BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் கபாலி செய்த புதிய சாதனை! – கலைப்புலி தாணு பெருமிதம்

சூப்பர் ஸ்டாரின் கபாலி செய்த புதிய சாதனை!

GN3A2347

பாலி படத்தின் அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.5 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனைப் படைத்திருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது

“இந்த  ‘மலரட்டும் மனிதநேயம்’ என்கிற மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்.

1978ல் பைரவி படத்தை நான் விநியோகித்தபோது, நாளிதழ் விளம்பரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று விளம்பரம் செய்தேன்.

அடுத்த நாளே தயாரிப்பாளர் கலைஞானமும் இயக்குநர் பாஸ்கரும் என் அலுவலகத்துக்கு வந்து, ‘தனது முன்னோடிகள் எம்ஜிஆரும், சிவாஜியும் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தனக்கு இப்படியொரு பட்டம் தேவையில்லை’ என்று ரஜினி கூறுவதாகச் சொன்னார்கள்.

GN3A2638

நான் அடுத்த நாளே கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று விளம்பரம் செய்தேன். அதன் பிறகுதான், ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ஒப்புக் கொண்டார்.

அவர் மனித நேயத்தின் மறு உருவம். அவரைப் போன்ற மிகச் சிறந்த மனிதரை உலகில் பார்க்க முடியாது. இந்த திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அவர் மட்டும்தான்.

இப்போது அவரை வைத்து கபாலி படம் தயாரித்து வருகிறேன். என் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்தாலும் பரவாயில்லை.. ஒரு உண்மையைச் சொல்கிறேன். எனது  கபாலி படத்தின் அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய திரைத்துறை வரலாற்றில் இது புதிய சாதனை.

நான் தயாரித்து வரும் மற்ற நடிகர்களின் படங்களின் விற்பனை ரூ 2 கோடியைக் கூட தாண்டாத நிலையில், ரஜினி படம் ரூ 8.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. திரையுலகில் என்றென்றும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்பதற்கு இது ஒன்றே சான்று.

இந்தப் படம் வெளியான பிறகு, ரஜினி ரசிகர்களுக்காக நானே பெரிய மாநாடு நடத்தப் போகிறேன். இதை ஒரு வாக்குறுதியாகவே உங்களுக்குத் தருகிறேன்.

சென்னை மழை வெள்ளத்தின் போது, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவுத்  தொழிலாளர்களுக்குத்  தங்க இடம், உண்ண உணவு அளித்து மனித நேயம் காட்டியவர் ரஜினி. இது போல மனிதநேய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.  வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாத வகையில் உதவி வரும் மனிதப் புனிதர் நம் சூப்பர் ஸ்டார். இந்த மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன்,” என்றார்.

-என்வழி
3 thoughts on “சூப்பர் ஸ்டாரின் கபாலி செய்த புதிய சாதனை! – கலைப்புலி தாணு பெருமிதம்

 1. murugan

  Maanattu pugaippadangalai paarkkumbolidhu Indiavil naam illaiyey endru varundhugireyn
  Oru veylai irundhirundhaal oru kadaikoodi rasiganai naamum andha iniya anubavaththai unardhiruppeyn
  Irundhabodhilum namadhu thalaththil veliyaana pugaippadangal nammai solingarukkey alaiththu sendru vittana endraal migaiillai
  ungalaipol video padhivirkaaga kaththirukkyn
  vino avargalukku prathyegha nandrigal

 2. Rajagopalan

  Sadhanaina Thalaivar… Thalaivarna Sadhanai…
  Always… Poda andavane namma pakkam…epodhume….

 3. Rajini Ravi

  கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபாலி’.

  சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

  இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் விரைவில் துவங்க இருக்கிறது.

  பிப்ரவரி 28ம் தேதி ‘கபாலி’ படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் அதற்கு முன்னதாக ‘கபாலி’ படத்தை வெளியிட முடியுமா என்று யோசித்தனராம்.

  அதற்கான சாத்தியம் குறைவு என்பதால் தேர்தலுக்குப் பிறகு அதாவது மே கடைசி வாரத்தில் கபாலி படம் வெளியாக இருக்கிறது.

  இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் அடிபடுகிறது.

  குறிப்பாக, ‘கபாலி’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தொடர்பான வியாபாரத்தை முடிப்பதில் தாணு மும்முரமாக உள்ளார்.

  அமெரிக்க விநியோக உரிமையை சினி கேலக்ஸி நிறுவனம் 8.5 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம்.

  தமிழ் சினிமாவைப் பொறுத்துவரை மிக அதிக விலை இது.

  ஸ்ரீராம் எனும் விநியோகஸ்தர் ஆஸ்திரேலிய நாட்டுக்கான விநியோக உரிமையை 1.65 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

  இது மட்டுமல்ல, மலேசியாவில் ‘கபாலி’ படத்திற்கு இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கொடுக்கப்படாத விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

  ‘கபாலி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருப்பதே காரணம்.

  அது மட்டுமின்றி, மலேசியாவில் ரஜினிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதன் காரணமாகவும் இவ்வளவு பெரியவிலைக்கு கபாலி விற்கப்பட்டிருக்கிறது.

  மாலிக்ஸ் ட்ரீம்ஸ் கார்பொரேஷன் என்ற நிறுவனம் கபாலி படத்தின் மலேசியா நாட்டுக்கான விநியோக உரிமையை வாங்கியுள்ளதாம்.

  இன்னும் சில தினங்களில் ஜப்பான் நாட்டுக்கான வியாபாரமும் முடிய வாய்ப்பிருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *