இலங்கைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கிறார்!
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி தமிழ் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.
அன்று இலங்கையில் நடந்த அட்டூழியங்களைக் கண்டித்துப் பேசுகிறார் தலைவர்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகளும் கண்டித்து உள்ளன. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று அறிவிக்கக்கோரியும், அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்து இருப்பதால் பிரச்சினை தீவிரம் அடைந்து உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற அட்டூழியங்களுக்கு எதிராக தமிழ் திரையுலகமும் கொதித்து எழுந்து இருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அதில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (‘பெப்சி’), சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், ஏப்ரல் 2-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.
உண்ணாவிரதத்தையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி நடிகர்-நடிகைகளை நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
-என்வழி செய்திகள்
வாழ்த்துக்கள் தலைவரே.. உங்கள் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள் ப்ளீஸ்.
தலைவர் தன்னுடைய ஆதரவை மட்டுமே அறிக்கை மூலமாக தெரிவித்தால் போதுமானது. அவர் தன்னுடைய உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி
நெல்லை
அன்புத் தலைவர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இருப்பினும் நண்பர் தினகர்.மற்றும் திரு.நெல்லை.அவர்களின் கருத்துதான் எனது கருத்தும்.
தலைவரின் உடலுக்கு ஏதேனும் பிரச்சனையா???
தலைவர் அவரது ரசிகர்களான என்வழி வாசகர்களின் கருத்துக்களையும் மன உணர்வுகளையம் பிரதிபலிக்கும் விதமாகப் பேச வேண்டும், அதைச் செய்தால் இந்த விஷயத்தில் ஒரு தொய்வு ஏற்படாமல் மத்திய அரசை நிர்பந்தம் செய்ய முடியும்.
வரவேற்கிறேன். அதே சமயம். ஆல் இந்திய நடிகர்களையும் அழைக்க வேண்டும். மம்மூட்டி போன்ற. நல்ல நடிகர்கள் வருவார்கள். வட இந்திய மீடியா இது தமிழ்ஸ் பிரச்சன்னை இல்லை. நாகரிக காலத்தில் நம் மனிதர்களின் பிரச்சன்னை என எண்ணத்தின் துவக்கமாக இருக்கும்.
ஷங்கர் உங்களுக்கு இருக்கும் இன்ப்லுன்சே வைத்து நடிகர் சங்கத்திடம் சொல்லிப்பாருங்கள் . வருவோர் வரட்டும்..சில நேரங்களில் சின்ன முயற்சி பெரிய பலனை தரும்.நன்றி
தலைவர் அவர்கள் போராட்டத்தில் பங்கு ஏற்றால் போராட்டம் வெற்றி பெரும். வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஆசிரியரே
சமீபகாலமாக தலைவர் பற்றிய சுவாரஸ்யமான அரிய தகவல்கள் நமது தளத்தில் வருவதில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது. மற்ற தளங்களைப் வெளியிடும் தகவல்கள் தான் நமது தளத்திலும் வருகிறது போல தெரிகிறது.
///தலைவர் தன்னுடைய ஆதரவை மட்டுமே அறிக்கை மூலமாக தெரிவித்தால் போதுமானது…///
ஆம். ரஜினி தனது தனிப்பட்ட ஆதரவை அறிக்கை மூலம் தந்திருந்தாலே போதும். அதன் வீச்சு மிகப் பெரியதாய் இருந்திருக்கும். ரஜினி இல்லாமல் நடிகர்கள் உண்ணாவிரதம் எடுபடாது.
அன்புத் தலைவர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இருப்பினும் நண்பர் தினகர்.மற்றும் திரு.நெல்லை.அவர்களின் கருத்துதான் எனது கருத்தும்.
தலைவா உங்கள் மனம் சொல்வதை செய்யுங்கள் , அதுதான் உங்கள் உடலுக்கு நல்லது.
பதிவு கலக்கல்
கமெண்ட்ஸ் column செம கலக்கல்
உங்களுக்கும் அர்ஜுன் ஸ்ரீதர் கும் உள்ள கமெண்ட்ஸ் எல்லாமே sensible லா இருக்கு தல.. ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு கொடுக்குற ஆதாரங்கள் பதிவ இன்னும் சுவாரசியம் ஆக்குது
– அருண்
“இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மாணவர்கள் தத்தெடுப்பு: காங்கிரஸ்”
“பிராயசித்தமா???…பரிகாரமா???”…
//எந்தவொரு செயலுக்கும் ஓர் விளைவு உண்டு . இதை தவிர்க்க முடியாது. முடிவை வேறொரு செயலினால் ஏற்படும் விளைவின் மூலம் மாற்றலாம். இதற்கு பிராயசித்தம் அல்லது பரிகாரம் ஆகும்.
சக மனிதர்களோடு நலனில் நாம் இடையூறாக நின்று அவர்களுடையநலன் பாதிக்கும் பட்சத்தில் அந்த மனிதர்களின் நலனுக்காக திரும்பவும் உழைத்தல் பிராயசித்தம் ஆகும்.
தன்னுடைய சொந்த நலன் பாதிக்கும் பொழுது நமக்கு மேற்பட்ட சக்தியை நம்பி நாம் பாதிக்க படாது இருக்க செய்யபடும் பிரார்த்தனை பரிகாரம் ஆகும்.
பரிகாரத்தை விடவும் பிராயசித்தம் முக்கியதுவம் பெறுகிறது.
முதலில் பிராயசித்தம் செய்து நம் நலனில் பலன் பார்க்கலாம். பிறகு பரிகாரம் செய்யலாம்.- நன்றி: தமிழ் மனம்//
பிராயசித்தமா…பரிகாரமா…
ஹிஹும்.. ஹிஹும்…ஹிஹும்… எப்படியோ காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் அளவிலாவது,நன்மை கிட்ட முயற்சி எடுத்த
நல்லமன்னார் குடி வாழ் மக்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும். “வாழ்க நல் உள்ளங்கள்”