BREAKING NEWS
Search

‘அடை மழை.. மக்களுக்கு ரொம்ப சங்கடம்… பப்ளிசிட்டியே இல்லாம நாம ஏதாவது பண்ணனும்!’ – சூப்பர் ஸ்டார் ரஜினி

‘பப்ளிசிட்டியே இல்லாம மக்களுக்கு நாம ஏதாவது பண்ணனும்!’ – தலைவர் ரஜினி

karate 2
டை மழை, பெரும் வெள்ளம் என தண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மக்களுக்கு நாம ஏதாவது செஞ்சே ஆகணும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மலேசியா சென்று ரஜினியைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார் ‘கராத்தே’ தியாகராஜன்.

ரஜினியைச் சந்தித்தபோது தமிழகத்தில் மழை பாதிப்பு குறித்து ரஜினி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாராம்.
இதுகுறித்து கராத்தே தியாகராஜன் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், “ரஜினி சார் எப்பவும் மனசுல பட்டதை பட் படீர்னு பேசுவார். ஜெயா டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு, அங்கே முதல்வர் ஜெயலலிதாவை வைச்சுக்கிட்டே கருணாநிதியைப் பாராட்டிப் பேசுற துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்டவருக்கு தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. ஆனால், அதுக்கு அரசியல்தான் ஒரே வழியான்னு எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
karate
அரசியலில் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் சம்பந்தமான விஷயங்களில் கவனம் பதித்தே இருக்கிறார். இப்போது சென்னை வெள்ளம் குறித்து கூட பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே இருக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகும் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை, வெள்ளத்தில் தத்தளிப்பது அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

’ரொம்ப கஷ்டம்ல…! ப்ச்… அடை மழை, டிராஃபிக், வெள்ளம்னு ஒவ்வொரு நிமிஷமும் சங்கடம்ல. நாம இந்த மக்களுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். என்ன பண்ணலாம்னு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க. பப்ளிசிட்டியே இல்லாம செஞ்சுரணும்’ என்று என்னிடம் சொன்னார். என்னிடம் மட்டுமில்லாமல் இந்த யோசனையை தன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பலரிடமும் கேட்டிருக்கார். நிச்சயம் அவர் ஏதாவது பண்ணுவார்,” என்றார்.
27 thoughts on “‘அடை மழை.. மக்களுக்கு ரொம்ப சங்கடம்… பப்ளிசிட்டியே இல்லாம நாம ஏதாவது பண்ணனும்!’ – சூப்பர் ஸ்டார் ரஜினி

 1. இசக்கிமுத்து

  ஏழை மக்களின் மனம் கவர்ந்த ஒரு நல்ல தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தாம். ஆனால் அவர் ஏன் அரசியலுக்கு வர தயங்குகிறார் என்று தெரியவில்லை. அவர் தமிழக முதல்வர் ஆனால் தான் நம் மக்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

 2. arulnithyaj

  டியர் நண்பர்களே அண்ட் வினோ அண்ணா,

  நேற்று இரவில் இருந்து நான் இந்த பேட்டிவந்த விகடன்.com sitela போய் கமெண்ட் போட்டேன் ஏனென்றால் நிறைய பேர் தவறா பேசி இருந்தார்கள். இது வரை என்னுடைய பின்னூட்டம் வரவில்லை. என் பின்னூட்டத்தில் சொற் பிழை இருந்தததால் வர வில்லையானு தெரிய வில்லை. பின்னூட்டம் இது தான்:

  இங்கே பின்னுட்டம் இடும் நண்பர்கள் வைக்கும் குற்றசாட்டுகள்
  1. ரஜினி படத்தை promote பண்றதக்காக அரசியல் பேசுறாரு ..உதவி செய்யணும்னு சொல்றாருன்னு சொல்றீங்க — அவர் வந்து மீடியாகிட்ட தன் படம் ஓடுவதற்காக வலிந்து அரசியல் பேசுறாரா ..லிங்கா படமாகட்டும்ம் இல்லை மத்த படமாகட்டும் தன்னிடம் கேட்கும் அரசியல் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொன்னால் அவர் படத்துக்கு promote பண்றார்னு அர்த்தமா? நீங்களே உங்கள் மன சாட்சிய தொட்டு சொல்லுங்கள் என் நண்பர்களே
  2. ஒரு கோடி ரூபாய் நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு தாரேன்னு சொன்னார். ஆனால் தரவில்லை — நண்பர்களே நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக முன்னால் PM வாஜ்பாய நேரில் சந்தித்தார் அந்த திட்டத்தை தொடங்க சொல்லி கேட்டு கொண்டார். அந்த திட்டம் செயல் வடிவம் பெறவே இல்லாத பொழுது அதற்க்கு பணம் கேட்டு ரஜினி தராத மாதிரி பேசுவது எந்த வகை நியாயம்
  3. அவர் மகள் திருமணத்துக்கு வர வேண்டாம் என்று அவர் தன ரசிகர்களை கேட்டு கொண்டர்ர் இது அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் உள்ள விஷயம் இதில் 3வது நபர் கேட்பதற்கு ஒன்றும் இல்லை. அவர் துரை அழகிரி திருமனத்த்ருக்கு மதுரை சென்ற பொழுது எண்ணற்ற ரசிகர்கள் பின் தொடர்ந்த பொது கார்த்தி என்ற ரசிகர் விபத்தில் இறந்து விட்டார். ரஜினி சார் கார்த்தி ரசிகரின் குடும்பத்திற்கு 4 லக்ஸ் கொடுத்தார்..இன்ன்கேயும் ரஜினி சார் பணம் கொடுத்தார் என்று சொல்எ வரவில்லை.. ரசிகர்களின் பாதுகாப்பை விருபுவதால் அவர் நிறைய கூடங்களை தவிர்த்து விடுவார் . அவர் பிறந்த நாளுக்கு வெளியூர் செல்வது 1992க்கு பிறகு அதனால் தான்.
  4. நிறைய சொத்துக்களை கர்னடஹவில் வாங்கி உள்ளார் என்கிறார்கள் ..எதாவுது ஆதாரத்தை யாரவாது காடியுள்ளர்களா ? மேலும் அவர் கர்னடஹவில் தான் வாங்கியுள்ளார் என்று சொல்கிற்றீர்கள் பாகிஸ்தனில வாங்கியிருக்கிறார் என்றும் கேட்கலாம். தமிழ் நாட்டில் இருந்தால் எவ்வளுவ்வு அரசியல் இடையூர்கல் இருந்து இருக்கும்..
  இந்த பேட்டியே கராத்தே தியாகராஜன் கொடுத்தது இதற்கு ரஜினிய பத்தி என் ஓவர் comment ..
  நண்பர்களே தயவு செய்து ஒரு நல்ல மனிதரை பற்றி மட்டமாக பேசுவதற்கு முன் நிறைய யோசியுங்கள் வெறும் பொறாமையினால், இல்லை போலி தமிழ்வாதம் பேசிக்கொண்டு எல்லாவற்றையும் கண்மூடி தனமாக பேசாதீர்கள் நானும் ஒரு தமிழன் தான். நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள்

 3. enkaruthu

  நண்பர் இப்ராகிம் அவர்களும் இந்த கட்டூரையை படித்திருப்பார் என்று நினைக்கிறேன் .இதுதான் தலைவர்.விஜய் ரசிகர்கள் செய்த சின்ன உதவியையே பல பேப்பரில் விளம்பர படுத்தினார்கள் .அதுபோல் தலைவர் என்றும் எந்த உதவியையும் விளம்பரம் பண்ணி செய்ததில்லை.விஜய் பண்ணியவுடன் இங்கு வந்து கேள்வி கேட்கும் இப்ராகிம் அவர்களே இஸ்லாம் மார்க்கம் தான் செய்யும் எந்த உதவியையும் வெளியே சொல்லகூடாது என்று சொல்கிறது.அதைத்தானே தம்பி எங்கள் தலைவர் செய்கிறார்.போங்கப்பா நல்லவரை குறை பேசாதீர்கள் அப்படி பேசினால் அழிவு நிச்சையம் .

 4. Rajagopalan

  Today morning thalaivar had gone to US for make up test?
  But if he shaves his beard , then what will happen to kabali last leg of shooting?

  But whatever , dont want Lyca to produce enthiran 2…..

 5. இந்திரன்

  தலைவர் என்னதான் செய்யனுமா எல்லா சொத்தயும் எல்லாத்துக்கும் குடுத்துட்டு போயிடவா அப்பகூட பல மரமண்டைகள் குறதான் சொல்லுவாங்க ஏன் கமல்ல பார்த்து ஒரு மர மண்டையும் கேட்க மாட்டேங்குது

 6. Marthu

  இது தான்டா என் தலைவர்…இதுவும் விளம்பரதுக்காக சொன்னது அல்ல….கராத்தே இதை பத்திரிக்கைக்கு சொல்லுவாற்னோ, சொல்லனும்னோ தலைவர் எதிர் பார்த்திருக்க மாட்டார்

  உங்க நல்ல மனசு எங்களுக்குத் தெரியும் தலைவா…

  உயிருள்ளவரை உன் ரசிகன் உனக்கு மட்டுமே ரசிகன்

 7. Marthu

  இது தான்டா என் தலைவர்…இதுவும் விளம்பரதுக்காக சொன்னது அல்ல….கராத்தே இதை பத்திரிக்கைக்கு சொல்லுவாற்னோ, சொல்லனும்னோ தலைவர் எதிர் பார்த்திருக்க மாட்டார்

  உங்க நல்ல மனசு எங்களுக்குத் தெரியும் தலைவா…

  உயிருள்ளவரை உன் ரசிகன் உனக்கு மட்டுமே ரசிகன்…

 8. Marthu

  வாழ வச்ச தமிழ்நாட்டுக்கு எதாவது பண்ணனும்னு அடிக்கடி சூப்பர் ஸ்டார் சொல்வதே வேணாம் என்பது என் கருத்து!

  இந்த அரசியல் பார்வையெல்லாம் வருவதற்கு முன்னரே சின்ன வயசில, திரையில பார்த்து துள்ளி சந்தோஷ பட்டது, ரஜினி ஸ்டைல்ன்னு சொல்லிகிட்டது, எங்களை குதுகல படுத்தியதுன்னு நீங்க நிறையவே பண்ணிடிங்க, ஒரு கலைஞனா அதை தான் பண்ண முடியும், தவிர ரஜினி என்கிற தனி மனிதனை முன்னேற்ற வேண்டுமென டார்கட் பிக்ஸ் பண்ணிக்கிட்டு எல்லாம் உங்களை நாங்க வாழ வைக்கலை, அவ்ளோ நல்லவங்களும் நாங்க இல்லை, உங்கள் திறமைக்கான விலை அது! அதனால் தான் நாடு கடந்து தமிழரல்லாத நாடுகளில் கூட ஜெயிக்க முடிந்தது! உங்களை உருவாக்கியது நாங்க தன்னா, எங்க இன்னொரு ரஜினியை உருவாக்க முடியுமா என்ன! அது நிகழ்ந்தது!

  அதனால தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது பண்ணும்னா, தளபதி மாதிரி இன்னொரு படம் தா தலைவா, கபாலியை செம்மையா கொடுங்க போறும்’

  ஒரு கலைஞனாக அந்த நிவர்த்தி போறும், இந்த நாட்டு பிரஜையாக செய்வதெல்லாம் உங்கள் தனி விருப்பம்!

  –படித்ததில் பிடித்தது
  பேஸ்புக்கில் விஜயபாஸ்கரன் கருணானிதி என்னும் மற்றோரு ரஜினி ரசிகர் எழுதியது

 9. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் கமல் அவர்களும் பல நற்பணிகள் செய்து வைக்கிறார்.
  கமல் ஹாசன் அவர்களுக்கு விளம்பரம் சிறிதும் பிடிக்காது என்பதால்
  அவரது நற்பணிகள் குறித்த விவரம் மக்களுக்கு தெரிவதில்லை..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 10. Renugopal

  ஏன் வினோ சார் ரஜினி சார் ரொம்ப silent டா இர்ருக்காறு

 11. Kumar

  எல்லாம் சரி. அவதூறு பேசுபவர்களின் வாயை அடைக்க, தலைவர் ஒரு பெரிய உதவித்தொகை வழங்கவேண்டும். தானே புயல் சமயத்தில் கூட தலைவர் வெறும் 5 லட்சம் மட்டுமே வழங்கினார். கமல் அவரைவிட 2 மடங்குக்கு மேல் அதிகம் கொடுத்தார். திரளான சொத்துக்களை வைத்திருக்கும் தலைவர், இதுபோன்ற இயற்கை பேரிடர்களின் போது கணிசமான தொகையை வழங்குவதே அவருடைய விசாலமான குணத்துக்கும் நல்ல மனசுக்கும் அழகு. அதுவே என்னைப்போன்ற ரசிகர்களின் சந்தோஷம்!

 12. Kumar

  பார்த்திபன், சிவகார்த்திகேயன் எல்லாம் உதவும்போது தலைவர் சும்மா வேடிக்கை பார்ப்பது அவரது இமேஜுக்கு நல்லதல்ல. சூடு ஆறுவதற்குள் தலைவரின் உதவிகள் போய்சேருவதே நல்லது.

 13. Rajagopalan

  Kabali – Mega Block Buster….

  Endhiran 2 – Mega Failure – Since Lyca is Confirmed….

  I know this post will be deleted….
  But i have to give honest opinion , since i remember Envazhi scolded vijay ttooo much for selecting Lyca in Kathi….

 14. Rajagopalan

  rules to be same for rajini or kamal or ajith or vijay…

  it should not be bent for Rajinis sake…

  Lyca very sensitive issue…

 15. jegan N

  ்வினோ அணணா …..சமீப காலமாக தலைவரொட நயூஸ் கு ….விகடன்.,திநமலர்..மாலைமலர்……நெகடிவ் கமெண்ட்ஸ்..நிறய வருது…..அவர்களுககு…பதிலடி குடுக்க்ற மாத்ரி ஒரு ஸ்டெடஸ் பொடுங்க….அதை ரசிகர்கள் கு பகிரலாம்….

 16. poornima

  வினோ, நீங்க என்ன வேலை பாக்குறீங்க?
  ரஜினி பத்தி இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு சம்பளம் உண்டா?
  கொஞ்சம் தெளிவுபடுத்தவும்
  கோவத்துல இந்த கமெண்ட்-ஐ போடாம இருந்து விடாதீர்கள்
  poorni72@gmail.com

 17. kabalidevan

  கண்டிப்பா பண்ணுவார் தலைவர், மழை நிக்குறதுக்குள்ள

 18. hussain

  தலைவரின் நிவாரண உதவியை நினைத்து ஒரு ரசிகனாய் பெருமை கொள்ளமுடியவில்லை வேதனையாக இருக்கின்றது . தலைவரும் பணத்தின் மீது பற்று கொள்ள ஆரம்பித்துவிட்டார.

 19. tamilmani

  தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு அதிகம் தெரியாத தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜனா ரூபாய்.இருபத்தைந்து லட்சம் மழையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்கினார். நடிகர் ராகவா லாரென்ஸ் ரூபாய் ஒரு கோடி வழங்கி உள்ளார்.
  ரியல் சூப்பர் ஸ்டார்கள்.

 20. yaseenjahafar

  நானும் ஒரு ரஜினி ரசிகன் தான் ஆனால் ஏன் பணம் கொடுக்க வில்லை கோடி ருபாய் அது தான் பேச்சா இருக்கிறது இப்பொழுது சிஸ்யியன் கொடுக்கும் பொழுது குரு ஏன் கொடுக்க முடியாது இப்ப நமது சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களால் பிற பலம் அடைந்தவர் இந்த நேரத்தில் கொஞ்சம் கருணை அதிகம் காடினால் நன்றகா இருக்கும் தலைவர் விளம்பரம் வெறும்ப மாட்டார் என்பது ஒரு கேள்வி போனது போகட்டும் இருக்கும் நேரம் இன்னும் அதிகம் கொடுக்க வேண்டும் இந்த தமிழ் மக்களுக்கு அது தான் எங்கல் விருப்பம் சமயத்தில் தலைவர் கமலை பேஸ் பண்ணுவார் அவர் எவளவு கொடுப்பர் என்று பார்பார் பிறகு இருவரும் முடிவு பண்ணுவார்கள் ஆனால் இப்ப கொடுப்பதற்கு கமல் இடம் ஒன்றும் இல்லை ஆதலால் ரஜினியும் குறைத்து கொடுக்கிறார் அப்படி ஒன்றும் இல்லை என காட்ட வேண்டும் highest paid actor in asia after jackey chan அது போல இதிலயும் காட்டினால் இன்னும் நன்றகா இருக்கும் தமிழ் மக்கள் மீகவும் அவதி படுகிறார்கள் கொஞ்சம் குறல் கொடுன்கள் உங்களை தவிர யார் தெரியும் இந்த தமிழ் மக்களுக்கு நீங்கல் தான் செய்ய வேண்டும்

 21. Muthukumar

  தலைவர் கண்டிப்பா செய்வர் என்று தெரியும். என்னுடுடைய வேண்டுகோள் அதை பப்ளிஷ் பண்ண வேண்டும்.

  அப்போதான் இந்த பொறம்போக்குகளின் வாயை மூடமுடியும்.

 22. rajiniragav

  Superstar Rajinikanth extended his support to people affected by the incessant rains in Tamil Nadu by donating Rs 10 lakhs to the Chief Minister’s Public Relief Fund.

  While Karthi and his brother Suriya have donated 25 Lakhs,
  ALLU ARJUN POSTED ON TWITTER: “I WOULD LIKE TO DONATE 25 LAKHS TO CHENNAI ப்ளூட்.

 23. indiran

  என்வழி வலைபூ வாசகர்களே நான் tamilstar.comவலைதலதில் தலைவர் 10கோடிநிவாரணதொகை கொடுத்தாக சொல்லி இருக்காங்க உண்மை யா தயவு செய்து கூருங்கள் முக்கியமாக வினோ சொல்லியே ஆக வேண்டும்

 24. Siva

  இப்போது கடலூரில் நிவாரணப் பணிகளில் உண்மையான சூப்பர் ஸ்டார் சித்தார்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *