BREAKING NEWS
Search

கோச்சடையான்.. முதல் நாள் முதல் காட்சி… வாழ்வில் மறக்க முடியாத சினிமா அனுபவம்!!

கோச்சடையான்.. முதல் நாள் முதல் காட்சி…  வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!!

Rajinikanth Kochadaiyaan Movie Latest Photos, Deepika Padukone Hot Photos in Kochadaiyaan Movie

ன்று நேற்றல்ல… போக்கிரிராஜா படம் வெளியானதிலிருந்து தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தவன் நான். அந்த நாளிலேயே அவரை தலைவர் என்றுதான் அழைத்துப் பழக்கம்.

அந்தத் தலைவரின் கோச்சடையான் படத்தை நேற்றும் வழக்கம் போல, முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அதுவும் குடும்பத்துடன்.

கோச்சடையான் பனியன் அணிந்து என் மகளும் மகனும் உடன் வர, நானும் அவர்களுடன் சேர்ந்து கோச்சடையான் பனியன் அணிந்து மனைவியுடன் காசி திரையரங்குக்குக் கிளம்பினேன்.

கிளம்புவதற்கு முந்தைய 12 மணி நேரத்தில் ஒரு வினாடி கூட நான் தூங்கவே இல்லை. முன் தினம் மாலை தலைவர் ரசிகர்களுடன் உதயத்தில் முன்னேற்பாடுகளில் பங்கேற்றுவிட்டு, டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு (தம்பி முத்துராமனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்) வீடு திரும்பினால், குடும்பமே என்னை எதிர்ப்பாத்துக் காத்திருக்கிறது, டிக்கெட் வாங்கிட்டேனா என்பதை உறுதி செய்து கொள்ள. அப்போது எனக்குள் வந்து போன தலைவர் டயலாக்: “நாமளே (பெரிய) பயித்தியம்… இவங்க நமக்கு மேல (பாபா)”!

அன்று நள்ளிரவே எல்லோரும் குளித்து தயாராகி, சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள். நான் அடுத்த நாளுக்கான செய்திகளை முன்கூட்டியே தயார் செய்து வைக்கத் தொடங்கினேன்.

இடையில், வெளிநாடுகளில் படம் பார்த்துவிட்ட ரசிக நண்பர்கள் படத்தின் வெற்றிச் செய்திகளைச் சொல்லச் சொல்ல, அவற்றை சமூக வலைத் தளங்களில் பதிந்தபடி, கட்டுரைகளையும் தயார் செய்துவிட்டேன். அதிகாலை 5 மணி.

அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி காசி தியேட்டர் நோக்கிக் கிளம்பினால், கத்திப்பாராவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. அதிகாலை 5.45-க்கு நெரிசல் என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது. நல்ல வேளை, கோச்சடையானால் வந்த நெரிசல் அல்ல அது.

காசி தியேட்டருக்குப் போனால்… ஆஹா.. என்ன ஒரு மகத்தான ரசிகர் கூட்டம். நாட்டின் முக்கிய சேனல்கள் எல்லாம் அங்கேதான் குழுமியிருந்தன, ரசிகர் கொண்டாட்டங்களை ரசித்துப் படமாக்க. கிட்டத்தட்ட எல்லோருமே வித விதமான கோச்சடையான் டி ஷர்ட்களில் வந்திருந்தனர்.

பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, திருஷ்டி தேங்காய், பூசணிக்காய் உடைப்பு, தலைவரை வாழ்த்தி உயிரின் அடித்தளத்திலிருந்து எழுந்த முழக்கங்கள்… எல்லாமே என் மகன் மகளுக்கு புது அனுபவம். இப்போதுதான் அவர்களை முதல் நாள் முதல் காட்சிக்கு அழைத்துச் செல்கிறேன். அவர்கள் சிறிது நேரத்துக்குள் ரசிகர் வெள்ளத்தில் கரையத் துடிக்கிறார்கள். இருந்த இடத்திலிருந்தபடி தலைவர் வாழ்க என உரக்க வாழ்த்த ஆரம்பித்துவிட்டார்கள். தலைவர் படம் பார்ப்பதற்காகவே ஒருவாரமாக என் மகள் விசில் பயிற்சி வேறு எடுத்துக் கொண்டிருந்தாள்!!

நுழைவாயில் திறந்தது.

திருப்பதியில் பெரும் கூட்டத்துடன் கோவிந்தா என முழங்கியபடி செல்லும் பக்தர்கள் மாதிரி, தலைவா… எங்கள் கோச்சடையா.. என்ற கோஷம் காதைப் பிளக்க சிலிர்ப்புடன் உள்ளே நுழைந்து சீட்டைப் பிடித்தோம். ஆனால் அதைப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அடுத்தடுத்த நிமிடங்களில் உணர்ந்தோம். யாராவது உட்கார்ந்தால்தானே இருக்கை வேண்டும்… அத்தனை பேரும் தங்கள் திரைக் கடவுளை நின்றபடியே விசிலடித்தும் கும்பிட்டும் ஆராதித்தும் தங்கள் அன்பை வெள்ளமாக வழிந்தோடவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

20140523_071552

நண்பர்களே…என் இத்தனை ஆண்டு ரசிக அனுபவத்தில் இப்படி ஒரு உணர்ச்சிப் பெருக்கான ரசிகப் படையைக் கண்டதே இல்லை. பத்து வயது சிறுவனிலிருந்து 60 வயது ‘இளைஞர்’ வரை, தலைவரைக் கொண்டாடிய விதம் இருக்கே… Rajini sir.. You are ‘The immortal’..!

எத்தனை எத்தனை கிண்டல்கள், கேலிகள், நக்கல்கள், வசை மொழிகள்… இத்தனை எதிர்மறை விமர்சனங்களோடு உலகில் வேறு எந்தப் படமாவது வந்திருக்குமா? நிச்சயம் இல்லை. ஆனால் இன்று அத்தனைக்கும் வட்டியும் முதலுமாய் குவியும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் வெற்றி முழக்கங்களையும் கேட்க, படிக்க, பார்க்க.. கண்களில் சந்தோஷ வெள்ளம்!

முதல் பாதியில் செட்டிலாகி, இரண்டாம் பாதி தொடங்கியபோது, நாங்கள் கோச்சடையானிடம் எங்களை இழந்திருந்தோம்.

வானுக்கும் பூமிக்கும் ஈசனின் அவதாரமாய் விஸ்வரூபம் எடுத்து நின்ற மாவீரன் கோச்சடையானைப் பார்த்த கணத்திலிருந்து, அந்த கடைசி எழுத்து வரும்வரை மனம் என் வசமில்லை. திரும்பிப் பார்த்தால் என் மனைவி, மக்கள், உடன் வந்த நண்பர்கள் அத்தனைபேரும் ஒரு தெய்வீக உணர்வில் கலந்தவர்கள் மாதிரி உணர்ச்சி மயமாய் படத்தில் ஐக்கியமாகி இருந்தார்கள்.

20140523_093846
தலைவர் ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது..’ என்ற பாடலைத் தொடங்கும்போது, அந்தத் திரையரங்கின் கூரை பிய்ந்து சாலையில் விழுந்துவிடுமோ எனும் அளவுக்கு உணர்ச்சி முழக்கம்!

கோச்சடையானின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நேரம். அவரது ஒரு மகன் ஓடி வந்து தந்தையின் நெற்றியில் முத்தமிட்டு விடை தரும் காட்சி.. அரங்கில் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர். ஒரு அனிமேஷன் படக்காட்சிக்கு கண்ணீர் வடித்தது இதுவே முதல் முறை.

ஈரேழு உலகிலும் எவருக்கும் வாய்க்காத அதிசய பேரன்பு இது நண்பர்களே…

எத்தனைப் பேர் இதைக் கவனித்திருப்பீர்கள் தெரியவில்லை..

தமிழனின் எதிரி நாட்டுக்குப் பெயர் கலிங்காபுரி.. இந்த கலிங்காபுரி என்பது வேறு எதுவுமில்லை, சிங்களவனின் பூர்வீகமான கலிங்கம். அந்த நாட்டு மன்னனின் பெயர் ராஜ மகேந்திரன் (இதற்கும் விளக்கம் வேண்டுமா?). இந்த நாட்டையும், அதன் மன்னனையும் நிர்மூலமாக்குகிறார் மாவீரன் ராணா!

படம் பார்க்கப் பார்க்க, அதுவும் அந்த இரண்டாம் பாதியில், படத்தின் ஈர்ப்பு, அதை ரசிகர்கள் கொண்டாடிய விதம், கண்களை ஈரமாக்கின… ஒரு எப்எம்காரர் படத்தின் வெற்றி குறித்து கேட்டபோது, பேச வார்த்தைகள் இல்லாமல் தழுதழுத்தது நாக்கு. அத்தனை மகிழ்ச்சி.. அத்தனை ரசிகர்களும் ஜெயித்தது போன்ற உணர்ச்சி!

‘ஏற்கெனவே தெரிந்த உண்மைக்கு தெளிவுரை எதற்கு’ என்று படத்தில் தலைவர் ரஜினி சொல்வது போல, இந்த பெரும் வெற்றிக்கு தனி தெளிவுரை தேவையில்லைதான்… அதிர்கின்றன அரங்குகள், உற்சாகத்தில்!

இந்தப் படத்தைப் பார்க்காமலேயே குறைசொன்ன நண்பர்களே, போங்கப்பா.. போய் கோச்சடையான் பாத்து சந்தோஷப்படுங்க!

ரஜினி எப்போதும் நமது பெருமைதான் என்பதை நிரூபித்திருக்கிறது கோச்சடையான்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்




9 thoughts on “கோச்சடையான்.. முதல் நாள் முதல் காட்சி… வாழ்வில் மறக்க முடியாத சினிமா அனுபவம்!!

  1. raghul

    அப்படியே உண்மையான ரசிகரின் மன பதிவுகள்..
    பார்த்தேன், ரசித்தேன் .. மெய் சிலிர்ந்தோம்.( குடும்பத்துடன்) ..
    வட இந்திய விமர்சனங்கள் பாரபட்சம்…
    என் இந்த படத்துக்கு promotion இல்லை? – enthiran மாதிரி..
    விஜய் டிவி media partner – ஆக இருந்திருந்தால் சூப்பர் ஆக இருந்திருக்கும்…
    படம் வெற்றி குறித்து அறிய ஆவல்…..

  2. ganesh

    Sir,
    please dissuade thalivar from attending mody function .kalaigar news channel has started playing with thalaivar in this issue.

  3. Sanjai

    Plz add the honest box office record collection I’m waiting thalaivaa breaking the all box office record plz add honest box office collections thank you

  4. Marthu

    வினோவோட ஸ்பெசல் என்னன்னா ந்ம்ம பேசநெனச்சதெல்லாம் அவரே பேசிவிடுவார்

  5. micson

    தலைவரின் பயங்கர ரசிகன் .இப்போது வினோ உங்களின் எழுத்துக்கும் .

  6. r.v.saravanan

    சூப்பர் வினோ எனக்கு விசிலடிக்க தோன்றுகிறது

  7. Manoharan

    மூன்று வருட மன உளைச்சலுக்கு அருமருந்தாக வந்திருக்கிறது கோச்சடையான்…லிங்கா முடிந்து மீண்டும் இதே அனிமேஷனில் ரானா வரவேண்டும் …..பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *