Breaking News

பண்பில்லாத மனிதர்கள் பைபாஸ்லதான் போகணும்! – ரஜினி பேச்சு

December 6, 2010 by  
Filed under Featured

பண்பில்லாத மனிதர்கள் பைபாஸ்லதான் போகணும்… ஊருக்குள்ள வர முடியாது!! – ரஜினி பேச்சு

ல்ல குணம், பண்பாடு இல்லாத மனிதர்களுக்கு நேர் வழியில் இடம் கிடைக்காது. பைபாஸ் வழியாதான் போயாகணும்… ஊருக்குள்ள நுழைய முடியாது!, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்தது.

சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் முதல் இசைத் தட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ரஜினியின் பேச்சு சிறப்பாக அமைந்திருந்தது. அவரது முழு பேச்சு:

மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பியதும் முதல்வரிடமிருந்து போன் வந்தது. பத்திரமாக வந்து சேர்ந்தீர்களா, நலமாக இருக்கிறீர்களா… என்று கேட்டுவிட்டு, வருகிற 5-ம் தேதி ஊரில் இருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்களா என்றார். இல்லை என்றேன். அதன் பிறகு இந்த இளைஞன் பட இசை விழா இருக்கிறது. நீங்க வரணும்னு ஆசைப்படறோம்… வரமுடியுமா என்றார். நான் உடனே சரி சொல்லிவிட்டேன்.

அவர் வயசென்ன, இருக்கிற நிலை என்ன.. அவர் வயசுக்கு என்கிட்ட இவ்ளோ தூரம் கேட்டிருக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சி இருக்கு வாங்கன்னு கூப்பிட்டிருந்தாலும் வந்திருப்பேன். ஆனால், அந்த பண்பாடு… பக்குவமான அணுகுமுறை… இதுதான் என்னை வியக்க வைத்தது. அதனாலதான் அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் இருக்கிறார்.

ஒண்ணு சொல்லிக்கிறேன்… பண்பாடுள்ள மனிதனால் மட்டும்தான் நேர்வழில, மெயின் ரூட்ல போக முடியும். இல்லேன்னா பிளாட்பாரத்துல கூட நடக்க முடியாது. பைபாஸ்லதான் போயாகணும். அதாவது ஊருக்குள்ள நுழையவே முடியாது… ஊருக்கு வெளியே அப்படியே சுத்திக்கிட்டு கண்ணுக்கு மறைவா போயிட வேண்டியதுதான்.

கலைஞர் இன்னிக்கும் இவ்ளோ உற்சாகவும், இளமையாவும் இருக்கார்னா அதுக்கு கலை மீது அவருக்குள்ள ஆர்வம்தான் காரணம். கலை எல்லாவற்றையும் தாண்டியது. அதேபோல, கலைஞர்களில் பர்மார்மிங் ஆர்டிஸ்ட்டை விட, கலைஞர் போன்ற படைப்பாளிகள் நல்ல இளமையோடு இருப்பார்கள். நான் ஒரு முறை நம்பியார் சாமிகிட்ட, உங்க வயசென்னன்னு கேட்டேன். அதுக்கு அவரு, இந்த உடம்புக்கு 80 வயசுப்பா… ஆனா மனசுக்கு 18தான்னாரு. அப்படித்தான் கலைஞரும். அவரோட பேனாவுக்கு வயசாகாது.

கன்னடத்துல தொட்டண்ணா கவுடான்னு பெரிய பாடகர் இருந்தார். நூறு வயசுலயும் பாடல்களைப் பாடியவர். பக்திப் பாடல்களை எழுதிப் பாடுவார். பெரிய பணக்காரர். 400 ஏக்கருக்குமேல நிலமெல்லாம் வச்சிருந்தார். ஷிவ்ராம் காரந்துன்னு ஒரு பெரிய எழுத்தாளர், நம்ம கல்கி மாதிரி அங்க. பெரிய பகுத்தறிவுவாதி. நாத்திகர். இவங்க ரெண்டு பேரும் ஒரு மேடையில் இருந்தாங்க ஒருமுறை. அப்போ தொட்டண்ணா பாட ஆரம்பிச்சார். முடிச்சதும், ஷிம்ராம் இப்படிச் சொன்னார்.. ‘இனி தொட்டண்ணா பாடற மேடைகள்ல என்னை ஏத்தாதீங்க. அல்லது நான் இருக்கும்போது அவரை பக்திப் பாடல் பாடச் சொல்லாதீங்க’ என்றார்.  ஏன்னு கேட்டப்ப, அவர் பாடினா என்னையும் அறியாம மனசு கடவுள் பக்கம் சாஞ்சிடுமோன்னு பயமா இருக்குன்னார். அந்த வயசுலயும் தொட்டண்ணா அப்படி பாடக் காரணம், அவரோட கலை ஆர்வம்தான். அப்படித்தான் கலைஞரும்.

கவிஞர் கனிமொழி எம்பி பேசினதை இன்னிக்குதான் முதல் முறையா மேடைல கேக்குறேன்..  ரொம்ப அருமையா பேசுறாங்க.

ஊரெல்லாம் பலமா மழை பெஞ்சிட்டிருக்கு. வெள்ளத்துல வீடிழந்து, ரோடெல்லாம் டேமேஜ் ஆகி, மக்கள் நிறைய அவதிப்பட்டுக்கிட்டிருப்பாங்க. ஒரு முதலமைச்சரா கலைஞர் அய்யாவுக்கு அதைக் கவனிக்க வேண்டியது இருக்கும். எனவே என் பேச்சை நான் சீக்கிரமா முடிச்சிக்கிறேன்.

இந்தப் படத்தின் சில காட்சிகள் பார்த்தேன். ஷங்கர் படம் அளவுக்கு பிரமாண்டம் தெரியுது. நல்லா வந்திருக்கும்னு நம்பறேன்.

அண்ணாமலை தந்த சுரேஷ்கிருஷ்ணா…

படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சாதாரணமாணவர் இல்லே… இந்த ரஜினிகாந்தையே வேற மாதிரி காண்பிச்சவர்.. அண்ணாமலை படத்துக்குப் பிறகு ரசிகர்கள் வேற ரஜினிகாந்தைப் பார்த்தாங்க. அதே மாதிரி வேணும்னு கேக்க ஆரம்பிச்சாங்க. ஆக்ஷன் படங்கள்ல சூப்பர் டூப்பர் ஹிட் படமான பாட்ஷாவை அவர்தான் இயக்கினார். இந்தப் படத்தின் பெரும்பகுதி மும்பைல எடுத்தாங்க. அந்த மும்பை ஸ்டைல் ஒரிஜினலா வந்ததில் சுரேஷ் கிருஷ்ணா பங்கு அதிகம். காரணம், அவர் பாம்பேல ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ்ல இருந்தவர். அவருக்கு அந்த லைப்ஸ்டைல் நல்லா தெரியும். அப்புறம்தான் பாலச்சந்தர் சார்கிட்ட வந்தார். நிச்சயம் அவருக்கு இது ஒரு பெரிய வெற்றியைத் தரும்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் விஷயமுள்ளவர். சந்திரமுகி படத்துக்கு முதலில் இளையராஜாவைத்தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருந்தேன். காரணம் அது மியூசிக்கல் சப்ஜெக்ட். அதை அவர்தான் சிறப்பா பண்ண முடியும்னு. என்னுடைய இந்த முடிவை சொல்வதற்கு ஒரு நாள் தாமதமாகிவிட்டது. வெளி்யூரில் இருந்துவிட்டேன். இங்கே அதற்குள் வித்யாசாகரிடம் பேசிவிட்டதாகச் சொன்னார்கள். நான் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஆனால் எப்படி இசையமைப்பாரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அதை உடைத்துக் காட்டினார் தனது இசை – பாடல்கள் மூலம்.

இயக்குநர் ஷங்கர் பொதுவா தன் படங்களில் இந்தப் பாட்டு வைரமுத்துவுக்குன்னு ஒதுக்கி வச்சிடுவார். ஆனால் சிக்கலான பாட்டு, கஷ்டமான பாட்டுன்னா வாலி சார்கிட்ட கொடுத்திடலாம்னு சொல்வார். ஒருவேளை அவர் இல்லேன்னா… பா விஜய்கிட்ட கொடுக்கலாம்னு சொல்வார். எனக்கு ஆச்சர்யமா இருக்கும். கவிஞர் வாலி வயசு என்ன… அனுபவம் என்ன…. ஆனா பா விஜய்க்கு அவரை விட சின்ன வயசு. ஆனா வாலிக்கு இணையான அறிவும் திறமையும் அவருக்கு இருக்குன்னா… சாதாரண விஷயமா!

நல்ல நடிகராவும் பா விஜய்யை இந்த படத்துல பாத்தேன்… அவருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

-வினோ

என்வழி ஸ்பெஷல்

‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா!’

May 20, 2010 by  
Filed under Popcorn

‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா!’

ய்யோ.. வேணாம்யா.. தமிழ் ரசிகர்கள் பாவம், இந்த வெயிட்டை தாங்க மாட்டாங்க’, என்று ஓங்கிக் கத்த வேண்டும் போலிருந்தது, மேலே நீங்கள் படித்த பஞ்சர் டயலாக்கை கேட்டபோது.

சிங்கம் படத்தில் சூர்யா பேசும் வசனம் இது. ட்ரெயிலர்களில் இந்த வசனத்தையே திரும்பத்திரும்ப போட்டு பீதியைக் கிளப்புகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மொத்தப் படத்துக்கும் இந்த ட்ரெயிலர்தான் சாம்பிள் என்றால்… சாதனையில் சுறாவை மிஞ்சிடும் போலிருக்கே இந்த சிங்கம்!

விமர்சகர்கள் இப்போதே படத்தின் விமர்சனத்துக்கு கடைசி வரியைத் தயார் செய்திருப்பார்கள், தலைப்போடு ஒரு ‘அ’ சேர்த்து!


முதல்வரின் ஓட்டு நமீதாவுக்கு!!

பா விஜய் ஹீரோவாக நடிக்கும் இளைஞன் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் முதல்வர் கருணாநிதி என்பது தெரிந்திருக்கும்.

இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ 1 கோடி சம்பளம். படத்தில் அதிக சம்பளம் பெற்றிருப்பவர் இவர்தான். அதுமட்டுமல்ல.. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய கதை வசனகர்த்தாவும் இவர்தான்.

இந்தப் படத்தில் வில்லி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு நடிகை வேண்டும் என்று இயக்குநர் கேட்டதால், பல முன்னாள் டாப் நடிகைகளையெல்லாம் லிஸ்ட் போட்டார்களாம். இதில் மீனாவும் உண்டு. ஆனால் முதல்வரின் ஓட்டு இந்நாள் நடிகையான நமீதாவுக்கு விழ, சட்டென்று பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பஞ்ச் டயலாக், பில்ட் அப் சீனுக்கு நோ… விஜய்க்கு சித்திக் கொடுத்த ஷாக்!

பாடி கார்டு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விஜய், படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றில் மாறுதல்களைச் செய்யச் சொல்லியிருக்கிறார். சிலவற்றுக்கு ஒப்புக் கொண்டு உடனே செய்து கொடுத்துள்ளார் சித்திக்.

அடுத்து ஓபனிங் பில்ட்-அப், பஞ்ச் டயலாக் என விஜய் போட்ட அடுத்தடுத்த ஆர்டர்களுக்கு சற்று தயக்கத்துடன் மறுப்பு சொன்னவர், சுறா ரிசல்டை வேறு சுட்டிக் காட்ட செம கடுப்பாகிவிட்டாராம் விஜய்.

இதன் விளைவுதான் சமீபத்தில் நடந்த சித்திக் வீட்டுக் கல்யாணத்தில்கூட தலைகாட்ட விரும்பாமல் பாங்காக் பறந்துவிட்டாராம்!

-என்வழி

புதுசா வேஷம் கலைச்ச கூத்தாடி விஜய்!- பாமக தாக்கு

May 3, 2010 by  
Filed under Popcorn

பா விஜய் படம்… தலைமறைவு லாட்டரி அதிபர்… பரபர சர்ச்சை!

முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதும் புதிய படமான இளைஞனின் தயாரிப்பாளர் மார்ட்டின் குறித்து பரபரப்பான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை விற்றவர், போலி லாட்டரிச் சீட்டு அடித்தவர் என்றெல்லாம் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. பல நேரங்களில் போலீசாரால் தேடப்பட்ட இவர், சில காலம் தலை மறைவாகவும் இருந்தார்.

ஆனால் இப்போது இளைஞன் பட துவக்க விழாவில் சகல பாதுகாப்பு-மரியாதையோடும் முதல்வருடன் மேடையேறினார் மார்ட்டின்.

எதிர்க்கட்சிகள் இப்போது இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளன. போலீசாரால் தேடப்பட்ட ஒரு குற்றவாளிக்கு முதல்வர் மேடையில் இடமா…? என்ன குற்றம் செய்தாலும், முதல்வர் கதை வசனம் எழுதும் படத்தைத் தயாரித்தால், விடுபட்டுவிட முடியுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, விவகாரத்தை தீவிரமாகக் கையாளத் துவங்கிவிட்டன அதிமுக, மதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.

இந்தப் படத்தின் ஹீரோ பா விஜய் மார்ட்டினுக்கு நண்பர் என்பதால், விஜய் பற்றியும் தீர விசாரணை நடத்த வேண்டும் போலீசார் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் சேர்ந்து, இளைஞன் படத் தயாரிப்பை கைமாற்றினாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

புதுசா வேஷம் கலைச்ச கூத்தாடி விஜய்!- பாமக தாக்கு

ரசியல் பிரவேசம் குறித்து அடிக்கடி பேசி வரும் விஜய்யை நேரடியாகத் தாக்கியுள்ளது பாமக.

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க இளைஞர் பெருவிழாவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பேசிய, சங்க தலைவர் காடுவெட்டி குரு,  பேசுகையில், “புதுசா வேஷம் கலைச்ச கூத்தாடி ஒருத்தன் அரசியலுக்கு வரப்போறேன்னு வாரத்துக்கு ஓர் அறிக்கை விடுறான். நாங்க இங்க இருக்கும்போது யாரும் வர முடியாது. அடுத்து எங்க ஆட்சிதான். சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ்தான் முதல்வர்” என்றார் சீரியஸாக!

இந்தக் கூட்டத்தில்தான் வன்னியர்களுக்கு மட்டும் தனியாக 20 சதவிகித இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளன பாமகவும், அதன் ஆதி அமைப்பான வன்னியர் சங்கமும்.

-என்வழி

‘டைரக்டர்’ கருணாநிதி!

April 28, 2010 by  
Filed under Popcorn

ஆடம்பரம் வேண்டாம்! – அஜீத்

மே 1-ம் தேதி அஜீத்துக்கு பிறந்தநாள். ஆர்வத்தில் தாங்களாகவே செலவு செய்து பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட ஆரம்பித்த ரசிகர்களை அப்படியே அமைதியாக்கியிருக்கிறது அவரது அறிக்கை.

“ஸ்பெயினில் பார்முலா 2 சாம்பியன் போட்டிகளில் நான் பிஸியாக உள்ளதால், மே 1ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.

ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரசிகர்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன்” என்று அந்த அரிக்கையில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தலைமை மன்றத்தின் அனுமதி இல்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அஜீத் ரசிகர்கள் ஈடுபடக் கூடாது என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா எச்சரித்திருந்தது நினைவிருக்கலாம்.

காவல்காரனில் விஜய் மகன்!

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றிய விஜய்யின் மகன் சஞ்சய், அடுத்து காவல்காரன் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறாராம்.

சித்திக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், விஜய்யின் மகனாகவே வரும் சஞ்சய், பாடல் காட்சியிலும், சில முக்கியமான காட்சிகளிலும் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது கும்பகோணத்தில் ஷூட்டிங் நடக்கிறது. அடுத்த சில தினங்களில் சஞ்சய் – விஜய-அசின் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

‘டைரக்டர்’ கருணாநிதி!

பா.விஜய் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஒன்று திரட்டி முதலாளிக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராகும் காட்சி. படத்தின் முதல் காட்சி இதுதான்.

இடம்: பெரம்பூர் பின்னி மில்ஸ்.

‘ஆக்ஷன்’ சொல்லி காட்சியை இயக்கி ஓகே செய்தவர்… தமிழக முதல்வர் கருணாநிதி.

அவர் கதை வசனம் எழுதியுள்ள ‘இளைஞன்’ படத்துக்குத்தான் இந்தப் படமாக்கம்.

மக்கள் எழுத்தாளர் மக்ஸீம் கார்க்கி எழுதிய ‘தாய்’ என்ற உலகப் புகழ் நாவலைத் தழுவி, கருணாநிதி எழுதிய தொடரான தாய்க் காவியமே ‘இளைஞனாக’ உருவாகிறது!

ஏற்கெனவே இந்தப் படம் தாய்க்காவியம் எனும் பெயரில் முதல்வரால் தொடங்கப்பட்டு, சில பிரச்சினைகளால் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

Related Posts with Thumbnails