BREAKING NEWS
Search

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

perarivalan-murugan-santhan

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து மூவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4- ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படது.

rajivm

இதில், முருகன், சாந்தன் பேரரரிவாளன் ஆகியோரின் துக்கு தண்டணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும்,  3 பேரை விடுதலை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.




3 thoughts on “பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  1. குமரன்

    சதாசிவம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி ஏற்றபின்னர் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப் பட்டது. பேரறிவாளன் தான் குற்றமற்றவர் என்று சொல்வதை நீதிமன்றம் மறு ஆய்வு செய்யவேண்டும்.

    இனிமேலாவது தூக்குத் தண்டனை இல்லாத படி சட்டம் அமையும் என எதிர்பார்ப்போம். ஆனாலும், மற்றொரு பக்கம் மனித உயிருக்கு சிறிதும் மதிப்புத் தராத தீவிரவாதிகளை எப்படிக் கையாள்வது என்ற கவலையும் இருக்கிறது.

  2. சாணக்கியன்

    தான் வாங்கிக் கொடுக்கப்போகும் பற்றியால் மாபெரும் விபரீதமும் தவறும் நடக்கப்போகிறது என்று தெரிந்திருந்தால் பற்றி வாங்கி கொடுத்திருப்பாரா பேரறிவாளன்? இல்லவே இல்லை. மரண தண்டனை இரத்துச் செய்ததே மிகவும் சரியானது. மிக்க மகிழ்ச்சி.

  3. Krishna

    விடுதலை புலிகளின் அழிவிற்கான ஆரம்பம் ராஜீவ் படுகொலையில் தான் வித்திடப்பட்டது. அரசியல் கொலைகளுக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது. அன்று நடந்த படுகொலையில் ராஜிவைத்தவிர 16 அப்பாவிகள் உயிர் இழந்தார்கள். அவர்கள் ஈழ விவகராத்தில் ஏதாவது தவறு செய்தார்களா? அவர்கள் ஏன் இறக்க வேண்டும்? இந்த தீர்ப்பு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு ஏ்ற்பட்ட தாமதம் காரணமாக தான் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவே நிச்சயம் ஒரு முன் மாதிரியாக இருக்காது. நாட்டின் தலைவர்களை கொல்வதற்கு இனி யாருக்கும் தைரியம் வராது என்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *