BREAKING NEWS
Search

ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் தலைவர் ரஜினி!!

ரசிகர்களுடன் தலைவர் நடத்தும் வரலாறு காணாத சந்திப்பு!

RAJINIa

சென்னை: ஏப்ரல் 12-ம் தேதியிருந்து ஒரு வாரத்துக்கு கோடம்பாக்கமே திருவிழா கோலத்துக்கு மாறிவிடும் என்பது சர்வ நிச்சயம்.

காரணம்… 6 நாட்கள் தொடர்ச்சியாக தனது ரசிகர்களைச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை இப்படியொரு சந்திப்பை அவர் நடத்தியதில்லை.

இந்த சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. இந்த சந்திப்பின்போது ரஜினி – ரசிகர் சந்திப்பு எப்படி நடக்கும் என்பதை விவரித்துள்ளனர்.

அதன்படி, ஒரு நாளைக்கு 2000 ரசிகர்கள் வரை ரஜினிகாந்த் சந்திக்கிறார், படமெடுத்துக் கொள்கிறார்.

மொத்தம் 6 நாட்களே தொடர்ச்சியாக சந்திக்கவிருக்கிறார் ரஜினி. இதன் மூலம் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல் ரஜினியுடன் படமெடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினியைச் சந்திக்க விரும்பும் ரசிகர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் டோக்கன்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாக எந்தப் பிரபலமும் இத்தனைப் பேர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. மொத்தமாக மாநாடு மாதிரி கூட்டி தரிசனம் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் தலைவர் தன் ரசிகனுடன் படம் எடுத்துக் கொடுக்க விரும்புகிறார். அந்த வகையில் 6 நாட்கள், 15 ஆயிரம் பேர்களுடன் படம் எடுத்துக் கொள்வது ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
-என்வழி




4 thoughts on “ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் தலைவர் ரஜினி!!

  1. ஸ்ரீகாந்த்.1974

    இனி எல்லாமே வெற்றிதான்.

  2. Jayakumar

    Sir,

    I am diehard fan of super star. But am not member in any thalaivar welfare association. One of my life time achievement is to take photo with our thalaivar. Can i get chance pls?????????????

  3. jagan n

    Anna.i m am not in any fan club…but I would like to have a photograph with Thalaivar.or at least want to see him….is there any possibilities for you to get a chance for envazhi subscribers….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *