு ஏற்படுத்தி வருகிறது.

சென்சார் சான்று வாங்கி, படம் தியேட்டரைத் தொடும் இந்த நேரத்திலும் பெரும் சிக்கலில் மாட்டி திணறுகிறது காவலன்.

தனது முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான ஈட்டுத் தொகையை விஜய் தந்தால்தான் காவலனை ரிலீஸாக விடுவோம். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என அறிவித்துள்ளது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

இந்த சங்கத்தின் அவசரக் கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது. துணை தலைவர் நாராயண சாமி தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் பேசிய, சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், “விஜய்யின் ஆறு படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளன. ஆனால் நாங்கள் கேட்பது அவரது சுறா படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்துக்கு மனிதாபிமான முறையில் பொறுப்பேற்று நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதைத்தான். எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை இதுவரை விஜய் ஏற்கவில்லை. அப்படித் தராவிட்டால் காவலனை ரிலீஸ் பண்ணவே விடமாட்டோம்,” என்றார்.

மேலும் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான வேலாயுதம், சீமான் இயக்கும் பகலவன் படங்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

விஜய்க்கு ஆதரவாக செயல்படும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நோக்கங்களுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் செயல்படும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் புதிய திரைப்படங்களுக்கு தமிழகம் முழுவதும் தொழில் ரீதியாக எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான். காவலனின் என்எஸ்ஸி வெளியீட்டாளரும் அவரே.

தியேட்டர்கள் இல்லை

இன்னொரு பக்கம், படத்துக்கு நிதி வழங்கிய பைனான்ஸியர்கள் உடனடியாக பணத்தை செட்டில் செய்தாக வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.

வட தமிழகம், சென்னை போன்ற பகுதிகளில் இந்தப்படத்துக்கு ஒரளவு திரையரங்குகள் கிடைத்தாலும், தென் மாவட்டங்களில் இதுவரை 10 திரையரங்குகள் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ‘மிகப் பலம் வாய்ந்த சக்திகள்’ அத்தனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக காவலன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிகள் காரணமாக, தனது வேக வேகமான அரசியல் நகர்வுகளை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார் விஜய். அதிமுக, ஜெயலலிதா, அரசியல் கட்சி துவக்கம் போன்றவை குறித்து அவர் இப்போது வாய் திறப்பதே இல்லை. இதுகுறித்து அதிகம் பேசி வந்த அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகரனும் அமைதியாகிவிட்டார்.

வெளிநாடுகளிலும் காவலனுக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். மன்மதன் அம்புவின் பெரும் தோல்வி காரணமாக, இப்போதைக்கு புதிய படங்களை அதிக விலைக்கு வாங்க வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

காவலனின் வெளிநாட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு இன்னொரு முக்கிய காரணம் அசின் விவகாரம்.

இந்த பொங்கலுக்கு காவலன் வெளியாக வேண்டுமானால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பேசித் தீர்க்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காவலன் நிலை கேள்விக்குறியதாகிவிடும்!

அஜீத் – விஜய் சந்திப்பு!

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.  ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் ரஜினி – கமல் பாணியில் நட்பு பாராட்டிக் கொள்கிறார்கள்.

இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போதைக்கு அதிமுக அனுதாபிகள் என்ற அழுத்தமான முத்திரை இருவர் மீதும்.

அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்.

இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது உடனிருந்த மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு சட்டென்று இந்த சந்திப்பை புகைப்படத்தில் பதிவு செய்து, தனது பேஸ்புக் – ட்விட்டரிலும் அப்லோட் செய்ய, அடுத்த நாள் பரபரப்பான செய்தியானது. பிஆர்ஓ இல்லாமலேயே நல்ல பப்ளிசிட்டியும் கிடைத்தது!

-என்வழி

Related Posts with Thumbnails