BREAKING NEWS
Search

சுயமரியாதை உள்ளவர்கள் சினிமாவில் இருப்பது கஷ்டம்! – சூப்பர் ஸ்டார்

எவ்வளவு பணம் இருந்தாலும் சுயமரியாதை உள்ளவர்கள் சினிமாவில் இருப்பது கஷ்டம்! – சூப்பர் ஸ்டார்

16 Vayathinile Trailer Launch (11)

சென்னை: சுயமரியாதை அதிகம் உள்ளவர்கள் சினிமாவில் இருப்பது கஷ்டம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.

ரஜினி, கமல் நடித்த 16 வயதினிலே படம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.

விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, பாக்யராஜ் என திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்றனர்.

படத்தின் ட்ரைலரை ரஜினியும் கமலும் சேர்ந்து வெளியிட்டனர். விழாவில் ரஜினி பேசியதாவது:

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ’16 வயதினிலே’ பங்ஷன்ல கலந்துக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்தோட புரொட்யூசர் அப்போ கமல்கிட்ட ரொம்ப நெருக்கமா இருப்பாங்க, அது என்னமோ தெரியல என்கிட்ட அவ்ளோ நெருக்கமா இருக்கமாட்டாங்க. என்கிட்ட அவர் படம் தயாரிக்கணும்னு வந்து கால்ஷீட் கேட்டதே கெடையாது.

திடீர்னு ஒரு 15 நாளைக்கு முன்னால ராஜ்கண்ணு சார் எனக்கு போன் பண்ணிருக்காங்கன்னு சொன்னாங்க.., சொன்ன உடனே அப்படியா உடனே அவரை வரச்சொல்லுங்க, முதல்ல நான் அவரப் பார்க்கணும்னு சொல்லி அவரை நான் மீட் பண்ணினேன்.

அவர் எப்படிப்பட்ட மனிதர்ங்கிறதுக்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்றேன். நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கணும்.

கமலோட ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ரிலீஸ் பிரச்சனை வந்தப்போ அவர் நான் ’16 வயதினிலே’ படத்தை சினிமாஸ்கோப்ல புதுப்பிச்சி ரிலீஸ் பண்ணப் போறேன். அதுல வர்ற பணத்தையெல்லாம் கமலுக்கு கொடுக்கப் போறேன்னு சொன்னார். அவரே க‌ஷ்டத்துல்ல இருக்கிறப்போ கமலுக்கு பிரச்சனை வந்தவுடனே உதவி செய்ய முன் வந்த அந்த நல்ல குணத்தைப் பார்த்து அப்போதே நான் அவரை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஆனா அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் அது முடியாமப்போச்சு. அப்படிப்பட்டவர் என்னை மீட் பண்ண வந்த உடனே ‘சொல்லுங்க சார் நான் என்ன பண்ணனும்னு’ கேட்டேன்.

DCIM (120)

உடனே இந்த ’16 வயதினிலே’ ட்ரெய்லர் பங்ஷன்ல நீங்க கலந்துக்கணும்னு சொன்னார். பெரிய பணக்கார குடும்பத்திலிருந்து பணத்தோட சினிமாவுக்குள்ள வந்து ரொம்ப சுயமரியாதையோட படம் எடுக்க வந்தவர். கர்வம்னு சொல்ல முடியாது. ஒரு கண்ணியமான ஆள் அவர். 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ராஜ்கண்ணு, அன்றைக்கே சொந்தமாக ரிலீஸ் செய்தார்.

பதினாறு வயதினிலே படத்தை ரூ.5 லட்சம் செலவில் அவர் தயாரித்தார். அப்போது ரூ.5 லட்சம் என்பது பெரிய தொகையாக இருந்தது. படத்தை யாரும் வாங்காததால், அவரே ரிலீஸ் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவியும் பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். பதினாறு வயதினிலே படத்தை அடுத்து, ராஜ்கண்ணு நினைத்தால் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் துணிச்சலாக புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தை எடுத்து வெற்றி பெற்றார்.

ஒருத்தர்கிட்ட பணம் எவ்ளோ இருந்தாலும், சுயமரியாதை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா அவங்க சினிமாவுல இருக்கிறது ரொம்ப கஷ்டம் அப்படிப்பட்டவர்தான் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.

அவர்கிட்ட கஷ்டப்பட்டு ஒரு படத்தை ரிலீஸ் பண்றீங்க? இந்தப்பணம் யாருக்குப் போய் சேருது?ன்னு கேட்டேன். எனக்குத்தான்னார் அவர்.

அப்போ நான் கண்டிப்பா இந்த விழாவுக்கு நான் வர்றேன்னு சொன்னேன். எல்லோருக்கும் கஷ்டகாலம் வரும் போகும். அதே மாதிரி இந்தப் படத்தோட உங்களோட கஷ்டகாலமெல்லாம் முடிஞ்சுப் போச்சு, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையணும், ரசிகர்கள் இந்தப்படத்தை வெற்றியடைய வைக்கணும். பத்திரிகையாளர்களும் உதவணும்,” என்றார்.
-என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “சுயமரியாதை உள்ளவர்கள் சினிமாவில் இருப்பது கஷ்டம்! – சூப்பர் ஸ்டார்

  1. saktheeswaran

    கடந்த காலம் ,நிகழ்காலம் மட்டுமல்ல எதிர் காலத்திலும் நீங்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார்
    சூப்பர் மனிதர்

  2. kumaran

    தலைவர் சுயமரியாதை உள்ளவர் , ஜெயலலிதாவை ஒரு கை பார்ப்பார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *