BREAKING NEWS
Search

சினேகா – பிரசன்னாவுக்கு சூப்பர் ஸ்டார் தந்த திருமணப் பரிசு!

சினேகா – பிரசன்னாவுக்கு சூப்பர் ஸ்டார் தந்த திருமணப் பரிசு!


புதுமணத் தம்பதிகள் சினேகாவும் – பிரசன்னாவும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான சந்திப்பு.

ரஜினியைச் சந்திப்பதென்றால், சக கலைஞர்களும் கூட ரசிக மனநிலைக்கு வந்துவிடுவது வழக்கம்.

சினேகாவும் பிரசன்னாவும் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன…

கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் சினேகாவும் பிரசன்னாவும். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது அதன் பிறகு திரையுலகினருக்காக நடத்தப்பட்ட பிரத்தியேக வரவேற்பில் பங்கேற்க முடியவில்லை.

கோச்சடையான் பணிகளில் அவர் பிஸியாக இருந்தார். ரஜினி வரவில்லையே என்ற ஏமாற்றம் புதுமணத் தம்பதிகளுக்கு. ஆனால் தலைவர் இதை உணராதவரா என்ன?

புதன்கிழமை நள்ளிரவு ஹாங்காங்கிலிருந்து திரும்பிய ரஜினி, அடுத்த நாள் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

இருவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ரஜினி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வு சினேகா – பிரசன்னா இருவரையுமே மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், “இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “சினேகா – பிரசன்னாவுக்கு சூப்பர் ஸ்டார் தந்த திருமணப் பரிசு!

  1. KUMARAN

    தாயின் ஆசீர்வாதம் போன்றது தலைவரின் ஆசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *