BREAKING NEWS
Search

‘போட்டோ எடுத்துக்கணுமா… வாங்க’! – சூப்பர் ஸ்டார் தரும் ‘ஸ்வீட் ஷாக்’!

‘போட்டோ எடுத்துக்கணுமா… வாங்க’! – சூப்பர் ஸ்டார் தரும் ‘ஸ்வீட் ஷாக்’!

ன்னைப் பார்க்க வரும் அனைவருக்குமே இன்ப அதிர்ச்சி தந்துவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

முன்பெல்லாம், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தயங்கிக் கொண்டே கேட்பார்கள் வருகிற விருந்தினர்கள். அவரும் போஸ் தருவார்.

இப்போது அப்படியில்லை. வருகிற அனைவருமே தன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஏக ஆர்வத்துடன் இருப்பது அவருக்கும் தெரியும்.

எனவே வந்தவர்களை, வரவேற்கும் ரஜினி, அவர்கள் கேட்பதற்கு முன்பே, ‘போட்டோ எடுத்துகணுமில்ல.. வாங்க” என்று உடன் நிற்க வைக்க, ஏக சந்தோஷத்துடன், ‘சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்’ என வாய்விட்டு அடுத்தவர்களிடம் பெருமை பேசுகிறார்கள்!

ஒண்ணுமே புரியல உலகத்துல… – தலைவருக்குப் பிடித்த பாடல்கள்

ப்போதெல்லாம் ஓய்வு நேரத்தில் ரஜினிக்கு பிடித்தது நண்பர்களுடன் பேசுவது… பிடித்த இசை கேட்பது.

நண்பர்களைச் சந்தித்துப் பேச தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிடுகிறாராம். தன் எண்ணங்களை பகிரங்கமாக சொல்வதால் எழும் சர்ச்சைகள், பரபரப்பைத் தவிர்க்கத்தான் இந்த பேச்சு. பழைய நண்பர்கள், மூத்த ரசிகர்களும் அவ்வப்போது சந்திக்கிறார்.

ஆரம்ப காலத்திலிருந்தே இசையில் அவருக்கு அலாதி ஆர்வம். தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களிலெல்லாம் பழைய பாடல்களை தன் குரலிலேயே பாடுவது போல காட்சிகள் கட்டாயம் இருக்கும்.

ரஜினியின் குரல் பற்றி மறைந்த இயக்குநர் ராஜசேகர் மிகவும் சிலாகிப்பார்.

பின்னாளில் மன்னன் படத்தில் இளையராஜா வற்புறுத்தி பாட வைத்தார். அட்டகாசமான கிக் பாட்டு அது (லதா ரஜினியை பாட வைத்தவரும் ராஜாதான்…). ஆனால் அதற்குப் பிறகு பாடவில்லை.

இப்போது அவர் அதிகமாகக் கேட்பது கண்ணதாசன் எழுதி சந்திரபாபு பாடிய பாடல்களைத்தான்.

பாபா படத்தில்கூட ஒண்ணுமே புரியல உலகத்திலே… என்ற பாடலை பாடியபடி ரஜினி நடந்து வருவதுபோல ஒரு காட்சியிருக்கும்!

போயஸ் கார்டனில் எளிமையாக திருமண நாளைக் கொண்டாடிய ரஜினி

ந்த ஆண்டு தனது 31-வது திருமண நாளை போயஸ் கார்டனில் உள்ள தனது பிருந்தாவனத்தில் கொண்டாடினர் ரஜினியும் – லதா ரஜினியும். மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் சூழ மதிய விருந்துடன் இந்த கொண்டாட்டம் நடந்தது.

இதுகுறித்து பின்னர் தனது ட்விட்டரில் இப்படி குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா: Laid back Sunday after ages, going to spend the noon with the anniversary couple 🙂 Appa n Amma 🙂 31 years wow!  I love u both.

ரஜினி – லதா திருமண நாளையொட்டி ரசிகர்களின் வாழ்த்துகள் இணையதளங்களிலும் நேரிலும் குவிந்தன.

இதற்கு நன்றி கூறி சௌந்தர்யா வெளியிட்ட ட்விட்டர் இது: Dear guys. Thanks for all the wishes. Will convey to my parents!! They are the best couple ever 🙂 Off to Hong Kong onwork tonight with my team. Work progressing well, shooting this March 2nd week in UK 🙂 God is great!”

-என்வழி ஸ்பெஷல்




One thought on “‘போட்டோ எடுத்துக்கணுமா… வாங்க’! – சூப்பர் ஸ்டார் தரும் ‘ஸ்வீட் ஷாக்’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *