BREAKING NEWS
Search

கபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது!

கபாலி… அட்டகாசமான மூன்றாவது போஸ்டர்!

CedN8qqWQAAD7p_.jpg large

 

பாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாக இணையத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கபாலி. இந்தப் படம் சென்னை, மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.

படம் முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் வியாபாரம் இதுவரை ரஜினியின் வேறு எந்தப் படத்துக்கும் நடக்காத அளவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.5 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனைப் படைத்துள்ளது. அடுத்து கபாலியின் தெலுங்கு, கன்னட ஏரியாக்கள் உரிமை மட்டும் ரூ 45 கோடிக்கு விலைப் பேசப்பட்டு வருகிறது. கேரள உரிமையும் ரூ 7 கோடி வரை பேசப்பட்டு வருகிறது.

CedcLL4W4AAGWvV.jpg large

இதுவரை இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகின. மற்றபடி படம் குறித்த வேறு செய்தி, படங்கள், டீசர் என எதுவும் வெளியாகவில்லை. வெறும் இரண்டு ஸ்டில்கள்தான். அதற்குள் கிட்டத்தட்ட நூறுகோடியைத் தொட்டுவிட்டது கபாலி பிஸினஸ்!

இந்த நிலையில் கபாலியின் மூன்றாவது டிசைனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். இயக்குநர் ரஞ்சித்தும் இதனை வெளியிட்டார்.

இந்தப் போஸ்டரைக் கண்டதும் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது என்றால் மிகையல்ல.

இந்தப் போஸ்டர் இணையத்தை அதிர வைக்கும் அளவு வைரலாகப் பரவுகிறது. வெளியான சில நொடிகளில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது கபாலி போஸ்டர்!

kabalai-sathyam

சென்னை சத்யம் திரையரங்கின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள கபாலியின் புதிய டிசைன் பேனரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரலில் வெளியாகிறது. படத்தை தேர்தல் முடிந்த பிறகு ஜூனில் வெளியிட கலைப்புலி தாணு திட்டமிட்டுள்ளார்.

-என்வழி

 




11 thoughts on “கபாலி மூன்றாவது போஸ்டர்… வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது!

  1. thalipathi

    Dear vino,

    kannada and telugu rights 445 or 45? i think 45 is correct.

    ____

    Corrected. Thanks

  2. S.Karuppasamy

    Kabali Pattaiya Kilappuradhu Urudhi

    Yearly one time Deepavali

    Cine Field ullavarai Ore ” KABALI ” adhu namma thalaivar padam mattume !

  3. Raghul

    Do we need teaser and trailers for Thalaivar’s movies ? These posters are enough ! Why don’t we wait for the total surprise at the cinemas ? Wouldn’t be chilling and thrilling ?…. It’s my humble hope !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *