BREAKING NEWS
Search

‘போயஸ் கார்டனுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி’ – ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துக் கடிதம்

போயஸ் கார்டனுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி – ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து

cm-rajini-1-copy

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டார்.

22 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையாகி வந்துள்ள ஜெயலலிதாவிற்கு ரஜினி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

“நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை நிலையம் வெளியிட்டது..

ரஜினி அனுப்பிய இந்தக் கடிதத்தை அதிமுக தலைமைக் கழகம், கட்சியின் லெட்டர் பேடில் வெளியிட்டு மீடியாக்களுக்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

rajini letter

ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி, ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க அக்கட்சியினர் முயன்று வந்தனர்

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு ரஜினி கடிதம் எழுதியதன் மூலம் தனது நடுநிலையை அவர் அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேனகா காந்தி ஆதரவு

இதனிடையே, ஜெயலலிதாவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சமீப காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது என்றும், ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லா பிரச்சினைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள் என அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

-என்வழி




2 thoughts on “‘போயஸ் கார்டனுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி’ – ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துக் கடிதம்

  1. Arun

    தலைவா ….. நீங்கள் வாருங்கள் ….. ஆவலுடன் …. உன் ரசிகன்.

  2. Elango

    கவலை படாதீங்க அதான் Application போட்டு ஆச்சுல்ல … லிங்கா படம் பிரச்சனை இல்லாமல் வந்துடும் ! அதான் அவர்களும் உறுதி செய்துவிட்டார்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *