BREAKING NEWS
Search

10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்!


சென்னை: இன்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அங்கு பத்து நாட்கள் தங்கி அவர் ஓய்வெடுக்கிறார்.

கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று வருகிறார் ரஜினிகாந்த்.

உடல் நலப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்காவுக்குச் சென்று வருவதாக ரஜினி தரப்பில் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அமெரிக்கா செல்வார் என கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளியாகின.

இன்று இரவு ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குச் செல்கிறார். அங்கு பத்து நாட்கள் அவர் தங்கியிருந்து உடல் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

இந்தப் பயணம் முடிந்த பிறகு கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

-என்வழி




One thought on “10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *