BREAKING NEWS
Search

ஜூலை 1-ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி… தியேட்டர் எண்ணிக்கையில் புது சாதனைப் படைக்கிறது!

ஜூலை 1-ல் புது சாதனைப் படைக்க வருகிறது கபாலி!

thalavar kabali

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் என்ற எல்லை தாண்டி, சர்வதேச அளவில் எதிர்ப்பாப்புக்குரிய படமாகிவிட்ட தலைவரின் கபாலியின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி மூன்றுவிதமான கெட்டப்புகளில் வருகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மலேசியாவின் டான் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

rajini-young-5

நிஜத்தில் 65 வயதாகும் ரஜினி, அந்த வயதுக்கேற்ற ஒரு கெட்டப்பில் வருகிறார். இன்னொரு கெட்டப்பில் 30 வயது இளைஞனாகத் தோன்றி அசத்தவிருக்கிறார்.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, இதுவரை தமிழ் திரையில் தோன்றியிராத பல கீழை நாட்டு நடிகர்கள் நடிப்பது. ரஜினிக்கு பிரதான வில்லனாகத் தோன்றும் வின்ஸ்டன் சாவ் தைவான்காரர். இவருடன் பல மலேசிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் வெளியான கபாலி படத்தின் டீஸர் செம ஹிட். இந்தியாவைப் பொருத்தவரை மிக அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீசர் கபாலிதான். உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் 17.5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டதும் கபாலி டீசர்தான்.

இதுவரை தமிழ்ப் பட டீசர்களை வெளிநாட்டு சினிமா விமர்சகர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் கபாலியின் டீசருக்கு கிடைக்கும் பார்வைகள், விருப்பங்கள் அவர்களையும் ஈர்த்துள்ளது. ஏராளமான வெளிநாட்டு விமர்சகர்கள் பார்த்து, தங்களை கருத்துகளை விமர்சனமாக யுட்யூபில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு தமிழ்ப் படத்துக்கு இத்தனை வெளிநாட்டவர்கள் விமர்சனங்கள் பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை.

படத்தின் இசை வெளியீட்டுத் தேதி மற்றும் ரிலீஸ் தேதியை தேர்தல் முடிந்த பிறகு அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ரிலீஸ் தேதி மட்டும் வெளியாகியுள்ளது. ஜூலை 1-ம் தேதி உலகெங்கும் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியாகிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சீன மொழியிலும் இந்தப் படத்தை டப் செய்துள்ளார் கலைப்புலி தாணு. சீனாவிலும் படம் வெளியாகிறது. எத்தனை அரங்குகள் என்பதை பின்னர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

9000 அரங்குகள்

வெளியாகும் தியேட்டர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனையே படைக்கப் போகிறது கபாலி. ஆம், இது வரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாத அளவுக்கு உலகெங்கும் 9 ஆயிரம் அரங்குகளில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார்.

சீனாவில் மட்டுமே 5000 அரங்குகளில் வெளியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.

-என்வழி
11 thoughts on “ஜூலை 1-ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி… தியேட்டர் எண்ணிக்கையில் புது சாதனைப் படைக்கிறது!

 1. Deen_uk

  ஒரு வேண்டுகோள் தலைவருக்கு..
  ஜூலை ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்தால் கணிசமான (இஸ்லாமிய) ரஜினி ரசிகர்களால் முதல் ஒரு வாரம் தியேட்டர் பக்கமே வரமுடியாது.அனைவரும் நோன்பு வைக்கும் மாதம் இது.நோன்பு காலத்தில் நோன்பு வைத்துகொண்டு யாரும் படம் பார்க்க முடியாது.ஜூலை ஆறு அல்லது ஏழு தேதி தான் நோன்பு முடியும்.ஆறு,ஏழாம்தேதி புதன் மற்றும் வியாழன் என்பதால்,எட்டாம் தேதி வெள்ளிகிழமை ரிலீஸ் செய்யலாம்.முதல் மூன்று நாள் வசூல் என்பது முக்கியம் என்பதால் தலைவர் இது பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.இந்த படத்திற்கு இந்தியா மற்றும் அல்லாமல் மலேசியாவிலும் எதிர்பார்ப்பு அதிகம்.மலேசியா ஒரு முஸ்லிம் நாடு என்பதால்,அங்கும் முதல் மூன்று நாள் வசூல் கணிசமாக அல்லாமல் அதிகமாகவே குறையும்.காரணம் மலேசியாவில் இந்து நண்பர்கள் கூட கணிசமாக நோன்பு வைப்பார்கள்.மத ஒற்றுமை வெளிபாடாக.தலைவருக்கு தனிப்பட்ட ஒரு ரசிகன் கிடையாது..ஒரு ரசிகன் இருந்தால் அவனது குடும்பமே தலைவர் ரசிகராக தான் இருக்கிறார்கள்.நோன்பு முடிந்து ரிலீஸ் செய்தால் குடும்பம் குடும்பமாக வரும் டிக்கெட் இழக்க தேவை இருக்காது.ரஜினி ரசிக குடும்பங்களுக்கு இது ஒரு மிகபெரிய பெருநாள் கொண்டாட்டமாக அமையும்..! மலேசியா நண்பர்களும் அதிக அளவில் blogspot மற்றும் யுட்யூப் வாயிலாக இந்த கோரிக்கை வைத்தபடி உள்ளதை காண முடிகிறது.நான் லண்டனில் வசிக்கிறேன்.லண்டனில் பெருவாரியான தலைவரின் முஸ்லிம் மற்றும் இந்து நண்பர்களின் விருப்பமும் இதுவே. தாணு அவர்கள் மற்றும் தலைவர் இதை அறியாதவர்கள் அல்ல..அவர்கள் இந்த தேதி முடிவு செய்து இருந்தால் அதில் ஒரு காரணம் இருக்கும்..ஆனால் எனது மனதுக்கு பட்டதை சொல்ல தோன்றியது..மேலும் என் போன்ற ரஜினி வெறியர்கள் தலைவரின் படம் வசூல் சாதனை செய்யவேண்டும் என்ற நோக்கில் இந்த வேண்டுகோள் வைக்கிறேன்.தலைவரை அரசியலுக்கு வர சொல்லவில்லை! தலைவரின் வெறியன் என்ற முறையில் அவர் வசூல் சாதனை குறையாமல் இருக்க ஒரு வேண்டுகோள்!! வினோ அண்ணா..இதை தலைவர் காதுக்கு கொண்டு செல்வீர்களா? தலைவருக்கு இது தெரிந்தால் நிச்சயம் தேதி மாற்றுவார்.

 2. srikanth1974

  அன்புச் சகோதரர் திரு.Deen_uk அவர்களின் வேண்டுகோள் நியாயமானதே
  படம் வெளியீட்டு தேதி மாற்றம் குறித்து கட்டாயம் பரிசீலிக்கப் படவேண்டும். ஆம் தலைவா!

  உலகின் எல்லா கண்களும்,
  உன்னைக் காண்பதற்கே!.

 3. மிஸ்டர் பாவலன்

  ஜூலை முதல் தேதி ரிலீஸ் என தாணு அறிவித்து விட்டதால் இனிமேல் ரிலீஸ் தேதியை மாற்றுவது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும். ஆனால் ஜூன் மாதம் ரிலீஸ் செய்தால் வசூல் தூள் பறக்கும். நன்றி!

 4. sks

  Deen Uk Sonnadhu pola ivlo nal wait panniyachu additionala one week wait panni pakkalam ji

  namma ” KABALI ” dharisanam

 5. அப்பாஸ் தாம்பரம்

  சகோதரர் தீன் அவர்களின் கருத்து சரியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *