BREAKING NEWS
Search

லிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்

லிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்

Lingaa-Movie-Superhit-Poster-800x562

டந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா வெளியான மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இனிமேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினியின் படம்தான் வரவேண்டும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

லிங்கா வெளியான தினத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் ஒருசிலர் மட்டும் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிசல்ட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். பொய்யான சில தகவல்களை கூறி லிங்கா படம் படுதோல்வி அடைந்துவிட்டதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் பெரிய பெரிய அரசியல் முதலைகளையே தனது மவுனத்தால் வென்ற சூப்பர் ஸ்டார், அமைதியாக நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தார்.

முதல் நாள் பரவிய வதந்தி இரண்டாவது நாள் கொஞ்சம் வலுவடைந்தாலும் மூன்றாவது நாள் அடியோடு நொறுங்கிப் போனது என்பதுதான் உண்மை. மூன்றே நாட்களில் லிங்காவின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் வெளிவந்ததும் புரளியை கிளப்பிய புல்லுருவிகள் காணாமல் போயினர். நெகட்டிவ் விமர்சனம் செய்த ஊடகங்கள் அவசர அவசரமாக தாங்கள் முன்பு போட்ட விமர்சனங்களை டெலிட் செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாசிட்டிவ் விமர்சனங்களை எழுதத் தொடங்கி விட்டனர். அதுதான் சூப்பர் ஸ்டாரின் பவர்.

தன்னுடைய படத்தை நெகட்டிவ்வாக எழுதியதற்காக கோபப்படாமல் அமைதியாக இருந்து தான் ஒரு நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். நேற்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாளாக இருந்தும் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதில் இருந்தே படம் சூப்பர் ஹிட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதுபோல், லிங்கா எதிர்ப்பாளர்கள் முதலில் வென்றது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் வென்றது சூப்பர் ஸ்டார் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கைதான். கடைசியாக அவருடைய லிங்கா படத்தில் வரும் பாடல்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது.

‘உண்மை ஒருநாள் வெல்லும்,
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயே,
பொய்கள் புயல் போல் வீசும்
உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்…..!!”

நன்றி: இந்தியாகிளிட்ஸ்
7 thoughts on “லிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்

 1. arulnithyaj

  மீள் பதிவுக்கு நன்றி வினோ..ஆனால் இன்னும் என்வழி விமர்சனம் வரவில்லை..உங்களது FDFS அனுபவம் வரவில்லை ..உங்கள் மொழியில், எழுத்தில் படிக்க ஆர்வமாக இருக்கின்றோம்..எப்பொழுது வினோ..

 2. srikanth1974

  நேற்றும் சொன்னேன்
  இன்றும் சொல்கிறேன்
  நாளையும் சொல்வேன்

  அவசரடிக்கு ரங்கா
  அதிரடிக்கு லிங்கா

 3. M.MARIAPPAN

  நன்றி வினோ ஆனால் என்வழி விமர்சனம் வரவில்லை படத்தை பத்தின பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வரவில்லை . உடன் அப்டேட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் தலைவரின் VERIYAN .

 4. M. MANO

  நாங்கள் அனைவரும் உங்கள் விமர்சனத்திற்கு காத்துகொண்டு இருக்கிறோம்
  அண்ணா

 5. jahafar

  போட்ரூர்வோர்கள் போட்ராடும் இதில் என்ன ஒரு பெரிய விசயம் தெரியுமா
  தட்ஸ் தமிழ் பத்திரிகை தினமலர் பத்திரிகை பார்பனர் பத்திரிகை வேண்டும் என்றெ விமர்சனம் கொடுத்து பார்த்தன்கல் ஒன்றும் பருப்பு எடு பட வில்லை அமைதீயஹா அமுங்கி விட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *