BREAKING NEWS
Search

தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தலைவர் ரஜினி!

தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தலைவர் ரஜினி!

thalaivar-modi-2 copy

ஜினியை எல்லோரும் சந்திக்கிறார்கள்..

கட்காரி சந்தித்தார்..
அதற்கு முன் அத்வானி சந்தித்தார்
கணக்கற்று சந்தித்தார் முக ஸ்டாலின்
அடிக்கடி கலைஞரையும் சந்தித்தார் ரஜினி
ஜெயலலிதாவிடமும் பாரபட்சம் பார்க்கவில்லை

சிரிக்காத நரசிம்மராவ், அதிகம் பேசாத வாஜ்பாய், சிரித்துக் கொண்டே இருந்த மூப்பனார்… எல்லாரையும் பார்த்தவர் அவர்..

இதோ.. சில வாரங்கள் முன்பு முக அழகிரிக்கும்
மன நிறைவு தந்தார் அந்த மனிதர்…

இன்று மோடியைச் சந்தித்தார்..
நாளை ஞானதேசிகனுக்கும் ஆறுதல் தருவார்..
வைகோவுக்கும் கூட நல்வார்த்தை சொல்வார்.

பண்பட்ட மனிதனின் குணம் அது!
அவ்வளவுதான்!

அவர் ஒரு ஆலமரம்.. யாரும் இளைப்பாற அங்கு இடமிருக்கிறது.. சொந்தம் கொண்டாட முடியாது!

தேசமே தேடி வந்து சந்திக்கும் நிலையில் இருப்பவர் ஒரு தமிழர் என்பதுதான் இந்த மண்ணின் பெருமை!

உடனே ரஜினி தமிழரா என வரிந்து கட்ட வேண்டாம்… யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.. ஒப்புக் கொண்டாலும்.. கொள்ளாவிட்டாலும்…

அவர் தமிழர்தான்!

கிருஷ்ணகிரியில் பிறந்து, சென்னையில் காலூன்றி, எவ்வளவோ அயல் வாய்ப்புகள் வந்தாலும் புறந்தள்ளி, தமிழ் மண்ணில் தன் வாழ்வை நிலை நிறுத்திக் கொண்ட தமிழன்.. இந்த அன்புள்ள ரஜினிகாந்த்!

 

என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *