BREAKING NEWS
Search

மலேசிய ‘மக்களின் தலைவரான’ சூப்பர் ஸ்டார் ரஜினி!

மலேசியாவின் மக்கள் தலைவர்!

thalai-ml-1

லாய், சீனர், தமிழர் மற்றும் பல நாட்டவர்களின் கலவையான மலேசியாவில் எந்த நாட்டு பிரதமர், அதிபர் அல்லது எத்தனை பெரிய நடிகர் வருகை தந்த போதும், அந்த மக்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

தங்கள் அருகாமையில் எத்தனைப் பிரபலம் நடந்து போனாலும் அந்த மக்கள் கண்டு கொள்வதில்லை. அல்லது ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அத்தனை ஆர்வமாய்ப் போய்ப் பார்த்ததில்லை. கலை நிகழ்ச்சி அல்லது இசை நிகழ்ச்சி நடந்தால் மட்டும் போய்ப் பார்ப்பது வழக்கம்.

ஆனால் முதல் முறையாக அந்த மக்கள் இன மொழி பேதமின்றி ஒரு மனிதரை அலையெனத் திரண்டு வரவேற்கிறார்கள். மலேசியாவில் அவர் எங்கே போனாலும் அவருடனே பயணிக்கிறார்கள். காலில் விழுந்து வணங்குகிறார்கள். கையைப் பற்றிக் கொள்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்… உடம்பு முழுவதும் அவர் உருவத்தைப் பச்சைக் குத்திக் கொண்டு வந்து அழுதபடி அவரிடமே காட்டுகிறார்கள். அவர் கை தங்கள் தலைமீது பட வேண்டும் என தவம் கிடக்கிறார்கள். அவர் எந்த ஹோட்டலில் தங்கினாலும், அந்த ஹோட்டல் வாசலிலேயே நாள் கணக்கில் நிற்கிறார்கள், அவரைத் தொட்டுப் பார்த்ததும் கடவுளே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

அவர் நம்ம ரஜினிகாந்த். தி ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்!

thalai-ml-2
இந்த மனிதருக்காகத் திரளும், இவர் மீது பாசத்தைக் காட்டும் தன் நாட்டு மக்களைத் திகைப்போடு பார்க்கிறது மலேசியா. அந்த நாட்டுத் தலைவர்களும், அதிகாரிகளும் இந்த மனிதர் ஒட்டு மொத்த மக்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் ரகசியம் என்னவென்று பேசிக் கொள்கிறார்கள். மலேசிய, சிங்கப்பூர் மீடியாக்களில் தினசரி ரஜினி பற்றிய செய்திகள்தான்.

ரஜினியும் ரசிகர்களைச் சந்திக்க சிறு தயக்கமோ, சலிப்போ காட்டவில்லை. ஷூட்டிங்குக்கு கிளம்பும்போதும் சரி. ஷூட்டிங் முடிந்து வரும்போதும் சரி, படப்பிடிப்பு இளைவேளையிலும் சரி.. கிடைக்கிற நேரங்களில் ரசிகர்களைப் பார்த்து கையசைக்கிறார், வணக்கம் தெரிவிக்கிறார்.. முடிந்தால் பேசி, ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கிறார்.

தனது செக்யூரிட்டிகளுக்கு அவர் போட்டிருக்கும் கண்டிப்பான உத்தரவு, ‘ரசிகர்களைத் தடுக்கவோ, தள்ளிவிடவோ வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அமைதியாக அவர்களை அனுமதியுங்கள்’ என அனைவர் முன்னிலையும் அட்வைஸ் பண்ணுகிறார். தன்னைப் பார்க்க கண்ணீருடன் ஓடிவந்த பெண்ணைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி, அவரை ஆசுவாசப்படுத்தி படம் எடுத்துக் கொடுக்கிறார்.

thalai-ml-14

சமூக வலைத்தளங்களான ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் மணிக்கு இதுசம்பந்தமாக பல நூறு போட்டோக்கள் வெளியாகி, பார்க்கும் ரசிகனை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

“இந்த மாதிரி ஒரு வரவேற்பை மலேசியாவில் எந்த தலைவரும் பெற்றதில்லை… எந்த நடிகருக்கும் கிடைத்ததுமில்லை. ரஜினிகாந்த்திடம் நிச்சயம் மிகப் பெரிய ஈர்ப்புச் சக்தி உள்ளது,” என்று ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.

thalai-ml-

“தலைவர் என்றால் ரஜினி என்கிறார்கள். அது உண்மை என்பதை நேரில் பார்த்துவிட்டேன்,” ஒரு மலேசிய அரசியல் தலைவர் சொன்னதாக பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ரஜினி இன்னும் 30 நாட்கள் வரை மலேசிய உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் தங்கியிருக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

மலேசியாவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வைத்து, அதில் ரஜினியைக் களமிறக்கினால் அபாரமாக ஜெயித்து பிரதமராகிவிடுவார், குறைந்தபட்சம் ஒரு முதலமைச்சராகவாவது ஆகிவிடுவார் என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கின்றன மலேசிய மீடியாக்கள்!

அப்படிப் போடு!

நன்றி: ஒன்இந்தியா தமிழ்

மேலும் சில படங்கள்:




17 thoughts on “மலேசிய ‘மக்களின் தலைவரான’ சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. ரேவதி ரவி

    என்னை பொருத்த வரையில், மனித தெய்வம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உலக மக்களின் தலைவர் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சூப்பர் ஸ்டார் அவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த மக்களை கவர்ந்து விடுவார். அந்த அளவிற்கு அவர் தெய்வாம்சம் மிக்கவர்.
    வாழ்க நடமாடும் தெய்வம் ரஜினி அவர்கள்.

  2. srikanth1974

    ஜப்பான் போனா சூப்பர் ஸ்டாரு
    ஜெர்மன் போனா சூப்பர் ஸ்டாரு
    அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
    ஆப்ரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
    மலேசியாவிலும் sssssssssssssssuuuuuuuuuuuuuuuuuuuuupppppppppppppppppeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrr sssssssssssssstttttttttttttttttttttttttaaaaaaaaaaaaaaarrrrrrrrrrrrrrrrruuuuuuuuuuuuuuuuuuuu

  3. S.V.RAMASUBBU

    ஹி இஸ் ரியல் ஹீரோ இன் இந்தியன் சூப்பர் ஸ்டார் ரஜினி

  4. enkaruthu

    இல்ல நான் கேட்கிறேன் இவர் உலக நாயகனா அல்லது இங்கே மலேசியாவில் தலைவருக்கு கொடுக்கும் வரேவேற்பை பார்த்து வயறு எரிந்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் தாக்ரேவை போய் பார்ப்பது திடிரென்று தமிழனாக மாறி ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்வது என்று இருக்கும் கமல் உலக நாயகனா.ஜல்லிக்கட்டு முதலில் தடை பண்ணியபொழுது இவர் எங்கே போனார்.எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் பாருங்கள் கமலிடம்.இவரை விருந்த்தலிய ஒரு விழாவிற்கு கூப்பிட்டால் உடனே அதற்க்கு அதரவு தருவது.எனேக்கேனமோ கமலுக்கு புகழ் போதை மற்று அரசியல் ஆசை வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.திக்கு தெரியாமல் இருக்கும் தி.மு.க. வைரமுத்துவை வைத்து கமலையாவது இழுக்கலாம் என்று அவரை தாங்கு தாங்கு தாங்குகிறார்கள்.ஆனால் என்ன பண்ணுவது நடிகர் சங்கத்தில் கௌர பதவி வேண்டாம் என்று சொல்லி பணம் புழங்கும் பதவியை பெற்ற இவர் கலைஞரிடம் தலைவர் போல் பெருந்தன்மையாக நடப்பரா என்பது சந்தேகமே.on

  5. குமரன்

    சூப்பர்.

    தயவு செய்து இந்தக் கட்டுரையை அந்த 1% நாசருக்கு அனுப்புங்கள். படிக்கட்டும்.

    இந்தக் கூட்டத்தை விட அதிகமாக 1% …. இல்லை… இல்லை….. இந்தக் கூட்டத்தில் 1% ஆவது அந்த நாசருக்குக் கிடைக்குமா?

  6. CHOZHAN

    வினோஜி, கமல் பர்த்டே ஸ்பெஷல் எதிர்பார்த்தேன், போன ஆண்டு போட்டீர்கள். இந்த ஆண்டு இதுவரை இல்லை. என்ன காரணம்?

  7. MK

    தலைவர்
    முதலில் தமிழ் நாட்டின் superstar
    அடுத்து தலைவரின் வாய்ஸ் dubbed படங்கள் ஆந்திராவில் அதிரடியாக வசூலை வாரி குவித்தது.
    தொடர்ச்சியாக கன்னடத்திலும், மலையாளத்திலும் தலைவரின் நேரடி தமிழ் படங்கள் வசூல் மழையை பொழிந்தது.
    பின்னர் தலைவரின் தமிழ் படங்களின் ஹிந்தி version வட நாயகன்களின் வயிற்றில் புளியை கரைத்தது.(சிவாஜி, robat (எந்திரன்))
    தலைவரின் தமிழ் படங்களுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள் எப்போதும் வரவேற்ப்பு உண்டு. அதயும் குறிப்பாக மலேசியாவில் பெரிய ரசிக கூட்டமே இருக்கு.
    இது தவிர, மொழி கடந்து இனம் கடந்து, நாடு கடந்து ஜப்பானில் மிகபெரிய ரசிக கூட்டத்தை கவர்ந்துள்ளாரே!
    அது தான் தலைவரின் Magic
    தலைவரின் ஈர்ப்பு.
    இப்போது சொல்லுங்கள்.
    உண்மையில் யார் உலக நாயகன்.?
    தேவையில்லாமல் சில சொம்பைகளுக்கு,புகழ் விரும்பிகளுக்கு உலக நாயகன் பட்டம் இருக்கிறதே?
    ஆனால் பட்டங்களுக்கு அப்பாற்பட்டு உலக மக்களின் மனதில் இதய தெய்வமாக குடி கொண்டுள்ளார் நம் உலக superstar நம் தலைவர் ரஜினி அவர்கள்.
    தலைவர் நாமம் வாழ்க!

  8. kabalidevan

    இவரு மட்டியும் அரசியலுக்கு வந்தார்னா….!!!!!!!!

  9. Rajagopalan

    why there was not even a diwali wish in our site?
    Mr Vino / Shankar – How are you? Are you fine?

  10. enkaruthu

    குமரன் அவர்கள் அருமையாக சொன்னார்.நண்பர்களே ஒரு விஷயத்தை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.தலைவர் போல் ஒரு நல்ல மனிதரை இந்த தேசம் பார்த்திருக்காது .ஆனால் இந்த தமிழ் போலி உணர்வாளர்களை நம்பாதீர்கள்.உடனே நான் தமிழான என்று சப்பை கட்ட வேண்டாம் .நான் பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவன்.ஒரு மலையாளி எம்.ஜி .ஆர் தான் தமிழ் நாட்டுக்கு நல்லது பண்ணினார்.இன்று வரை எந்த தமிழனும் நம் தமிழின தலைவர் பிரபாகரன் இறந்தாரா இல்லையா என்று சொல்லவில்லை.எங்கே தலைவர் இறந்துவிட்டார் என்று சொன்னால் நம் பொழப்பு போய்விடுமோ என்று நினைத்து இங்கு நடிப்பவர்கள் ஏராளம்.பாவிகளா தமிழருக்காக உயிரை moduth

  11. enkaruthu

    பாவம் எதயும் எதிர்பார்க்காமல் போராடிய தமிழின தலைவர் பிரபாகரன் அவ்ரகளுக்கே இந்த சீமான் தான் பிரபாகரனாக.
    இருந்திருந்தால் ஒரு சிங்களவனும் உயிரோடு இருக்கமாட்டான் என்று தன உயிர் பார்க்காமல் போராடிய பிரபாகரன் செய்ததே தவறு என்கிறான் இந்த தொண்டை நரம்பை தூக்கி பேசினால் தமிழர்கள் இவரை நம்பிவிடுவார்கள் என்று நினைக்கும் இந்த காமெடி சீமாறு .ஒண்ணுமே செய்யாமல் வெறும் தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் போராடிய வரலாறை வைத்து இவர்கள் பொழப்பு பண்ண பார்க்கிறார்கள் .அது தமிழ் நாட்டில் நடக்காது.பிரபாகரன் அவர்கள் தன் படையை விரிவாக்கம் பண்ணுகிறேன் என்று அழைத்தபொழுது சீமான் அவர்ககளே நீங்கள் என்ன சில்க் ச்மிதவிர்க்கு உங்கள் படமான சீமனில் ஆடுவதற்கு குட்டை பாவாடை எடுக்க போன்நீர்களோ .

  12. mohamed ibrahim

    மத்தியில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நதிநீர் இணைப்புக்காக தனது பங்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என்று அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அது வெறும் அறிவிப்பாகவே நிற்கிறது. இதே நடிகர்தான் ‘என் ஒரு துளி வியர்வைக்கு… ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா..’ என்று பாடி புல்லரிக்க வைத்தவர். இந்த வெள்ள பாதிப்புக்கு எந்த நிவாரண அறிவிப்பும் அவரிடம் இருந்து வரவில்லை.

  13. mohamed ibrahim

    தமிழ்நாட்டை தவிக்கவிட்ட நடிகர்கள்

    ஆந்திராவில் புயல் மழையில் மக்கள் பாதிக்கப்பட்ட போது நடிகர் சூர்யா 25 லட்சங்கள், விஷால் 5 லட்சங்கள், கார்த்தி 10 லட்சங்கள் என்று பெரும்பாலான நடிகர்கள் உதவி செய்தனர்.நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதும், தமிழக மக்களின் காவிஷா, ஈழம் போன்ற பிரச்சனைகளில் நடிகர் சங்கம் தலையிடாது, போராட்டம் நடத்தாது என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மக்களுக்கு லட்சங்களில் உதவி செய்த நடிகர்கள் எச்சக்கையை கூட தமிழக மக்களுக்காக ஆட்டவில்லையே என்று கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினி சம்பந்தப்பட்ட செய்தி என்றால் எப்போதும் ஸ்பெஷல்தான். நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்ட விஷயமாக இருந்தாலும்.
    ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இலவச பேருந்து வசதி செய்து தந்தார் ரஜினிகாந்த். அது ஒன்றும் அத்தியாவசியமான உதவியல்ல. அதேநேரம், தமிழக மக்கள் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைவர் சொந்தச் செலவில் ஒரு பைபர் போட்டாவது அனுப்பியிருக்கலாம். ஆனால், எங்கயோ யாருக்கோ என்பது போல் இன்னும் கண்டு கொள்ளாமலே இருக்கிறார். விமர்சனங்கள் தீவிரமாகும் போது தலைவர் உதவிகூட செய்யலாம். ஆனால், இவையெல்லாம் கேட்காமலே செய்யக் கூடிய உதவியல்லவா? யாரும் கேட்காமலே ஆந்திரா தலைநகர் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு பேருந்து வசதி செய்துத் தந்தவர், தமிழக வெள்ளப் பாதிக்கு இன்னும் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லையே. இது நாம கேட்கலீங்க, மக்கள் பேசிக்கிறாங்க.

  14. enkaruthu

    தம்பி இப்ராகிம் அவர்களே நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளும் அரது பழசு தலைவர் ரசிகர்கள் இதற்க்கு பதில் அளித்து சலிச்சாச்சு .சரி இந்த மலைநிவறன பணியில் இப்ராஹிமின் பங்கு என்ன என்று நான் தெரிந்துகொள்ளலாமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *