BREAKING NEWS
Search

கபாலி… புதுசா என்ன சேதி?

கபாலி… புதுசா என்ன சேதி?

11221703_1241416952612513_1910783473448070774_n

அட்டகத்தி, மெட்ராஸ் நடிகர்கள்தான் முழுக்க…

னது அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் டீமை விடாமல் உடன் அழைத்துக் கொண்டு செல்கிறார் இயக்குநர் பா ரஞ்சித். தலைவர் ரஜினி நடிக்கும் கபாலி படத்திலும் 90 சதவீதத்துக்கும் மேல் இந்த இரு படங்களில் நடித்தவர்கள்தானாம்.

கபாலியில் மைம் கோபி!

மைம் கோபியை தெரியுமா…. மெட்ராஸில் வில்லன் ரோல். அடுத்து மாரியில் தனுஷுக்கு வில்லனாக வருவார். அவர் கபாலியிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

kishore

கிஷோரும் உண்டு!

பாலியில் சூப்பர் ஸ்டாருடன் முதல் முறையாக இணையவிருப்பவர் கிஷோர். ஆடுகளம், ஹரிதாஸ் போன்ற படங்களில் தனித்துவம் மிக்க நடிப்பைத் தந்தவர்.

மலேசியா ஷூட்டிங் நாட்கள் குறைப்பு

லேசியாவில்  40 நாட்கள் கபாலி ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலேயே தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடக்கும் எனத் தெரிகிறது. எனவே மலேசியாவில் ஷூட்டிங் நடத்தும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.




One thought on “கபாலி… புதுசா என்ன சேதி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *