கடிதம் ரெடி… கலவரத்தில் ஹீரோக்கள்!
June 29, 2010 by The Editor
Filed under Popcorn
மணிரத்னம் புது படம் பூக்கூடை!
ராவணன் தோல்வியால் துவண்டுவிடாத மணிரத்னம் ஒரே நேரத்தில் இரு படங்களை ஆரம்பிக்கிறார்.
இதில் ஒரு படத்தை அவரே இயக்குகிறார். இதற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது. தலைப்பு பூக்கூடை எனப் பதிவு செய்துள்ளார்களாம். தனுஷிடம் பேசிக் கொண்டுள்ளார் மணிரத்னம் என்று ஒரு பிரிவினரும், இல்லையில்லை, கார்த்திக்கின் மகனை இந்தப் படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்று சிலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
இன்னொரு படத்தை அவரது உதவியாளர் இயக்குகிறார். இரு படங்களையும் தயாரிக்கிறது மெட்ராஸ் டாக்கீஸ்.
தனுஷ் – ஆன்ட்ரியா -செல்வராகவன்… மாலை நேரத்து மயக்கம்!
விக்ரமை வைத்து எடுக்கவிருந்த போலீஸ் கதை அப்படியே நிற்கிறது… ராணா டக்குபட்டியுடனான சரித்திர தமிழ் – தெலுங்கு படமும் இப்போதைக்கு இல்லை என்றானதால், கைவசம் இருந்த சொந்தப் படத்தை ஆரம்பித்துள்ளார் செல்வராகவன்.
இது, தனுஷ் -ஆண்ட்ரியா ஜோடியை வைத்து முன்பு துவங்கி அப்படியே அவர் நிறுத்திவிட்ட மாலை நேரத்து மயக்கம். கஸ்தூரி ராஜா தயாரிப்பு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை துவங்கியது.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், “மீண்டும் பள்ளிக்குத் திரும்பியதைப் போன்ற உணர்வு, அண்ணன் செல்வா படத்தில் நடித்த போது..,” என்றார்.
கடிதம் ரெடி… கலவரத்தில் ஹீரோக்கள்!
தனது வாய்த்துடுக்கான பேட்டி வெளியானதிலிருந்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறாராம் சூர்யா.
அவரது ரத்த சரித்திரம் படம் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம் வெளிநாடுகளில். இந்த நேரம் பார்த்து இவர் இலங்கைக்குப் போய் விவேக் ஓபராயுடன் இணைந்து சேவை செய்யப்போவதாக பேட்டி தர, படத்தைப் புறக்கணிக்கும்படியான அறிக்கைகள் தயாராகின்றனவாம்.
இலங்கைக்குப் போயுள்ள அசின் நடித்திருக்கும் விஜய்யின் காவல்காரனுக்கும் புறக்கணிப்புக் கடிதம் தயாராவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷயம் தெரிந்து வேக வேகமாக சமாதானப் படலத்தைத் தொடங்கியுள்ளனர் சம்பந்தப்பட்டவர்கள்!
-என்வழி










அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்


