BREAKING NEWS
Search

தலைவர் ரஜினிக்கு இன்று 38 ‘வயசு’… பொன்விழா கொண்டாட்டங்களுக்கு தயாராவோம்!

தலைவர் ரஜினிக்கு இன்று 38 ‘வயசு’… பொன்விழா கொண்டாட்டங்களுக்கு தயாராவோம்!

rajini-ar-2
சென்னை: சூப்பர் ஸ்டார் என்று திரையுலகினராலும், தலைவர் என ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் கலைஞர், இணையற்ற மனிதர் ரஜினிகாந்த், இந்த திரையுலகுக்கு வந்து இன்றுடன் 38 ஆண்டுகள் ஆகின்றன.

சினிமா கணக்குப்படி பார்த்தால் ரஜினிக்கு இன்று ’38 வயசு’!

1973-ம் ஆண்டு சென்னைக்கு வந்த ரஜினி, சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கலை படித்தார். அது ஒரு சடங்குக்காகத்தான். காரணம், நடிப்பு அவர் பிறவியில் ஊறியிருந்தது.

1975-ல் இயக்குநர் கே பாலச்சந்தரைக் கவர்ந்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தின் நாயகன் கமல்ஹாஸன். ஆனால் இதே பாலச்சந்தரின் அடுத்தடுத்த இரு படங்களில் ரஜினி எதிர் நாயகன் பாத்திரத்தை ஏற்றாலும், அதை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியிருந்தார் தனது வித்தியாசமான நடிப்பால்.

rajini_1975

தமிழில் அறிமுகமான கையோடு, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் அடுத்த ஆண்டே அறிமுகமாகிவிட்டார் ரஜினி.

1975-ல் ஒரு படத்தில் நடித்தவர், அதற்கு அடுத்த ஆண்டே நான்கு படங்களில் நடித்திருந்தார் ரஜினி.

1978-ம் ஆண்டு அதிகபட்சமாக 21 படங்களில் நடித்து பிரமிக்க வைத்தார் ரஜினி. இந்த ஆண்டே அவர் வில்லனிலிருந்து ஹீரோவாகவும் உயர்ந்துவிட்டிருந்தார். அந்த ஆண்டே அவர் சூப்பர் ஸ்டாராகவும் மாறியிருந்தார்.

அந்த அந்தஸ்து அடுத்த 35 ஆண்டுகளைத் தாண்டியும் அவருக்கு மட்டுமே தரப்பட்டு வருகிறது. இடையில் நானும் சூப்பர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட அத்தனை பேரும் காணாமல் போனார்கள்… அல்லது தங்கள் நிலை உணர்ந்து ஓரம் நிற்கிறார்கள்.

superstar-rajinikanth

இன்று தலைவர் ரஜினியின் திரையுலக வயசு 38. இத்தனை ஆண்டுகளில் அவர் படங்கள் வெளியான ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சாதனை நிகழ்ந்திருக்கிறது தமிழ் சினிமாவில்.

ரஜினியின் படங்களில் சில வழக்கமான பார்முலா படங்களாகக் கூட இருக்கும். வேறு மொழியில் வெற்றிப் பெற்ற படங்களின் ரீமேக்காகக் கூட இருக்கும். ஆனால் அவற்றை தன் இணையற்ற ஸ்டைல் மற்றும் இயல்பான நடிப்பால் மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருப்பார் ரஜினி.

அமிதாப் நடித்த டான், வெற்றிகரமான எத்தனையோ ‘டான்’ கதைகளில் ஒன்றாகத்தான் ரசிகனால் கருதப்பட்டது. ஆனால் தமிழில் அது பில்லாவாக வந்தபோது, அந்தப் படம்தான் ஒரிஜினல் எனும் அளவுக்குப் புகழ்பெற்றது. அதை அன்றைக்கு தெலுங்கில் ரீமேக் செய்த போதுகூட, பில்லா ரீமேக் என்றுதான் குறிப்பிட்டார்கள்!

0

இப்படி சொல்ல எத்தனையோ சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார். உலகின் ஸ்டைலான நடிகர் என ஜாம்பவான்களே பாராட்டும் உன்னத கலைஞர்.  ஆண்டு தோறும் அவர் படங்களில் நடிக்காவிட்டாலும், அவர் பெயர்… ஒரு காட்சியில் அவர் முகத்தைக் காட்டினாலே ரசிகர்கள் மனதை வென்றுவிடலாம் என்ற நிலை இன்று  இந்திய சினிமாவில்!

“உன்னை ஏன் எல்லாருக்கும் பிடிக்குது தெரியுமா… வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் குறையாததுதான்….” என படையப்பாவில் வரும் வசனம், சினிமாவுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல!

தலைவரின் திரையுலகப் பொன்விழா கொண்டாட்டங்களுக்காக இப்போதிருந்தே தயாராவோம்!

-என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “தலைவர் ரஜினிக்கு இன்று 38 ‘வயசு’… பொன்விழா கொண்டாட்டங்களுக்கு தயாராவோம்!

 1. kabilan.k

  அடுத்த தலைமுறையையும் தலைவர் கலக்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வாழ்க தலைவர் !!!

 2. குமரன்

  Amazing !

  ரஜினி மாத்திரமல்ல. அவரது ரசிகர்களும்தான். அவர்களின் உதாரணமான வினோவும்தான். எப்படி அவர் நடிக்க ஆரம்பித்த நாளை நினைவில் வைத்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள், நேரம் தவறாமல் !

  Hats off !

 3. RAVI

  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். சூரியன் உள்ள வரை சந்திரன் உள்ளவரை நம் தலைவரின் பெயரும் இந்த பூ உலகில் நிச்சயம் இருக்கும். கடவுள் ரஜினி வாழ்க.

 4. Saktheeswaran

  இந்த 38 ஆண்டுகளிலும் தலைவர் ரஜினிக்கு ஓரு போட்டியாளர் இருக்கிறார் என்றால் அது ரஜினி தான்

 5. mass venkat

  சாதிக்கமுடியா சாதனைகளுக்கு ஒரே உதாரணம் சாதனையாளர் ரஜினி மட்டுமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *