BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2 படத்தின் இப்போதைய தலைப்பு ‘1’… பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2 … பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!

SHANKAR-ENDHIRAN-2

ன் (1) எனத் தலைப்பிடப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கரின் மெகா படத்தின் பணிகள் சத்தமின்றி தொடங்கிவிட்டன.

2010-ல் வெளியான எந்திரன் – தி ரோபோ பெரும் பாராட்டுகளையும் மிகப் பெரிய வசூலையும் விருதுகளையும் அள்ளியது. மும்பை பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி எந்திரன் வசூல் ரூ 375 கோடி. தெலுங்கில் இந்தப் படம் ரூ 45 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

படம் வெளியான அதே ஆண்டு எந்திரன் இரண்டாம் பாகம் தொடக்கப்படலாம் என்று பேசப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் இதை அவ்வப்போது கூறி வந்தார். ஆனால் ரஜினி அடுத்து ராணாவை அறிவித்தார். அடுத்து உடல் நலமின்றி இரு ஆண்டுகள் ஓய்வெடுத்த நிலையில் கோச்சடையான் படத்தை அறிவித்து கடந்த ஆண்டு வெளியிட்டனர். அடுத்த சில மாதங்களில் லிங்கா படம் வெளியானது.

இப்போது ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. படத்தின் முதல் தோற்ற புகைப் படங்களைப் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து திரையுலகமே திகைத்துப் போனது.

இன்னொரு பக்கம் எந்திரன் 2 படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். எந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அதே ரத்னவேல்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்வார் என்று தெரிகிறது.

enthiran 2 team

நாயகியா தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. தொழில்நுட்பக் கலைஞர்களில் மிக முக்கியமானவர் விஎப்எக்ஸ் சீனிவாஸ் மோகன். இவர்தான் எந்திரனுக்கும் விஎப்எக்ஸ் செய்தார், தேசிய விருது பெற்றார். சமீபத்தில் வெளியான பாகுபலிக்கும் இவர்தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்தார்.

எந்திரன் 2 படத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பே ‘1’ என்ற தலைப்பைப் பதிவு செய்துள்ளனர்.

படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக இப்போதுதான் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

-என்வழி




3 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2 படத்தின் இப்போதைய தலைப்பு ‘1’… பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!

  1. Rajagopalan

    Dont want Lyca.
    The problems arise if Lyca Produce Endhiran 2 , i cant imagine. since its a very much sensitive issue.
    Everybody knows what happend to Kathi.
    Even in this site, you had talked & scolded all for letting Lyca to produce Kathi.
    Hereafter Thalaivar dont need prove his capabilities to anyone by acting in Endhiran 2.
    Everybody knows thalaivar.
    Hence my humble request is thalaivar should not act in endhiran 2 if it is going to be Lyca.
    All these days i had seen all thalaivar movies FDFS along with our friends. But if endhiran 2 is going to be Lyca, then we also will miss the movie i guess.
    I dont know whether you will publish this or delete..
    But dont mistale me for telling this….But still dont want thalaivar to get into another trouble.

  2. Rajagopalan

    Dont want Lyca.
    The problems arise if Lyca Produce Endhiran 2 , i cant இமகினே, since its a very much sensitive issue.
    Everybody knows what happend to Kathi.
    Even in this site, you had talked & scolded all for letting Lyca to produce Kathi.
    Hereafter Thalaivar dont need டு prove his capabilities to anyone by acting in Endhiran 2.
    Everybody knows thalaivar.
    Hence my humble ரெஃஉஎஸ்த், is thalaivar should not act in endhiran 2 if it is going to be Lyca.
    All these days i had seen all thalaivar movies FDFS along with our friends. But if endhiran 2 is going to be Lyca, then we also will miss the movie i guess.
    I dont know whether you will publish this or delete..
    But dont mistale me for telling this….But still dont want thalaivar to get into another trouble.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *