BREAKING NEWS
Search

கும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்!

கும்கி விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்!


கும்கி ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பார் என சில நாட்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஆனால், கடைசி நேரத்தில்  ரஜினி வரமாட்டார் என்று தகவல் தெரிவித்தனர். அழைப்பிதழிலோ, கமல்ஹாஸன் முதல் சிடியை வெளியிட, சூர்யா பெற்றுக்கொள்வார் என அச்சிடப்பட்டிருந்தது.

ரஜினியைப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்த நம்மைப் போன்ற பலருக்கும் பெருத்த ஏமாற்றம்.

ஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கை… ‘அழைப்பிதழில் பெயர் வேண்டாம். நான் எப்ப வேணாலும் வந்துடுவேன்,’ என்று பிரபுவிடம் அவர் சொல்லியிருப்பார் என்று நாம் நினைத்தது வீண் போகவில்லை. (பிரபு மகன் விக்ரம் பிரபுதான் படத்தின் ஹீரோ)

இன்று விழா துவங்கும் முன்பே, சத்யம் அரங்கில் எந்த சந்தடியும் இல்லாமல் அமைதியாக வந்து… ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார் தலைவர். தான் வரப்போவதை பிரபுவுக்கு மட்டும் தெரிவித்திருந்தாராம்!

அவரை முதலில் யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. ஆனால் ரஜினி சார் வந்துவிட்டார் என்று தெரிந்த கணமே, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த பிரபுவும், இயக்குநர் லிங்குசாமியும் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்று நடுநாயகமாக அமரவைத்தனர்.

‘ரொம்ப நன்றிண்ணே..’ என பிரபு நெகிழ்வுடன் கூற, ‘இந்த நிகழ்ச்சிக்கு போகாம இருக்கக் கூடாதுன்னு கடைசி நேரத்தில் தோன்றியது.. அதான் வந்துட்டேன்…’ என்று தலைவர் கூற… பரவசமான காட்சி அது!

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “கும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்!

  1. kumaran

    தலைவர் கோட்டைக்கு வந்தார்னா தமிழகமே கொந்தளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *