BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு.. தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்குகிறார்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு.. தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்குகிறார்!

IMG-20150601-WA0023

சென்னை: தலைவர் ரஜினிகாந்தின் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க பா ரஞ்சித் இயக்குகிறார். மலேஷியா, தாய்லாந்து, ஹாங்காங், சென்னையில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

படத்தின் தலைப்பு, பிற நடிக நடிகையர் விவரங்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி – தாணு தரப்பிலிருந்து அவர்களின் பிஆர்ஓக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ் – கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு.

ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார்.

விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி… யார் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்து முதன்முறையாக இயக்கிய புதுப்பாடகன் படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்.

ரஜினி நடித்த அண்ணாமலை, முத்து, பாட்ஷா, குசேலன் ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் சூழல் இருந்தது, சில பல காரணங்களால் காலதாமதம் ஆனது.

ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார். அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி.

23-rajini-kalaipuli-thanu-600

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் பா.இரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

சந்தோஷ் நாராயணன்

கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.

மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் – கபிலன், உமாதேவி, கானா பாலா. கலை இயக்கம் – ராமலிங்கம். படத்தொகுப்பு – பிரவீன் கே.எல். சண்டைப்பயிற்சி – அன்பு – அறிவு
நடனம் – சதீஷ். ஒலி வடிவமைப்பு – ரூபன்.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

-இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

என்வழி
14 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு.. தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்குகிறார்!

 1. arulnithyaj

  வந்துட்டார் என் தலைவன் ..மிக பெரும் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

 2. anbudan ravi

  இன்றுமுதல் படம் வெளி வரும் வரை எங்களுக்கு தீபாவளி கொண்டாட்டம்தான். மிக சந்தோஷமான நாள் இது.

  அன்புடன் ரவி.

 3. Chandran

  சூப்பர்.நிச்சய வெற்றி.ஆண்டவன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்.

 4. வெற்றிசெல்வன்

  சீக்கிரம் வாருங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே ! எதிர்பாளர்கள் முகத்தின் கரிய புஸ, பொறாமை பிடித்தவர்கள் மனசு பைத்தியம் பிடிக்க சீக்கிரம் வாருங்கள் தலைவா . சாதனைகளுக்கு என்றே பிறந்த ஒருவர் நீங்கள் தான் என்பதை மீண்டும் நீருபிக்க வேண்டும்.

 5. ரஜினிதாசன்

  தலைவா………………………… இந்த படத்தின் இமாலய வெற்றி நிச்சயம். ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாம் வா…….

 6. nagendra

  இமாலய வெற்றி நிச்சயம்…….தலைவா …….

 7. முகில்வண்ணன்

  தலைவா தலைவா தலைவா
  வெற்றி என்றுமே உங்களுக்கு சொந்தம்.
  நாங்கள் இருப்போம் என்றும் உங்கள் பின்னோடு.

 8. kumaran

  மிக சந்தோஷமான செய்தி (அற்புதமான கலைஞர் )

 9. பல்குணன்

  வரவேற்கிறோம் தலைவா மீண்டும் வெள்ளித்திரையில் ஆவலோடு வருக மிகப்பெரிய வெற்றி பெறுக.

 10. SENTHILKUMAR

  ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் . வாழ்த்துக்கள் தலைவா ….

 11. மிஸ்டர் பாவலன்

  நண்பர் “என் கருத்து” அவர்களே.. நீண்ட நாள் இடைவெளிக்குப்
  பின் உங்கள் கருத்தை வலையில் கண்டதற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. Elango

  ரஜினி தனது வழக்கமான வியுகத்தில் இருந்து வெளி வந்தது பாராட்டுக்குரியது ..இளம் இயக்குனர் …புது இசை அமைப்பாளர் …போன்ற விஜயகாந்த் ..மற்றும் கமலின் வழியில் செல்ல தொடங்கி இருக்கிறார் …இருபினும் மாக்களிடம் அவர் இழந்த செல்வாக்கை எப்படி நிலை நாட்ட போகிறார் என்பது பெரும் கேள்விக்குரியது ….படத்தின் முடியும் அதுவாகத்தான் இருக்கும் …..மக்கள் கையில் தீர்ப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *