Breaking News

ராமானுஜங்களும் ரயில் சீட்டுகளும்!

ராமானுஜங்களும் ரயில் சீட்டுகளும்!

எந்நாளும் பொருந்தும் அண்ணலின் ஆய்வுக் கட்டுரை!

எந்நாளும் பொருந்தும் அண்ணலின் ஆய்வுக் கட்டுரை!

வர் பெயர் ராமானுஜம்.

தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்.

அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள். காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.

தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.

காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டிப் படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார் ராமானுஜம். அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.

திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம் வேண்டும் என்பதால், சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம். மீண்டும் முனகிக்கொண்டே காலை நீட்டிப் படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார். லால்குடி, விருத்தாசலம் என்று சிலர் ஏறும்போதும் இந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

விழுப்புரம் வந்ததும் இன்னும் நிறையபேர் டிக்கெட் வாங்கி அந்த கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள். கால் நீட்டிப் படுத்திருந்த ராமானுஜம் இப்போது வேறு வழியின்றி எழுந்து உட்கார்ந்து கொண்டார். அப்போதும் மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் இவர் ஒருவரே தாராளமாக உட்கார்ந்திருந்தார். “இவர்களெல்லாம் ரயிலில் வரவில்லை என்று யார் அழுதார்கள்? கண்டவர்களெல்லாம் ஏறி ரயிலின் தரத்தை குறைத்துவிட்டாளே,” என்ற வருத்தம் அவருக்கு.

செங்கல்பட்டு வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமானது. தனக்கு உரிய ஒற்றை சீட்டில் அமரவேண்டிய நிலைக்கு வந்தார் ராமானுஜம். கால்நீட்டிப் படுத்து சொகுசாக பயணித்த தன் பயணம் தடைபட்டது அவருக்கு தீராத சோகத்தையும், சகபயணிகள் மீது அதீத கோபத்தையும் உண்டாக்கியது. ஆனால் பயணிகள் எல்லோரிடமும் டிக்கெட் வேறு இருந்ததால் அவரால் பொருமுவதை தவிர எதுவும் செய்ய முடியவில்லை.

பக்கத்தில் அவருடைய பொருமலை பொறுமையாக கேட்டுகொண்டிருந்த ராமசாமி சொன்னார், ‘உங்களுக்குரிய இடத்தை யாரும் இங்கு கேட்கவே இல்லை நண்பா. இங்கு அவரவர்கள் தங்களுக்கு உரிய இடத்தைதான் தேடி வருகிறார்கள்.. இதுவரை உட்காரவே வழியில்லாதவர்கள் உரிமையுடன் உட்கார முயற்சிக்கிறார்கள்,’ என்று எவ்வளவோ எடுத்து சொன்னார். ராமானுஜம் கேட்டபாடில்லை.

கூட்டம் இன்னும் அதிகமானது. இப்போது பெண்களுக்கு சிலர் தங்கள் இடங்களை கொடுக்க வேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகத் தொடங்கினார்கள். சிலர் மாற்றுத் திறனாளிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகிக் கொண்டே இருந்தார்கள்.

ரயில் சென்னை வந்து சேர்ந்தது. எல்லோரும் இறங்கி தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். ரயிலின் இலக்கு கும்பகோணத்திற்கு மாற்றப்படுகிறது.

தற்போதும் டிக்கெட் வாங்கி காத்திருக்கும் பயணிகளை ராமானுஜம் கோபமாகவே பார்த்துக்கொண்டு போகிறார்.

ராமானுஜத்திடம் யாரேனும் சொல்லவேண்டும். நீங்கள் சொகுசாக இதுவரை பயணித்தது, மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட (உரிமையான) இடத்தில் என்று!

-நெல்சன் சேவியர்

செய்தி: மோடி அரசை விமர்சித்தார்கள் என்று கூறி, முழுக்க பார்ப்பணர் ஆதிக்கத்தில் உள்ள ஐஐடி (ஐயர் அன்ட் ஐயங்கார் ட்ரஸ்ட் ஆப் மெட்ராஸ் என்றும் சொல்கிறார்கள்) யில் அம்பேத்கர் – பெரியார் மாணவர் வட்டத்துக்கு (APSC) மத்திய அரசு அங்கீகார மறுப்பு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர், பெரியார் ஆகிய பெயர்களே பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தை அடையாளம் காண்போம். இது நமக்கான அரசல்ல!

-என்வழி

உடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி!

August 17, 2013 by  
Filed under General, Nation, Politics

கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி!

kargil

பூஞ்ச் / டெல்லி: போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி கார்கிலிலும் இந்திய நிலைகளின் மீது தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மீண்டும் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் துருப்புகள் சமீபகாலமாக காஷ்மீரின் ஊரி மற்றும் கெரான் பகுதிகளிலும், ஜம்மு மண்டலத்தில் பூஞ்ச் மற்றும் ஆர்.எஸ்.புரா பகுதிகளிலும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய சுதந்திர தினத்தின் போதுகூட விஷமத்தனமான தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது.

கார்கில் பகுதியில் உள்ள திராஸ் மற்றும் கக்ஸாரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய நிலைகள் மீது வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் படைகள் சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பகுதியில் திங்கள்கிழமை முதலே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

திராஸ் மற்றும் கார்கில் இடையே அமைந்துள்ள கக்ஸார் பகுதியில் உள்ள செனிகண்ட் நிலை மீது, பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த இடம் மிக உயரமானது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கிருந்து தாக்கினால் காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையைத் தகர்க்க முடியும்.

1999-ல்…

முன்பு 1999-ல் இங்கிருந்துதான் இந்திய ராணுவ அதிகாரி சௌரவ் காலியாவும், அவருடன் இருந்த வீரர்களும் பாகிஸ்தான் படையினரால் கடத்தப்பட்டனர்.

சில நாள்கள் கழித்து அவர்களது உடல்களை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அவர்களது உடலில் காணப்பட்ட கடுமையான காயங்கள் உறுதிப்படுத்தின.

கடந்த 1999-ல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிலில் ஊடுருவியதும், இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே நேருக்கு நேர் சண்டை நடந்ததும், இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

இந்தியா பதிலடி

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியத் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என ராணுவ அமைச்சகம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

-என்வழி செய்திகள்

 

கடைசி சாம்பியன் ட்ராபியை வென்று சாதனை படைத்தது இந்தியா!

June 24, 2013 by  
Filed under General, ஸ்போர்ட்ஸ்

கடைசி சாம்பியன் ட்ராபியை வென்று சாதனை படைத்தது இந்தியா!

champ

எட்பாஸ்டன்: மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.

இதன் மூலம் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமை இந்திய கேப்டன் டோனிக்கு கிடைத்துள்ளது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களில் ஆட்டமிழந்தது.

ட்வென்டி 20 ஆக மாறிய ஒருநாள் போட்டி

இங்கிலாந்தின் எட்பாஸ்டன் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக சுமார் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா 9 ரன்களில் பிராட் பந்துவீச்சில் போல்டு ஆக, ஷிகர் தவனுடன் இணைந்தார் கோலி. ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ரன் சேர்க்க இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

இந்திய அணி 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எட்டியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் 48 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 50 ரன்களை எட்டியபோது தவன் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 6, ரெய்னா 1, டோனி 0 என வேகமாக வெளியேற, 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.

ஜடேஜா, கோஹ்லி அதிரடி

இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் ஜடேஜா. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 47 ரன்கள் சேர்க்க, இந்தியா சரிவிலிருந்து மீண்டது. 34 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் ஜடேஜா, 2 சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது.

ஜடேஜா 25 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33, புவனேஸ்வர் குமார் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தோல்வி

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக் 2, டிராட் 20, ஜோ ரூட் 7, இயான் பெல் 13 ரன்களில் வெளியேற, 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்து தடுமாறியது.

dhoni-1

இதன்பிறகு ஜோடி சேர்ந்த இயோன் மோர்கனும், ரவி போபாராவும் அதிரடியாக ரன் சேர்த்தனர். இஷாந்த் சர்மா ஓவரில் போபாராவும், மோர்கனும் தலா ஒரு சிக்ஸரை விளாச, இங்கிலாந்து வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டன.

18-வது ஓவரை வீச வந்த இஷாந்த் சர்மா, 3-வது பந்தில் மோர்கனையும், 4-வது பந்தில் போபாராவையும் வீழ்த்த, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. மோர்கன் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33, போபாரா 25 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஜோஸ் பட்லர், ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜடேஜா பந்துவீச்சில் போல்டு ஆனார். டிம் பிரெஸ்னன் ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு ரூ.11.3 கோடி பரிசு

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11.3 கோடியும், 2-வது இடம்பிடித்த இங்கிலாந்துக்கு ரூ.5.6 கோடியும், அரையிறுதியில் தோற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா ரூ.56 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது.

3 கோப்பைகளை வென்ற கேப்டன்

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச அளவில் 50 ஓவர் உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை, இருபது ஓவர் உலகக் கோப்பை என 3 உலகக் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை இந்திய கேப்டன் டோனி பெற்றார்.

அதேநேரத்தில் இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் வென்றதில்லை என்ற இங்கிலாந்தின் துரதிருஷ்டம் இன்னும் தொடர்கிறது.

championstrophy

இந்தியாவும், மழையும்…

2002-ல் இலங்கையில் நடைபெற்ற மினி உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டபோது மழை குறுக்கிட்டது. இறுதி ஆட்டத்தின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட, 2-வது நாள் இறுதி ஆட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் மழை குறுக்கிடவே, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் அந்த இரு நாள்களிலும் இந்தியாவே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருந்தது.

அதேபோன்று இந்த முறையும் இறுதி ஆட்டத்தில் மழை விளையாடியது. எனினும் இந்த ஆட்டத்தை நடத்த கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கியது ஐசிசி தொழில்நுட்பக் குழு. இதனால் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மட்டுமல்ல, மழையையும் வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா.

ஆட்டநாயகன் ஜடேஜா

இந்த ஆட்டத்தில் 33 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் பால்’ விருதையும் ஜடேஜா (12 விக்கெட்டுகள்) தட்டிச் சென்றார்.

தொடர்நாயகன் ஷிகர் தவன்

இந்தப் போட்டியில் 5 ஆட்டங்களில் 363 ரன்கள் குவித்த ஷிகர் தவன், அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ‘கோல்டன் பேட்’ விருதைத் தட்டிச் சென்றார்.

அடங்கிய ஸ்பாட் ஃபிக்ஸிங்

இந்தியாவின் இந்த வெற்றி மூலம், ஐபிஎல் 6-ல் அரங்கேறிய ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்களை கிட்டத்தட்ட மறந்தேவிட்டார்கள் ரசிகர்கள்.

சுருக்கமான ஸ்கோர்

இந்தியா-129/7

(கோலி 43, ஜடேஜா 33*, தவன் 31,  போபாரா 3வி/20)

இங்கிலாந்து-124/8

(மோர்கன் 33, போபாரா 30, டிராட் 20, அஸ்வின் 2வி/15, ஜடேஜா 2வி/24)

-என்வழி ஸ்போர்ட்ஸ்

இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி!!

இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி!!

450px-India_population_increase

டெல்லி: இந்தியாவில் விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளின் எண்ணிக்கையும் கணிசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 21 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்கள் தொகையில், விவசாயிகள் எண்ணிக்கை மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

1.3.2011 நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932 ஆகும். 2001-ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிக்கின்றனர்.

நகர்புற மக்கள் தொகையில் அதிகம் பேர் (97.5 சதவீதம்) டெல்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர்.

விவசாயிகள் எண்ணிக்கை இந்த 10 ஆண்டுகளில் 1 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்கள் தொகை மற்றும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

-என்வழி செய்திகள்

மும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா!

November 26, 2012 by  
Filed under General, ஸ்போர்ட்ஸ்

மும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா.. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

மும்பை: மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.

அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றது.

2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக ஆடியது. 413 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அந்த அணியின் பீட்டர்சன், குக் ஆகியோர் சதமடித்தனர்.

அதன் பின்னர் நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தது. மேலும் 25 ரன்கள் எடுப்பதற்குள் மீதி விக்கெட்டுகளையும் இழந்து, 142 ரன்களில் சுருண்டது இந்தியா.

இந்திய அணியின் கவுதம் காம்பீர் மட்டும் 65 ரன்கள் எடுத்திருந்தார். சொந்த மைதானம் என்ற போதும் சச்சின் டெண்டுல்கர் சொதப்பினார். இங்கிலாந்தின் பனேசர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 57 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸ் தொடங்கியது. ஆரம்ப ஓவர்களிலேயே அதிரடியாக இந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அந்த அணி எட்டியது.

இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துவிட்டது. 2 இன்னிங்ஸிலும் இங்கிலாந்தின் பனேசர் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இங்கிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது.

சுருக்கமான ஸ்கோர்

இந்தியா 327 மற்றும் 142

இங்கிலாந்து 413 மற்றும் 58

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

100வது டெஸ்ட்… ஏமாற்றினார் ஷேவாக்… 30 ரன்களில் அவுட்!

November 23, 2012 by  
Filed under General, ஸ்போர்ட்ஸ்

100வது டெஸ்ட்… ஏமாற்றினார் ஷேவாக்… 30 ரன்களில் அவுட்!

மும்பை: தனது 100வது டெஸ்டில் ஷேவாக் சதமடிப்பாரா என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, அவர் 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் இன்று மும்பையில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தேர்வு செய்தது.

கம்பீரும் ஷேவாகும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் வந்த வேகத்திலேயே இருவரும் பெவிலியன் திரும்பினர்.

ஜேம்ஸ் ஆன்டர்ஸனின் இரண்டாவது பந்திலேயே கம்பீர் அவுட்டானார். அவர் எடுத்தது நான்கு ரன்கள்.

30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மான்டி பனேசர் பந்தில் அவுட்டானார் ஷேவாக். இன்று அவருக்கு 100வது டெஸ்ட் என்பதால் சதம் காணுவார் என பெரிதும் எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள்.

அடுத்து வந்த டெண்டுகர் 8 ரன்களில், மான்டி பனேசர் பந்தில் வீழ்ந்தார். இப்போது புஜாராவும் கோஹ்லியும் களத்தில் உள்ளனர்.

முதல் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று பழிதீர்த்தது இந்தியா!

November 19, 2012 by  
Filed under General, ஸ்போர்ட்ஸ்

முதல் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று பழிதீர்த்தது இந்தியா!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் படுதோல்வியைச் சந்தித்த இந்தியா, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த முதல் போட்டியை அபாரமாக வென்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 521ரன்களைக் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது.

இந்தியாவின் புஜாரா இரட்டை சதமடித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அணியோ இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஓஜாவின் சுழற்பந்தில் நொறுங்கிப் போனது.

முதல் இன்னிங்சில் 191 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. பின்னர் பாலோ ஆனில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது இங்கிலாந்து.

நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தை அபாராமாக வெளிப்படுத்தியது இங்கிலாந்து. கேப்டனும் தொடக்க நிலைவீரருமான குக் சதமடித்தார். பிரையர் 84 ரன்கள் எடுத்தார்.

ஆனால் இன்று மீண்டும் சுருண்டு விழ ஆரம்பித்தது. பிரையர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 356. சிறிது நேரத்தில் குக்கும் 176 ரன்களில் ஆட்டமிழ்ந்து போனார்.

இதைத் தொடர்ந்து ஆட வந்த இங்கிலாந்து அணி வீரர்களால் நிலைக்க முடியவில்லை. 406 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இங்கிலாந்து. ஓஜா 4 விக்கெட்டுகளை பறித்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெடுகளைக் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 77 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.  2-வது இன்னிங்சில் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா 41 ரன்கள் எடுத்தார். சேவாக் 25 ரன்களை எடுத்தார்.

சேவாக் அவுட் ஆனாலும் கோஹ்லி புஜாராவுக்கு பலமாக இருந்தார். 15.3 வது ஓவரில் இந்திய அணி 80 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாடிய இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. தற்போது அதற்கு பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது இந்தியா!

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா : 521/8 டிக்ளேர், 80/1

இங்கிலாந்து : 191 & 406

வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!

September 18, 2012 by  
Filed under World, உலகம் & இலங்கை

வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!


டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

ஆனால் மறுபக்கம் இலங்கையோ, இந்தியாவை பகை நாடாகவே பார்க்கிறது. இந்தியாவின் பரம விரோதியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கிக் கொடுத்து வருகிறது. இலங்கையை கிட்டத்தட்ட சீனாவுக்கு திறந்திவிட்டிருக்கும் இலங்கை, புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டுள்ளது.

இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது. இப்போது பாகிஸ்தான்தான் உண்மையான நட்பு நாடு என்று வேறு ராஜபக்சே முழங்கியிருக்கிறார்,

இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலர்.

வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.

இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.

இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.

மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.

இலங்கையின் இந்த செயல் இந்தியாவை அவமானத்தில் நெளிய வைத்துள்ளது. ஆனாலும் இலங்கையை இந்தியாவால் கண்டிக்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், இந்தியாவுக்காக நாங்கள் போரை நடத்தினோம் என பந்தை திருப்பி அடிக்கிறார் ராஜபக்சே.

ஆனால் கொஞ்சமும் வெட்கமோ உள்ளார்ந்த தர்மமோ இல்லாமல் ராஜபக்சே இந்தியா வருவதும், அவருக்கு இந்தியா உபசாரம் செய்வதும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தவரை, சீனா, பாகிஸ்தான் என அத்தனை இந்திய விரோத நாடுகளும் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மூடிக்கொண்டிருந்தது, இந்திய மூட அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப் போகிறதோ!

-என்வழி செய்திகள்

அந்நியரிடமிருந்து மண்ணையும் மக்களையும் மீட்கவே எமது போராட்டம்… இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்க அல்ல! – விடுதலைப் புலிகள்

July 23, 2012 by  
Filed under General, Nation, Politics, World

இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை-விடுதலைப் புலிகள் அறிக்கை

சென்னை: எங்களது இழந்த இறைமையை மீட்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட்டதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று எல்டிடிஈ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும் ஆட்சேபத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு படிப்படியாக நிகழ்த்தப்பட்டு வந்த இனவழிப்பு நடவடிக்கையை எதிர்த்து முளைவிட்டதே எமது விடுதலைப் போராட்டம். அந்நியரிடம் இழந்துபோன இறைமையை மீட்டு எமது இனத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாம் எமது போராட்டத்தை நடாத்தினோம்.

அறவழியிலான அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போன நிலையில்தான் எமது போராட்டம் ஆயுதவழியில் பயணிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஆயுதப்போராட்டம் முளைவிட்ட காலத்தில் இந்திய மத்திய அரசு –அதிலும் குறிப்பாக தற்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்துக்கு உதவியளித்து ஊக்குவித்தது.

உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. அறவழியையோ ஆயுதப் போராட்டத்தையோ வழிமுறையாகக் கொண்டு விடுதலை பெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமையும் நியாயப்பாடும் எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்குமுண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர்.

ஆனால் அடக்குமுறைக்கெதிராக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி விடுதலையடைந்த நாடுகளே ஏனைய விடுதலைப் போராட்டங்களை நசுக்கும் துயர நிகழ்வுகள் உலக ஒழுங்கில் அரங்கேறி வருகின்றமை வருத்தத்துக்குரிய வரலாற்று உண்மை. அவ்வகையிலேயே இந்தியாவின் நடவடிக்கைகளை ஈழத் தமிழர்களும் பார்க்க வேண்டிய நிலை காணப்படுவது வரலாற்றுத் துயரம்.

எமது அமைப்பின் மீதான தடைநீடிப்பு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் திட்டமிட்ட அவதூறாகவுமே எம்மால் பார்க்கப்படுகின்றது. வழமையாக இத்தடை நீடிப்புத் தொடர்பாக வெளிவரும் அறிவிப்புப் போலன்றி இம்முறை வித்தியாசமான முறையில் எமது போராட்டம் மீதான அவதூறுகளோடு அறிக்கை வெளிவந்துள்ளது.

எமது போராட்டம் இந்திய இறையாண்மைக்குச் சவால் விடும்வகையில் அமைவதாகவும் தீவிர இந்திய எதிர்ப்பு நிலையிலிருக்கும் எம்மால் இந்திய நாட்டுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஆபத்து நிலவுகிறது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையில் எமது போராட்டம் எவ்வகையிலும் இந்திய இறையாண்மைக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானதன்று. நாம் எமது மண்ணையும், மக்களையும் பாதுகாக்கவே போராடுகின்றோம். அண்டை நாடு என்றளவில் இந்தியாவுடன் நட்புப் பாராட்டவே விரும்புகின்றோம். மாறாக எம்மை விரோதியாகப் பார்ப்பதும் இந்தியாவுக்கு எம்மால் ஆபத்தென்று சொல்வதும் முறையன்று.

மேலும், தோல்வியடைந்த நிலையிலும் நாம் ஈழக்கோரிக்கையைக் கைவிடவில்லையென்பதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கிறது இவ்வறிக்கை. ஈழக்கோரிக்கை எழுப்பப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்கள் அனைத்தும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. உண்மையில் இப்போதுதான் தனிநாட்டுக் கோரிக்கைக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கோரமுகம் 2009 இன் பின்னரும் தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்துவதில் வெளிப்பட்டு நிற்கின்றது. எமது மக்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனி எக்கட்டத்திலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட இப்போதுதான் தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில் ஈழக்கோரிக்கை தவறென்ற கருத்தும் அதையும் அமைப்பின் மீதான தடைக்கான காரணமாகக் குறிப்பிடுவதும் தவறான கணிப்பீடாகும். மேலும் தனியீழம் அமைக்கும் நோக்கம் எவ்வகையில் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்குமென்பதை இந்திய மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

எமது இனவிடுதலைக்காகக் குரல்கொடுக்கும் தமிழக உணர்வாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் எச்சரிக்கும் பாணியில் இவ்வறிக்கை இடம்பெற்றுள்ளது கவலையளிக்கின்றது. ஜனநாயக வழியிலான அவர்களது போராட்டங்களும் ஆதரவுச் செயற்பாடுகளும் எவ்வகையிலும் இந்தியாவைப் பயமுறுத்தப் போவதில்லை.

ஆழ்ந்து நோக்கினால், குறிப்பிட்ட அறிக்கை திட்டமிட்டுப் புனையப்பட்ட பல காரணங்களைக் கொண்டுள்ளது. நியாயமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு எமது போராட்டம் தொடர்பில் இந்திய மக்களிடத்தில் தவறான பார்வையையும் தேவையற்ற பயத்தையும் தோற்றுவிக்கின்றது.

இந்திய அரசு எமது போராட்டம் தொடர்பில் பயங்கொள்ளத் தேவையில்லையென்பதை நாம் பலதடவைகள் தெளிவாகச் சொல்லி வந்துள்ளோம். தமிழ் மக்களின் இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதில்லை என்பதை மீண்டும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றோம்.

எண்ணற்ற மக்களைப் பலிகொடுத்து, சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து, சிங்கள பௌத்த பேரினவாத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் தற்போதும் எதிர்கொண்டு பாதுகாப்பற்ற நிலையில் நிர்க்கதியாக எமது தமிழினம் நின்றுகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், ஆதரித்து அனுசரிக்க வேண்டிய இந்திய அரசு இவ்வாறு காழ்ப்புணர்வோடு நடந்துகொள்வது ஏற்புடையதன்று.

எனவே எமது போராட்டத்தின் நியாயத்தையும் தேவையையும் புரிந்துகொண்டு எமது அமைப்பின் மீதும் எமது போராட்டத்தின் மீதும் சேறு பூசும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, எமது மக்களுக்கான பாதுகாப்பையும் நிரந்தமான அரசியல் தீர்வையும் பெற்றுத்தரும் பணியை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது என மத்திய அரசு அறிவிப்பு – என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?

July 14, 2012 by  
Filed under General, Nation, Politics

“தமிழீழம்” என்பது இந்தியாவுக்கு எதிரானது – டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். இது இந்திய குடிமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழ் ஈழம் என்பது இந்திய அரசுக்கு எதிரானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி ஈழம் கோரி கருணாநிதி டெசோ மாநாடு நடத்த தேதி அறி்வித்துள்ள நிலையில் மத்திய அரசு இப்படி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாத குழுக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுக்களும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தளத்தை உருவாக்கி வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் இணையதளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு என்று தொடர்ந்துபிரச்சாரம் செய்து வருகின்றனர். இணையதளங்களின் மூலமான இத்தகைய பிரச்சாரங்களால் இந்திய அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து புலிகளின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கான தமிழருக்கென தனி தாயகம் – தமிழீழத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பு விளைவிக்கக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி என்ன செய்யப் போகிறார்?

இலங்கையில் தமிழருக்கு எனத் தனித் தாயகமான தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்னை ராயப்பேட்டையில் ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தமிழீழம் என்பதே இந்தியாவுக்கு எதிரானது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தனக்கு விரோதமானது என அறிவித்துள்ள தமிழ் ஈழத்தை தொடர்ந்து வலியுறுத்துவாரா? பார்க்கலாம்!

-என்வழி செய்திகள்

இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல?

-டான் அசோக்

 


“கீழ்சாதினா இப்படிதான் வாழனும்னு நம்ம சாஸ்திரங்களே சொல்லிருக்கு. அப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குறாங்கன்னு” என்று, தான் ஒரு தலித் என்பதால் சிறுவயதில் இருந்து சந்தித்த கொடுமைகளுக்கான காரணத்தைத் தேடி அலைந்து கண்டுகொண்ட ஒரு வட-இந்திய பெண் ‘சத்யமேவஜெயதே’ நிகழ்ச்சியில் சொல்கிறார்.

அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பனியத்தின் மீதும் அதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்கசாதி வெறியின் மீதும் அமிலம் வீசுகிறது!

தன் சமூகத்தின் மீது பார்ப்பனர்கள் கட்டவிழ்த்த அனைத்து ஏதேச்சிகாரங்களையும் தாண்டி, போராடி, படித்து, பிஎச்டி முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று பேராசிரியையாய் இருக்கும் அந்த பெண் இன்னமும் தான் சந்தித்து வரும் அடக்குமுறைகளை கூறும் போது அதை கேட்கும், திராவிட இயக்கங்களால் சாதியை பெருமளவு பின்னுக்குத்தள்ளியிருக்கும் நம் மாநில இளைஞர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்!

அவர் அமர்ந்த பெஞ்சை கழுவிவிட்டு பின் அமர்ந்த சக மாணவர்களை பார்த்த அந்த பெண், தான் பேராசிரியையாய் ஆன பிறகும் தன் தாயின் கையில் துடைப்பத்தைக் கொடுத்து அவர் வீட்டை சுத்தப்படுத்த சொன்ன வீட்டு உரிமயாளரையும் பார்த்திருக்கிறார். ஆக, தலித் என்ற முத்திரை அவர் சாகும் வரையில் அவருடனே தொடரும் எனவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார். முழுக்க முழுக்க வட இந்திய சாதிய சூழ்நிலைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் சூழலோடு ஒப்பிட்டு, திராவிட இயக்கங்களின் சாதி ஒழிப்பு பங்களிப்பை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1960களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த பல்வந்த்சிங் ஐ.ஏ.எஸ் சொல்கிறார், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு பார்ப்பனர் இவர் குடித்த க்ளாசை எடுக்க மாட்டாராம்! மேலும் தனக்கு வரவேண்டிய பதவியுயர்வு பலவற்றை பார்ப்பன மேலதிகாரிகள் தடுத்ததையும், இறுதியில் வெறுத்துப்போய் தன் ஐ.ஏ.எஸ் வேலையையே உதறிவிட்டதாகவும் சொல்கிறார்.

பின் பலதரப்பட்ட மக்களிடம் தற்கால சாதிய நடைமுறை பற்றி நிகழ்ச்சியில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சொல்லிவைத்தாற்போல மேல்தட்டு மக்களின் ‘ஃபேஷன் ஸ்டேட்மென்ட்’டான “இப்போதெல்லாம் யார் சார் சாதி பாக்குறா?” என்ற பதிலே ஒட்டுமொத்த பதிலாக வருகிறது. இதற்கு பின்பாக இந்தியாவெங்கும் 2012யிலும் விரவிக்கிடக்கும் தீண்டாமையையும், சாதியத்தையும் ஆராய்ச்சியாளர் இயக்குனர் ஸ்டாலின் மூலம் முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்கிறது நிகழ்ச்சி.

காசியில் அர்ச்சகராக இருக்கும் ஒரு பார்ப்பனரிடம் இது குறித்து கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்கிறார், “நான் ஆச்சாரமான ப்ராமணன். கடவுளின் தலையில் இருந்து வந்தவன். நாளைக்கு நம் கால் நம்மிடம் வந்து நான் தான் உன் உடம்பை தாங்குகிறேன் அதனால் நான் உயர்ந்தவர் எனச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? அனைவரும் சமம் என சொல்லும் நம் அரசியலமைப்புச் சட்டத்தை நாங்கள் பாவச்செயலாக பார்க்கிறோம்” என்கிறார்.

இந்த இடத்தில்தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் கடும் முயற்சியால் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கும் நம் ஊர் தீட்சிதர்கள் என் நினைவுக்கு வந்தார்கள். இப்படியாகப்பட்ட ஒரு வழக்கு போடப்படும் சூழ்நிலையில், அதை உடனே நீதிமன்றம் தள்ளுபடி செய்யாத சூழ்நிலையில், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய முதியவரை தடித்தீட்சிதர்கள் அடிக்கும் சூழ்நிலையில்தான் நம்மூரில் “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” என்ற பொருந்தா-கோஷமும் கேட்கிறது.

இயக்குனர் ஸ்டாலின் சாதியம் பற்றிய தன் பலவருட ஆராய்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது இஸ்லாம் மதத்தில், கிறித்தவ மதத்தில் இருக்கும் சாதியத்தைப் பற்றியும் கூறுகிறார்.

இஸ்லாத்தில் சாதி இல்லை, ஆனால் இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றும், இஸ்லாம் மதம் எந்த வகையிலும் சாதியத்தை ஆதரிக்காததால், அல்லாவுக்கு பயந்து மசூதிக்குள் தலித் இஸ்லாமியர்களை அனுமதித்துவிட்டு வெளியில் அவர்களை மதிப்பதில்லை எனவும் ஒரு தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர் சொல்கிறார்.

அதேபோல் புலையர்கள் என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட கிறுத்தவ சமூகத்தை சேர்ந்த ஒரு பெண், “எங்கள சர்ச்சுக்குள்ள விட மாட்டாங்க. ஏன்னா எங்க ரத்தம் சிவப்பு அவங்க ரத்தம் நீலம்” என நக்கலாக செவிட்டில் அறைந்ததைப் போல சொல்கிறார். இவர்கள் மதம் மாறினாலும் தலித் முத்திரை என்பது இவர்களை விட்டு அகல மறுக்கிறது என்பதே உண்மை.

இந்த 2012யிலும் வட இந்திய பள்ளிகளில் சத்துணவு நேரத்தில் தலித்துகளை தனியே உட்கார வைக்கிறார்கள். அதனால் பல தலித் மாணவர்கள் சுயமரியாதைக்காக சாப்பிடாமலே கூட இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் தலித்துகளுக்கு கழிவறை கழுவும் வேலை, பள்ளி மைதானம் சுத்தப்படுத்தும் வேலை அந்தந்த பள்ளி ஆசிரியர்களாலேயே கொடுக்கப்படுகிறது. ‘பட்டேல்’ போன்ற உயர்சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுபோன்ற வேலையைக் கொடுக்கமாட்டார்கள். “நாங்க எங்க புள்ளைங்க எந்த தொழில செய்யகூடாதுனு பள்ளிகூடத்துக்கு அனுப்புனோமோ அங்கேயும் அதையே பண்ண சொல்றாங்க” என அழுதபடியே தெரிவிக்கிறார் ஒரு தலித் தாய்.

நம் குழந்தைகளுக்கு நம்மூர் பள்ளிகளில் இது நடந்தால் நாம் கொதிப்போமா இல்லையா? வடநாட்டில் பெயர்களோடு தலைமுறை தலைமுறையாக ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப்பெயர்கள் இவன் இன்ன சாதி என சுலபமாக இனங்காண வைத்துவிடுகிறது.

நிகழ்ச்சியின் இந்த குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கையில் தான் நாமெல்லாம் திராவிட இயக்கத்திற்கும், தந்தை பெரியாருக்கும் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதை முழுதாக உணரமுடிந்தது. நம்மூர் திருமணப் பத்திரிக்கைகளில், “பழனிச்சாமிக் கவுண்டரின் பேரனும், பாலுவின் மகனுமான வேலுவுக்கும்…..” என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பழனிச்சாமி என்ற பெயருடன் இருக்கும் ‘கவுண்டர்’, ஏன் பாலு என்ற பெயரிலும், பாலுவின் மகனான வேலுவின் பெயரிலும் இல்லை? ஏனெனில் பழனிச்சாமிக் கவுண்டர் தலைமுறைக்கும், பாலு தலைமுறைக்கும் இடையில் திராவிட இயக்கம் தன் வேலையைக் காட்டியதுதான்!

தமிழகத்தில் அவ்வளவு சுலபமாக நாம் யாரின் சாதியையும் கண்டுபிடிக்க முடியாது. “உங்கள் சாதி என்ன?” என்று தமிழகத்தில் யாரேனும் கேட்டால் நாம் எவ்வளவு கேவலமாக அவர்களைப் பார்க்கிறோம்! சாதிப் பெயரை பொது இடத்தில் சொல்லும்போது குரலை தாழ்த்திச் சொல்கிறோமா இல்லையா? அதன் காரணம் பெரியாரேயன்றி, திராவிட இயக்கமேயன்றி வேறென்ன?

இன்னும் தொடரும் மகா கொடுமை!


1993லேயே மனிதர் மலத்தை மனிதரே அள்ளுவதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டாலும் இன்னும் இந்திய அளவில் 13லட்சம் பேர் மலம் அள்ளும் தொழிலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மை இந்திய ரயில்வே துறை ஊழியர்கள் என்பதுதான் பெருங்கொடுமை!

“நகரங்களிலுமா சாதி பார்க்கிறார்கள்?” என்ற அமீரின் கேள்விக்கு “சாதிப்பெயர் சொல்லி வரன் தேடுவதே சாதி பார்க்கும் பழக்கம் தானே!” என பொட்டில் அடித்ததுபோல் பதில் சொல்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்டாலின். மேலும் சாதிகளை ஒழிக்க ஒரே வழி சாதிமறுப்புத் திருமணம் மட்டுமே என்றும் சொல்கிறார். நாங்கள் “அடக்கமான குடும்பம், கலாச்சாரமான குடும்பம், பாரம்பரியமான குடும்பம்” என்றெல்லாம் பெருமை பீற்றுபவர்கள் தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதைதான் அப்படி சொல்கிறார்கள், அந்த பழக்கம் முற்றிலும் ஒழியவேண்டும்.

சாதி இல்லை, அது இப்போது புழக்கத்தில் இல்லை என மறைத்து மறைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளவே எல்லாரும் ஆசைப்படுகிறார்களேயொழிய உண்மையான நிலையை ஒப்புக்கொள்ள யாரும் தயார் இல்லை. உடலில் இருக்கும் நோயை மறைத்து வைத்தால் பின் மருத்துவம் எப்படிப் பார்ப்பது?

ஒட்டுமொத்தமாக தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படிந்திருக்கும் சாதியப் படிமத்தை இந்த நிகழ்ச்சி மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்திய அளவில் சாதியம் என்பது ஒரு ‘கெட்ட விசயம்’ என்ற புரிதலே வட இந்தியர்களுக்கு சமீபகாலத்தில்தான் வந்திருக்கிறது. பெரியார் 1940களில் செய்த புரட்சிகளை, கலப்பு மணங்களை, கோயில் நுழைவுகளை இப்போதுதான் இவர்கள் ‘புரட்சி’ என்றே அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒழிந்துவிட்டதா சாதி?

சரி, சாதிகளை மறுத்த திராவிட இயக்கம் வேரூன்றியிருக்கும் தமிழகத்தில் சாதியம் முற்றிலும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே வருத்தமான உண்மையாக இருக்கிறது. இன்னமும் திண்ணியம் மலம் திணிப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு சமூகத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சாதி ஒழிப்பில் தமிழகம் ஒரு அரை நூற்றாண்டு முன்னால் நிற்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.


இது ஒருபுறம் என்றால், சாதியம் நம்மைச் சுற்றி விஷச்செடியாய் வளர்ந்து இருக்கையில் இடஒதுக்கீட்டின் மூலம் மேல்தட்டுக்கு திடீரென ‘ட்ரான்ஸ்ஃபர்’ ஆகியிருக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் சிலர் இடஒதுக்கீட்டை எதிர்க்கத் துவங்கிருக்கும் அவலமும் இங்கே ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது, “நான் ஏறிவந்துட்டேன் அடுத்தவன் ஏறுனா என்ன ஏறலேனா எனக்கென்ன!” என்ற சுயநல எண்ணமே இதற்கு காரணம்.

அதுமட்டுமல்லாது இட ஒதுக்கீடு என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் உயர்பதவிகளிலும், அரசை ஆட்டுவிக்கும் இடத்திலும், கல்வியை உரிமை கொண்டாடியவர்களுக்கும் இன்று பிரச்சினையாய் இருக்கிறது. இதுவரை நமக்குக் கீழே குப்பை பொறுக்கியவர்கள் இன்று நமக்கு சமமாக உட்கார்ந்திருக்கிறார்களே என்ற வயித்தெரிச்சலில் புகைகிறார்கள். அதாவது இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு மட்டுமே பிரச்சினை, ஆனால் வெகு சாமர்த்தியமாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கே பிரச்சினை என்பதைப் போல பொய் பரப்பி பிற்படுத்தப்பட்டவர்களையே இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசவைக்கிறார்கள்.

பல ஆயிரம் வருடங்களாக மக்களின் மரபணுவிலேயே ஊறிப்போன சாதியை வெறும் பேச்சால் ஒழித்தல் என்பது சாத்தியமில்லாதது. சாதி ஒழிப்பு என்பது இன்றளவில் ஒரு பிரச்சாரமாக, “எடுத்தா எடுத்துக்க” என்ற நிலையிலேதான் இருக்கிறது. கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு நிறைவேற்றப்படும்வரை பெரியார் தோன்றிய தமிழகத்திலேயே கூட சாதி ஒழிப்பில் தேக்கநிலை இருக்கவே செய்யும்.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சாதி சங்கங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்து வெளிப்படையாகவே சாதி வெறியர்கள் பேட்டி தர ஆரம்பித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது பல ஆண்டுகளாக இல்லாது இருந்த சாதிப்பெயர் சூட்டல் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

ஜனனி ஐயர், நரேஷ் ஐயர் என திரைக்கலைஞர்கள் சாதிப் பெயரை சூட்டிக்கொண்டு தமிழகத்தில் சுதந்திரமாக அலைகிறார்கள். புதிதாய் தமிழ் தேசியத்தை கையிலெடுத்திருக்கும் சிலர் தங்களை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சாதிப் பெயர்களை பெயருடன் சுமக்கத் துவங்கியுள்ளனர். அண்ணா, பெரியார் படங்களைக் கூட சாதிச் சங்க போஸ்டர்களில் பயன்படுத்தும் முட்டாள்கள் நிறைந்த சமூகமாக தமிழகம் மெள்ள மாறிவருகிறது. இவற்றையெல்லாம் இப்போதே உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் வடமாநிலங்கள் போல மீண்டும் சாதியம் ஆலமரமாக இங்கே வளர்ந்து நிற்கக்கூடிய வாய்ப்புகள் மேலோங்கும்.

தமிழ்மேட்ரிமோனி, பாரத்மேட்ரிமோனி என இருந்த காலம் போய் இன்று தமிழ் தொலைக்காட்சிகளிலே ஐயர்கல்யாணம்.காம், நாடார்கல்யாணம்.காம் என விளம்பரம் செய்கிறார்கள். கூடியவிரையில் மனிதக்கல்யாணம்.காம் என்ற ஒரு இணையதளம் தொடங்கவேண்டும் என சீரியசாகவே தோன்றுகிறது!

காதல் திருமணங்கள் செய்வோர்க்கு சாதி மறுப்பு இயல்பாகவே அமைந்துவிட்டாலும், சாதி மறுப்பு திருமணம் செய்யவிரும்பும் காதலில் விழாதோருக்கு என பிரத்யேகமாக சாதி மறுப்புத் திருமண இணையதளங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் பட்டேல், பானர்ஜி, சாட்டர்ஜி, குப்தா, தேவர், கவுண்டர், பறையர், வன்னியர், முதலியார் என எந்த பெயர்கள் எல்லாம் சாதியைக் குறிக்கிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சட்டப்படி தடை செய்தால் என்ன நட்டம் மொழிகளுக்கு வந்துவிடப் போகிறது? அமெரிக்கா போன்ற நாடுகளில் Nigger, Negro போன்ற சொல்லாடல்களை தடை செய்துள்ளதைப் போல!

சாதிச் சான்றிதழ்களிலும் சாதிப்பெயரைக் குறிக்காமல் இடஒதுக்கீட்டுக்காக வகுப்பை மட்டும் குறிப்பிட்டால் காலப்போக்கில் சாதிப்பெயர்களே காணாமல் போகக் கூட வாய்ப்புண்டு. இதெல்லாம் என் அனுமானங்கள். ஆனால் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நிபுணர்களுக்கே வெளிச்சம்.

மீண்டும் சொல்கிறேன், கடுமையாக, சட்டரீதியாக சாதி ஒழிப்பு என்பது நிறைவேற்றப்பட்டாலேயொழிய சாதி என்னும் நோய் தாக்கப்பட்ட சமூகமாகவே இந்திய சமூகம் இருக்கும்.

அடுத்தமுறை, ‘இப்பலாம் யாரு சாதி பாக்குறா?’ எனச் சொல்லும் முன் உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் பெண்/மாப்பிள்ளை தேடும் முறையையும், கடவுள்சிலை அருகில் பிற்படுத்தப்பட்டோர் போக முடியாத நிலையையும், அதை தடுத்து உயர்சாதியினர் தொடுத்திருக்கும் வழக்கையும், அழுதபடியே புலம்பிய டெல்லி பேராசிரியை அனுபவித்த அடக்குமுறையையும், தனியாக உணவிடப்படும் தலித்துகளையும், வீதியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சாதிச்சங்க போஸ்டர்களையும், இன்னும் உங்களைச் சுற்றி நடத்தி ஆயிரம் ஆயிரம் சாதி சார்ந்த விஷயங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

சாதியும், சாதிய அடக்குமுறைகள் ஒழியவில்லை. ஒழிக்கவேண்டும் என்ற பெருங்கடமை நம் முன் உயிருடன் இருக்கிறது!

-என்வழி ஸ்பெஷல்

குறிப்பு: கட்டுரையாளர் ‘டான் அசோக்’ இணைய உலகம் அறிந்த அரசியல் விமர்சகர். எழுத்தாளர். சமூக ஆர்வலர்.

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இந்த எபிசோட் வீடியோ:

உடைக்க முடியாதவையா சச்சின் சாதனைகள்? – கபில்தேவ்

உடைக்க முடியாதவையா சச்சின் சாதனைகள்? – கபில்தேவ்

கொல்கத்தா: சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அது மனித இனத்திற்கே பின்னடைவான ஒரு சம்பவம் ஆகிவிடும், என்கிறார் உலகக் கோப்பை நாயகன் கபில்தேவ்.

கிரிக்கெட் உலகின் ஜென்டில்மேன் என்று சர் விவியன் ரிச்சர்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான்களே போற்றிய வீரர் கபில்தேவ். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வென்று தந்தவர்.

கொல்கத்தாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக நேற்று உரையாற்றினார் கபில்தேவ். மிக நேர்மையாக அமைந்திருந்தது அவரது பேச்சு.

சாதனைகள் குறித்த ஒரு கேள்வி வந்த போது கபில் கூறியது, அவரது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பைக் காட்டியது.

அதன் ஒரு பகுதி:

நான் விளையாடிய காலத்தில், எனது சாதனைகளை நிச்சயம் சீக்கிரமே யாராவது உடைப்பார்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அதை வால்ஷ் முறியடித்தபோது சந்தோஷமாக வாழ்த்தினேன். ஹாட்லியின் சாதனையை நான் தாண்டியபோது அவரும் என்னை உற்சாகமாக வாழ்த்தவே செய்தார்.

சாதனைகளை மட்டுமல்ல, அந்த சாதனைகள் முறியடிக்கப்படும்போதும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அந்த காலத்தில் சுனில் கவாஸ்கரின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று பரவலாக பேசினார்கள். ஆனால் அதை நான் ஒருபோதும் நம்பவிலலை. இப்போது பாருங்கள்…. அவரது சாதனைகளில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டுள்ளன. சாதனைகள் என்பவை முறியடிப்பதற்காக படைக்கப்படுபவை.

சச்சின் பல சாதனை மைல்கல்களை எட்டியுள்ளார். ஆனால் அவரது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அது மனித இனத்திற்கே பின்னடைவான ஒரு சம்பவம் ஆகிவிடும். சச்சினின் சாதனைகள் முறியடிக்கப்படும் நாளைத்தான் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கி உள்ளோம். அதுதான் வளர்ச்சியின் அறிகுறி!

ஒருவரிடம் திறமை மட்டுமே இருந்து பயனில்லை. எதிர்காலத்தை குறித்து தெளிவாக திட்டம் இருக்க வேண்டும். நான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நேரத்தில், இந்திய அணிக்காக 2 வீரர்கள் ஆட வந்தார்கள். அதில் ஒருவர்தான் சச்சின். மற்றொருவர் வினோத் காம்ப்ளி. அனைத்து ஊடகங்களும் இருவரையும் சிறந்த வீரர்கள் என்றுதான் குறிப்பிட்டன.

ஆனால் காம்ப்ளியிடம் எதிர்காலத்தை குறித்த தெளிவான திட்டம் இருக்கவில்லை. முன்னேற்றத்திற்கான தகுந்த ஒழுக்கம் இருக்கவில்லை. ஒருவர் தன்னிடம் உள்ள திறமைகளை தகுந்த முறையில் புரிந்து வைத்திருந்தால் மட்டுமே, சச்சினை போன்ற சாதனை நாயகனாக உருவாக முடியும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல் இருக்க வேண்டும். நாம் ரோல் மாடல்களை வளர்ச்சியின் எல்லையாக கொள்ளாமல், அவர்களையும் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும்.

குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகளை புரிந்து கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும். இன்று எனது மகள், எனக்கு சிறந்த தோழியாக உள்ளார். தொழில்நுட்ப ரீதியாக என்னை விட அதிக அறிவு கொண்ட எனது மகளின் கருத்துகளை மதிக்கிறேன். என்னை விட அவள் திறமைசாலியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது… முன்னோர்களை விட வளரும் தலைமுறை அப்படித்தான் இருக்க வேண்டும்,” என்றார்.

-என்வழி செய்திகள்

கூட்டாளியாச்சே… எப்படிக் காட்டிக் கொடுப்பாரு பாவம்!

March 3, 2012 by  
Filed under Cartoon, Nation, Politics, World

கூட்டாளியாச்சே.. எப்படிக் காட்டிக் கொடுப்பாரு பாவம்!

முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் ரத்தத்தில் கூட்டாக கை நனைத்தவர் அல்லவா… ஐநாவில் இலங்கையைக் காப்பாற்றும் உறுதியுடன் நிற்கிறார் மன்மோகன் சிங். இந்தியா கைவிட்டாலும் உலகம் வாய்மூடி நிற்காது என நம்புவோம்!

நன்றி: தினமணி

மீண்டும் கழுத்தறுத்தது இந்தியா…. ஐநாவில் இலங்கையை காப்பாற்ற முடிவு!

ஜெனீவா நெருக்கடி: இலங்கையை காப்பாற்ற இந்தியா முடிவு!

ஜெனீவா: போர் என்ற பெயரில் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

‘குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு’ எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருப்பதன் மூலம், இலங்கையைக் காக்க இந்தியா முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்ற தைரியம் இலங்கைக்கு வந்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 19வது கூட்டம் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத்தினர் புரிந்த போர்குற்றம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட உள்ளது.

போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தின்போது, இந்தியா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“நோக்கம் சார்ந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட, அரசியல் கலவாத, மோதல்களை ஆதரிக்காத கொள்கைகளில்தான் மனித உரிமைக் குழுவின் வலிமை அடங்கியிருக்கிறது. இந்தப் பண்புகளைக் காக்க வேண்டுமென்றால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை, உறுதியான பேச்சுகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்” என்று இந்தியா கூறியிருக்கிறது.

இந்தியாவின் இந்த அறிக்கை மனித உரிமைக் குழுவின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

‘இலங்கையை கண்டிக்க இப்போது அவசியமில்லை!’

ஒரு குறிப்பிட்ட நாட்டின் மனித உரிமை நிலை பற்றி விவாதம் நடத்துவது அவசியம் வேண்டும் என்றால், வழக்கமாக நடக்கும் உலகம் முழுவதுமான ஆய்வின்போது அதைச் செய்யலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை, என்று இந்தியா கருதுவது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதுமான ஆய்வின்கீழ் ஒவ்வொரு நாட்டிலுள்ள நிலைமையும் மனித உரிமைக் குழுவில் பரிசீலிக்கப்படும். அந்த வகையில், இலங்கையின் மனித உரிமை நிலைமை பற்றிய முன்மொழிவு வரும் அக்டோபரில்தான் வரவிருக்கிறது.

எல்எல்ஆர்சி எனப்படும் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு, அதுவரை தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இலங்கை ஏற்கெனவே கோரியிருக்கிறது.

இந்தக் கோரிக்கைக்கு இந்தியாவும் ஆதரவளித்துள்ளது. இப்போது இந்தியாவின் ஆதரவு முழுவதுமாக இருப்பது இலங்கைக்குப் புரிந்துவிட்டதால், நெருக்கடி தீர்ந்த மகிழ்ச்சியில் அறிக்கை வெளியிட ஆரம்பித்துள்ளனர்!

-என்வழி

ஆசியக் கோப்பை: நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்!

February 29, 2012 by  
Filed under Nation, Politics, ஸ்போர்ட்ஸ்

நூறாவது சதம் காண சச்சினுக்கு இன்னுமொரு எக்ஸ்டென்ஷன்! – ஷேவாக், ஜாகிர் நீக்கம்!

சிய கோப்பை அணி: சச்சினுக்கு மீண்டும் சான்ஸ்-ஷேவாக், ஜாகிர் கான் நீக்கம்-கேப்டனாக தொடர்கிறார் தோனி

மும்பை: அணி தோற்கிறதோ ஜெயிக்கிறதோ… சச்சினின் நூறாவது சதம்தான் முக்கியம் என்பதுதான் கிட்டத்தட்ட இந்திய ரசிகர்களின் மனநிலை என்றாகிவிட்டது.

அதைப் புரிந்து கொண்ட பிசிசிஐ, சச்சின் நூறாவது சதத்தை எட்ட மேலும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

டாக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பார்மில் இல்லாதவரும், ஆஸ்திரேலிய தொடரின்போது கேப்டன் டோணியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டவருமான வீரேந்திர ஷேவாக்கை பிசிசிஐ நீக்கியுள்ளது. அதேசமயம் கிட்டத்தட்ட 1 ஆண்டாக பார்மில் இல்லாமல், விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜாகிர்கானுக்கும் இடம் கிடைக்கவில்லை.

பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் மார்ச் 12ம் தேதி ஆசியக் கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய வீரர்களின் தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்திய அணித் தேர்வாளர் குழுத் தலைவர்  ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆசியக் கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை அறிவித்தது.

இதில் ஆஸ்திரேலியாவில் மோசமாக ஆடிய துவக்க வீரர் ஷேவாக் அணியி்ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பார்மில் இல்லாவிட்டாலும் கூட, 100 வது சத சாதனை படைக்க சச்சினுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல கேப்டன் டோணி அணியை வழிநடத்தி செல்வார். அவருக்கு உறுதுணையாக விராத் கோஹ்லி துணைக் கேப்டனாக செயல்படுவார். முத்தரப்புத் தொடரின் சமீபத்திய போட்டியில் கலக்கலாக சதமடித்ததற்காக கோஹ்லிக்கு இந்த பரிசு!

மேலும் சுழல்பந்து வீரர் அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகிய இளம்வீரர்கள் அணியில் நீடிக்கின்றனர். இந்திய அணியில் புதுமுகமாக வேகபந்துவீச்சாளர் அசோக் டின்டா சேர்க்கப்பட்டுள்ளார். வேகபந்துவீச்சாளர் ஜாகிர்கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பதான் சகோதரர்கள்

இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதான் சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணி:

டோணி (கேப்டன்), விராத் கோஹ்லி(துணைக் கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், அசோக் டின்டா

-என்வழி செய்திகள்

ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானம்: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி

February 29, 2012 by  
Filed under General, Nation, Politics

ஐநாவில் இலங்கையை இந்தியா ஆதரித்தால் திமுக நிலை என்ன?

சென்னை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27-2-2012 அன்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து 27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக பின்வருமாறு நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்:

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேஷிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 25ம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ‘போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்படுவது சகஜம்தான்’ என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவு படுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஒருவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா..?

-என்வழி செய்திகள்

இலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி!

February 28, 2012 by  
Filed under World, ஸ்போர்ட்ஸ்

இலங்கையை அடித்து நொறுக்கி போனஸ் புள்ளிகளுடன் அபாரமாய் வென்ற இந்திய அணி!

ஹோபர்ட்: முத்தரப்பு தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்றது இந்திய அணி.

முன்னதாக இந்திய பந்து வீச்சை சுக்குநூறாக்கிய இலங்கை அதிரடியாக 320 ரன்கள் குவித்தது. ஆனால் 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 36.4 ஓவர்களிலேயே அடைந்த இந்தியா, போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தியது. விராத் கோஹ்லியின் அதிரடி 133 ரன்கள், இந்தியாவின் வெற்றிக்கு உறுதி துணையாக இருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 18 புள்ளிகளுடன், இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்கு பதிலாக ஜாகிர்கான் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போட்டியின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை, துவக்கம் முதலே விக்கெட் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 49 ரன்களாக இருந்த போது, கேப்டன் ஜெயவர்த்தனே, ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த தில்ஷனும், சங்கக்காராவும் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர். 43வது ஓவர் வரை தொடர்ந்து ஆடிய இவர்கள், அணியின் ஸ்கோரை 249 ரன்களாக உயர்த்தினர். இந்த நிலையில் 87 பந்துகளில் 2 சிக்ஸ் 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த சங்கக்காரா போல்டானார்.

பெரேரா 3 ரன்களில் ஏமாற்றினார். ஆஞ்சிலோ மேத்யூஸ் 14 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராத தில்ஷன் 150 ரன்களை கடந்தும் அதிரடியை நிறுத்தவில்லை. 3 சிக்ஸ், 11 பவுண்டரிகளை விளாசிய தில்ஷன் 160 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 320 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா, ஜாகிர்கான், பிரவீன் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா 40 ஓவர்களுக்குள் அடைந்தால் மட்டுமே போனஸ் புள்ளியுடன் இந்தியா வெற்றிப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அதிரடியில் இந்தியா:

இந்திய அணி துவக்க முதலே அதிரடியாக விளையாடியது. 1 சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசிய ஷேவாக் வழக்கம் போல சீக்கரமாக வெளியேறினார். அடுத்ததாக சச்சின் அதிரடியை தொடர்ந்த நிலையில், அவரும் 39 ரன்களில் எல்பிடபில்யூனார். இதனால் யார் இந்தியாவை வெற்றிப் பாதையில் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.

பின்னர் விராத் கோஹ்லி, கம்பிரும் சேர்ந்து அதிரடியை தொடர்ந்தனர். ஒரிரு ரன்களை அதிகளவில் எடுத்து வந்த நிலையில், கம்பிர் அரைசதம் கடந்த 63 ரன்களில் ரன் அவுட்டானார்.

கலக்கிய கோஹ்லி

ஆனால் கோஹ்லி, ரெய்னாவுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு நேராக வழி நடத்தினார். ரெய்னா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோஹ்லி சதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார். 86 பந்துகளில் 3 சிக்ஸ் 16 பவுண்டரிகளை விளாசிய கோஹ்லி 133 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அவருக்கு உறுதித் துணையாக இருந்த ரெய்னா 24 பந்துகளில் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 36.4 ஓவர்களில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை எட்டியது. இலங்கை தரப்பில் 7.4 ஓவர் வீசிய மலிங்கா 96 ரன்களை கொடுத்து இந்தியாவுக்கு ‘உதவினார்’!

இதன்மூலம் இந்தியா போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தி உள்ளது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால், இந்தியா இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதிப் பெறும்.

-என்வழி செய்திகள்

சச்சின் ஓய்வு பெற வேண்டுமா? – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம் பேர்!!

February 23, 2012 by  
Filed under General, ஸ்போர்ட்ஸ்

சச்சின் ஓய்வு பெற வேண்டுமா? – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம் பேர்!!

டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற வீரராகக் கருதப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நடத்திய ஆய்வில் 57 சதவீத வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் சச்சின் டெண்டுல்கர். தற்போது 39 வயதாகிறது அவருக்கு.

பொதுவாக ஒரு வீரர் 100 ரன்கள் எடுப்பதே சாதனை எனும் நிலையில், சச்சினோ நூறாவது நூறுக்காக காத்திருக்கிறார்.

இளம்வீரர்களுக்கு சாவல்விடும் வகையில் தொடர்ந்து விளையாடி வரும் சச்சின், 1989ம் ஆண்டு 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது  கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

அதன்பிறகு 188 டெஸ்ட் போட்டிகள், 453 ஒருநாள் போட்டிகளில் சச்சின்   ஆடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 51 சதங்களும், 65 அரைசதங்களும் அடித்து உள்ள சச்சின், மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248* ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரியாக 55.44 ரன்களை வைத்துள்ளார்.

மொத்தம் 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின், இதுவரை 18,111 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் சராசரியாக 45.16 ரன்களை வைத்துள்ள இவர், இதுவரை 48 சதமும், 98 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 200* ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சினுக்கு, இதுவரை கிளம்பாத விமர்சனங்களும் எதிர்ப்புகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. காரணம் சமீபத்திய ஆஸ்திரேலிய பயணம் மற்றும் அங்கு நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பி வருவதுதான்.

முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் வருவதும் போவதுமாக இருக்கும் சச்சினால் இந்த முறை பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

டெண்டுல்களின் குருவான காவஸ்கரே, டெண்டுல்கர் ஓய்வை அறிவித்துவிடலாம் என்று கூறிவிட்டார்.

வயசாயிடுச்சில்ல… – கபில்

1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் கபில்தேவ் கூறுகையில், “சமீபத்திய நான்கு இன்னிங்ஸ்களில் 68 ரன்கள் எடுத்திருக்கிறார் சச்சின். 22 வருடங்கள் விளையாடிவிட்டார். 20 ஓவர், ஒரு நாள் போட்டிகளிலிருந்து அவர் விலகிக் கொள்வது கிரிக்கெட்டுக்கு நல்லது. இதை உலகக் கோப்பை முடிந்த உடனே எதிர்ப்பார்த்தேன். அவரது வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். 40 ஐத் தொட்டுவிட்டார். சச்சின் மட்டுமல்ல, திராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரும் ஓய்வை அறிவித்துவிடலாம்,” என்றார்.

முன்னாள் கேப்டன் கங்குலியும் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவை சச்சின்தான் எடுக்க வேண்டும், யாரும் அவரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு

இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியா, சச்சின் ஓய்வு பெறுவது குறித்த ஆய்வு ஒன்றை வாசகர்கள் இடையே நடத்தியது. இதில் சச்சின் ஓய்வு பெறலாமா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

பல சாதனைகளை படைத்து உச்சியில் நின்றாலும், இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவு. புகழின் உச்சியில் இருக்கும்போதே அவர் விலக வேண்டும் என்பதே பெரும்பான்மை வாசகர்களின் கருத்தாக உள்ளது.

சச்சினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளவர்கள், அவர் விரும்பும்வரை விளையாட விடலாம் என்று கூறியுள்ளனர்.

இதில் மொத்தம் 47,000 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அவர்களில் 57 சதவீதம் வாசகர்கள், சச்சின் ஓய்வு பெறுவதற்கு ‘ஆம்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

41 சதவீதம் (19,127 பேர்) ஓய்வு பெற ‘வேண்டாம்’ என்று வாக்களித்து இருந்தனர். மேலும் 2 சதவீதம் ( 817 பேர்) முடிவு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

கபிலுக்கு நேர்ந்த அனுபவம்…

இந்தியாவின் இணையற்ற ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கபில்தேவ் 1994-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இத்தனைக்கும் அந்த ஆண்டு அவர் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளரும் அவர்தான். பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருந்தார் கபில்.

ஆனால் அன்றைக்கு அவரது வயது 34 ஆகிவிட்டது என்று கூறி, எப்போது ரிட்டயராகப் போகிறார் என்று முன்னாள் வீரர்கள், மீடியா போன்றவை கேள்வி எழுப்பின. இந்தக் கேள்வி எழுந்த சில தினங்களிலேயே தனது ஓய்வை அறிவித்துவிட்டார் கபில்!

-என்வழி செய்திகள்

விக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்!!

விக்கிலீக்ஸ் சொல்லும் வில்லங்க ரகசியங்கள்!!

2 ஜி அலைக்கற்றை  விவகாரத்தையொட்டி மத்திய புலனாய் அமைப்புகள் அதிகாரத் தரகரான நீரா ராடியா-ஆ ராசா – கனிமொழி – பர்கா தத் – வீர் சங்வி ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய 5000 ஒலிநாடாக்களை பத்திரிகைகளுக்கு வெளியிட்டு பரபரப்பேற்படுத்தியது. 500 மணி நேரம் ஓடக்கூடிய ஆடியோ பைல்கள் அவை.

இதை விட பரபரப்பான சமாச்சாரம் ஒன்று சர்வதேச அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சர்வதேச நாடுகளின் அரசியல் ரகசியங்கள்.

உலக போலீஸ் என்று கர்வமாக வலம் வந்த அமெரிக்காவை இன்று பெரும்பாலான நாடுகள் அல்பமாகப் பார்க்கின்றன, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களைப் படித்த பிறகு.

இப்போது, ஒவ்வொரு நாட்டுக்கும் தனது தூதர்களை அனுப்பி, “விக்கிலீக்ஸ்’ சொல்வதை தயவு செய்து நம்பிவிடாதீர்கள்’, என்று கோரிக்கை விடுத்து வருகிறது அமெரிக்கா.

இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை மூன்று தொகுதிகளாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இவற்றில் தலைபோகிற சமாச்சாரம் ஏதாவது இருக்கிறதா… அல்லது வெற்றுப் பரபரப்பு சமாச்சாரமா என்றால்… இனிமேல்தான் அதுபற்றிய ஒரு முடிவுக்கு வரமுடியும்.

இப்போதைக்கு பல பரபரப்பான சமாச்சாரங்கள், கிசுகிசு பாணியிலான அக்கப்போர்களே வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இரு பக்கத்து வீட்டுக்காரர்கள் பொரணி பேசுவதைப் போலத்தான் அமெரிக்க ஆட்சியாளர்களும் அவர்களது நட்பு நாடுகளும் பிற நாடுகளைப் பற்றி பேசி வந்திருக்கிறார்கள்.

‘இந்த தோணித் தலையன் லொள்ளு தாங்கலைடா மண்டையா” என்று நம்ம ஊர் கவுண்டமணி அடிக்கும் கமெண்டைப் போலவே, அமெரிக்க ஆட்சியாளர்கள் பிரான்ஸ், சவூதி, லிபியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளின் தலைவர்களைப் பற்றி சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்திருக்கிறார்கள். இப்போதைக்கு அவைதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

அவற்றைப் பார்க்கும் முன், முதலில் விக்கிலீக்ஸ் என்பது என்னவென்று பார்த்துவிடலாம்…

2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதார தளமாக விக்கிலீக்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காகவும்,  சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதற்காகவும் இந்தத் தளம் நிறுவப்பட்டதாக அஸாங்கே தெரிவித்துள்ளார்.

இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மற்றும் தங்களின் சிறப்பு நிருபர்கள் மூலம் சேகரித்தது.

அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த இணையதளம்.

ஈராக் போரில் கொல்லப்பட்ட 109,032 பேர்…

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற ‘பெருமையும்’ இதற்குண்டு.

ஜூலியஸ் அஸாங்கே

ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.

இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.

இந்தியா நம்பத் தகுந்த நாடல்ல…

இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக நாடுகள் – தலைவர்கள் பற்றிய அமெரிக்காவின் கேவலமான கிண்டல்!

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது ‘பெரியண்ணன்’ அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் இப்போது தெரிகிறது.

பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளார். “பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்” என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த இளவரசர் ஆன்ட்ரூஸின் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளனர்.

“லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்…”, என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.

எந்தெந்த தூதரகத்திடமிருந்து தகவல் பெறப்பட்டது என்ற விவரங்கள்...

எந்தெந்த தூதரகங்களிலிருந்து தகவல் பெறப்பட்டதென்ற விவரம்...

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, “இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்..” என்றும் கூறியுள்ளனர்.

‘அடங்காத நாய் புடின்’

மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, ‘அ‌ல்பா டா‌க்’ என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான் ஹிட்லர்

ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை “ஹிட்லர்” என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.

பாகிஸ்தானிடம் ‘தோற்ற’ அமெரிக்கா!

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.

மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.

கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா…

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஐ.நா. வை உளவு பார்க்குமாறும் மரபணு சோதனையைக் கூட பெற்றுக் கொள்ளுமாறும் முக்கிய அதிகாரிகளுக்கு ஹிலாரி கிளின்டன் உத்தரவிட்டிருந்தததும் வெளியாகியுள்ளது.

அதே நேரம், ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய கடுமையான விமர்சனமும் இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவை வெளியில் வந்தால் பிரிட்டன் – அமெரிக்க உறவில் எந்த மாதிரி விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை.

ஈரான் காரணம்?

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் கை வலுக்கும் நிலைக்கும் வித்திட்டுள்ளது.

இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் ‘விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.

இந்த பிரச்சினைக்கு முழுக் காரணமும் ஈரான்தான் என்றும், அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச சமூகத்தைத் தூண்டுகிறது அந்த நாடு என்றும் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!

-என்வழி

Source: wikileaks.org

நாட்டில் ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! – சோனியா கவலை

November 20, 2010 by  
Filed under General

ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! – சோனியா கவலை

டெல்லி: லஞ்சம், ஊழல் பெருகுவது நாட்டுக்கு ஆபத்து என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சோனியா காந்தி கூறுகையில், “இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்…” என்றார்.

இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்!

இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்!

ரு காலமிருந்தது… மாதம் ரூ 4000 சம்பளம் கிடைத்தால் போதும், வீடு, வாகனம், வசதியான வாழ்க்கை என நிம்மதியாக இருக்கலாம் இந்தியாவில், என்ற காலம் ஒன்றிருந்தது.

ஆனால் இன்று… ரூ 40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசி கடன்கள் நின்றபாடில்லை. வருமானம் இருக்கிறதோ இல்லையோ, விலை கூடவோ குறைவோ… தேவைக்கும் அதிகமாகவே நுகர் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில், பெரும் கடனாளிகளாகிக் கொண்டிருக்கும் நிலை.

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தை கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கியதன் விளைவு… கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாட்டின் விலைவாசி சராசரியாக 126 சதவீதம் உயர்ந்துவிட்டது.

மத்திய அரசின் புள்ளி விவரத்துறை அறிக்கையின்படி, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணவான அரிசி விலை 2006-ல் குவின்டாலுக்கு ரூ 3031 ஆக இருந்தது. இன்று அதே அரிசி, அதே எடை, ஆனால் விலை ரூ 6859!

வெங்காயத்தின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சியின் விலை 44 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது (கோழி / ஆடு). மீன் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது! 25 ரூபாய் விற்ற ஒரு கிலோ பூண்டு, ரூ 200-ல் வந்து நிற்கிறது. இவையெல்லாம் சும்மா… சாம்பிள்கள்தான்.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண்களைப் பொறுத்தவரை 30 சதவீத உயர்வு காணப்படுகிறது. இதற்கு முன் எப்போதுமே பார்த்திராத மோசமான விலை உயர்வு, என அலறுகிறார்கள் நிபுணர்கள்.

பொருளியல் நிபுணர்களிடம் பேசியதில், “இந்த விலை உயர்வு பற்றி வெளிவந்திருக்கும் விவரங்கள் எல்லாமே, ஐஸ் மலையின் ஒரு சிறிய நுனிப்பகுதிதான். அதற்குக் கீழே உள்ள பிரமாண்ட ஐஸ் மலை இருக்கிறதே… அதுதான் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே உடைக்கக் கூடியதாக உள்ளது. யார் சொல்லி இந்த லைஃப் ஸ்டைலுக்கு மாறினோம்…. நாமாக… விளம்பரங்கள், மார்க்கெட்டிங் உத்திகளைப் பார்த்துத்தானே… இப்போதாவது ஒரு நிதானத்துக்கு வரவேண்டும் மக்கள் . இல்லாவிட்டால், இந்தக் கப்பல், விலை என்ற ஐஸ் மலையில் மோதிச் சிதறுவதைப் பார்த்துக் கொண்டு அழும் அமெரிக்க நிலைதான் இந்தியாவுக்கும்…” என்கின்றனர் கவலையுடன்.

நாட்டின் நான்கு பெரு நகரங்களில் விலை நிலையை ஆராய்ந்ததில், இருப்பதிலேயே தலை நகர் டெல்லியில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் சென்னை மகா மோசம். நாட்டின் சராசரி விலைவாசி உயர்வை விட அதிகமாக, 146 சதவீத உயர்வாக உள்ளது.

லைஃப்ஸ்டைல் மாற்றம்தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர் பொருளியலறிஞர்கள். இந்த லைஃப்ஸ்டைல்தான் ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ செலவுக்கென்று தனி பட்ஜெட் போட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. வாழ்க்கை, சுகாதாரம்… இரண்டையுமே பாதித்துள்ள இந்த நவீன வாழ்க்கை முறை விபத்தில் முடியும் முன், இப்போது தேவை ஒரு உடனடி ப்ரேக்!

அதை எப்படி, எந்த கட்டத்தில் போட்டுக் கொள்ளப் போகிறோம்?

நன்றி: தட்ஸ்தமிழ்

பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!!

பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!!

கையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை… பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான் என்பார்கள். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் உலகின் மிகப்பெரிய தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலான நாடுகள் பட்டினியை ஒழிக்க அத்தனை முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை. பட்டியல் போட்டுச் சொல்லும் நிலைதான் உள்ளது.

ஆப்ரிக்கா இன்னமும் உலகின் பசிமிகுந்த பூகோளப் பரப்பாகவே மாறிவிட்டது. சஹாரா பாலைவனத்தையொட்டிய காங்கோ போன்ற நாடுகளில் பட்டினியால் பல ஆயிரம் பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.

அதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது.

அதேநேரம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுக்க போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்கள் சத்தான ஆகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையை பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளது கவனிக்க வேண்டிய கவலை!

இந்த ஆண்டின் ‘உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்’ திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியல்படி, பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேஷியாவுக்குக் கிடைத்துள்ளது.

84 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39வது இடத்தையும், நேபாளம் பாகிஸ்தான் 57 வது இடத்தைப்பெற்றுள்ளது. இந்தியாவோ 67வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இங்கே, பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவு உலகின் எடைகுறைந்த, நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இது வெறும் 5 சதவீதமாத உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65வது இடத்திலிருந்தது. இந்த ஆண்டு 67வது ஆண்டுக்கு நழுவியிருக்கிறது.

பட்டினி ஒழிப்பில் டாப் 9 நாடுகள்:

குவைத், மலேசியா, துருக்கி, மெக்ஸிகோ, டுனீஷியா, நிகாரகுவா, கானா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் பெரு.

மோசமாக பட்டினி நிலவும் 9 நாடுகள்:

காங்கோ, கொமரோஸ், புருண்டி, வட கொரியா, ஸ்வாஸிலாந்து, ஜிம்பாப்வே, கினியா பிஸா, லைபீரியா, காம்பியா.

-என்வழி

இலங்கையில் 200 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி!

September 21, 2010 by  
Filed under General

இலங்கையில் 200 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி!

கொழும்பு: இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 200 பேருக்கு இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தனது பயிற்சித் தளங்களை அமைத்து செயல்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பாவுக்கு தற்போது புதிய வாசஸ்தலமாக இலங்கை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் வனப் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாண பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சிப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா மறுத்திருந்தார்.

ஆனால் தற்போது 200 தீவிரவாதிகள் இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. இந்தியாவுக்குள் ஊடுறுவ, இலங்கை நல்ல வாய்ப்பாகவும், எளிய வழியாகவும் இருப்பதாக தீவிரவாதிகள் கருதுவதால் இலங்கையை தங்களது புதிய களமாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புனேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கிய இருவர், தாங்கள் கொழும்பில் வைத்து பயிற்சி பெற்றதாக கூறியிருந்தனர். இதை கோத்தபயா மறுத்திருந்தார். ஆனால் தற்போது 200 பேர் வரை பயிற்சி பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி இந்தியத் தரப்பில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இனத் துரோகி கேபி..! – கொதிக்கும் வைகோ

September 5, 2010 by  
Filed under General

இனத் துரோகி கேபி..! – கொதிக்கும் வைகோ

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்” என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியுமே…. வார்த்தை விமர்சனங்களைப் பாய்ச்ச ஆரம்பித்திருப்பது, தமிழீழ ஆதரவாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!

கே.பி-யின் புதிய குற்றச்சாட்டுகளுக்கு ஜூனியர் விகடனுக்கு வைகோ வழங்கிய பேட்டி:

கேள்வி: தமிழீழம் என்பது அழிந்துபோன இலட்சியம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாரே கே.பி?

வைகோ: இதைச் சொல்ல, துரோகி கே.பி-க்கு அதிகாரம் கொடுத்தது யார்? இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகப் படலமும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதில் இன்றைய அத்தியாயம் கே.பி. கொலைபாதகன் ராஜபக்ஷ அரசின் கைக் கூலியாகத் தமிழினத்துக்கு துரோகம் செய்வதையே இன்றைய தொழிலாகக்கொண்டு மாறிவிட்ட கே.பி-யிடம் இந்த வார்த்தைகளைத் தானே எதிர்பார்க்க முடியும்?

தமிழீழம் வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்க, பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்ட ஈழத் தந்தை செல்வநாயகத்தின் மறுவடிவமா இவர்? எத்தனை நாட்டு இராணுவம் சூழ்ந்து வந்தாலும் தமிழீழ இலட்சியத்தை விடாமல் களத்தில் நின்று போராடிய புலிப் போராளியா?

2002-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு 2008-ம் ஆண்டில் ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது ‘விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நானே தலைவர்’ என்றும், ‘பிரபாகரன் தன்னை அப்பொறுப்பு வகிக்கச் சொன்னார்’ என்றும் முழுப் பொய்யைச் சொல்லி தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டவர்தான் இந்த கே.பி.! அப்படிப்பட்டவர் பேசும் பேச்சா இது?

2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தின உரையில், தலைவர் பிரபாகரன், ‘பெரிய ஆயுத பலம்கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும்,எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோமாக! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!’ என்று அறிவித்தார்.

உலகத்தின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் உள்ளமெல்லாம் இருக்கும் ஒரே தீர்வு… தனித் தமிழ் ஈழம்தான். கடந்த 40 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் தமிழனைக் கொன்ற ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனி தமிழனுக்கு நிம்மதி என்பது வரவே வராது. இதை நாம் சொல்லவில்லை… அமெரிக்க மருத்துவர் எலின் ஷான்டர் சொன்னார். ‘இனி இரண்டு தமிழர்கள் சந்திக்கும்போது, அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று உறுதி எடுங்கள்’ என்றார் அவர்.

எலின் ஷான்டர் உடம்பில்கூட தமிழ் இரத்தத்துக்கான துடிப்பும் தவிப்பும் ஓடுகிறது. கே.பி. உயிர் வாழ்வதோ சிங்கள இரத்தத்தில்!

கேள்வி: விடுதலைப் புலிகள், சாதாரண மக்கள் மீது வன்முறையைத் தூண்டி துன்பம் விளைவித்ததாக கே.பி. சொல்கிறாரே?

வைகோ: இது மட்டுமா சொல்கிறார் அவர்? கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர் வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேவின் சகோதரன் கோத்தபாய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கேக்கும் தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக அன்போடு தன்னிடம் பேசியதாகவும், அதன் பின் தான் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கே.பி. கூறியிருக்கிறார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் கூறியிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்துவிட்டதாக கோத்தபாயாவிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.

சிங்கள அரசால் சிங்காரித்து பூஜிக்கப்படும் கே.பி., 2009 மே 17-க்கு முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டதாகக் கூறிய கே.பி., விடுதலைப் புலிகளைப் பற்றியும், உயிர் கொடுத்துப் போராடிய போராளிகள் பற்றியும், எவருக்கும் நடுங்காத அதன் தலைவர் பற்றியும் உயர்வாகப் பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

புலிகள், எப்போதேனும் அப்பாவி சிங்கள மக்களை தேடிப்பிடித்துக் கொன்றதுண்டா? பாலியல் துன்பம் இழைத்ததுண்டா? அவர்கள் வாழும் இடத்தில் குண்டு போட்டதுண்டா? அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் கே.பி.? ஆனால், அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்றதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்கள் உண்டே?

காட்டுக்குள் வழி தவறி வந்த சிங்களப் பெண் ஒருத்தியை தமிழர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கேள்விப்பட்டதும், அதற்கு மிகக் கடுமையான தண்டனை விதித்தவர் பிரபாகரன். புலிகளால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்கு அவர்கள் நாட்டு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தவர் பிரபாகரன். பிணைக் கைதியாகப் பிடித்துவைக்கப்பட்ட சிங்கள இளைஞன் ஒருவனது மனைவி அவனைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது உடனே அனுமதி கொடுத்தது புலிகளது இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தைத்தான் கே.பி. கொச்சைப் படுத்துகிறார்.

எட்டு தமிழ் இளைஞர்களின் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அம்மணக் கோலத்தில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, இழுத்து வரப்பட்டு, சிங்களச் சிப்பாய்கள் எட்டி உதைத்து மிதித்து மண்டியிட்டு உட்காரவைத்து எந்திரத் துப்பாக்கியால் பின்னந் தலையில் சுட்டு, இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கச் செய்து சாகடித்தார்களே..! இதை இணைய தளங்களில், சேனல் 4 தொலைக்காட்சியில் காண்பித்தார்களே. இதற்கு என்ன பதில் இருக்கிறது?

சிங்களவன் வெறிகொண்டு திலீபனின் நினைவிடத்தை உடைத்தான். மாவீரர் துயிலும் இடங்கள் உடைக்கப்பட்டன. வாழ்க்கையின் வசந்த காலத்தில் சுகங்களைத் தேடாமல் மண்ணுக்காக மடிந்த எம் இளைஞர்களும், இளம் பெண்பிள்ளைகளும் கல்லறைக்குள்கூட நிம்மதியாய் கிடக்கக் கூடாது என்பதற்காக, எல்லாக் கல்லறைகளையும் உடைத்தானே… அதைப்பற்றி தனது பேட்டியில் ஒரு சொல் சொல்ல, கே.பி-க்கு முதுகெலும்பு உண்டா?

ஆபரேஷன் எல்லாளனில் பங்கேற்ற கரும்புலி வீரர்களின் உடலை நிர்வாணமாக்கி, சிங்களத் தெருவில் ஊர்வலம் விட்டதும், பெண் போராளிகளைப் பாலியல் வல்லுறவு செய்து அந்தப் படங்களை வெளியில் விட்டதும் கே.பி. கண்ணுக்கு காட்டுமிராண்டித்தனமாகத் தெரியவில்லையா?

கேள்வி: இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக கே.பி. சொல்கிறாரே?

வைகோ: எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் என்பதை வேறு வார்த்தையில் கேட்டிருக்கிறார் கே.பி. ராஜபக்சேயின் ராஜ்யத்தில் தனது மிச்ச நாட்களைக் கழிக்க வேண்டிய நேரத்தில் கே.பி-யால் இப்படித்தான் பேச முடியும்.

அயர்லாந்து நாட்டின் தலைநகராகிய டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்களின்படி, ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி. போர் குறித்த ஜெனிவா ஒப்பந்தங்களை மீறியவர் என்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

2005-ம் ஆண்டு முதல் 2009 வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், கடைசி ஐந்து மாதங்களில் நடத்திய கொடூரங்களையும்… ஆயிரம் கே.பி-கள் பேட்டிகள் கொடுத்தாலும் மறைக்க முடியாது. வெள்ளைக் கொடியை ஏந்தி வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட போராளிகளை பட்டப்பகலில் சுட்டுப் பொசுக்கிய பாவத்துக்கு, பத்திரிகையாளர் மேரி கெல்வின் என்ற ஒரு சாட்சியே போதும்.

மருத்துவமனைகள் மீது, பள்ளிகள் மீது, குடியிருப்புகள் மீது குண்டுகள் போட்டதை சட்டிலைட் படங்கள் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. உலகம் தடை செய்த ஆயுதங்கள், குண்டுகள் அனைத்தும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவையும் ஒரு துரோகியின் பேட்டியால் மறைக்கப் பார்க்கிறார்கள்.

ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்து உலக நாடுகளில் ஓங்கி வருகிறது. அதைத் திசை திருப்பவே இதுபோன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன!

கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது புலிகளால் பெரும் இழப்பைச் சந்தித்த ராணுவம்!

August 23, 2010 by  
Filed under உலகம் & இலங்கை

கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது புலிகளால் பெரும் இழப்பைச் சந்தித்த ராணுவம்!

கொழும்பு: கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது இலங்கை ராணுவம் புலிகளிடம் பலத்த இழப்புகளைச் சந்தித்ததாகவும், பயந்து தப்பியோடிய படையினரை தடுத்து நிறுத்துவதற்கு தான் எடுத்த கடுமையான நடவடிக்கையால்தான் ராணுவம் தாக்குப் பிடித்ததென்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கை அரசால் ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு, தனது ஜெனரல் தரநிலைப் பட்டத்தையும் பதக்கங்களையும் இழந்துள்ள சரத் பொன்சேகா தனது பதவிக் காலத்தில் 4786 இராணுவ அதிகாரிகளை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தியதாக இலங்கை அரச தரப்பினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது ராணுவத்தின் பல முனைகளிலிருந்தும் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது புலிகளால் ராணுவம் கடுமையான இழப்புகளைச் சந்தித்திருந்தது.

அப்போது இராணுவத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக படையினர் தப்பியோடும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது. இல்லையேல் நாம் கிளிநொச்சியில் இருந்து ஓமந்தைக்குப் பின்வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

ஒரு அங்குலம் கூட ராணுவத்தால் முன்னேற முடியாது போயிருக்கும்.

இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசித்தேன். அதன்பிறகுதான் தப்பியோடிய படையினர் இராணுவ நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.

எனது பதவிக்காலத்தில் இராணுவ நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள், படையினரில் பெரும்பாலானவர்கள் தப்பியோடிப் பிடிபட்டவர்கள்தான்,” என்றார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய பிறகுதான் இலங்கைக்கு பெருமளவு ஆயுத உதவிகளை வெளிப்படையாகவே செய்யத் துவங்கின இந்தியா உள்ளிட்ட நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஓடிப்போன சிங்கள ராணுவத்தினரில், கிழக்கில் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவும் அடங்குவார்.

சிறந்த நாடுகள் பட்டியல்… இந்தியாவை முந்திய இலங்கை!

August 23, 2010 by  
Filed under Tour Guide

சிறந்த நாடுகள் பட்டியல்… இந்தியாவை முந்திய இலங்கை!

நியூயார்க்: உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட சிறந்த நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூஸ்வீக் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும், இலங்கை 66வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை. அமெரிக்கா 11வது இடத்தையும், ஜெர்மனி 12வது இடத்தையும், இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன.

நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரியவந்தன.

வாசகர்களிடம் ‘உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில் பிறக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

தலைவர்களில் முதலிடம் மன்மோகன் சிங்குக்கே!

அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரியவந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சர்வேயில், ‘அதிகம் நேசிக்கப்படும் உலகத் தலைவர்கள் யார்?’ என்ற கருத்துக் கணிப்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்வதெல்லாம் உண்மை!

June 7, 2010 by  
Filed under நட்புடன்

சொல்வதெல்லாம் உண்மை!

ரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் இந்தியாவில் நிலவும் முரண்கள் கொஞ்சமல்ல.

சில சாம்பிள்கள் பார்க்கலாமா…

*அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

*பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

*வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

*பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

*ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

*நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

*நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

*மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

*கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

*கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

*பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

*குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

*அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!

இந்த நிலை மாறுவது எப்போது? தூங்கும் பாரதமாதாவைதான் எழுப்பிக் கேட்க வேண்டுமோ!

அனுப்பியவர்: பால்பழனி

இந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்!

May 11, 2010 by  
Filed under General

இந்திய அரசின் நிபந்தனைகளை நிராகரித்தார் பிரபாகரன் தாயார்… உறவினர்களுடன் கடைசி காலத்தைக் கழிக்க முடிவு!

கொழும்பு: பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய இந்தியாவின் சிகிச்சை வாய்ப்பை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார். தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் உறவினர்களுடன் கழிக்கவே அவர் விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையாகப் பெற்ற 6 மாத கால விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல், விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.

இந்த மிருகத்தனமான செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்வர் கருணாநிதி , அரசுக்குத் தெரிவிக்காமல் வந்து விட்டார் பார்வதி அம்மாள். அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசு க்கு கடிதம் எழுதப்படும் என்றார். அதன்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.

இதையடுத்து பல்வேறு கடும் நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை நேற்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கிட்டத்தட்ட மருத்துவமனையில் சிறைப்படுத்தப்படும் நிலை இது என தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சை வாய்ப்பை பார்வதி அம்மாள் தரப்பு நிராகரித்து விட்டது. நேற்று திடீரென மலேசியாவிலிருந்து பார்வதி அம்மாள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்டார்.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பார்வதி அம்மாள் செல்லவுள்ளதாகவும், தனது எஞ்சிய காலத்தை அங்கேயே அமைதியாக கழிக்கப் போவதாகவும் அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பிலேயே பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜ்மல் கஸாபுக்கு என்ன தண்டனை?

May 3, 2010 by  
Filed under General

அஜ்மல் கஸாப் குற்றவாளி… தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்!

மும்பை: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கஸாபை குற்றவாளி என இன்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. பத்து பேரில் 9 பேர் கொல்லப்பட்டு விட, கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்ட்டான்.

இதையடுத்து, 166 பேரைக் கொன்றதாக கசாப் மீது வழக்குத் தொடரப்பட்டது. கசாபுக்கு உதவியதாக அன்சாரி மற்றும் சபாஹுதீன் ஷேக் ஆகிய இரு இந்தியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மும்பை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. போலீஸ் தரப்பில் கசாப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போதுமான ஆவணங்கள் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கசாப் குற்றவாளி என நீதிபதி தஹலியானி இன்று தீர்ப்பு வழங்கினார். சதித்திட்டம் தீட்டம் தீட்டியது, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற 86 குற்றச்சாட்டுகள் கசாப் மீது சுமத்தப்பட்டிருந்தன.

அன்சாரி மற்றும் சபாஹுதீன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

கஸாபுக்கு என்ன தண்டனை என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்களான ஹபீஸ் சயீத், லக்வி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கு 369 நாட்கள் விசாரிக்கப்பட்டது. 658 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 12,850 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தஹிளியானி இன்று அளித்த தீர்ப்பு கிட்டத்தட்ட 1522 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.

20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா!

20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா!

செயின்ட் லூசியா: மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது மூன்றாவது 20 ஓவர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.

ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா. இந்த உலகக் கோப்பையில் சூப்பர் 8 கட்டத்தை அடையும் முதல் அணி இந்தியாதான்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஸ்மித், இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இரண்டாவது பந்திலேயே, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து கார்த்திக்குடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 6-வது ஓவரில் பிரிந்தது. 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த கார்த்திக் காலிஸ் பந்து வீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து யுவராஜ் சிங் களம் இறங்கினார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். குறிப்பாக ரெய்னாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்குமாக விரட்டினார்.

இந்த ஜோடி 16-வது ஓவரில் பிரிந்தது. யுவராஜ் சிங் 30 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 2 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்து பதான் 11 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். 19-வது ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். 101 ரன்கள் எடுத்த அவர் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். டோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.

டோனி 16 ரன்களுடனும், ஹர்பஜன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் காலிஸ் 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கேப்டன் ஸ்மித் 36 ரன்கள் (28 பந்துகள்) எடுத்து ரன் அவுட் ஆனார்.

கடைசி கட்டத்தில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன

தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

உடல் நலக் குறைவு காரணமாக கௌதம் கம்பீர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார்.

வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு பதிலாக, ஆல் ரவுண்டர் பியூஸ் சாவ்லா களம் இறங்கினார்.

வங்க தேசத்தை வென்ற பாகிஸ்தான்

ஞாயிற்றுக் கிழமை நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்க தேச அணியை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டங்கள்

இலங்கை – ஜிம்பாப்வே

(இரவு 7, கயானா)

மேற்கிந்தியத்தீவுகள் – இங்கிலாந்து

(இரவு 11, கயானா)

20 ஓவர் உலகக் கோப்பை அட்டவணை!

April 30, 2010 by  
Filed under ஸ்போர்ட்ஸ்

20 ஓவர் உலகக் கோப்பை அட்டவணை!

கயானா: மேற்கிந்தியத் தீவுகளில் வெள்ளிக்கிழமை (நாளை) ஐசிசி 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. 16 நாட்கள் நடக்கும் இதில் பங்கேற்கும் 12 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

அணிகள், போட்டி நடைபெறும் தேதி விவரம் வருமாறு:

ஏ பிரிவு – பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா

பி பிரிவு – இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே

சி பிரிவு – தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்

டி பிரிவு – மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து.

போட்டிகள், நடக்கும் இடம்

ஏப்ரல்  30:  இலங்கை – நியூசிலாந்து, இரவு 10.30 இடம்: கயானா

ஏப்ரல் 30: மேற்கிந்தியத்தீவுகள் – அயர்லாந்து, நள்ளிரவு 2.30 இடம்: கயானா

மே 1:        இந்தியா – ஆப்கானிஸ்தான், இரவு 7.00, இடம்: செயின்ட் லூஸியா

மே 1:           பாகிஸ்தான்- வங்கதேசம்,  இரவு 11.00, இடம்: செயின்ட் லூஸியா

மே 2:           இந்தியா – தென்னாப்பிரிக்கா, இரவு 7.00, இடம்: செயின்ட் லூஸியா

மே 2:           பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா, இரவு 11.00, இடம்: செயின்ட் லூஸியா

மே 3:          ஜிம்பாப்வே – இலங்கை, இரவு 7.00,  இடம்: கயானா

மே 3:           மேற்கிந்தியத்தீவுகள் – இங்கிலாந்து, இரவு 11.00 இடம்: கயானா

மே 4:            நியூசிலாந்து – ஜிம்பாப்வே, இரவு 7.00, இடம்: கயானா

மே 4:          இங்கிலாந்து – அயர்லாந்து, இரவு 11.00, இடம்: கயானா

மே 5:           ஆஸ்திரேலியா – வங்கதேசம் இரவு 7.00, இடம்: பார்படோஸ்

மே 5:           தென்னாப்பிரிக்கா- ஆப்கான் இரவு 11.00, இடம்: பார்படோஸ்

சூப்பர் 8 ஆட்டங்கள்

பிரிவு இ:  ஏ1, பி2, சி1, டி2, பிரிவு எஃப்: ஏ2, பி1, சி2, டி1

மே 6:        ஏ 1 – டி 2 இரவு 7.00, இடம்: பார்படோஸ்

மே 6:         சி1 – பி2 இரவு 11.00, இடம்: பார்படோஸ்

மே 7:         ஏ2 – சி2 இரவு 7.00, இடம்: பார்படோஸ்

மே 7:        பி1 – டி1 இரவு 11.00, இடம்: பார்படோஸ்

மே 8:         சி1 – டி2 இரவு 7.00, இடம்: பார்படோஸ்

மே 8:         ஏ1 – பி2 இரவு 11.00, இடம்: பார்படோஸ்

மே 9:         சி2 – டி1 இரவு 7.00, இடம்: பார்படோஸ்

மே 9:         பி1 – ஏ2 இரவு 11.00, இடம்: பார்படோஸ்

மே 10 :      பி2 – டி2 இரவு 7.00,  இடம்: செயின்ட் லூஸியா

மே 10:       ஏ1 – சி1 இரவு 11.00, இடம்: செயின்ட் லூஸியா

மே 11:        பி1 – சி2 இரவு 10.30, இடம்: செயின்ட் லூஸியா

மே 11:       டி1 – ஏ2 நள்ளிரவு 2.30, இடம்: செயின்ட் லூஸியா

அரையிறுதிப் போட்டிகள்

மே 13:       முதல் அரையிறுதி, இரவு 9.00,  இடம்: செயின்ட் லூஸியா

மே 14:        இரண்டாவது அரையிறுதி, இரவு 9.00, இடம்: செயின்ட் லூஸியா

மே 16 :       இறுதிப் போட்டி, இரவு 9.00, இடம்: பார்படோஸ்

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இந்தியாதான் உதவியது! – கோத்தபய

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இந்தியாதான் உதவியது! – கோத்தபய

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெற இந்தியாதான் உதவியது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று சில மாதங்களுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் போர் நடந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்கிற ரீதியில் பேசி வந்தனர் ஆட்சியாளர்கள்.

ஆனால் பின்னர், தமிழகம் வழியாக இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. பிரணாப் முகர்ஜியும், நாராயணனும், சிவசங்கர் மேனனும் சீஸன் டிக்கெட் எடுக்காத குறையாக வாரத்துக்கு இருமுறை ராஜபக்சேவை சந்தித்து போருக்கான டிப்ஸ்களைக் கொடுத்து வந்தனர்.

இப்போது அவரது தம்பியும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே இந்தியாவின் துணை இல்லாமல் புலிகளுக்கு எதிரான போரில் ஜெயித்திருக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கொழும்பில நேற்று நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியது:

விடுதலைப்புலிகளை முறியடிக்க 4 ஜனாதிபதிகள் தலைமையில் அமைந்த 8 அரசுகள் முயன்றன. ஆனால் முடியவில்லை. ராஜபக்சே பதவி ஏற்றதும் இது பற்றி ஆராயப்பட்டது.

முடிவில் ராணுவத்தின் பலத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பலன் கிடைத்தது. முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் கூடுதல் ராணுவ வீரர்களை நிலை நிறுத்தினோம்.

கிழக்கு மாகாணத்தில் தாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்றும், தந்திரமாக பின் வாங்கி இருப்பதாகவும் விடுதலைப்புலிகள் கூறினார்கள். வடக்கில் திடீரென கடுமையாக தாக்குதல் நடத்தினால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் படையை நாங்கள் வடக்கு பகுதிக்கு நகர்த்துவோம். அப்போது கிழக்கு மாகாணத்தை கைப்பற்றி விடலாம் என்று விடுதலைப்புலிகள் தவறாக கணித்தனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தை தக்க வைப்பதற்கு ராணுவத்திடம் போதுமான வீரர்கள் இல்லை என்று விடுதலைப்புலிகள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் படை வீரர்கள் எண்ணிக்கையை நாங்கள் கணிசமாக அதிகரித்திருந்தோம்.

ஒவ்வொரு மாதமும் தலா 5 ஆயிரம் பேரை படையில் சேர்த்தோம். இதனால் மூன்றே வருடங்களில் வீரர்கள் எண்ணிக்கை ஒருலட்சத்தில் இருந்து 3 லட்சமானது.

இந்தியா உள்பட பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. போர் நடக்கும் சமயம் இந்தியா அழுத்தம் கொடுத்தது. அதை அதிபர் ராஜபக்சே சாதுர்யமாக எதிர்கொண்டார். ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவிடம் விரிவாக விளக்கப்பட்டன.

நான், பசில் ராஜபக்சே, வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியாவுடன் தினமும் பேசினோம். இந்தியாவின் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் இருவரும் எங்களுக்கு ஒத்துழைத்தனர்.

முக்கிய விவகாரம் எழுந்தபோதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். இதனால் இலங்கை ராணுவ தாக்குதல்கள் இடையூறு இல்லாமல் நடந்தன. இந்த ஒத்துழைப்பே விடுதலைப்புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது, என்றார் கோதபய ராஜபக்சே.

பொதுத் துறை நிறுவனங்களே இந்தியாவைக் காக்கும்! – ஐஎம்எப்

August 11, 2009 by  
Filed under வணிகம்

இந்தியப் பொருளாதாரத்தைக் காக்கும் சக்தி பொதுத் துறை நிறுவனங்களுக்கே உண்டு! – ஐஎம்எப்

லண்டன்: முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா profitகாந்தியின் திட்டங்கள் எத்தகைய தொலைநோக்குத் தன்மை கொண்டவை என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றைய மோசமான பொருளாதாரச் சூழல் உலகையே விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்க, இந்தியப் பொருளாதாரம் மட்டும் இன்னும் தாக்குப் பிடிக்கக் காரணம், இந்தியாவின் பலமான பொதுத் துறை நிறுவனங்களே என சர்வதேச நிதி நிறுவனம் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

மேலும் உலகில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர மொத்தம் 11.9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணம் தேவைப்படும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை உலகின் மொத்த வருவாயில் 5-ல் ஒரு பகுதியாகும்.

அதாவது உலகில் உள்ள சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 140076 செலவழிக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் கூறுகிறது.

இந்த 11.9 ட்ரில்லியன் டாலர் நிதியில் பெரும்பகுதி வளர்ச்சியடைந்த நாடுகளால் செலவிடப்படக் கூடியதாக இருக்குமாம். 1.7 ட்ரில்லியன் டாலர்கள் மட்டுமே வளரும் நாடுகள் செலவிட வேண்டியிருக்கும் என இந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் பயப்படும் அளவுக்கு வீழ்ச்சியடையவில்லை என்றும், அதனைச் சீர்படுத்த குறைந்த அளவு தொகையே தேவை எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அளவு பலமானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நமது ஆட்சியாளர்களோ எப்போதடா நேரம் கிடைக்கும், அரசுத் துறைப் பங்குகளை, குறிப்பாக லாபம் ஈட்டும் நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களுள் மூன்றாவது இடம் வகிக்கும் பிஎஸ்என்எல் பங்குகளை தனியார் மயமாக்குவதுடன், ஏர்டெல் அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய சேவைகளை வழங்கும் திட்டத்திலும் உள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த தருணத்தில், ஐஎம்எப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு எதிர்கட்சிகளுக்கும் நடுநிலையாளர்களுக்கும் சிறிய ஆறுதலைத் தருவதாக உள்ளது.

பன்றிக் காய்ச்சல்… சில எச்சரிக்கைக் குறிப்புகள்!

August 11, 2009 by  
Filed under General


பன்றிக் காய்ச்சல்… சில எச்சரிக்கைக் குறிப்புகள்!

ன்றிக் காய்ச்சல் பயந்து நடுங்கும் அளவுக்கு மிக மிக ஆபத்தானதல்ல. அதைக் குணப்படுத்தவும் முடியும்.

images166262_maskன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வந்தால் செய்ய வேண்டியவை குறித்தும் சில தகவல்கள்… இதனை தமிழ அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அறிகுறிகள்:

இருமல், சளி, கடும் காய்ச்சல், தொண்டை வலி, களைப்பு, தலைவலி, வயிற்றுப் போக்கு, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தும்மல், எடைக் குறைவு போன்றவையே பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

-இவை தென்பட்டால், உடனடியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் பரிசோதனை நிலையத்திற்கு சென்று அங்கு முறைப்படி பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வழிகள்:

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம்.

தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

என்-95 என்ற வகை முகக் கவசத்தை அணிந்து கொள்வது அல்லது நல்ல கைக்குட்டையால் மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் மூடும்படியாக அணிந்து கொண்டு வெளியில் செல்வது நல்லது.

இருமும்போதோ அல்லது தும்மும்போதோ கைக்குட்டையால் வாய்ப் பகுதியை மூடிக் கொண்டு செய்வது நல்லது.

இருமல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்பளர் தண்ணீராவது அருந்துவது அவசியம்.

கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

இதைத் தவிருங்கள்…

மது அருந்துவோருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் எளிதாக இருக்கும் என்பதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

என்ன மருந்து?

பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரையான ‘டமிஃப்ளூ’ அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். அதை நாமாக வாங்கி சாப்பிட முடியாது. அது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அரசு அதை கட்டுக்குள் வைத்து அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே விநியோகித்து வருகிறது.

எங்கே சிகிச்சை?

தமிழகத்தில் தேர்ந்தெடுத்த சில மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு மையங்களில் பன்றிக் காய்ச்சல் குறித்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சென்னையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்று நோய் மையம், அரசு பொது மருத்துவமனை மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் பன்றிக் காய்ச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனே அது பன்றிக் காய்ச்சல்தான் என்று பீதி அடைந்து விடாமல், உரிய டாக்டர்களை அணுகினால், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தவிர்க்க முடியும்.

முடிந்த வரை இந்த எச்சரிக்கை குறிப்புகளை அருகிலுள்ளோருக்கும் சொல்லுங்கள்!

பன்றிக் காய்ச்சல்: சென்னையில் மேலும் ஒருவர் பலி!

August 11, 2009 by  
Filed under General

பன்றிக் காய்ச்சல்: சென்னை – ஜம்முவில் இருவர் பலி!

சென்னை: பன்றிக் காய்ச்சலால் சென்னையில் நேற்று சிறுவன் h1n1சஞ்சய் உயிரிழந்த நிலையில் இன்று இளம் பெண் ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தோரின் எண்ணிக்க 10 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் படு வேகமாக பரவி வருகிறது. இங்குதான் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் இந்தியாவில் நான்கு பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். புனேவில் இருவர், குஜராத்தில் ஒருவர், சென்னையில் சிறுவன் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் மூவர் பலி!

நேற்று மாலைக்கு மேல் புனேவைச் சேர்ந்த 13 வயது மாணவி ஸ்ருதி கவதே மற்றும் 35 வயதாகும் பார்மசிஸ்ட் சஞ்சய் திலேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுவரை மகாராஷ்டிராவில் மட்டும் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். அதில் ஐந்து பேர் புனேவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் சிறுமி ஸ்வாதி செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

சென்னையில் பெண் பலி!

இந்த நிலையில் இன்று அதிகாலை, சென்னையில் ஒரு பெண் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

அவரது பெயர் டீனா ஜோசப். அடையாறில் வசித்து வந்த 29 வயதான டீனா, பன்றிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

ஆனால் இந்தப் பெண் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்படியெனில் அவரை பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கான வார்டில் வைத்திருந்தது ஏன் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல யாரும தயாராக இல்லை.

இந்த நிலையில் இன்று ஜம்முவில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு வெளியானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடல்!

புனேவில் பன்றிக் காய்ச்சல் மோசமான முறையில் பரவி வருவதால் நகர் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள், வர்த்தக வளாகங்களையும் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.

பீதியில் வேளச்சேரி – மடிப்பாக்கம்

சிறுவன் சஞ்சய் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தான். சஞ்சய் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் வசிப்போர் அனைவரும் மாஸ்க் அணிந்து நடமாடி வருகின்றனர்.

சஞ்சய் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் அடியோடு குறைந்து போய் விட்டது.

அந்தப் பகுதி வழியாக செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். வேளச்சேரி மக்கள் கிட்டத்தட்ட அனைவருமே முகத்தை மூடிக் கொள்ளும் மாஸ்க் அல்லது கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடியே நடமாடுகின்றனர்.

மாஸ்க்குகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது இப்பகுதிகளில்.

சஞ்சய் வீடு அருகே உள்ள கடைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தோர் முகத்தை மூடியபடி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ்களைத் தடுத்த மக்கள்!

சஞ்சய் வீடு உள்ள சாலையில் பஸ்கள் செல்வது வழக்கம். ஆனால் மக்கள் பீதி காரணமாக பஸ்களை அந்த வழியாக செல்ல வேண்டாம் என டிரைவர்களை வலியுறுத்தியதன் பேரில் நேற்று அந்தப் பகுதி வழியாக பஸ்கள் செல்லவில்லை.

சஞ்சய் வசித்து வந்த வீட்டுக்கு அருகே வசித்து வரும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனராம்.

பல வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் கூட வர மறுத்து விட்டனராம்.

வேளச்சேரி மக்கள் இன்னும் சஞ்சய் மரணம் மற்றும் பன்றிக் காய்ச்சல் பீதியிலிருந்து விலகவில்லை. ஒரு விதமான பதட்டமும், இறுக்கமான சூழ்நிலையும் அங்கு காணப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல்… அவசரத் தொடர்புக்கு 1913

பன்றிக் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், சோதனைகள் செய்து கொள்ள விரும்புவோர் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இலவச தொலைபேசி வசதியை 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பன்றிக் காய்ச்சல் வந்திருப்பதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்தால் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

கர்ச்சீப் போதும்…

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க முறையான மாஸ்க் கிடைக்காவிட்டாலும் கூட வெறும் கர்ச்சீப்பால் (கைக்குட்டை) கூட முகத்தை மறைத்துக் கொண்டால் போதுமானது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல சுத்தமான கைக்குட்டையால் மூக்குப் பகுதியையும், வாயாயையும் மறைக்கும் வகையில் கட்டிக் கொண்டால் போதும், வைரஸ் தாக்குதலைத் தடுக்கலாம் என்று மகாராஷ்டிர டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், என்-95 என்ற மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது அவற்றை பின்னர் முறைப்படி அப்புறப்படுத்தி விட வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாமல் கண்ட இடத்தில் தூக்கிப் போட்டு விட்டால், அதிலிருந்து வைரஸ் பரவம் அபாயம் உள்ளது.

அதேசமயம், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் இந்த என் -95 முகக் கவசமும் கூட முழுமையாக வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

வாக்குப் பதிவு எந்திரம்: அணுகுமுறை சரியில்லை…!

August 4, 2009 by  
Filed under election

வாக்குப் பதிவு எந்திரம்: அணுகுமுறை சரியில்லை…!

தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு எந்திரம் குறித்த ஐயப்பாடுகள் பலமாக எழுந்துள்ள நிலையில், அதில் தில்லு முல்லு நடக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறது தேர்தல் ஆணையம்.

ஆனால் எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும் என பொதுமக்கள் மத்தியில் செயல்முறை விளக்கமே காட்டியது பாட்டாளி மக்கள் கட்சி. இப்போது, ஒரிஸாவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றும் வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் பெரும் மோசடிகளை அரங்கேற்ற முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தினமணி இன்று அருமையான தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

evms

அந்தத் தலையங்கம்:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறே செய்ய முடியாது, அந்த அளவுக்கு நிலையான, மாற்றமுடியாத மென்பொருள்கள் இந்த இயந்திரத் தயாரிப்பின்போதே உள்ளுக்குள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லி, “தில்லுமுல்லு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்’ என்று தேர்தல் ஆணையம் சவாலுக்கு அழைத்துள்ள வேளையில், ஒரிசா மாநிலத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு அதை நிரூபித்தே காட்டிவிட்டது.

புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஜன சைத்திரிய வேதிகா என்ற அமைப்பினர் இதைச் செய்து காட்டியுள்ளனர். முன்னாள் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.

பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.

நியாயமாக, இத்தகைய செயல்விளக்கத்தை அரசியல் கட்சிகள்தான் செய்துகாட்டியிருக்க வேண்டும். தோல்வியால் முகம் சுணங்கிப் போகிற அவர்கள்தான் இதில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டியிருக்க வேண்டும். ஆனால் தன்னார்வ அமைப்பு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் நிலையில் அரசியல் சூழல் உள்ளது.

வாக்குப் பதிவுக்கு வந்து இறங்குவது முதலாக வாக்குப்பதிவு நடந்து இயந்திரங்கள் மீண்டும் பொது இடத்தில் சேகரிக்கப்படுவது வரையிலும் எந்தெந்த நிலைகளில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை செயல்விளக்கம் செய்து காட்டும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அப்போதுதான் அந்தத் தவறுகள் நேராதபடி மாற்று நடைமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க முடியும்.

பாஜக தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் ஓர் ஆக்கபூர்வமான யோசனையை முன்வைத்திருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்காளர் தான் தேர்வு செய்யும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்தியதும் வாக்குப்பதிவு நடப்பதோடு, அச் சின்னம் பொறித்த சீட்டும் (பிரின்ட்-அவுட்) அச்சாகி வெளிவரும் வசதி இருந்தால், அந்தத் துண்டுச்சீட்டை பார்த்தவுடன் தனது சின்னத்துக்குத்தான் வாக்கு அளித்தோம் என்ற மனநிறைவை வாக்காளர் பெற முடியும்.

அதேநேரத்தில், அந்த துண்டுச்சீட்டை வாக்குப்பெட்டியில் போடச் செய்தால், இயந்திரக்கோளாறு அல்லது தில்லுமுல்லு புகார்கள் வரும்போது அந்தச் சீட்டுகளையும் எண்ணிப் பார்த்து வாக்குச்சாவடி வாரியாக, கணினி மற்றும் சீட்டு எண்ணிக்கையைச் சரிபார்க்க முடியும். சாதாரண மளிகைக் கடை ரசீது போல, பேருந்து நடத்துநர் தரும் டிக்கெட் போல மிக எளிய, அதிக செலவில்லாத தொழில்நுட்பம்.

தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்தான் மாவட்டத் தேர்தல் அலுவலராகவும் இருக்கிறார். பொதுத்தேர்தலின்போது தேர்தல் பார்வையாளர்களை பிற மாநிலங்களிலிருந்து வரவழைப்பதைப் போல, மாவட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பிற மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் புதிய மாற்றத்தையும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

கடைசி ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்தால், வாக்குப் பதிவு முடியும் வரை காத்திருக்காமல், 5 மணி வரை வாக்குச் சாவடிக்குள் வந்துள்ளவர்களின் எண்ணிக்கையை மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்துவிட்டு, வாக்குப்பதிவை நிதானமாகச் செய்துகொள்ளும் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

குறைகள் சொல்லப்படும்போது அதற்கான வாய்ப்புகளை அலசிப் பார்ப்பதும், பல்துறை வல்லுநர்களின கருத்துகளை அறிவதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும். மாறாக, நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுவது முறையான அணுகுமுறை அல்ல!

விமான ஸ்ட்ரைக் வாபஸ்: எதிர்ப்புக்கு பணிந்தனர் மல்லையா & கோ!

August 3, 2009 by  
Filed under General

விமான ஸ்ட்ரைக் வாபஸ்: எதிர்ப்புக்கு பணிந்தனர் மல்லையா & கோ!

டெல்லி: பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அரசின் எச்சரிக்கை JET/காரணமாக, சற்றும் நியாயமில்லாத தங்கள் ‘ஆகஸ்ட் 18 ஸ்ட்ரைக்’ அறிவிப்பை வாபஸ் பெற்றன தனியார் விமான நிறுவனங்கள்!

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த அறிவிப்பை வெளியிட்டன விமான நிறுவனங்கள்.

ஆரம்பத்தில் கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 8 தனியார் விமான நிறுவனங்கள் ரூ.52000 நிதிச் சலுகை மற்றும் விமான எரிபொருள் – விமான நிலையக் கட்டண குறைப்பு கோரி இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பை வெளியிட்டன.

அரசுத் தரப்பில் இதற்கு கடும் எச்சரிக்கையே பதிலாகக் கிடைத்தது.

கொஞ்சமும் நியாயமில்லாத இந்தக் கோரிக்கைகள் மக்களின் கோபத்தைக் கிளற, தனியார் விமானங்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

மேலும், ஸ்ட்ரைக் நடத்த முயன்றால், விமானங்கள் பறிமுதல் செய்யப்படும், அதன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரி்த்தது. கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கவும் அரசு தயாரானது.

இன்னொரு பக்கம், ஸ்ட்ரைக்கில் ஆரம்பத்தில் பங்கேற்பதாக அறிவித்த இன்டிகோ, அரசுத் தரப்புக்கு ஆதரவாக மாறியது. ‘ஸ்ட்ரைக் என்பது இந்த சூழலில் வேண்டாத வேலை, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத அளவு செயல்படுவோம். அரசுக்கு ஒத்துழைப்போம்…,’ என ஞாயிற்றுக் கிழமை காலை அறிவித்தது அந்த நிறுவனம்.

அடுத்த சில மணிநேரங்களில் மற்றொரு முக்கிய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டும் ஸ்ட்ரைக் முடிவிலிருந்து பின்வாங்கியது. தங்களின் அனைத்து விமானங்களையும் முழு வீச்சில் ஆகஸ்ட் 18-ம் தேதி இயக்குவதாக அந்த நிறுவனம் அறிவிக்க, ஆடிப்போனது விஜய் மல்லையா – நரேஷ் கோயல் அணி.

மேலும், இந்திய விமான நிறுவன கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத எம்டிஎல்ஆர் போன்ற விமான நிறுவனங்கள் முழு அளவில் விமானங்களை இயக்க முன்வந்தன. இதற்கு மேல் பிடிவாதம் பிடித்தால், அசிங்கப்படு விடுவோம் என்பது உறுதியாகிவிட்டதால், தங்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், ஆகஸ்ட் 18-ம் தேதி அனைத்து விமான நிறுவனங்களும், முழு அளவில் விமானங்களை இயக்குவோம் என்றும் விமான நிறுவனக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

விமான ஸ்ட்ரைக் சட்ட விரோதம்! – அரசு அறிவிப்பு

August 3, 2009 by  
Filed under General

விமான ஸ்ட்ரைக் சட்ட விரோதம்! – அரசு அறிவிப்பு

டெல்லி: தனியார் விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி prafulஸ்ட்ரைக் அறிவித்திருப்பது சட்டவிரோதம். அரசின் எச்சரிக்கையையும் மீறி இந்த ஸ்ட்ரைக் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு இன்று முறைப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் நஷ்ட ஈடு மற்றும் நிதிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரி தனியார் விமான நிறுவனங்கள் ஸ்ட்ரைக் அறிவித்திருப்பது நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் தலைவர்களையும் பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் அரசு மகா கடுப்பில் உள்ளது இந்த கோரிக்கை விடுத்துள்ள விமான நிறுவனங்கள் மீது.

இந்த நிறுவனங்களை மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது.

தனியார் விமானங்களுக்கான ரூல் புக்கை எடுத்துக்காட்டியுள்ள இயக்குநரகம், “சட்டப்படி எந்த விமான நிறுவனமும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடியாது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்யலாம். ஆனால் அதைக்கூட உரிய முறையில் முன்னறிவிக்கை செய்த பிறகே ரத்து செய்ய வேண்டும்.

அரசுக்குச் சொந்தமான விமான நிலையங்களைப் பயன்படுத்தும் இந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் விமானங்களை சட்டப்படி இயக்கியே தீர வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் வளாகத்துக்குள் அவற்றை நிறுத்தவும் அனுமதிக்கமாட்டோம். அதையும் மீறி ஸ்ட்ரைக்கில் ஈடுபடும் நிறுவன அதிபர்கள் மற்றும் பணியாளர்களை கைது செய்வோம். அதிகபட்ச அபராதம் விதிப்பேம். சட்டம் இத்தனைக்கும் இடம் தருகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!”, என்று கூறியுள்ளது.

எஸ்மா சட்டத்தை இந்த தனியார் விமான நிறுவனங்கள் மீது பாய்ச்சவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக விமானத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் சற்றே மிரண்டு போயுள்ள விமான நிறுவனங்கள் ஸ்ட்ரைக்கை மேற்கொள்வதா இல்லையா என்ற குழப்பத்தில் மூழ்கிவிட்டன.

இன்னொரு பக்கம் அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இதர தொழில் துறை பிரமுகர்கள் என அனைவருமே தனியார் விமான நிறுவனங்கள் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் விமான நிறுவனங்களின் செயல் ‘சுயநலமானது, பொறுப்பற்ற தன்மை கொண்டது, நியாயமற்றது’ கண்டித்துள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூர் காங்கிரஸ், உடனடியாக விமான நிறுவனங்கள் அனைத்தையும் தேசியமயமாக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். “தனியார் நிறுவனங்கள் மக்கள் நலன் கருதி செயல்படும் தன்மையற்றவை. விமான சேவையைத் தர லாயக்கற்றவர்கள் என மீண்டும் நிரூபித்துவிட்டனர்”, என தெரிவித்துள்ளது திரிணாமூல்.

ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மாட்டோம்: இண்டிகோ

தனியார் விமான நிறுவனங்கள் சில அறிவித்துள்ள ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மாட்டோம். அன்றைய தினம் அரசுக்கும் பயணிகளுக்கும் உதவும் வகையில் கூடுதலாக விமானங்களை இயக்குவோம் என இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள இந்திய விமான நிறுவன கூட்டமைப்பில் தனியார் விமான நிறுவனமான இன்டிகோவும் ஒரு உறுப்பினராக உள்ளது.

ஆனால் இப்போதைய ஸ்ட்ரைக் அடிப்படையில்லாதது, மக்களை கோபத்துக்குள்ளாக்குவது, என கருத்து தெரிவித்துள்ள இன்டிகோ, ஆகஸ்ட் 18-ம் தேதியன்று வழக்கம்போல விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் அரசுக்கு உதவியாக கூடுதல் விமானங்களை இயக்கப் போவதாகக் கூறியுள்ளது.

ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள கிங்பிஷர், ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு இது பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இதற்கிடையே இந்த ஸ்ட்ரைக் குறித்து விளக்கமளித்துள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், நாங்கள் அரசை மிரடடவில்லை, எங்கள் நிலைமையைப் புரிய வைக்க முயற்சிக்கிறோம் என பல்டியடித்துள்ளார்.

விமானங்கள் அதிகரிப்பு: ஏர் இந்தியா

தனியார் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ள ஸ்டிரைக் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18ம் தேதியன்று ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆகஸ்ட் 18ம் தேதி கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான விமானங்கள் மற்றும் கூடுதல் விமானங்கள் மூலம் கூடுதலாக 25,000 பயணிகளை அன்றைய தினம் கையாள முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

ஸ்ட்ரைக் செய்வதாக மிரட்டும் விமான நிறுவன அதிபர்களைக் கைது செய்யலாம்! – கேப்டன் கோபிநாத்

August 2, 2009 by  
Filed under General


ஸ்ட்ரைக் செய்வதாக மிரட்டும் விமான நிறுவன அதிபர்களைக் கைது செய்யலாம்! – கேப்டன் கோபிநாத்

ங்களுக்கு அரசு ரூ.52000 கோடி நிதிச் சலுகை தராவிட்டால் ஆகஸ்ட் 18-ம் தேதி ஸ்ட்ரைக் செய்வோம் என தனியார் விமான நிறுவன அதிபர்கள் அரசை மிரட்டி வருகின்றனர். deccan_gopinath

இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான எச்சரிக்கை பதிலடியாகக் கிடைத்துள்ளது. அதுபற்றி இன்னொரு செய்தியில் பார்ப்போம்.

ஆனால் இந்த ஸ்ட்ரைக்கைப் பற்றி தனியார் விமான நிறுவன அதிபர் ஒருவரை கடுமையாகச் சாடி பேட்டியளித்துள்ளார்.

விஜய் மல்லையா, நரேஷ் கோயல் போன்றவர்கள் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக அவர்களை நன்கறிந்த கேப்டன் கோபிநாத் கூறியுள்ளார்.

நேற்று இரவு அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி…
பெங்களூர்: ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவதாக மிரட்டும் எல்லா தனியார் விமான நிறுவன அதிபர்களையும் அரசு கைது செய்யலாம். காரணம் இவர்கள் செய்வது சட்ட விரோதம். விமான நிறுவனம் துவக்கினால் என்னென்ன ரிஸ்க் இருக்கிறது என்று தெரிந்துதானே இந்தத் தொழிலுக்கு வந்தார்கள்?,என கேள்வி எழுப்பியுள்ளார் டெக்கன் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் கேப்டன் கோபிநாத்.

ஏர் டெக்கன் எனும் பெயரில் குறைந்த கட்டண விமானங்களை இயக்கியவர் கோபிநாத். ஆனால் 2007-ல் தனது நிறுவனத்தை விஜய் மல்லையாவுக்கு விற்றுவிட்டார். இப்போது டெக்கன் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

தனியார் விமான நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள ஸ்ட்ரைக் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர் கூறியதாவது:

“தனியார் விமான நிறுவனங்கள் மக்களையும் அரசையும் ஏமாற்ற முயற்சிக்கின்றன. ஒரு வித மோசடி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். சும்மா ஒரு கல்லை எறிந்து பார்ப்போம். போனால் கல்… வந்தால் எக்கச்சக்க லாபம் என்பதே அவர்கள் நோக்கம்.

இதை ஆரம்பத்திலேயே அடியோடு நசுக்க வேண்டும்.

விமான நிறுவனம் ஆரம்பித்தால் என்னென்ன இடர்பாடுகள் வரும், விமான எரிபொருள் விலை எவ்வளவு, இது குறையுமா குறையாதா? போன்ற விவரங்கள் தெரியாமலா ‘பிஸினஸ் மாக்னெட்டுகள்’ என வர்ணித்துக் கொள்ளும் மல்லையாவும் நரேஷ் கோயலும் விமான நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்!

நஷ்டம் வந்தாலும் தாங்குவோம் என்று சொல்லித்தானே ஆரம்பித்தார்கள்… இப்போது கூப்பாடு போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது. இவர்கள் விமான நிறுவனம் ஆரம்பித்தபோது விமான நிலைய வாடகை, எரிபொருள் கட்டணங்கள் குறைவாகவா இருந்தன… அன்றைக்கும் இதே அளவு அதிகபட்ச கட்டணத்தைதான் அரசு வசூலித்தது. அப்போது லாபம் வந்தது… இப்போது வரவில்லையென்றால் காரணம் என்னவென்பதை விமான அதிபர்கள் யோசிக்க வேண்டும்.

இந்த நாட்டில் 98 சதவிகித மக்கள் பஸ்கள், ரயில்களில்தான் பயணிக்கிறார்கள். மீதி உள்ளவர்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் விமானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். எப்போதாவது விமானத்தைப் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் பேர் உள்ளார்கள். இந்த பயணிகளைக் கூடத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இந்த ‘அதிபர்களால்’. இதுதான் உண்மை!

காரணம் விமானங்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம். ரயில்களின் இரண்டாம் வகுப்பு ஏசி கட்டண அளவுக்கு மட்டுமே விமானக் கட்டணங்கள் இருந்தால் மக்கள் ஏன் ரயில்களைத் தேடி ஓடப் போகிறார்கள்… பயணிகள் வருகை கணிசமாக இருக்கும். லாபம் குறைவாக இருந்தாலும், விமானங்களைப் பயன்படுத்துவோர் பெருகுவார்கள், தொடர்ந்து விமானங்கள் தடையின்றி இயங்கிக் கொண்டே இருந்திருக்கும்.

ஆனால் இந்த உண்மைகளை, வர்த்தக அணுகுமுறைகளை வசதியாக மறந்துவிட்டு, விமான நிறுவனங்களை கூட்டு சேர்த்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். இது ஆபத்தானது.

உள்நாட்டில் இயங்கும் தனியார் விமான நிறுவனங்கள் ஒரு குழுவாக (Cartel) சேர்ந்து கொண்டு ‘சில்லோர் போட்டிச் சந்தை’ அமைப்பை (Oligopoly) உருவாக்குவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஒரு லாரி டிரைவரைக் கைது செய்ய அரசுக்கு உள்ள அதிகாரத்தை, இந்த தனியார் விமான நிறுவன அதிபர்களைக் கட்டுப்படுத்துவதிலும் பிரயோகிக்கலாம். ஸ்ட்ரைக் முடிவில் உறுதியாக நிற்கும் விமான நிறுவனங்களை சஸ்பென்ட் செய்யலாம், அதன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் கைது செய்யலாம்.

தனியார் நிறுவன அதிபர்கள் செய்வது அறிவீனமானது, கொஞ்சமும் நடைமுறைச் சாத்தியமற்றது. ஒரு தனியார் வர்த்தக நிறுவனத்தின் நஷ்டத்துக்கு அரசு ஏன் பொறுப்பாக வேண்டும்… அப்படியெனில் இந்த நிறுவனங்களை அரசிடமே கொடுத்துவிடலாமே…

பத்து ஆண்டுகளுக்கு முன்பும் நிறைய தனியார் விமான நிறுவனங்கள் முளைத்தன. சில ஆண்டுகளில் காணாமல் போயின. அப்படித்தான் இப்போதும். முடிந்தால் தாக்குப் பிடியுங்கள். இல்லையேல் மூடுவிழாவுக்குத் தயாராகுங்கள். நஷ்டத்தில் இயக்குமாறு அரசு கேட்கவில்லையே…

அதேநேரம், இந்தியாவில் விமான எரிபொருள் கட்டணம் என்பது மிக அதிகம் என்பதை நான் மறுக்கவில்லை. அரசு இந்த விஷயத்தில் சற்று மனம் வைக்க வேண்டும்.

நாட்டின் உள்கட்டமைப்பின் முக்கிய அங்கமாக விமானத் துறையை மாற்றி, அடிப்படைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இந்த சலுகைகள் பயணிகளுக்கும் கிடைக்குமாறு விமான நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் வர்த்தகம் தடையில்லாமல் இருக்கும்…, என்றார் கோபிநாத்.

நஷ்டத்தை சமாளிக்க வக்கில்லாவிட்டால் தனியார் விமான நிறுவனங்களை இழுத்து மூடுவதுதானே!

August 1, 2009 by  
Filed under கட்டுரைகள்

நஷ்டத்தை சமாளிக்க வக்கில்லாவிட்டால் தனியார் விமான நிறுவனங்களை இழுத்து மூடுவதுதானே!

ரை அடித்து உலையில் போட்டுக் கொள்வது என்பதற்கு சரியான அர்த்தம் தேவையென்றால், இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களைக் கேட்கலாம். மோசடிக்கு புது அகராதியையே உருவாக்கும் அளவுக்கு தேர்ந்தவை இவை.

kingfisher2

பொத்தாம் பொதுவாக இந்தக் குற்றச்சாட்டை நாம் முன் வைக்கவில்லை. அரசுக்கு எரிவாயு எடுத்துத் தரும் காண்டிராக்டராக உள்ளே நுழைந்து, இப்போது அந்த எரிவாயுவுக்கே சொந்தம் கொண்டாடும் அம்பானிகள் தொடங்கி, தங்கள் ஊதாரித்தனம், மோசமான நிர்வாகத்தால் நஷ்டப்பட்டு அதற்கும் அரசிடம் நஷ்டஈடு கேட்டும் தனியார் விமான நிறுவனங்கள் வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தனியார் தொழில்கள் என்பவை முழுக்க முழுக்க லாபநோக்கத்தில் இயங்குபவை. இதில் பொதுமக்கள் நலன் என்பது பூஜ்யமே. ‘அடடா… மக்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்ற நோக்கத்தில் எந்த முதலாளியும் இன்று தொழில் செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல், வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் மக்களைத் தள்ளும் வேலையில்தான் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

எனவே இதில் வரும் லாபமும் நஷ்டமும் அவர்களையே நூறு சதவிகிதம் சாரும். அந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் வரும்போது மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே தவிர, மீண்டும் மக்கள் பணத்தை லம்பாகக் கொள்ளையடிக்க வாய்ப்புத் தேடக் கூடாது!

தனியார் விமான நிறுவனங்கள் சலுகைகக் கட்டணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதில்லை. மாறாக 100 சதவிகித இறுதிநிலை லாபம் (Marginal profit) வைத்தே இயக்குகிறார்கள். இந்த விமான நிறுவனங்களுக்கு அரசு அளித்த எரிபொருள் சலுகை உள்ளி்டட எதையும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகச் சேர அனுமதித்ததே இல்லை. எல்லா நேரத்திலும் லாபம் முழுமையாக தங்களுக்கு வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இப்போது நிலைமை சரியில்லை என்று புலம்புகிறார்கள். அதாவது லாபம் குறைந்துவிட்டது. அதை தாங்க முடியவில்லையாம். எனவே மக்கள் பணத்திலிருந்து தங்களுக்கு 52000 கோடி ரூபாக்குமேல் சலுகை மற்றும் உதவி நிதி வேண்டுமாம்.

இல்லாவிட்டால் ஸ்ட்ரைக் செய்வார்களாம்…

எப்படி இருக்கு இந்த நியாயம்?

தனியார் விமான நிறுவன விமானங்களில் பயணக்கட்டணம் அதிகம் என்பதற்காக அதைப் பாதியாகக் குறைக்குமாறு பயணிகள் போராட்டம் நடத்தினால் ஏற்பார்களா… அல்லது, சில மாதங்களுக்கு முன்பு வரை அரசு அளித்த மொத்த சலுகையையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து கொள்ளையடித்தார்களே… அதை திருப்பித் தரச் சொன்னால் தருவார்களா…

அட… இன்று நஷ்டத்தில் அரசுக்கு பங்கு தர முன்வருபவர்கள், முன்பு சம்பாதித்த லாபத்தில் சரி பாதியை அரசுக்குத் தருவார்களா…

இன்றைக்கு நஷ்டம் என்றால், நேற்று வந்த லாபத்தில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு தொழிலைத் தொடர்வதுதானே வியாபார தர்மம்?

அப்படியும் நஷ்டத்தைத் தாங்க முடியாவில்லை என்றால் இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே… எதற்காக அந்தத் தொழிலைத் தொடர வேண்டும்?

பெரும்பணக்காரர்கள் தவிர, பிற மக்கள் ஏன் விமானங்களைப் புறக்கணிக்கத் துவங்கினார்கள் என்பதை இவர்கள் யோசிக்க வேண்டும்!

விமான நிறுவனங்கள் ஸ்ட்ரைக் பற்றி இன்று வெளியாகியுள்ள செய்தியை கீழே தந்துள்ளோம். இதைப் படித்த பிறகு கட்டாயம் உங்கள் கருத்துக்களை தனி கட்டுரையாகக் கூட எழுதலாம்!

18ம் தேதி விமானங்கள் ஸ்டிரைக்!-அரசை மிரட்டும் தனியார் விமான நிறுவனங்கள்!

மும்பை: நஷ்டத்தைச் சமாளிக்க தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தப் போவதாகவும் தனியார் விமான நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன. meeting-mallaya

ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகோ உள்ளிட்ட எட்டு தனியார் விமான நிறுவனங்கள் இந்த ஸ்ட்ரைக் மிரட்டலை அறிவித்துள்ளன.

அரசுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5000 கோடி நஷ்டத்தில் தவிக்கிறது. பயணிகள் குறைந்தது, தனியார் விமான நிறுவனங்களின் போட்டிகளைச் சமாளிக்க முடியாமை போன்ற காரணங்களால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது ஏர் இந்தியா. இதனால் அரசு இந்த நிறுவனத்துக்கு நிதியுதவி மற்றும் கடன்களை அளித்து கைதூக்கிவிடுகிறது.

அதே நேரம் தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக புலம்புகின்றன. தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

அரசு இந்த கோரிக்கையைக் கண்டு கொள்ளாததால், ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளன. இதில், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இந்த அழைப்பு அறிவுப்பூர்வமானதல்ல என்று மறுத்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், ஸ்ட்ரைக் நடைபெறும் நாளன்று பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக கூடுதல் விமானங்களை அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக அரசு நிறுவனம் ஒன்றைத் தூண்டிவிடுவது கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என்று இவர்களுக்குத் தெரியாதா? என திருப்பிக் கேட்டுள்ளார் ஏர் இந்தியா இயக்குநர்களில் ஒருவர்.

இந்த ஸ்ட்ரைக் குறித்து கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா கூறுகையில், “நிதி நெருக்கடியால் கஷ்டப்படும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் கைகொடுக்கின்றன. அந்த மாதிரி இங்கும் சலுகைகள் வேண்டும்” என்றார்.

இது அறிவீனம்…!

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சக முதன்மை செயலாளர், “தனியார் விமான நிறுவனங்களுக்கு அரசு எப்படி உதவ முடியும்? அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு உதவவே ஆயிரம் முறை யோசித்துக் கொண்டிருக்கிறது அரசு. இதில் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபங்களுக்காக, தங்கள் இஷ்டப்படி இயக்கும் விமான நிறுவனங்களுக்கு அரசு எதற்காக பெய்ல் அவுட் தரவேண்டும்.

அவர்கள் கோரிக்கை முட்டாள்தனமானதும் கூட. வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களுக்கு பெயில் அவுட் தரும் அரசு, அந்த நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. விஜய் மல்லையா போன்றவர்கள் அதற்குத் தயாரா…”, என்றார் கோபத்துடன்.

மேலும், தனியார் விமான நிறுவனங்களின் எந்தக் கோரிக்கையையும் அரசு பரிசீலிப்பதாக இல்லை. அதற்கான அவசியமும் இல்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

எந்தக் காரணம் கொண்டும் மக்களின் பணத்தில் ஒரு சல்லிக் காசு கூட, தனியார் விமான நிறுவனங்களுக்கு சலுகையாகத் தரக்கூடாது என்றும், உலகிலேயே அதிக விமானக் கட்டணம் வசூலிப்பவை இந்திய தனியார் விமான நிறுவனங்களே என்பதால், இந்த நஷ்டம் அவற்றின் சொந்தப் பொறுப்பையே சாரும் என்றும் எதிர்கட்சிகள் இப்போதே கடுமையான நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

-விதுரன்

போலிகளுக்கு லோன்… மாணவர்களுக்கு நாமம்!

July 30, 2009 by  
Filed under Cartoon

போலிகளுக்கு லோன் கொடுக்க ஓடி வரும் வங்கிகள்!

ந்திய வங்கி அதிகாரிகளுக்கு போலிகளுக்கும்,  நாணயம் உள்ளவர்களுக்கும் வித்தியாசமே தெரியாது.

கல்விக் கடன் கேட்டு நடையாய் நடக்கும் மாணவர்களையும் அவர்களது ஏழைப் பெற்றோரையும் அவமானப்படுத்தி, மீண்டும் அந்த வங்கிப் பக்கமே வரவிடாமல் விரட்டியடிக்கும் இந்த வங்கிகள், போலிப் பத்திரங்களையும்  எலும்புத் துண்டுகள் போல சில பரிசுகளையும் காட்டி வலைவிரிக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கு கோடி கோடியாய் அள்ளி வழங்குகின்றன கடன்களை…

caert-26

-தினமலர்


வகையாக மாட்டிக் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை!

July 26, 2009 by  
Filed under நட்புடன்

வகையாக மாட்டிக் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை!

க்களவைப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சமீபகாலமாக எதிர்பாராத சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்தால், எந்தவித முன் யோசனையோ, ராஜதந்திர அணுகுமுறையோ இல்லாமல், தூண்டிலில் சிக்கும் மீனாக இந்தியா மாட்டிக் கொள்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

clinton_singh_0717

வெளிவிவகாரத்துறை அடுத்தடுத்து குளறுபடிகளைச் செய்வது கவலையைத் தருகிறது.ஞ

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கென்று தனி மரியாதையை ஏற்படுத்தித் தந்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு. வளரும் நாடாகவே இருந்தாலும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்து என்ன என்று மேற்கத்திய நாடுகளாலும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளாலும் அக்கறையுடன் கவனிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஒரு அணியாகவும் சோவியத் யூனியன் தலைமையிலான சமதர்ம நாடுகள் மற்றொரு அணியாகவும் பிரிந்தபோது, இரு அணிகளையும் சாராத புதிய அணியை (அணி சாரா நாடுகள் அணி) ஏற்படுத்தி அதற்குத் தலைமையேற்கும் தகுதியை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்தார் பண்டித நேரு.

நேருஜியின் இந்தப் பாரம்பரியத்தை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி உள்ளிட்டோரும் காப்பாற்றி வந்தனர். இப்போது முதலாளித்துவ நாடுகள் வரிசையும் சோஷலிச நாடுகளின் வரிசையும் கலைந்துவிட்டதால் அணிசாரா நாடுகளின் வரிசைக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

பயங்கரவாதிகளை ஊக்குவித்து எப்போதும் நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதையே கடமையாகக் கருதிச் செயல்படும் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசினால்கூட ஆபத்தில்தான்போய் முடியும் என்றால் என்ன சொல்வது?

எகிப்தில் நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையை இந்திய அதிகாரிகள் சரியாகப் படித்துப்பார்க்காமல் ஒப்புதல் தந்தது எப்படி? இப்போது இதை “வெறும் காகிதம்தான், சட்டபூர்வ ஆவணம் இல்லை”, என்கிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர். அவருடைய விளக்கத்தைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, போலீஸ் அகாதெமி தாக்கப்பட்டது ஆகிய இரு சம்பவங்களின் பின்னணியிலும் இந்திய அரசுக்குப் பங்கு இருக்கிறது என்று இப்போது நாகூசாமல் கூற ஆரம்பித்திருக்கிறார்கள் பாகிஸ்தானியர்கள்.

போதாக்குறைக்கு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதக் கலவரங்களின் பின்னணியிலும் இந்திய அரசின் உளவுத்துறை (“ரா’) இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கூட்டறிக்கையிலேயே, “பலுசிஸ்தான் குறித்து இருதரப்பும் ஆழ்ந்து கவலைப்படுவதாக” ஒரு வரியைச் சேர்த்திருக்கிறார்கள்!

எத்தனை விஷமமான வார்த்தை இது? இதை எப்படி இந்திய அதிகாரிகள் அனுமதித்தார்கள்?

அமெரிக்க அரசுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறி, சில மாதங்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

உலகின் பிற நாடுகள் எல்லாம், “இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?” என்று பொறாமையுடன் கேட்பதாகக் கூட பெருமைப்பட்டுக்கொண்டார்கள். இப்போதோ அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டால் மட்டுமே அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளில் இனி ஒத்துழைப்பு என்று அமெரிக்கர்கள் நம் கழுத்தில் சுருக்கு மாட்டிவிட்டார்கள்.

இந்தியாவுக்கு வந்தார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன். இந்தியாவில் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளின்டன் நமது வெளியுறவு அமைச்சருடன் செலவிட்டது வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே. அதுவும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மட்டும்தான் பேசினார் என்று தெரிகிறது. ஜி – 8 மாநாடு அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்தால் மட்டுமே ஒத்துழைப்பு என்று கூறுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு மழுப்பலாக ஒரு பதிலைத் தந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் ஹிலாரி.

எதை எதையோ சொல்லி, நம்மை நம்ப வைத்து வகையாக மாட்டி விட்டார்கள்.

நீங்கள் வல்லரசாக மாறுவது இருக்கட்டும். முதலில் அணிசாராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு எங்களுக்கு அடிமை சாசனம் எழுதித் தாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா. நம்பி மோசம் போனோம் என்று ஒத்துக்கொள்ளவும் முடியாமல், தவறைத் திருத்தும் தைரியமும் இல்லாமல் தவிக்கிறோமே, இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லையே!
-தினமணி

கலாம் விஷயத்தில் தொடரும் அரசின் அலட்சியம்!

July 25, 2009 by  
Filed under General

கலாம் விஷயத்தில் தொடரும் அரசின் அலட்சியம்!

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் சோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை என்று அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. இதன் மூலம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கான்டினென்டல் கூறியது அப்பட்டமான பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. slide0001_image006

இதை ராஜாங்க ரீதியான பெரிய விவகாரமாக ஆக்காமல், உள்ளூர் வழக்குப் பதிவோடு முடித்துக் கொண்டுள்ளது மத்திய அரசு.

இன்னொரு பக்கம், அவரது பாதுகாப்பு விஷயத்திலும் பெரிய அக்கறை ஏதும் காட்டாமல் அலட்சியம் காட்டி வருகிறது காங்கிரஸ் அரசு.

டெல்லியிலிருந்து கடந்த ஏப்ரலில் நியூயார்க்குக்கு கலாம் பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மரபுகளை மீறி அவரை அசிங்கப்படுத்தியது அமெரிக்காவின் காண்டினென்டல் ஏர்லைன்ஸ்.

இதுகுறித்து தெரிந்தும் கூட மத்திய அரசு கமுக்கமாக இருந்து வந்தது. ஆனால் விஷயம் கசிந்ததும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக காண்டினென்டல் அறிவித்தது. ஆனால், அப்படி யாரும் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று கலாம் கூறிவிட்டார்.

இதையடுத்து கலாம் டெல்லியில் இல்லாததால் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை என்றது. அவர் டெல்லி திரும்பியதும் எங்களது அதிகாரிகள் நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்பார்கள் என்று கூறியுள்ளது அந்த நிறுவனம்.

இந் நிலையில் அமெரிக்க போக்குவரதது பாதுகாப்பு அமைப்பு (Transportation Security Administration-TSA) காண்டினென்டல் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், யார் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இருந்திருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை. அதைத் தான் அவர்கள் செய்துள்ளனர். இதில் தவறேதும் இல்லை.

முக்கிய தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரை சோதனையிடக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒரு பட்டியல் தந்துள்ளதாக அறிகிறோம். ஆனால், அமெரிக்காவிலோ, வேறு நாடுகளிலோ பயணிக்கும் அனைத்து நாட்டு விஐபிக்கள், முன்னாள் தலைவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுவது இப்போதும் வழக்கத்தில் உள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

4 அதிகாரிகள் மீது வழக்கு:

இந் நிலையில் காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 4 அதிகாரிகள் மீது மத்திய அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் லாரன்ட் ரெகோரா, விமான நிலைய மேனேஜர் ஆலன் பீல்ட், பாதுகாப்பு மேலாளர் சிந்தியா கார்லியர், பாதுகாப்பு பொறுப்பாளர் ஜெய்தீப் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைத் தேடி அலைந்த கலாம்!:

இதற்கிடையே அப்துல் கலாமின் பாதுகாப்பு எவ்வளவு மகா மட்டமாக உள்ளது என்பதற்கு இன்னொரு உதாரணமாக, நேற்று ஒரு சம்பவம் கொச்சியில் நடந்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம், விழா முடிந்து வெளியே வந்தபோது அவர் செல்ல வேண்டிய காரைக் காணாததால் கிட்டத்தட்ட கால் மணி நேரம் அந்தக் கல்லூரி வளாகத்திற்குள் நடந்து அலைந்துள்ளார்.

கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலாம் கலந்து கொண்டார்.

விழா முடிந்ததும் அவர் கல்லூரி அதிகாரிகளால், நானோ டெக்னாலஜி மற்றும் அணு மருத்துவத் துறை கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு தனது பயணத்தை முடித்து விட்டு வெளியே வந்த கலாம், தான் பயணிக்க வேண்டிய காரைக் காணாமல் திடுக்கிட்டார்.

காருக்குக் காத்திராமல், அதைத் தேடி நடக்க ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்து அவருடன் நான்கு போலீஸ் அதிகாரிகளும் நடக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட கால் மணி நேரம் அந்தப் பகுதி முழுக்க காரைத் தேடி அலைந்துள்ளார் கலாம். ஒரு கட்டத்தில் காரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெறுத்துப் போன அவர், ‘இப்படியே நடந்தால் பேசாமல் விமான நிலையத்திற்கே போய் விடலாம் போலிருக்கிறதே..’ என்று கமெண்ட் அடிக்கும் அளவு அவரை நோகடித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து கலாம் செல்ல வேண்டிய கார் வந்து சேர்ந்தது.

கலாம் இப்படி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தபோது அவருடன் வெறும் நான்கு போலீஸ் அதிகாரிகளே உடன் இருந்துள்ளனர்.

கவனிக்க… நாட்டின் அதியுயர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர் அப்துல் கலாம் அவர்கள். முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் அவருக்கு ஆபத்து இல்லை என்றாலும், இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை என்ற முறையில் அவருக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக பாதுகாப்பு ஏஜென்ஸிகள் ஏற்கெனவே அறிக்கை  அளித்துள்ளன.

இதற்கிடையே, கலாம் விஷயத்தில் பாதுகாப்பு குளறுபடி இல்லை என்று போலீஸார் மறுத்துள்ளனர். கல்லூரிக்கு வந்த கலாம் மெயின் கேட்டிலேயே இறங்கிக் கொண்டார். இதையடுத்து கார் அங்கேயே நின்றது.

ஆனால் திரும்பி வரும்போது வேறு பகுதி வழியாக கலாம் வந்து விட்டார். இதனால்தான் குழப்பமாகி விட்டது என்கின்றனர். அப்படியே இருந்தாலும், காரைத் தேடி கலாம் நடந்த போதே, ஒயர்லெஸ் அல்லது மொபைல் மூலம் மாற்றுக் காருக்கு ஏற்பாடு செய்திருக்க முடியாதா…

நாட்டின் மிகப் பெரிய விஐபி… இளைஞர்களின் ஆதர்ஸ நாயகனான கலாம் படு சாவாதனமாக நடந்து போனதை கல்லூரி வளாகத்தி்ல் உள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், பார்வையாளர்களும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பார்த்தனர்.

சிலர் ஓடி வந்து அவருடன் கை குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் ஆட்டோகிராபும் வாங்கினர். அவர்களுடன் பேசிக் கொண்டே அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்துவிட்டு, நடப்பதைத் தொடர்ந்துள்ளார் கலாம்.

பின்னர் வந்த காரில் ஏறி கலாம் விமான நிலையம் சென்ற டாக்டர் அப்துல் கலாம் அங்கிருந்து சென்னை கிளம்பினார்.

நல்ல மனிதர்கள், நேர்மையாளர்கள், நாட்டின் வழிகாட்டியாகத் திகழும் உன்னத புருஷர்களை குறைந்தபட்சம் மதிக்கவாவது கற்றுக் கொள்ள வேண்டும்.  காமராஜரையும், கக்கனையுமே மதிக்கத் தெரியாத காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, இது எங்கே புரியப்போகிறது!

கடல் அலைகளின் முற்றுகையில் மும்பை!

July 24, 2009 by  
Filed under General

கடல் அலைகளின் முற்றுகையில் மும்பை!

மும்பை: மும்பையில் நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பிற்பகலில் ராட்சத அலைகள் மும்பை மாநகரைத் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். INDIA-WEATHER-TIDES

மும்பையி்ல 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. பொதுவாக வானிலை மையங்களின் அறிவிப்புக்கு நேர் மாறாகவே இயற்கை நிகழ்வுகள் நடப்பதால், மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

ஆனால் நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது கடல். கடல் நீர் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கொலாபா, தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

தாராவி, மாஹிம், பார்லே, சயான், சான்டாக்ரூஸ் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது.tide-6

பல இடங்களில் கடல் அலைகள் பெரிய அளவில் எழுந்தபடி இருந்தன.

பல இடங்களில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் வெள்ளம் என கடல் நீர் ஓடியது. கொலாபா, கீதா நகர் பகுதியில் புகுந்த கடல் நீரால் பல வீடுகளுக்குள் தணணீர் புகுந்தது. சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் தொடர்ந்து எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பேரலைகள் வந்ததில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு மேல் இந்த ராட்சத அலைகள் எழும் எனவும், மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரைக்கு யாரும் போக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர், கடலோரக் காவல் படையினர், கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.tide-5

செய்தித்தாள்கள், டிவி, ரேடியோக்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் விடப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர், கடலையொட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் மக்களை மகாராஷ்டிர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடலோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஒருவித அச்ச நிலை காணப்படுகிறது.

சென்னையிலும்…

மும்பை அளவுக்கு இல்லாவிட்டாலும், சென்னையிலும் கடல் கொந்தளிப்புடனே காணப்பட்டது. மெரினா மற்றும் பட்டினப்பாக்கத்தில் பெருமளவு அலைகள் மணற்பரப்பு வரை வந்து போயின. எனவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தை கடல் நீர் சூழந்துள்ளதாகத் தெரிகிறது. மாலையில் சீற்றம் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அப்துல் கலாமிடம் மன்னிப்புக் கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்!

July 22, 2009 by  
Filed under General

அப்துல் கலாமிடம் மன்னிப்புக் கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்!

டெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் kalamஜனாதிபதி அப்துல் கலாமை நிற்க வைத்து சோதனையிட்டு அவமானப்படுத்திய அமெரிக்காவின் காண்டிடென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம், இப்போது தனது செயலுக்காக இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமெரிக்கா செல்ல டெல்லி விமான நிலையம் சென்ற கலாமுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. அவரது ஷூவையும் கழற்றச் செல்லி சோதனையிட்டுள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இதற்கு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எப் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்தபோதும் கூட இந்தச் சோதனையை அமெரிக்க ஊழியர்கள் மேற்கொண்டனர்.

அப்போது மத்திய படை வீரர்களை கலாம் அமைதிப்படுத்திவிட்டார். ஆனாலும் கலாமுக்கு நேர்ந்த அவமானம் குறித்து சிஐஎஸ்எப், விமான போக்குவரத்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை காண்டினென்டல் ஏர்லைன்சிடம் விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் பதில் தரவில்லை.

இந் நிலையி்ல் இது குறித்து நேற்று தகவல் பரவியதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கின. இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்பதாகவும், காண்டினென்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்தார்.

தொடர்ந்து காண்டினென்டல் நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். மேலும் அப்துல் கலாமை சோதனையிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் விமான போக்குவரத்துத்துறையின் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டது.

இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது விமான நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனையில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அதையும் மீறி சோதனை நடத்தியதால், விமான சட்டத்தின் 11(ஏ) பிரிவின்கீழ் இந்த வழக்குப் பதிவானது.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந் நிலையில் தனது செயலுக்கு முதலில் திமிராக பதிலளித்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது. ‘யாராக இருந்தாலும் சோதனை நடத்துவது எங்கள் நிறுவன விதிமுறை’ என்று நேற்று இந்த நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தங்களது செயலுக்காக இன்று அப்துல் கலாமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம்.

“அப்துல் கலாமை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை. விதிகளைப் பின்பற்றினோம். அவ்வளவுதான். இருந்தாலும் கலாமுக்கு இதனால் ஏதாவது தொந்தரவோ மன உளைச்சலோ ஏற்பட்டிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம்”, என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விரைவில் ‘கலைஞர் ஏசியா’: மத்திய அரசு உடனடி அனுமதி!

July 21, 2009 by  
Filed under General


விரைவில் ‘கலைஞர் ஏசியா’: மத்திய அரசு உடனடி அனுமதி!

டெல்லி: கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மேலும் ஒரு சேனல் ‘கலைஞர் ஏசியா’ எனும் பெயரில் வெளியாகிறது. kalaignartvew1

இதற்கான அனுமதியை மத்திய தகவல்- ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அளித்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த தொலைக்காட்சி அப்லிங்கிங் செய்து கொள்ளலாம்.

இது தவிர சர்வதேச அளவில் பிரபல செய்திச் சேனலான பாக்ஸ் டிவி குழுமத்திலிருந்து 4 சேனல்களும், இ லைவ், ஏபிஎன் -ஆந்திரஜோதி, அப்னா நியூஸ், ப்ரெஷ் டிவி உள்ளிட்ட சானல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ராஜ் டிவி குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள், புதிதாக விண்ணப்பித்த 23 சேனல்களில் 13 சேனல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் குறித்த காலத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால், அந்த அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது அரசு.

டிவி18 குழுமம் 3 சேனல்களுக்கும், இன்பர்மேஷன் டிவி நிறுவனம் 4 சேனல்களுக்கும், கிருஷ்ணசாமி அஸோஸியேட்ஸ் ஒரு சேனலுக்கும், ராஜ் டிவி நிறுவனம் ராஜ் டிவி ஏசியா எனும் சேனலுக்கும், விஜயாந்தி, பவித்தர் என்டர்டெய்ன்மெண்ட்ஸ், அனோலி ஹோல்டிங்கஸ், மற்றும் வேதிக் பிராட்காஸ்டிங் போன்ற நிறுவனங்கள் தலா ஒரு சேனலுக்கும் விண்ணப்பித்திருந்தன. இவற்றுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு கடந்த ஜூலை 15-ம் தேதிக்குள் அப்லிங்கிங் கட்டணம் செலுத்த கெடு விதித்திருந்தது.

ஏர் இந்தியா ரூட்டில் பிஎஸ்என்எலும்!

July 21, 2009 by  
Filed under வணிகம்

ஏர் இந்தியா ரூட்டில் பிஎஸ்என்எலும்!

டெல்லி: அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்போது சிக்கலுக்குள்ளாகி தடுமாறத் துவங்கியுள்ளது. jegttdidggj

உடனடியாக அவசர, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும், இல்லையேல் பிஎஸ்என்எலும் ஏர் இந்தியா வழியில் நஷ்டக் கணக்கு, வேலைக் குறைப்பு, சம்பள நிறுத்தம் என போக வேண்டி வரும் என்று எச்சரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தியாவில் செயல்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலேயே மிகவும் வசதிமிக்கது, அதிக ஊழியர்களைக் கொண்டது, நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு புதிய சேவையையும் தரவல்லது பிஸ்என்எல் மட்டுமே. தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு அதற்கான வசதிகளைத் தரக்கூடிய சக்தி வாய்ந்த இடத்தில் அமர்ந்திருப்பது பிஎஸ்என்எலே.

இந்தியாவின் ராணுவம் மற்றும் ரெயில்வே துறைகளுக்கு அடுத்த மிகப்பெரிய துறை பிஎஸ்என்எல்தான். நியாயமாக, ஆண்டுக்கு ஆண்டு லாபம் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும். இன்றும் பிஎஸ்என்எல் சேவைதான் மக்களின் முதல் தேர்வு. அது சரியில்லை என்ற அதிருப்தியில்தான் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள்.

ஆனால் கொடுமை பாருங்கள்… கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும். அதன் விளைவு 97 சதவிகித லாபம் குறைந்து, இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் நஷ்டக் கணக்கு காட்ட தயாராகி வருகிறது பிஎஸ்என்எல். இந்தப் பேருண்மையை இத்தனை நாட்களும் கமுக்கமாக வைத்திருந்து இப்போது வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல்.

2007-2008-ல் பிஎஸ்என்எல் பெற்ற நிகர லாபம் (வரி போக) ரூ.3006 கோடி. ஆனால் இந்த ஆண்டு இதன் லாபம் ரூ.104 கோடி மட்டுமே!

இன்னொரு கொடுமையைப் பாருங்கள்… இந்திய அளவில் அனைத்து மொபைல் ஆபரேட்டர்களின் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது இந்த இரண்டு ஆண்டுகளில். குறிப்பாக ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ்… இந்த நிறுவனங்கள்தான் லேண்ட்லைன் இணைப்புகளும் தருகின்றன. பெரும்பாலான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைத்தான் இந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் வசம் இழுத்துள்ளன.

மோசமான சேவை, வாடிக்கையரை அவமதித்தல், தாறுமாறான பில்லிங் என எவ்வளவு முடியுமோ அந்த அளவு வாடிக்கையாளர்களை வெறுப்பேற்றி, தனியார் நிறுவனங்கள் பக்கம் ஓட ஓட விரட்டியடித்த பெருமை பிஎஸ்என்எலுக்கே சேரும்.

ஒரு உதாரணம் பாருங்கள்…

பிராண்ட் பேண்ட் வசதியை எங்கும் கொண்டு செல்லும் சிறிய மோடம்களை பிஎஸ்என்எல்தான் முதலில் அறிமுகம் செய்தது. ஆனால் அப்படியொரு வசதி இருப்பதை மக்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டது பிஎஸ்என்எல். ஆனால் இவர்களுக்குப் பின் அந்த வசதியைக் கொண்டு வந்த டாடா, ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் மூன்று நிறுவனங்களுமே அந்த சாதனைத்தை படுபிரபலமாக்கிவிட்டன.

இந்த உபகரணம் குறித்து வாடிக்கையாளர் அலுவலகத்தில் விசாரிக்கப் போனால், அதற்கு அவர்கள் பதில் சொல்லும் முறையைக் கேட்டு வெறுத்துப் போய், ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்துக்கே போகலாம் என்ற எண்ணம்தான் மிஞ்சும்.

கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட புதிய லேண்ட்லைன் இணைப்புகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி, நிம்மதியாக அலுவலகங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.

2004-2005-ல் இந்த லேண்ட் லைன் இணைப்புகள் மூலம் பிஎஸ்என்எலுக்கு கிடைத்த வருவாய் மட்டும் ரூ.22,814 கோடி. ஆனால் அதுவே இந்த ஆண்டு ரூ.11,505 கோடியாக குறைந்துவிட்டது.

மொபைல் சேவையில் பிஎஸ்என்எல் இணைப்புகள் சிறப்பாக இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முனைப்போ, தேடி வருகிற வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக விளக்கி இணைப்பைத் தரும் முயற்சியோ சுத்தமாக இல்லை, பிஎஸ்என்எல் பணியாளர்களிடம்.

இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசாவிடம் விசாரித்தால், “இந்தக் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். குறிப்பாக வருவாய் குறைவு, லாபத்தில் முழுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது நிஜம்தான். இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளோம். மீண்டும் இந்த நிறுவனத்தை நம்பர் ஒன் இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவோம். வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுமையான விளம்பர உத்திகள் மற்றும் இணக்கமான சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம்…,” என்கிறார்.

வெறும் வாய்வார்த்தைகளால் எந்த பயனும் இல்லை. காரணம், பிஎஸ்என்எல்லை தனியார் துறைக்கு படிப்படியாக தாரை வார்க்கும் முயற்சிக்கு மத்திய அரசின் பூரண ஆசி இருப்பதாக பிஎஸ்என்எல் மேல்மட்ட நிர்வாகிகளே வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

எனவே உள்ளுக்குள் அப்படி ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு, ஒப்புக்கு சில ஜிகினா வேலைகள் செய்து மக்களை ஏமாற்றுவதை விட, அரசின் நிஜமான நோக்கம் என்னவென்பதை தெளிவாக அறிவித்துவிட்டு, சீக்கிரம் மூடுவிழாவாவது நடத்தித் தொலைக்கலாம். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை நேரு உருவாக்கிய கோயிலாக இன்னமும் மதிக்கும் இந்தியர்களின் மன அழுத்தமாவது மிஞ்சும்!

அங்கே விரட்டியடிக்கப்பட்ட பிசாசுகள் இங்கே தேவதைகளாய் ஆராதிக்கப்படும் கேவலம்!

July 18, 2009 by  
Filed under வணிகம்

அங்கே விரட்டியடிக்கப்பட்ட பிசாசுகள் இங்கே தேவதைகளாய் ஆராதிக்கப்படும் கேவலம்!

-சோலை

ரண்டு வாரங்களுக்கு முன்னர் மும்பை நகர மக்கள் சாலைகளுக்கு solai-feat-imgவந்து போராடினார்கள். வழியே சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்தப் போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. வாழ்க்கைச் சுமை – இதய அழுத்தம் இயல்பான போராட்டத்திற்கு வழிவகுத்து விட்டது. என்ன காரணம்?

மின்சார விநியோகத்தை மராட்டிய அரசு ரிலையன்ஸ் போன்ற பிரதான தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் மின்கட்டணத்தை மளமளவென்று உயர்த்தியது. அதனை எதிர்த்துத்தான் மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

வேறு நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட ரிலையன்ஸ் மின் கட்டணத்தை உயர்த்துகிறது என்று மும்பை நகர மக்கள் முழக்கமிடுகிறார்கள். போராட்டம் தொடரும்.

டெல்லி தலைநகரின் மின்விநியோகமும் தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அங்கேயும் குத்தகை பெற்ற நிறுவனங்களிடம் மாநில அரசு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் விநியோகத்திற்கான குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் பலமுறை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், டெல்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இறைவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால், மின்சாரத்தைத் தரிசிக்க முடியாது என்ற நிலைதான்.

எனவேதான் டெல்லி நகர மக்களும் சாலைகளுக்கு வந்து போராடுகிறார்கள். மக்களின் உள்ளக்கொதிப்பு வெடிக்கும் கொதிநிலைக்கு வந்திருக்கிறது.

நான்கு நாட்களுக்குள் மின்விநியோகம் சரி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஷீலாதீட்சித் எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் டெல்லி தவிக்கிறது. மின் தடை காரணமாக தண்ணீர் விநியோகமும் முழுமையாகத் தடைபடுகிறது. எனவே, பாயத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மாதிரி தலைநகர மக்கள் தயாராகிறார்கள்.

இந்த நிகழ்வுகளெல்லாம் நடைமுறையில் நாம் காணும் வேதனைச் சித்திரங்கள். தனியார் துறையின் மகத்துவங்கள்.

ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ன சொல்கின்றன? அனைத்தும் தனியார்மயம் என்பதுதான் நாட்டின் பிரச்னைகளுக்கு சர்வரோக நிவாரணம் என்று சொல்கின்றன. அவை சீர்திருத்தங்களாக இருக்காது. நாட்டின் சீரழிவிற்கு முன்னோடியாக இருக்கும். ஆனால், அவற்றைத்தான் வேகவேகமாக மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தப்போகிறது.

ரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், அணுமின் உற்பத்தி ஆகிய அனைத்தையுமே தனியார் துறைக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

பாதுகாப்புத் துறையிலும்…

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், சாதனங்கள் ஆகியவை பெரும்பாலும் பொதுத்துறையில் தயாரிக்கப்படுகின்றன. இனி அந்தத் துறைகளில் அன்னிய மூலதனங்களை 49 சதவிகித அளவிற்கு அனுமதிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தம் சொல்கிறது.

தொழில்துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கலாம். பன்னாட்டு நிதி நிறுவனங்களை அனுமதிக்கலாம். பிற அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும் அனுமதிக்கலாம். அவர்கள் முதலீடு செய்யும் அளவிற்கு அவற்றுக்கு நிர்வாகத்திலும் பங்கு தரலாம் என்றும் அந்தச் சீர்திருத்தம் சொல்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கலாம். உணவுப் பொருள் துறையையும் அன்னிய முதலீடுகளுக்கு அர்ப்பணிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தங்கள் நீட்டோலை வாசித்துக் கொண்டே போகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உலகை உலுக்கிய பல சரித்திர நிகழ்வுகளை தென் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. அந்தக் கண்டத்தின் பலப் பல நாடுகளும் இன்றைக்கு மன்மோகன் அரசு சமர்ப்பிக்கும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவைதான். அதன் விளைவு என்ன?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நோய்கள் வாட்டி வதைத்தன. அந்த நாடுகளின் செல்வங்களை அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச் சென்றனர். உள்நாட்டு வணிகம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது.

இதனைக் கண்டு ஏழைகளோடு பழகும் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போர்க்கோலம் பூண்டனர். அவர்களின் முன்னணிப் படையாக இடதுசாரி சக்திகள் எழுந்தன.

அன்னிய முதலீடு என்றால், அந்த நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள்தான். இதனை எதிர்த்து வெனிசுலா நாட்டில் புரட்சி வெடித்தது. கத்தோலிக்க திருச்சபையும் இடது சாரி சக்திகளும் இணைந்து போராடின. வெனிசுலாவிற்கு கியூபா கலங்கரை விளக்கமாகக் காட்சி அளித்தது.

ஆட்சி அதிகாரத்தை மக்கள் இடதுசாரி சக்திகளுக்கு அளித்தனர். அனைத்து அன்னிய கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

இன்றைக்கு வெனிசுலா மட்டுமல்ல, அதன் அடிச்சுவட்டில் பிரேசில், சிலி, பொலிவியா போன்ற மேலும் ஆறு நாடுகளில் இடதுசாரி சக்திகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. எவற்றையெல்லாம் சீர்திருத்தங்கள் என்று மன்மோகன் சிங் அரசு உடுக்கை அடிக்கிறதோ, அவையெல்லாம் நாட்டிற்குக் கேடுகள் என்று அந்த நாடுகள் கப்பலேற்றி அனுப்புகின்றன. அதன் பின்னர்தான் அந்த நாடுகளின் சாமானிய மக்கள் வாழத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே ஆட்சிக்கு வந்தவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல. இடதுசாரி எண்ணம் கொண்ட தேச பக்தர்கள். அவர்களுக்குக் கரம் கொடுப்பது கத்தோலிக்கத் திருச்சபைகள்தான்.

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

அங்கே வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.

நமது பாட்டன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அரசு நிறுவனங்களெல்லாம், ஆலைகளெல்லாம் புதிய ஆலயங்களாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இனி அவற்றின் பங்குகளை ஆண்டிற்கு 25000 கோடி அளவிற்கு விற்பார்களாம்.

அந்தப் பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் உழைக்கும் மக்கள் அறுபதாண்டுகளாக உருவாக்கிய நமது சொத்துக்கள். அவற்றை விற்க மன்மோகன்சிங் அரசிற்கு அதிகாரம் அளித்தது யார்?

நெய்வேலியையோ, சேலத்தையோ, திருச்சி பெல் நிறுவனத்தையோ தவணை முறையில் விற்க முன்வந்தால், அதை தி.மு.கழகம் ஆதரிக்குமா?

மேற்கு வங்கத்துப் பொதுத்துறை நிறுவனங்களை அமெரிக்கத் துரைமார்களுக்கு விற்பதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வாரா?

தென் அமெரிக்க நாடுகள் விரட்டியடிக்கின்ற பிசாசுகளை இங்கே தேவதைகள் என்று அழைத்து வருகிறார்கள். கொடுமை.

அனைத்தும் தனியார் துறைக்கே என்பதனை மோட்சத்தின் திறவுகோலாக அமெரிக்கா சித்திரித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நமது காயகல்பப் பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் கண்களை இழந்தவர்கள் இங்கே நமது கண்களை விலைபேச வரப்போகிறார்கள். அவர்களுக்கு விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளம்தான் இந்திய அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களாகும்.

தேவையில்லாத விருந்தாளியை அழைத்தால்,நமக்குத் தேவையானவற்றையெல்லாம் இழக்க நேரிடும்!

நன்றி: குமுதம்

ஏர் இந்தியா… மீண்டும் டாடாவின் கட்டுப்பாட்டுக்குள் போகிறது!

July 8, 2009 by  
Filed under General

ஏர் இந்தியா… மீண்டும் டாடாவின் கட்டுப்பாட்டுக்குள் போகிறது!

டெல்லி: ஒரு அரசு நிறுவனத்தை தனியார் மயமாக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அதன் பங்குகளை அடிமாட்டு விலைக்கு வெளிச்சந்தையில் விற்பது.airindia2

இரண்டாவது மோசமான நிர்வாகம் மூலம் நிறுவனத்தை குட்டிச் சுவராக்கிவிட்டு, தனியாருக்கு அப்படியே தாரை வார்ப்பது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நேர்ந்திருப்பது இரண்டாவது ரக ஆபத்து.

அதன் விளைவுதான் முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

77 ஆண்டுகளுக்கு முன் 1932-ல் ஜேஆர்டி டாடாவால் ஆரம்பிக்கப்பட்டது ஏர் இந்தியா.

பின்னர் இந்த நிறுவனத்தை அரசுடைமையாக்கினர். அப்போது உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸும், வெளிநாட்டு சேவைக்கு ஏர் இந்தியாவும் செயல்பட்டன.

பின்னர் அல்லயன்ஸ், இந்தியா ஒன் என குழப்பங்களைச் செய்து, ஏர் இந்தியாவையும், இந்தியன் ஏர்லைன்ஸையும் ஒன்றாக்கினர். ஒன்றான பின்னர் இன்னும் குழப்பம், நஷ்டம் அதிகரித்ததே தவிர சேவை மேம்படவில்லை, நிறுவனமும் உருப்படவில்லை. வெறும் சம்பளத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் ஏர் இந்தியா நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களோ, மேம்பட்ட சேவையை அளிப்பதற்கு குறைந்தபட்சம் மனதளவில்கூட தயாராக இல்லை.

கிட்டத்தட்ட மூடுவிழாவுக்குத் தயாராகும் சூழலில் ஏர் இந்தியாவைத் தள்ளிய அதன் அதிகாரிகள், இப்போது புதிய யோசனையாக, மீண்டும் ஏர் இந்தியாவின் நிர்வாகத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் யோசனையைக் கூறியுள்ளனர்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா…

டாடா குழுமத்தின் சீரிய நிர்வாகத்தால் ஏர் இந்தியா மேம்படும்வரை நிர்வாகம் டாடா தலைமையில் இருக்குமாம்.

அதாவது தங்களால் மேம்பட்ட நிர்வாகத்தைத் தர முடியவில்லை என அரசே பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறது.

அதனால் ஏர் இந்தியா இயக்குநர் குழுவுக்கு ரத்தன் டாடாவை தலைவராக்கி, புதிய நிர்வாகத்தைக் கொண்டு வரும் திட்டத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் முன் வைத்துள்ளார்.

1980 வரை ஏர் இந்தியாவின் செயலற்ற தலைவராக இருந்தவர்தான் ரத்தன் டாடா. இப்போது ஒருவழியாக மீண்டும் அவர்களிடமே ஏர் இந்தியாவை ஒப்படைக்கத் தயாராகிவிட்டது மத்திய அரசு.

தினமணி நாளிதழ் முன்பு சொன்னது போல, ‘அரசு என்ற தனியான அமைப்பு எதற்கு… பேசாமல் அதையும் தனியார் முதலாளிகளிடம் காண்டிராக்டில் விட்டுவிடலாம்’!

மாறாதய்யா மாறாது!

July 7, 2009 by  
Filed under Cartoon

பட்ஜெட்டுகள் வரும்… போகும்… ஆனா ஏழைகளின் நிலை?

cartoon-23-copy

நன்றி: நினன்ஸ் வேர்ல்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

‘ராஜபக்சேவின் பிஆர்ஓ போல் செயல்பட்ட இந்தியா!’

July 6, 2009 by  
Filed under General

இலங்கை தமிழர்கள் படுகொலை: ‘ராஜபக்சேவின் பிஆர்ஓ போல் செயல்பட்ட இந்தியா!’

சென்னை: இலங்கை இனப்போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சேவின் பி.ஆர்.ஓ போலத்தான் இந்தியா நடந்து கொண்டது என்று பிரபல பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன் கூறினார்.satya

இலங்கையில் அடுத்தது என்ன என்ற தலைப்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் பேசுகையில், ஜனநாயக ரீதியிலான தீர்வு காண முயற்சிக்காமல், இலங்கை அரசை, சர்வதேச சமுதாயத்திடமிருந்து பாதுகாக்கக்கத்தான் இந்தியா அதிக அக்கறை காட்டி வந்தது.

இலங்கை அரசு செய்து வந்த போர்க் குற்றங்கள், இனப் படுகொலைகளை சர்வதேச சமுதாயத்திடமிருந்து மறைக்கும் நடவடிக்கைகளில்தான் இந்தியா ஈடுபட்டிருந்தது.

இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைப் போல இந்தியாவும் இலங்கை ராணுவத்திற்கு நேரடியாக உதவிகள் செய்து வந்தது. ஆனால் மற்றவர்கள் செய்த உதவிகள் நேரடியாக இருந்தன. ஆனால் இந்தியா படு ரகசியமாக செய்து வந்தது. இது நிச்சயம் வெளியில் தெரியவே தெரியாது, கடைசி வரை தெரியவும் தெரியாது.

இலங்கையில் தான் நடந்து கொண்ட விதத்தை மறைப்பதற்காக, ‘சீனா உள்ளே நுழைந்து விடுமே என்பதால் உதவிகள் செய்தோம்’ என்ற சொத்தை வாதத்தை வைக்கிறது இந்தியா.

தனி தமிழ் ஈழம் உருவாவதை உண்மையில் இந்தியா விரும்பவில்லை. தனி ஈழம் உருவானால், இந்தியாவில் தனி நாடு கோரிக்கைகள் பெருமளவில் தலை தூக்கி விடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.

மத்தியிலும், தமிழகத்திலும் உள்ள ஆட்சிகள், இலங்கை இனப் பிரச்சினையை கால்பந்து விளையாட்டாக மாற்றி விட்டன. இதில் பந்தாக மாறி உதைபட்டு நிற்பவர்கள் அப்பாவி ஈழத் தமிழர்கள்தான் என்றார்.

இறக்கை பிடுங்கப்பட்ட ஏர் இந்தியா!

July 6, 2009 by  
Filed under Cartoon

இறக்கை பிடுங்கப்பட்ட ஏர் இந்தியா!

னி சொதப்ப ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு  ஏர் இந்தியாவை கெடுத்து வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்.

அனைத்து சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருந்தும் இந்த அரசுத்துறை  விமானப் போக்குவரத்து நிறுவனம் மட்டும் இன்னும் முன்னேறியதாகவே தெரியவில்லை.

இந்த நிறுவனத்தின் இப்போதைய நிலையைப் பார்க்கும்போது, மீண்டும் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒரு முயற்சி நடப்பதாகவே தெரிகிறது.

தப்பிக்குமா ஏர் இந்தியா!

cartoon-21

-நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

சீனாவே எங்கள் வாழ்நாள் நண்பன்! – மீண்டும் சீண்டும் இலங்கை


சீனாவே எங்கள் வாழ்நாள் நண்பன்! – மீண்டும் சீண்டும் இலங்கை

பீஜிங்: இலங்கையின் வாழ்நாள் நட்பு சீனாவே. அந்த இடத்தில் rohitha-bogollagamaயாரையும் வைத்துப் பார்க்க முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லாகம நேற்று கூறியுள்ளார்.

சீனவுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் செய்துள்ளார் ரோஹித பொகல்லாகம. பீஜிங்கில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:

இலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனா தான் உதவியாக இருந்தது. எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பு கொடுப்பது சீனா மட்டும்தான்.

சீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது. வேறு எந்த நாடும் அப்படி இல்லை. சீனாவின் இடத்தில் வேறு நாட்டை வைத்துப் பார்க்கவும் முடியாது.

இன்று உலகில் சீனா மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது. ஆசிய மண்டலத்திலும் சீனாதான் ஆளுமை மிகுந்த நாடாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

உலக அளவிலும் சீனாவின் ஆதிக்கம் தற்போது மிகுந்துள்ளது. சீனா எப்போதும் எங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப்படும்.

தடையில்லாத வர்த்தக நிலையை சீனாவுக்கு இலங்கையில் ஏற்படுத்தித் தருவோம். அந்த நோக்கத்துடன்தான் நான் சீனாவுக்கு 5 நாள் பயணம் வந்துள்ளேன் என்றார்.

மருந்துகள் உள்பட சீனத்துப் பொருட்களுக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை முழுமையாக சந்தையைத் திறந்து விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவைச் சீண்டும் விதமாக இலங்கை நடந்து கொள்கிறது. புலிகளை ஒடுக்குவதில் இந்தியாவின் தேவை தீர்ந்ததும், இப்போது பீஜிங் போய் பல்லிளிக்கிறார் பொகல்லாகம.

சில தினங்களுக்கு முன் கோத்தபாய ராஜபக்ச கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ இணைய தளத்திலும் இந்தியாவைப் பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் குறித்தும் மிகக் கேவலமாக எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தியாவுக்கு ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை!

July 5, 2009 by  
Filed under General

இந்தியாவுக்கு ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை!

திண்டுக்கல்: ‘இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை nedumaran2ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உண்மையில், இலங்கைதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக, ஆபத்தைத் தருவித்துத் தரும் வாயிலாக உருவாகியுள்ளது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், தமிழ் ஈழம் மலரும் என்ற ஆய்வரங்கம் மற்றும் ஐயம் தீர் அரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசியதாவது:

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கூடாது என்பதற்காக, சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

சீனாவின் பிடிக்குள் இலங்கை சென்றுவிட்டது. ஹம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. மன்னார் குடாவில் இந்தியா-இலங்கை கூட்டாகச் சேர்ந்து பெட்ரோல் எடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் மீறி, பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது இலங்கை.

மேலும், இப்பகுதியில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தையும் சீனா ஏற்படுத்தி வருகிறது.

இதன்மூலம், இந்தியாவின் எதிர்காலத்துக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது.

யூதர்களை ஹிட்லர் அழித்தது போல, இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழர்களை அழித்து வருகிறார். இலங்கை அரசு தரும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

சர்வதேச சட்டத்தையும் ராஜபக்ச மதிப்பது இல்லை. ஐ.நா. மக்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மதிப்பதில்லை.

ஜெனிவா ஒப்பந்தப்படி, போரில் சம்பந்தப்படாத பொதுமக்களைக் கொல்லக் கூடாது என்ற நெறிமுறைகளும் மீறப்படுகின்றன.

தற்போது 3.5 லட்சம் தமிழ் மக்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிகளவு புதைக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகிறார் இலங்கை அதிபர்.

ஆனால், தமிழர்கள் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுகின்றார். அப்போது மட்டும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி வெடிக்காதா?

உலகத்தினரை ஏமாற்றும் இலங்கை அதிபரின் செயலுக்கு இந்தியா உதவி வருகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர அனுமதிக்கக் கூடாது. அது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும்.

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் நிச்சயம்!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள், என்றார் நெடுமாறன்.

பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு!

July 2, 2009 by  
Filed under General

பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2  விலை உயர்வு!

டெல்லி: பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தத் துவங்கியுள்ளது மத்திய அரசு. pump

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்னதான் குறைந்தாலும், பெட்ரோல் –  டீஸல் விலையைக் குறைக்க சற்றும் முன்வராத அல்லது வேண்டா வெறுப்பாகக் குறைக்கிற அரசு, கச்சா  எண்ணெய் விலை உயர்கிறது என்று தெரிந்தாலே போதும் ஜரூராக விலையை ஏற்றி விடுகிறது.

கடந்த ஆண்டின்  இறுதியிலிருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டு வரை கச்சா எண்ணெய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து பேரலுக்கு 20 டாலர்கள் வரை போனது.

ஆனால் அந்த அளவு குறைந்த விலைக்கு டீஸல் – பெட்ரோலை விற்க அரசு முன்வரவில்லை. வேண்டா வெறுப்பாக இருமுறை பெட்ரோல் மற்றும் டீஸல் விலையை ஒப்புக்குக் குறைத்தது.

அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் மக்கள் பணத்தை கிட்டத்தட்ட பகிரங்கமாகவே கொள்ளையடித்தன. இதற்கு விதவிதமான நியாயங்களைக் கற்பித்தது அரசும், சில அரைவேக்காட்டு நிபுணர்களும்.

ஆனால் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச  சந்தையில் லேசாக உயர்ந்து வரும் போக்கு காணப்படுகிறது. இத்தனைக்கும் இது ஒரு தற்காலிக நிலைதான்.

இந்த நிலை தெரிய ஆரம்பித்ததுதான் தாமதம்… அவசர அவசரமாக பெட்ரோல் – டீஸல் விலையை கணிசமாக அதிகரித்து, தங்கள் மக்கள் விரோதப் போக்கைக் காட்டியுள்ளது மத்திய அரசு.

இந்த வேகத்தை கடந்த 8 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை படுபாதாளத்தில் விழுந்து கிடந்தபோது அரசும் எண்ணெய் நிறுவனங்களும் காட்டவே இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்ந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்களின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கவனிக்க… சில மாதங்களுக்கு முன்பும்கூட கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்குள் இருந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.40 க்கே விற்கத் தயார் என்று சொன்ன அதே அரசுதான் இப்போது தாறுமாறாக விலையை உயர்த்தி வருகிறது. இத்தனைக்கும் கச்சா எண்ணெய் விலை 72 டாலராகத்தான் உள்ளது.

3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!

June 28, 2009 by  
Filed under கட்டுரைகள்

3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!

டெல்லி: தொலைத் தொடர்புத் துறையில் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு இல்லாத வசதிகளோ, நவீன எந்திரங்களோ கிடையாது. bsnlஆனால் இன்னும் கூட தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் பின் தங்கி, மிக மோசமான மொபைல் சேவை, வாடிக்கையாளர் சேவைக்கு விருது வாங்கும் நிலையில்தான் இந்த மாபெரும் நிறுவனம் இயங்கி வருகிறது.

காரணம் லஞ்சம், சோம்பேறித்தனம், தனியார் துறையினர் நன்றாக சம்பாதித்துக் கொழுக்கட்டும் என்ற தாராள மனப்பான்மை!

3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்துக்கு உள்ளதும், அடுத்து வரும் செப்டம்பருக்குள் தனது 3 ஜி சேவைக்கு 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனமே அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3 ஜி எனப்படும் நவீன மொபைல் சேவைக்குள் நுழைந்துள்ளது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல். கடந்த பிப்ரவரியிலேயே இந்த சேவை துவங்கப்பட்டது. 70 நகரங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டாலும், இதுவரை 9 ஆயிரம் சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் (அந்த லட்சணத்தில் இருக்கிறது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மற்றும் விளம்பரம்!)

இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!

இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப் போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).

ஏதோ ஒரு பிஎஸ்என்எல் அலுவலக படம்...

ஏதோ ஒரு பிஎஸ்என்எல் அலுவலக படம்...

“அதாவது இவர்களின் டார்கெட் சராசரியாக ஒரு நகரத்துக்கு 100 வாடிக்கையாளர்கள். அவ்வளவுதான். மற்ற வாடிக்கையாளர்களை பகிரங்கமாக தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்”, என்கிறார் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒரு ‘நல்லவர்’.

3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி… இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.

ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர்களோ, விவரம் கேட்டு வருபவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக விவரக் குறிப்புகளைக் கூட சொல்ல ஆளில்லை, வாடிக்கையாளர் பிரிவுகளில்.

பெரும்பாலும் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மிக மிக சோம்பேறிகளாகக் காணப்படுகின்றனர். அல்லது வாடிக்கையாளர் கேட்கிற விவரத்தைச் சொல்லத் தெரியாத அளவுக்கு தண்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அதிகபட்சம் ‘நோட்டு’ எண்ணி கல்லாவில் போடுவது, வருபவர்களிடம் அச்சடித்த குறிப்புகளைக் கொடுத்து அனுப்புவதுதான் இவர்களுக்குத் தெரிந்த வேலைகள்.

சதா சர்வகாலமும் இந்த அலுவலகங்களில் கைமுறுக்கு விற்பவர்களும், இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பவர்களும் ஏதோ மாமியார் வீட்டுக்கு வந்து போவது போல சகஜமாக நடமாடிக் கொண்டிருப்பதை இப்போது போனாலும் பார்க்கலாம் (உ.ம்., மடிப்பாக்கம்,  தாம்பரம், பூந்தமல்லி, க்ரீம்ஸ் ரோடு…)

முதல் தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை மனப்பான்மையில்தான்  இந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் செயல்படுகிறார்கள்.

அதை நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் 70 நகரங்களில் கடந்த 4 மாதங்களில் வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை இவ்வளவு பகிரங்கமாக கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சொல்கிறார், பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்!

பொருளாதார மந்தத்தில், இருந்த வேலையைத் தொலைத்து விட்டு, அல்லது சம்பளமில்லாமல் வேலை பார்த்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான படித்த தொழிலாளர்கள் ஒருபக்கம்… ஆரம்ப சம்பளமே ரூ.40 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு, ஒன்றுமே தெரியாத தண்டங்களாய், ஏஸி ரூமில் வெட்டியாய் பொழுதைக் கழித்து, ஒரு மாபெரும் நிறுவனத்தை உருப்படாமல் செய்துகொண்டிருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாதிரி சிலர் இன்னொரு பக்கம்…

டாடாக்களும் அம்பானிகளும்தான் இந்தத் துறையில் பலன் பெற வேண்டும் என பிஎஸ்என்எல் / அரசு நினைத்தால் அதை பகிரங்கமாக அறிவித்துத் தொலைக்க  வேண்டியதுதானே… ஏன் இவ்வளவு பம்மாத்து… இந்த தண்டச் சம்பளமாவது மிச்சமாகுமல்லவா!

-விதுரன்

வணங்காமண்ணை அனுமதிக்க ஒப்புக் கொண்ட இலங்கை!

June 25, 2009 by  
Filed under General

வணங்காமண்ணை அனுமதிக்க ஒப்புக் கொண்ட இலங்கை!

டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்கள் அனுப்பிய firstநிவாரணக் கப்பலான வணங்காமண்ணை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆலோசகரான பாசில் ராஜபக்சேவும், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய ராஜபக்சேவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராஜபக்சேவின் சகோதரர்களான இந்த இருவரும் மூத்த ஆலோசகர் லலித் வீராதுங்கேவும் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.

அப்போது வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கையில் அனுமதித்து அதை போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கிருஷ்ணா முன் வைத்தார்.

இதற்கு இலங்கை குழு சம்மதம் தெரிவித்ததாக பின்னர் கிருஷ்ணா நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் பற்றி இரு தரப்பும் பேசியுள்ளது.

இந்தக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்ததால் அது இந்திய கடல் எல்லைக்கு வந்து சென்னை துறைமுகம் அருகே நங்கூரமிட்டது.

ஆனால், அதை சோதனையிட்ட இந்திய கடற்படை அது சந்தேகத்திற்கிடமான கப்பல் என்று கூறி விரட்டியது. எனவே வேறு வழியின்றி சர்வதேச கடல் எல்லையில் நின்று கொண்டுள்ளது வணங்காமண் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுத்து, மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை நடத்த கடந்த ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும் என இச் சந்திப்பின் போது இலங்கையிடம் வலியுறுத்தியதாகவும் கிருஷ்ணா கூறினார்.

வணங்காமண் கப்பல் விஷயத்தில் இலங்கை அரசின் அனுமதி உண்மையானதுதானா எ கோத்தபாய ராஜபக்சேவிடமும்  நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், வணங்காமண்ணை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதில் உள்ள பொருட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு தரப்படும், என்றார்.

மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் விரைவில் அவரவர் பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார்.

சென்னையில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள சீன போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன!

June 18, 2009 by  
Filed under General

சென்னையில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள சீன போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன!


சென்னை:
இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற லேபிளுடன் சீனாவிலிருந்து வந்த ஏராளமான போலி மருந்துகள் சமீபத்தில் சென்னை துறைமுகத்தி்ல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.BELGIUM-INDIA-AFRICA-MEDICINE-CRIME-COUNTERFEIT

இந்திய மருந்து தரப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய அதிரடி சோதனையில் மூன்று கண்டெய்னர்களில் வந்திருந்த இந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சில தினங்ளுக்கு முன், இந்தியாவின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து விற்கும் சீனாவின் தில்லு முல்லு குறித்து விரிவான கட்டுரையை தட்ஸ் தமிழ் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் இந்த தில்லுமுல்லு, இந்தியாவில் தொடர்ந்துள்ளது இப்போது வெளிச்சமாகியுள்ளது.

கடந்த மே மாதம் சீனாவிலிருந்து முன்று தனித் தனி கண்டெய்னர்களில் சீனாவிலிருந்து, நோய் எதிர்ப்பு மருந்துகளான ராக்ஸித்ரோமைசின் (roxithromycin) மற்றும் அல்சர் நோய்க்கான மருந்து சைம்டிடின் (cimetidine) போன்றவை சென்னை துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த நேரத்தில்தான், சீனாவின் மருந்து தயாரிப்பு மோசடியை நைஜீரியா அம்பலப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் இந்த மருந்துகளை சோதனை செய்து, பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தினர் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

அதில் இந்த மருந்துகள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், அந்த நாட்டின் வெவ்வேறு நிறுவனங்கள், இந்திய லேபிளை ஒட்டி, அந்த போலி மருந்துகளை இந்தியாவுக்கே அனுப்பி வைத்த விவரமும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அனைத்து மருந்துகளையும் பறிமுதல் செய்தார் உதவி மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் சாந்தி குணசேகரன்.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்தின் மதிப்பு ரூ.78 லட்சம் ஆகும்.

இந்த மருந்துகளை இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த என்வீ ட்ரக்ஸ் நிறுவனம் தயாரித்ததாக லேபிள் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் விசாரித்த போது, இப்படி ஒரு மருந்தை தாங்கள் தயாரிக்கவில்லை என அறிவித்து அதற்கான ஆதாரங்களையும் காட்டியுள்ளது என்வீ நிறுவனம்.

இந்த மருந்துகளை சீனாவிலிருந்து சினோப்ரைட் டெவலப்மெண்ட் எனும் நிறுவனம்தான் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது.

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளும், நைஜீரியாவில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளும் ஒரே வகையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய துறைமுகங்களிலும் இதே நிறுவனம் அனுப்பி வைத்த மருந்துகள் வந்து இறங்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளதால், அங்கும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் கைப்பற்றப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வர்த்தக அமைப்பிடம் புகார் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

உக்கிரமடையும் இந்தியா – சீனா வர்த்தகப் போர்!

June 18, 2009 by  
Filed under வணிகம்

உக்கிரமடையும் இந்தியா – சீனா வர்த்தகப் போர்!

டெல்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் உக்கிரமடைந்துவிட்டது. ban_china_071022_ms

அதன் ஒரு கட்டமாக சீனாவிலிருந்து மொபைல் போன்கள், பால் பொருட்கள், மருந்துகள்  மற்றும் பொம்மைகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சீனத்துத் தயாரிப்புகள் இந்தியாவில் பலத்த எதிர்விளைகளை உண்டாக்குவதாகவும், இதைத் தவிர்க்கவே இந்தத் தடையை விதித்துள்ளதாகவும் இந்திய  வெளிநாட்டு வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக சீனாவிலிருந்து சர்வதேச அடையாளக் குறிப்பெண்கள் (International Mobile Equipment Identity) இல்லாமல் மாதத்துக்கு 8 லட்சம் மொபைல் போன்களுக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இன்றும் 50 லட்சத்துக்கும் இத்தகைய போன்கள் புழக்கத்தில் உள்ளன.

இந்தப் போன்கள் தீவிரவாதிகள் மற்றும் சட்ட விரோத சக்திகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது. எனவே இவற்றை இறக்குமதி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல வரும் 2010-ம் ஆண்டு வரை சீனாவிலிருந்து பொம்மை மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது இந்திய அயல் வர்த்தகத்துறை இயக்குநரகம்.

அதேநேரம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தின் அத்தாட்சியுடன் வரும் சீன பொம்மைகளை தடை செய்யவில்லை இந்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பால் பொருட்களில், கூடுதல் வெண்மை நிறத்துக்காக நச்சுத்தன்மை கலந்த ரசாயனம் உபயோகப்படுத்துவதால், அவற்றை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை வரும் ஜூன் 24-ம் தேதி காலாவதியாகிறது. இப்போது அந்தத் தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ப்ளாஸ்டிக் மற்றும் உரத்தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் சில வகை நச்சு ரசாயனங்களைப் பயன்படுத்தி சீனத்து பால் பொருட்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகளின் உயிருக்கே அவை உலை வைப்பதாகவும், சிறு நீரகக் கோளாறுகள் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் சர்வதே மருத்துவ விஞ்ஞானிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்தியாவைப் போலவே மற்ற ஆசிய – ஆப்ரிக்க நாடுகளும் சீனாவின் பால் பொருட்களை தடை செய்துள்ளன. ஆனால் இலங்கை மட்டும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலிருந்தே பால் பொருள் உற்பத்தியில் முதல்நிலையில் இந்தியா இருந்து வருகிறது. அதனால் சீனவாலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யும் அவசியம் இந்தியாவுக்கு வந்ததில்லை. ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தடையை அறிவித்துள்ளது.

அடுத்து முக்கியமான தடை, சீனாவின் மருந்துகளுக்கு. சீன மருந்துகளை இந்தியாவில் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே போலி மருந்துகளைத் தயாரித்து ஆப்ரிக்க நாடுகளில் இந்தியாவின் பெயரில் மோசடியாக சீனா விற்பனை செய்ததை நைஜீரிய அரசே கண்டுபிடித்து தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் இந்த வெளிப்படையான தடை, சர்வதேச அரங்கில் சீனாவின் வர்த்தக இமேஜை பலமாக அசைத்துவிட்டது. இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தல்களை சீனா ஆரம்பித்துவிட்டது.

இந்திய பொருட்களுக்கு எதிரான லாபியை தனது நட்பு நாடுகளிடம் இப்போதே சீனா துவங்கி்யுள்ளது.  உலக வர்த்தக அமைப்பிடமும் (WTO) இதுகுறித்து புகார் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியாவின் அந்த பகிரங்க தடையை அடுத்து சீனப் பொருட்கள் இறக்குமதி செய்ய இதர கண்டங்களின் நாடுகளும் தயக்கம் காட்டத் துவங்கியுள்ளன.

தமிழீழப் போர்: தோற்றது இந்திய ராஜதந்திரமே! – பழ. நெடுமாறன்

June 18, 2009 by  
Filed under நட்புடன்

தமிழீழப் போர்: தோற்றது இந்திய ராஜதந்திரமே!

பழ. நெடுமாறன்

லங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து

nedu

விட்டோம்”, என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட, இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் சின்பெத் உளவுப்படையான மொசாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்ட னைச் சேர்ந்த சிறப்பு விமானப் படையின் நிபுணர்கள் சிங்கள விமானப் படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டு வீசப் பயிற்சி அளித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ், சிங்கள ராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க பயிற்சி அளித்தது. தென்னாப்பிரிக்க அரசு மூலம் இங்கிலாந்து சிங்கள ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் சாரம் பின் வருமாறு அமைந்தது:

“இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதற்குப் பிரதிபலனாக இலங்கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு ராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்ற வேண்டும்”, என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.

இதன் மூலம் ஜயவர்த்தன இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார்.
1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது.
2. மேற்கு நாடுகளை நட்பு சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப் போராளிகளை முறியடித்துவிட முடியும் என்ற அவரின் திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு நாடுகள் அவரைக் கைவிட்ட பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடங்கி சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப்படியாக உருவெடுத்தது.

1993-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றைத் திறப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இந்தக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு ராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும் புத்தளத்துக்கு அருகே நோரோச் சோலையில் 9000 மொகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005-ம் ஆண்டில் வேண்டிக் கொண்டார். சீனா பெரும் மகிழ்ச்சியுடன் இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

ஏனெனில் ஹம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது இந்துமாக்கடலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். நோரோச் சோலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் அதற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேதுக் கால்வாயை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணி அனுமதியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவுக்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக் கால்வாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேதுகால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப் பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வான் புலிகளின் விமானத் தாக்குதலை இந்தியா அளித்த ரேடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக் கூறி சீனாவிடம் ரேடார்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த இந்த ரேடார்கள் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா ரூ. 500 கோடி உதவி அளித்துள்ளது. இந்தியாவையும் ஜப்பானையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 100 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந்தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.

சீனா மட்டுமல்ல, சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்தது என்பது வெளிப்படையானது.

2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதில் உதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்களை ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்குப் பெருந்தொகை ஒன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.

சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப்போர் தொடங்கிய 2006ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராகிவிட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு ராணுவ ரீதியாக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன.

பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாதுகாப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதம் செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கையைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை -சீனா -பாகிஸ்தான் அரசின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலே ஆகும்.

ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது ஆனால் இப்போது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப்படையில் அது நடுமையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத்தடங்களுக்கும், கப்பல் தடங்களுக்கும் இலங்கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொருத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் “இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்”.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம்மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது, குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது.

தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கைத் தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணு ஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

“ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.”

கோத்தபய ராஜபக்சேவின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, அதிபர் ராஜபக்சேவின் சம்மதம் இல்லாமல் வெளிவந்திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக் கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்கு கிடைத்த கைமாறு இதுதான்.

இத்துடன் நிற்கப்போவதில்லை. இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

இலங்கையில் சிங்கள இனவெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்கவில்லை. மாறாக இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது!

நன்றி- தினமணி

மீண்டும் பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்துகிறது மத்திய அரசு!

June 16, 2009 by  
Filed under வணிகம்

மீண்டும் பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்துகிறது மத்திய அரசு!

டெல்லி: மீண்டும் பெட்ரோல்-டீஸல் விலையை உயர்த்துகிறது மத்திய அரசு. raise-of-petrol-price

வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்பதை  மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்த்துக்குப் பின், பிரணாப் முகர்ஜியை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்துப் பேசினார்.

கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்களைத் தாண்டிவிட்டது குறித்தும், இதனால் உயர்த்தப்பட வேம்டிய விலைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாகத் தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, “கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. இருந்தாலும், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் வந்து விட்டது…” என்றார்.

பின்னர் நிதியமைச்சரைச் சந்தித்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, “கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பட்ஜெட்டின் போது முடிவு செய்யப்படும். இதற்கான கால அவகாசம் எதையும் தெரிவிக்க முடியாது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்வது பற்றியும் அப்போது முடிவு செய்யப்படும்…” என்றார்.

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிவித்துவிட்டால், அடுத்த கணமே, சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல் விற்பனை அமையும். இப்போதுள்ள விலையைவிட ரூ.5 கூடுதலாக விலை வைக்கும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பெட்ரோல் – டீஸல் மீதான கல்வி வரி (செஸ்) ஒரு ரூபாய் உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி ‘போலியானவர்’… மாயாவதி கடும் விமர்சனம்!

June 16, 2009 by  
Filed under General

‘போலித்தனமானவர்’… மகாத்மா  பற்றி உபி முதல்வர் கடும் விமர்சனம்!

லக்னோ: “மகாத்மா காந்தியும் சரி… இப்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி… இருவருமே சமூகத்துக்கு உண்மையானவர்களாக இல்லை. இவர்கள் போலித்தனமானவர்கள் (‘Natakbaaz’)” என்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி விமர்சித்துள்ளார். gandhi-india

தேசப்பிதா என இந்திய அரசியல் சாசனத்திலேயே கவுரவமளிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மீது தேவையற்ற, மோசமான விமர்சனத்தை வைத்துள்ள மாயாவதிக்கு கடும் கண்டனங்கள் குவியத் துவங்கியுள்ளன.

திங்களன்று தனது கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசும்போது மகாத்மா காந்தி ஒரு போலியானவர் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஒரு துண்டுப் பிரசுரத்தையும் அக்கூட்டத்தில் அவர் விநியோகித்தார். அதில் “மகாத்மா காந்தியானாலும் சரி அல்லது ராகுல் காந்தியானாலும் சரி தலித்துகளின் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களில் அக்கறை காட்டியதில்லை… போலியானவர்கள் இவர்கள்” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தலித்துக்களை காங்கிரசை நோக்கி இழுக்கும் முகமாக, ராகுல் காந்தி வருகிற ஜூன் 19- ந்தேதி நடைபெறவிருக்கும் தனது பிறந்த நாளை நல்லிணக்க நாளாக கொண்டாடவிருக்கிறார்.

அந்நாளில் தலித்துகள் அதிகம் வாழும் இடங்களில் விருந்துகளுக்கும் உத்திரப் பிரதேச காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதே நாளில் மாயாவதியும், ராகுல் காந்திக்கு எதிரான ஊர்வலங்களை நடத்துமாறு தனது கட்சியினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். அப்போதுதான் மகாத்மா காந்தி மீதும் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

மகாத்மா காந்தி மீதான மாயாவதியின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரசியலில் கத்துக்குட்டி என காங்கிரஸ்காரர்களே வர்ணிக்கும் ஒரு இளைஞரோடு, தேசப் பிதாவையும் இணைத்து விமர்சிப்பதா என கொதித்துப் போயுள்ளனர் அரசியல் கட்சியினர்.

“மாயாவதியின் இந்தக் கருத்தானது அவருக்கு எதிராகத்தான் முடியும். அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருக்கும். தலித்துக்கள் ஒன்றும் மாயாவதியின் தனிப்பட்ட சொத்து அல்ல. மகாத்மா காந்தி தலித்துகளுக்கு என்ன செய்திருக்கிறார், மாயாவதி தலித்துகளுக்கு என்ன செய்திருக்கிறார் என அவர்களால் புரிந்துகொள்ள முடியும்..” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுபோத் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “மாயாவதி தலித்துக்கள் ஓட்டை இழந்தது மட்டுமல்லாமல், தனது மனநிலையையும் இழந்துவிட்டார் என்பதையே மகாத்மா காந்தியின் மீதான அவரின் தாக்குதல் மூலம் தெரிகிறது. அரசியல் சண்டைகளுக்கு அப்பாற்பட்டவர் நமது தேசப்பிதா… ராகுல் காந்தி மீது கோபம் இருந்தால் அதை அவருக்கு எதிராகத்தான் காட்ட வேண்டுமே தவிர, காந்தி என்ற பெயர் வைத்தமைக்காக மகாத்மா மீதல்ல…” என்றார்.

mayawathiமகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் நோக்கில் மாயாவதி பேசியுள்ளது வெட்கக்கேடானது என பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் நாராயன் தீக்சித் தெரிவித்தார். தீண்டாமையை ஒழிப்பதற்கு அண்ணல் காந்தி செய்தது ஒரு நாடகம் என கூறுவதன் மூலம் மாயாவதி தேசத் தந்தையை அவமரியாதை செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

அதேநேரம், மாயாவதியின் இந்த தேவையற்ற விமர்சனத்தை அவருக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் காங்கிரஸ் வேக வேகமாகக் களமிறங்குகிறது.

நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை! – டோணி

June 15, 2009 by  
Filed under General

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார் டோணி!

லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது வருத்தம் அளிக்கிறது. இதற்காக ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.dhoni

டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்து சூப்பர்-8 போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதை கோப்பை வெல்ல வேண்டும் என்ற இந்தியர்களின் கனவு தகர்ந்து போனது.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது டோணி கூறியதாவது:

எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயன்றோம். எங்களிடம் அனுபவம் நிறைந்த வீரர்கள் சிலர் இருந்தாலும், நேற்று எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்காக இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இந்திய ரசிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். அவர்களை விட இந்த தோல்வி எங்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடியதன் காரணமாக வீரர்கள் களைத்து போய்விட்டார்கள் என்று கூற முடியாது. அதை கூறி யாரும் தப்பிக்க முடியாது.

இந்த தொடரில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும். எனது பேட்டிங்கும் அதிரடியாக இல்லை. என்னால் பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. அடுத்து வரும் போட்டிகளில் சிக்சர்கள் விளாசுவேன்.

இந்தியாவின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. எளிய இலக்கை எட்டாதது ஏமாற்றம். பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு காரணம்.

இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சு

இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பவுன்சர்களை வேகம் கூட்டியும், குறைத்துமாக வீசியதால் அவர் வீசிய 22 பவுன்சர்களில் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதிலிருந்து நல்ல பாடம் பெற்றோம். பவுன்சர்களை சிக்சராக மாற்றுவது எப்படி என்பதை விரைவில் கற்றுக்கொள்வோம்.

2007ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் வெளியேறியது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான நாள். இது அதற்கடுத்து சோகமானது.

அடுத்த டுவென்டி-20 உலக கோப்பை வரும் ஏப்ரலில் வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. இதில் சிறப்பாக விளையாடி கோப்பை வெல்வோம்.

ஷேவாக் இல்லாதது பெரும் இழப்பு. அவரது இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. அவர் அணியில் இருந்தாலே எதிரணி பவுலர்களின் மன தைரியம் குறைந்துவிடும் என்றார் டோணி.

முன்னாள் வீரர்கள் விமர்சனம்!

இந்திய அணியின் இந்தத் தோல்விக்குக் காரணம் தோணியின் மோசமான அணுகுமுறை மற்றும் திட்டமிடலே என முன்னாள் கிரிக்கட் வீரர்கள் சையத் கிர்மானி, இஏஎஸ் பிரசன்னா, அருண்லால், விபி சந்திரசேகர், மதன்லால் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தத் தோல்வி குறித்து தான் எதுவும் கருத்து கூற முடியாது என இந்தியாவுக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

தன் தாயார் மரணமடைந்ததிலிருந்து தான் கிரிக்கெட் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதாகவும், இப்போதைய நிலைமை குறித்து தெரியாமல் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கபில் கூறியுள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட் என்ற வடிவத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கபில்தேவ்தான். இவர்தான் ஐசிஎல் எனும் அமைப்பை முதல்லி உருவாக்கி, 20 ஓவர் போட்டிகளை நடத்தினார். அதைப் பார்த்துதான் ஐபிஎல் உருவாக்கப்பட்டது நினைவிருக்கும்.

கிரிக்கெட் வாரியம் ஆதரவு!

இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் தோற்தற்காக இந்திய அணியை  குறைசொல்லத் தேவையில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

‘இந்தத் தோல்வி மோசமானதுதான். ஆனாலும் இந்தத் தோல்வி என்பது கிரிக்கெட்டின் முடிவாகிவிட முடியாது. அடுத்து வரும் மேட்ச்களில் கவனம் செலுத்துவோம்’, என அறிவித்துள்ளது வாரியம்.

உலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது!

June 15, 2009 by  
Filed under General

உலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது!

லண்டன்: சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றதால் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது இந்தியா. photocms

முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றுப் போன இந்தியாவுக்கு இந்தப போட்டி மிக முக்கியமானதாக இருந்தது. இதனால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி, முதலில் பந்து வீச போவதாக அறிவித்தார். இதன்படி லுக் ரைட்டும், ரவி போபராவும் இங்கிலாந்தின் இன்னிங்சை துவக்கினார்கள். 2-வது ஓவரிலேயே ஆட்டம் இழந்த லுக்ரைட் (1) ஆர்.பி.சிங் பந்து வீச்சில் யூசுப் பதானிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் ரவி போபராவுடன், பீட்டர்சன் கூட்டணி சேர்ந்தார். இந்த ஜோடி அணி நல்ல நிலைமைக்கு வர உதவியது. 10 ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்த போது ரவி ஜடேஜா பந்துவீச்சில் ரவி போபரா 37 ரன்களில் கிளீன் போல்டு ஆனார். ஜடேஜா தனது அடுத்த ஓவரில் பீட்டர்சனையும் (46 ரன்) பெவிலியனுக்கு அனுப்பினார்.

பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.

உபரி ரன்களாக மட்டுமே 14 வைடு உள்பட மொத்தம் 16 ரன்களை வாரி வழங்கினர் இந்திய பந்து வீச்சாளர்கள்.

இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மந்தமான பேட்டிங்

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக வந்த ரோகித் ஷர்மா 9 ரன்களில், சைட் பாட்டம் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதன்பின்னர் இறங்கிய சுரேஷ் ரெய்னா (2 ரன்), பவுன்சர் பந்தை தூக்கியடித்து பிடிபட்டார். 24 ரன்னுக்குள் 2 விக்கெட் விழுந்ததால் இந்தியா ஆட்டம் கண்டது.

இதன் பின்னர் கவுதம் கம்பீருடன், ரவி ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் அபாரமான பந்து வீச்சினாலும், கட்டுக் கோப்பான பீல்டிங்காலும் தடுமாற்றம் கண்டது. திக்கித் திணறி ஆடிய ஜடேஜா ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்ததுதான் மிச்சம். அவரது மந்தமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு ரன் தேவை வீதம் அதிகரித்து கொண்டே வந்தது. ஸ்கோர் 62 ரன்களை எட்டிய போது, கம்பீர் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதை தொடர்ந்து களம் புகுந்த துணை கேப்டன் யுவராஜ்சிங் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அட்டகாசமாக தொடங்கினார். மறுமுனையில் தொடர்ந்து சொதப்பி கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா ஸ்வான் பந்து வீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். 35 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஜடேஜா தனது ரன்னில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார்.

அதே ஓவரில் யுவராஜ்சிங் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் போஸ்டரால் ஸ்டம்பிங் ஆனார். அவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அவர் 2 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ்சிங் வெளியேறியதும் இந்தியாவின் நம்பிக்கையை கரைய தொடங்கியது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டோனியும், யூசுப் பதானும் பலமாக போராடிப் பார்த்தனர். ஆனால் இங்கிலாந்தின் பந்து வீச்சின் முன்னால் அவர்கள் நினைத்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

நெருக்கடியான அந்த கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தது. சைடுபாட்டம் கடைசி ஓவரை வீசினார். இதில் முதல் பந்தில் யூசுப் பதான் ஒரு ரன்னும், 2-வது மற்றும் 3-வது பந்தில் முறையே டோனி 2 மற்றும் ஒரு ரன்னும் எடுத்தனர்.

இதன் பின்னர் 4-வது பந்தில் யூசுப் பதான் சிக்சர் அடித்தார். இதனால் 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது, அடுத்த பந்தில் பதானால் ஒரு ரன்னே எடுக்க முடிந்தது. இதையடுத்து கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அதில் டோனி ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு சின்ன ஆறுதல் தந்தார்.

இதையடுத்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்களே எடுத்த இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சூப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று விட்டது. கடைசி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை சந்திக்கிறது இந்தியா. ஆனால் இந்த வெற்றி தோல்வியால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ!

June 14, 2009 by  
Filed under வணிகம்

போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ!

டெல்லி: வங்கிகள் பெருமளவு வட்டிக் குறைப்பைச் செய்து, நாட்டின் அனைத்துத் தரப்புக்கும் எளிய வட்டியில் கடன் தர முன்வர வேண்டும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி கால் சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது!sbi-logo

மத்திய நிதியமைச்சர் சொன்னதில் 20-ல் ஒரு மடங்கு கூட இந்த வட்டிக் குறைப்பு இல்லை என்பதும், ஒப்புக்கு இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரியிலிருந்து 5 முறை இந்திய ரிசர்வ் வங்கி வட்டி பலவித நிதிச் சலுகைகளை வட்டிக் குறைப்பு மூலம் அறிவித்திருந்தது. ஆனால் வணிக வங்கிகள் இதை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் ரிசர்வ் வங்கியின் சலுகைகள் வணிக வங்கிகளைத் தாண்டிச் செல்லவே இல்லை. இதனாக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உடனடியாக வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின் படி வட்டிக் குறைப்பைச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் அப்படியும் வணிக வங்கிகள் திருந்துவதற்கான அறிகுறியே இல்லை.

ரிசர்வ் வங்கி இதுவரை 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்திவிட்டது. ஆனால் இந்தியாவின் முன்னணி வங்கி என்ற பெருமையைச் சுமந்து கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி 1.75 சதவிகிதம் வரைதான் இதுவரை வட்டிக் குறைப்பு செய்துள்ளது. அதைக் கூட 6 முறை இன்ஸ்டால்மெண்டில்தான் செய்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜியே வேண்டுகோள் விடுத்த பிறகு, இப்போது ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்பு எவ்வளவுதெரியுமா… ஜஸ்ட் 0.25 சதவிகிதம்… அதாவது கால் சதவிகிதம்!

நாளை முதல் பிற வங்கிகளும் இதே போன்ற கண் துடைப்பு அறிவிப்புகளை வெளியிடக் கூடும்.

வெடித்தது பாஜக உட்கட்சித் தகராறு; யஷ்வந்த சின்ஹா ராஜினாமா!

June 14, 2009 by  
Filed under General


வெடித்தது பாஜக உட்கட்சித் தகராறு; யஷ்வந்த சின்ஹா ராஜினாமா!

டெல்லி: உட்கட்சி மோதல் முற்றிதால் பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த் சின்ஹா இன்று திடீரென ராஜினாமா செய்து விட்டார்.yashwanth

அக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா. தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கண்டறியாமல் நாடாளுமன்றத்தில் கட்சிக்கான பதவி நியமனங்களை கட்சித் தலைவர் அத்வானி மேற்கொண்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார் சின்ஹா.

இதைத் தொடர்ந்து கட்சிப்பொறுப்புகளிலிருந்து விலகும் முடிவை அவர் அறிவித்துள்ளார்.

கட்சி மீண்டும் தனது பழைய அந்தஸ்தைப் பெற காமராஜர் திட்டம்தான் சிறந்த வழி என்று தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கடிதத்தை அவர் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று அனுப்பினார்.  இந்த ராஜினாமாவை உடனடியாக ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு பொறுப்பு வகித்த அருண் ஜெட்லியும் ஒரு காரணம் என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதே கருத்தைத்தான் சில தினங்களாக ஜஸ்வந்த் சிங்கும் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜ் திட்டம் அல்லது ‘கே பிளான்’!

காங்கிரஸ் கட்சியில், 1963-ல் பெருந்தலைவர் காமராஜர் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பண்டித நேருவையே ஒரு கணம் ஆடிப் போகச் செய்த திட்டம் அது.

இத்திட்டப்படி வயதான தலைவர்கள் ஆட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகி கட்சி வளர்ச்சிக்குப் பணியாற்ற வேண்டும். நீண்ட நாள் கட்சியின் உயர் பொறுப்புகளிலிருப்பவர்கள் அதிலிருந்து விலகி இளையவர்களுக்கு வழிவிடவேண்டும்.

இதைத்தான் காமராஜ் பிளான் என்கிறார்கள்.  இந்த் திட்டத்தை பாஜகவில் இப்போது உடனடியாக அமல்படுத்த வேண்டும் என யஷ்வந்த சின்ஹா மற்றும் ஜஸ்வந்த் சிங் போன்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.

தனது ராஜிநாமா கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு சிறிதேனும் நாம் பொறுப்பேற்க வேண்டும். பாஜகவின் கர்நாடகமாநிலப் பொறுப்பாளர், கட்சியின் வெளி விவகார அமைப்பின் தலைவர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். தோல்விக்கான காரணத்தை கண்டறிய சுய சிந்தனை மேற்கொள்ள

வேண்டும். தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பதவிக்காக போட்டியிடுவது ஆரோக்கியமல்ல. கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பதவியை தியாகம் செய்துமுன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு அனைவருமேபொறுப்பேற்க வேண்டும். கட்சியில் முக்கியப் பொறுப்புகளுக்கும், நாடாளுமன்ற பொறுப்புகளுக்கும்,முறைப்படியான தேர்தல் மூலம் தேர்வு செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, சுதீந்திர குல்கர்னி ஆகியோரையும் தனது ராஜிநாமா கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார் சின்ஹா.

யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்தது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, யஷ்வந்த் சின்ஹாவின் ராஜினாமா முடிவு துரதிருஷ்டவசமானது. ஆனால் அவரது ராஜினாமாவை கட்சி ஏற்கிறது, என்றார்.

இதற்கிடையே யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக முன்னணி தலைவர்கள் சிலரும் பதவி விலகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!’

June 14, 2009 by  
Filed under General

‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!’

சென்னை: தமிழினப் படுகொலை குறித்து இந்திய அரசும், தமிழக அரசும் வெளிக்காட்டிய எதிர் வினை பெரும் ஏமாற்றம் தருவதாக உள்ளதென்றும், சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே என்ற பாரதியின் வரிகபளை மெய்ப்பிப்பதாக உள்ளதென்றும் குமுதம் கருத்து தெரிவித்துள்ளது.Sonia - rajapaksa

இது தொடர்பாக குமுதம் நேற்று வெளியிட்டுள்ள தலையங்கம்:

இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது – இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா.

வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள் என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் கொத்தாக நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிரான குரலை உயர்த்தியிருக்கின்றன. இலங்கையில் நடந்த கொடூரங்களைத் தாங்க முடியாத சிங்களப் பத்திரிகையாளர்கள் கூடக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழ்மக்கள் சொந்த நாட்டில் மிகக் கேவலமான முறையில் வீடற்றவர்களாக முகாம்கள் என்கிற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைபடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழக் கனவு கண்டதற்காக அவர்களுடைய பார்வையை மட்டுமல்ல, உயிரையே பறித்திருக்கிறார்கள். தமிழ் இனம் கண்ட அவலங்களின் உச்சம் – சமீபத்திய இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகள்.

பன்னாட்டு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிரான விசாரணையை இன்னும் யாராலும் துவக்க முடியவில்லை. உலகெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள், அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்கள் மத்தியில் வெறுமையுடன் குடையும் கேள்வி – இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்தை யார் நிர்ணயிப்பது?

இந்திய அரசின், தமிழக அரசின் எதிர்வினைதான் என்ன?

“சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே” என்ற வரிகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

என்ன செய்ய முடியும் ஊமை சனங்களால்? என குமுதம் கூறியுள்ளது.

பிரபாகரன்… தெரிஞ்சது கையளவு!

June 12, 2009 by  
Filed under கட்டுரைகள்

பிரபாகரன்… தெரிஞ்சது கையளவு!

லகில் பிரபாகரனைப் போல வேறெந்த தலைவனின் மரணம் அல்லது நலன் குறித்தாவது இப்படியெல்லாம் செய்திகளும் வதந்திகளும் வந்திருக்குமா என்று தெரியவில்லை.SRI LANKA-TAMIL-PRABHAKARAN

யாரைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் ஈழம் குறித்தும், பிரபாகரன் குறித்தும் செய்திகளையும் வதந்திகளையும் வரைந்து தள்ளிவிட்டார்கள். அறிக்கை என்ற பெயரில் அடித்த, அடிக்கிற கூத்துக்களுக்கும் அளவே இல்லை.

இலங்கையும் தமிழீழ மண்ணும் எப்படி இருக்கும் என்ற குறைந்தபட்ச விவரம் தெரியாதவர்கள் வன்னிக் களமுனை பற்றியும், பிரபாகரன் தப்பியோடியது குறித்தும் எழுதித் தள்ளிவிட்டார்கள்… இணையப் பக்கமே தீய்ந்து கருகும் அளவுக்கு!

ஒரு குறையாக இதைச் சொல்லவில்லை… எதையும் எழுதலாம். ஆனால் கொஞ்சமாவது தெரிந்து வைத்து, தெரிந்தவர்களிடம் முழுமையாகக் கேட்டு வைத்துக் கொண்டு எழுதலாமே… உண்மையைச் சொல்லலாம்… அட உண்மை என மனசார நம்புவதையாவது எழுதலாம்.

இல்லாவிட்டால்?

சும்மா இருக்கலாம், தப்பில்லை. யாருக்கும் தொந்தரவில்லாத, இருக்கிற மக்களை நிம்மதியாக இருக்கச் செய்ய உத்தமமான வழி இது.

17 வயதில் தமிழர் வாழ்வுரிமைக்காக ஆயுதம் தொட்டு, 34 ஆண்டுகள் அந்த மண்ணைவிட்டு அகலாமல் மக்களோடு மக்களாக நின்று போராடும் ஒரு தேசிய இனத்தின் சுத்தமான தலைவனைப் பற்றி ஒரே ஒரு உண்மையான தகவலைத் தரவும் துப்பில்லாத கூட்டத்துக்கு, அவர் இருக்கிறாரா இல்லையா என்ற விசாரம் மட்டும் எதற்கு?

பேடித்தனமாக ஒரு உடலைக் காட்டுவதும் பின்னர் அதை மறுப்பதும் பின்னர் வேறொன்றைக் காட்டுவதும், முன்னுக்குப் பின் முரணாக, ஏதோ கேழ்வரகு ரொட்டி சுட்டோம் என்பது போல, ஒரு தேசியத் தலைவனைச் சுட்டுவிட்டோம் என்று பினாத்திக் கொண்டிருப்பதற்கும் அரசாங்கங்கள் எதற்கு… ஒரு முந்தானையின் பின்னால் மறைந்து நின்று தன் சொந்த மக்களையே சுட்டுக் கொண்டிருக்கும் இவை உண்மையிலேயே அரசாங்கங்கள்தானா… இந்தக் கேள்வி இந்தியாவுக்கும் சேர்த்தே!

அவன்
இருக்கிறானா இல்லையா
என்று தெரியாமலே கைதொழும்
பக்தர்களில் ஒருவனாக மாறிவிடவே
நானும் முயற்சிக்கிறேன்!

-பிரபாகரனைக் கொன்றோம் என இந்திய-இலங்கை ராணுவத்தினர் கூட்டாக அறிவித்தபோது நமது நண்பர் எழுதிய கவிதை இது.

நவம்பர் 27-ம் தேதி வரை இந்த நம்பிக்கை மட்டுமாவது, எல்லாவற்றையும் இழந்த எமது  உறவுகளுக்கு ஒரு பற்றுக் கம்பியாக மிச்சமிருக்கட்டும்… விட்டுவிடுங்கள்.

அல்லது…

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதையெல்லாம் தவிர, வலுவான ஆதாரங்கள் இருக்கிறதா… அவற்றை அதிகாரப்பூர்வமாக பொறுப்பிலிருப்பவர்கள் மூலம் வெளியுலகுக்குச் சொல்லி, கண்ணீர் விட்டு மனதைத் தேற்றிக் கொள்ளவாவது மக்களை அனுமதியுங்கள்.

இந்த கோரிக்கை புலிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் போலி ஈழ ஆதரவாளர்களுக்கும் சேர்த்தே!!

-எஸ்எஸ்

ராஜபக்சே என்ன செய்தாலும் இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்! – மேனன்

June 10, 2009 by  
Filed under General

ராஜபக்சே என்ன செய்தாலும் இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்! – சிவசங்கர மேனன்

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் menon_narayan_meet_sl_tamilnational_banner1முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது.

அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.

இலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள பத்திரிக்கையாளர்கள் மேனனைச் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களிடையே மேனன் பேசுகையில், இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மறு சீரமைப்பு குறித்துதான் இருக்க முடியும். இதை இலங்கை அரசுதான் தீர்மானிக்க முடியும்.

இது இந்தியாவோ அல்லது நார்வே நாட்டின் வேலை அல்ல. இந்த நாடுகள் இலங்கை எடுக்கும் முடிவுகளில் தலையிடவும் முடியாது. இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை.

‘என்னைக் கவர்ந்த ராஜபக்சே முடிவு’

அதிபர் ராஜபக்சே இதுகுறித்து தெளிவாகவே கூறியுள்ளார். அது என்னையும் கவர்ந்தது. இலங்கைக்கு எது சரியானது என்பது குறித்து அதிபர் ராஜபக்சே எடுக்கும் எந்த வகையான முடிவுகளுக்கும் இந்தியா உறுதியுடன் தொடர்ந்து ஆதரவு தரும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவர்களது வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை.

இந்தியா, இலங்கைக்கு இடையே, பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் அது நிறைவேறும்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்துவதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விரும்பவில்லை.

தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே இந்திய, இலங்கை மீடியாக்கள் போர் குறித்த செய்திகளை விட்டு விட்டு வேறு செய்திகளுக்குப் போவது நல்லது.

இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய மார்க்கெட் உள்ளது. அதற்கான வாய்ப்புகளை அது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்றார் மேனன்.

இலங்கை தமிழருக்கு சம அந்தஸ்து: பிரதமர் வலியுறுத்தல்

June 10, 2009 by  
Filed under General


இலங்கை தமிழருக்கு சம அந்தஸ்து: பிரதமர் வலியுறுத்தல்

டெல்லி: இலங்கைத் தமிழர்களின் விருப்பமான சம அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கைக்கு அந்நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அந்த விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.manmohan-singh-40817

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தி்ல் கலந்து கொண்டு பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இலங்கைப் பிரச்சினையைப் பற்றி தீவிரமாகப் பேசினர்.

திருமாவளவன், கணேசமூர்த்தி போன்ற தமிழக எம்பிக்கள் மக்களவையில் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு செய்த குளறுபடிகளுக்கு பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவின் எம்பி சுஷ்மா ஸ்வராஜ், தமிழ் இலக்கியமான நன்னெறிப் பாடலை மேற்கோள் காட்டி, ஈழத்தில் சிந்தப்பட்ட தமிழர்களின் ரத்தத்துக்கு நியாயம் கேட்டார்.

இவற்றுக்கெல்லாம் பதிலளித்து நேற்று பிரதமர் பேசினார்.

அவர் கூறியதாவது:

இலங்கையுடன் இந்தியாவுக்கு பல நூற்றாண்டுகளாக உறவு உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளில் இந்தியா தீவிர பங்கெடுத்துள்ளது.

இதற்காக ஏற்கனவே ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இலங்கையில் இயல்புநிலை திரும்பவும், தமிழர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று குடியேறவும் இந்தியா இன்னும் நிறைய செய்ய விரும்புகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை, விடுதலைப்புலிகள் பிரச்சினையை விட பெரியது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் சம அந்தஸ்து கொண்ட மக்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களின் சட்டப்பூர்வ உணர்வுகளை நிறைவேற்றி வைக்க வேண்டிய மனோதிடத்துடன் இலங்கை அரசு செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானுடன்…

பாகிஸ்தானுடன் சமாதானத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஆனால் இதற்கு பாகிஸ்தானிடம் இருந்து சாதகமான பதில் வர வேண்டும். இரு கைகளும் தட்டினால்தான் ஓசை எழும்பும்.

தனது மண்ணில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத சக்திகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பை தாக்குதல் உள்பட இந்தியாவுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை இரு நாட்டு மக்களும் வரவேற்பார்கள்.

பாகிஸ்தானில் ஸ்திரமற்ற தன்மையும், கலவரமும் நிலவுகின்றன. இவை இந்தியா மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தெற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும், அமைதியும் நிலவாவிட்டால், இந்தியா தனது லட்சியங்களை எட்ட முடியாது. வறுமையும், அறியாமையும் இல்லாத தெற்கு ஆசியாவை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு.

இந்த கனவை நனவாக்க தேவையான சூழ்நிலையை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும். அதற்குரிய மனோதிடம், உறுதிப்பாடு, ராஜதந்திரம் ஆகியவற்றுடன் பாகிஸ்தான் தலைமை செயல்பட வேண்டும்.

சீனாவுடன்…

சீனாவுடன் நமக்கு பன்முக உறவு உள்ளது. சீனா, நமது ராணுவ கூட்டாளி. தீவிரவாதம், புவி வெப்ப மாற்றம் போன்ற பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. இந்த நல்லுறவு, இரு நாடுகளுக்கும் நல்லது.

சீனாவுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதே சமயத்தில், நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம்.

ஆஸ்திரேலியப் பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை கேள்விப்பட்டு திடுக்கிட்டேன். இவற்றில் சில தாக்குதல்கள், இன வெறியுடன் நடந்துள்ளன. இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய அரசுடன் நடக்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

நான் ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத்துடன் பேசினேன். அவரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்திய மாணவர்களின் பெற்றோர் அடையும் வேதனையை நான் குறைத்து எடை போட விரும்பவில்லை.

அதே சமயத்தில், ஆஸ்திரேலியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதை பத்திரிகைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இன வெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையை தெரிந்தோ, தெரியாமலோ பத்திரிகைகள் உருவாக்கி விடக்கூடாது.

தீவிரவாதத்துக்கு எதிராக…

தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது. அதுதான் மத்திய அரசின் கொள்கை. மும்பை தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்க எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு நிறுவனம் அமைத்ததுடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உளவு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

4 இடங்களில் தேசிய பாதுகாப்பு படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் அவை அமைக்கப்படும். பாதுகாப்பு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அனைத்து மாநில முதல்வர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.

நக்சலைட் தீவிரவாதமும் ஒடுக்கப்படும். தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், ஜனநாயக பாதைக்கு கொண்டுவரப்பட வேண்டும். கோரிக்கைகளை அடைய வன்முறை, வழி அல்ல.

ஓட்டுச்சீட்டு மூலம் கருத்து தெரிவிப்பதற்கு ஜனநாயகம் வாய்ப்பு அளிக்கிறது. போராளியாக இருந்தவர்கள் பலர் பின்னாளில் ஆட்சியாளர்களாக மாறி உள்ளனர். அதுதான் ஜனநாயகத்தின் அழகு.

நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்க இரு வித வழிமுறை பின்பற்றப்படும். நக்சலைட்டுகளை ஒடுக்கிக்கொண்டே, அவர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதுதான் அந்த வழிமுறை.

எந்த மாநிலத்தின் மீதும் பாரபட்சம் காட்டாமல், அனைத்து மாநிலங்களும் சம வளர்ச்சி பெற பாடுபடுவோம். பின்தங்கிய மற்றும் பழங்குடியின பிராந்தியங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

மத்திய, மாநில அரசுகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்படாவிட்டால், எந்த வளர்ச்சி திட்டமும் வெற்றி பெற முடியாது. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, தேசிய மேம்பாட்டு கவுன்சிலில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமானால், இவற்றை தடுக்க வேண்டும்.

இந்த விவாதத்தில் அத்வானி, முலாயம்சிங், லாலுபிரசாத் உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுகளில் ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்தது. இது நல்ல தொடக்கம். தேச நலன் சார்ந்த பிரச்சினைகளில் நாம் கட்சி வேறுபாடுகளை கடந்த உணர்வுடன் செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டால், 21-ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று அத்வானி கூறினார். இது நல்ல யோசனை. இந்தியாவுக்கென்று நீண்ட கால கனவு இருக்க வேண்டும்.

சபாநாயகரும், துணை சபாநாயகரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. ஸ்திரத்தன்மைக்காகவே மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதனால், வலிமையான, நிலையான அரசை கொடுக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார் பிரதமர்.

பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும்.

12 பேருடன் இந்திய விமானப்படை விமானம் மாயம்!

June 10, 2009 by  
Filed under General

12 பேருடன் இந்திய விமானப்படை விமானம் மாயம்!

ஷில்லாங்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக flightவிமானம் 6 வீரர்கள் உள்பட 12 பேருடன் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடுவானில் மாயமானது. இந்த விமானம் மலையில் வீழ்ந்து நொறுங்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த விமானம் போர் வீரர்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லப்பயன்படுத்தப்படும் வகையைச் சேர்ந்தது. நேற்று அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டம் மோகன்பாரி என்ற விமான தளத்தில் இருந்து புறப்பட்டது. அதில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானிகள் மொத்தம் 6 பேர் இருந்தனர்.

பின்னர், அருணாசல பிரதேச மாநிலம் மெச்சுகா என்ற இடத்தில் இறங்கியது இந்த விமானம். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு பொதுமக்கள் 6 பேரை ஏற்றிக்கொண்டு, ஜோர்காட் என்ற இடத்தை நோக்கி புறப்பட்டது.

அதன் பின் அந்த விமானத்தை பற்றிய எந்த தகவலும் இல்லை. ஜோர்காட் செல்லும் வழியில் அந்த விமானம் மலையில் மோதி நொறுங்கி கீழே விழுந்து இருக்கலாம் என்று விமானப் படையின் செய்தி தொடர்பாளர் பி.சாகு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த விமானம், அருணாசல பிரதேசம்-நேபாள மலைப்பகுதியில், அடர்ந்த காடுகளில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்று காலை மீட்பு பணியில் விமானங்களும், எல்லை பாதுகாப்பு படையினரும் ஈடுபடுகிறார்கள். விமானம் விழுந்ததாக கருதப்படும் இடம் மோசமான வானிலை கொண்ட இடமாகும். மீட்பு பணி மிக கடினமானது,” என்றார்.

நேற்று மாலை மற்றொரு விமானம், மீட்பு பணிக்காக சென்றது. என்றாலும், அடர்ந்த காட்டுப்பகுதியில் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. கால நிலையும் மிக மோசமாக இருந்ததால், அந்த விமானம் திரும்பி விட்டது.

போலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்!

June 9, 2009 by  
Filed under வணிகம்


போலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்!

டெல்லி:   சர்வதேச அளவில் இந்தியாவின் வர்த்தகத்தை முடக்க சீனா செய்து வந்த சதியை நைஜீரியா அம்பலமாக்கியுள்ளது. medicines

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்ற லேபிளுடன் ஏராளமான போலி மருந்துகளை தயாரித்து ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வந்திருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது நைஜீரியா.

கடந்த பல ஆண்டுகளாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India)’ என்ற முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்ததால், இதுவரை இந்த படுபாதகத்தை இந்தியாவே செய்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்தன.

ஆனால் கடந்த வாரம் நைஜீரியா அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்ஸி ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த மருந்துகள் அனைத்துமே சீனாவில் தயாரானவைதான் என்றும், அங்கிருந்துதான் இவை ஏற்றுமதியாகி வருகின்றன என்ற உண்மை இப்போது தெரிய வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் உடனடியாக தனது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்துடனும் பேச்சு நடத்தியுள்ளது.

மருந்துப் பொருள்களுக்கு நைஜீரியா நாடும் பிற ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பாலானவையும் முழுக்க முழுக்க வெளிநாடுகளையே நம்பியுள்ளன. இவற்றின் 60 சதவிகித மருந்துப் பொருள் தேவையை நிறைவேற்றுபவை இந்தியாவும் சீனாவும் மட்டுமே. ஆனால் இந்திய – சீன நிறுவனங்கள் தங்களுக்கு தரமான மருந்துகளைத் தருவதில்லை என நைஜீரியா பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தது.

சமீபத்தில் போலி மருந்துகள் சப்ளை செய்ததாக 30 இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை தடைசெய்துவிட்டது நைஜீரியா அரசு.

இந்த நிலையில், மற்ற ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்தியாவின் தயாரிப்பாக வரும் அனைத்து மருந்துகளும் போலியானவையாக உள்ளன என புகார் கூறப்பட்டது. உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கவும், சர்வதேச வர்த்தகத்தை முடக்கவும் சில நாடுகள் சதி செய்வதாக இந்தியா புகார் கூறி வந்தது.

இந்த நிலையில் நைஜீரியா அரசு அமைப்பே, இந்த மருந்துகளைத் தயாரித்து அனுப்பியது சீனாவே என்றும், அதில் வேண்டுமென்றே இந்தியாவின் லேபிளை ஒட்டி சதி செய்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த விவரங்களை உடனடியாக உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) போன்றவற்றிடமும் சமர்ப்பித்துள்ளது இந்தியா.

இந்தியாவின் ராணுவ உதவி மகத்தானது! – ரணில்


இந்தியாவின் ராணுவ உதவி மகத்தானது! – ரணில்

டெல்லி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவிகளை இந்தியாதான் செய்தது. இப்போதும் செய்து வருகிறது. Ranil

அசைக்க முடியாத வலுவுடன் இருந்த கடற்புலிகளை இந்தியாவின் உதவி இல்லாமல் எங்களால் ஒடுக்கியிருக்க முடியாது என இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கைக்கு எந்த வகையான ராணுவ உதவியையும் இந்தியா செய்யவில்லை. தற்காப்புப் பயிற்சியை மட்டுமே அளித்தோம் என பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என பலரும் கூறி வரும் நிலையில், அவை எல்லாமே பொய், இலங்கைக்கு முழுக்க முழுக்க உதவியது, ராணுவ ரீதியாக உதவியது இந்தியா மட்டுமே என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.

ராணுவ ரீதியாக இந்தியா சகல உதவிகளையும் செய்ததாகவும் ரணில் விலாவாரியாக விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக இந்தியாவின் டைம்ஸ் நவ் டிவிக்கு ரணில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு, இந்தியா ஆக்கப்பூர்வமாகவும், உறுதியாகவும் ஆரம்பத்திலிருந்தே உதவி வருகிறது. விடுதலைப் புலிகளின் பலத்தை ஒடுக்கியதில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது.

நான் பிரதமராக இருந்த காலம் முதலே இந்தியாவும், வளர்ச்சி அடைந்த பிற நாடுகளும் எங்களுக்கு உதவி வந்து கொண்டுள்ளன. முன்பு சில தடைகள் இருநதன. இருப்பினும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்னர் ராணுவ உதவிகளைப் பெற எங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் போனது.

உதாரணத்திற்கு, இலங்கை கடற் பகுதியை தங்கள் வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் கப்பற்படை பலத்தை நாங்கள் இந்தியாவின் உதவியுடன்தான் ஒடுக்கினோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவி இல்லாமல் கடற்புலிகளை நாங்கள் ஒடுக்கியிருக்க முடியாது.

இந்தியா தவிர அமெரிக்கா போன்ற மேலும் சில நாடுகளும் உதவின. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை நாங்கள் முறிக்க முடிந்தது.

இதுதவிர உளவுத் தகவல்கள் பரிமாற்றத்திலும் எங்களுக்கும், இந்தியா போன்ற பிற நாடுகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இப்போதும் கூட அது தொடருகிறது. எங்களுக்குத் தேவையான உளவுத் தகவல்களைத் தருவது, பயிற்சிகள் உள்ளிட்டவற்றை நாங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெற்று வருகிறோம்.

இந்தியாவுடன் உளவுத் தகவல் பரிமாற்றம் தொடர்பாக நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. பல முக்கிய தகவல்களை இந்திய அரசு எங்களது படைகளுக்கு வழங்கியுள்ளது.

வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கான அதி நவீன ரேடார்களையும் இந்திய அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார் ரணில்.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக இந்தியா செய்த தாராள உதவிகள் இன்று அப்பாவித் தமிழர்களைத்தான் அதிகம் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரணிலின் பேட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது செல்போன் தேசம்!

May 10, 2009 by  
Filed under Cartoon

இது செல்போன் தேசம்!

இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் செல்போன் மோகத்தை இதைவிட சிறப்பாக சித்தரிக்க முடியுமா தெரியவில்லை…

julian_penapai_ec

-ஜூலியன் பேனபய், ருமேனியா

Related Posts with Thumbnails