BREAKING NEWS
Search

ஒரே நாளில் 220 பக்க கபாலி ஸ்க்ரிப்டை படித்து முடித்த சூப்பர் ஸ்டார்!

ஒரே நாளில் 220 பக்க கபாலி ஸ்க்ரிப்டை படித்து முடித்த சூப்பர் ஸ்டார்!

thalavar-img
பாலி படத்துக்காக ரஞ்சித் உருவாக்கி 220 பக்க முழு ஸ்க்ரிப்டையும் ஒரே நாளில் படித்து, அதிலிருந்த வசனங்களையும் சொல்லிக் காட்டி இயக்குநர் ரஞ்சித்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், “ரஜினி சார்கிட்ட கபாலி படத்தின் திரைக்கதை,வசனத்தின் தொகுப்பைக் கொடுத்தேன்.

‘சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து நான் ஸ்கிரிப்ட் படிச்சதே இல்லை. ப்ளட் ஸ்டோன் படத்துக்கு மட்டும்தான் படிச்ச ஞாபகம்.அதுக்குப் பிறகு இப்போதான் ‪‎கபாலி‬ ஸ்கிரிப்ட் படிக்கப்போறேன்’னு சொன்னார்.

220 பக்கங்களையும் படிச்சு முடிக்க ஒரு வாரத்துக்கும் மேல ஆகுமேன்னு நான் நினைக்க, மறுநாளே என்னை வரச்சொன்னார்.

‘ரஞ்சித்… அந்த இன்டர்வெல் ப்ளாக்குக்கு முன்னாடி வர டயலாக்கை இப்படிப் பேசலாமானு பாருங்கனு சொல்லி, படத்தின் பல சூழ்நிலைகளுக்கான வசனம், ரியாக்க்ஷன்களை நடிச்சுக் காண்பிச்சார்.

ஒரே நாளில் மொத்த ஸ்கிரிப்ட்டையும் கரைச்சுக் குடிச்சு,அதுக்கு ஹோம்வொர்க்கும் பண்ணிட்டார்னு நினைச்சாலே ஆச்சரியமா இருந்தது. சில முக்கியமான திருப்புமுனைக் காட்சிகளில் அவர் இப்படி எல்லாம் நடிச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சிருந்தேன். அதை அப்படியே நடிச்சுக் காண்பிச்சார். நான் அசந்துட்டேன். ‘கபாலி’யை அந்த அளவுக்கு மனசுக்குள் உள்வாங்கிட்டார்.

ஆனாலும், எனக்குத்தான் அவரை எப்படி ஸ்பாட்ல ‘டேக்… கட்’ சொல்லி நடிக்கவைக்கிறதுனு தயக்கமா இருந்தது. ஆனா,  போட்டோசெஷன் நடந்தப்ப அந்தத் தயக்கத்தையும் போக்கிட்டார். அந்த ஷூட் முழுக்க என்கூடவே நின்னு என்கூட சகஜமா பழகி, ஜோக் பண்ணி என் கூச்சத்தைப் போக்கிட்டார்.

சினிமா இமேஜ் பத்தி கவலைப்படாமல் வெளியிடங்களுக்கு வெள்ளைத் தாடியோடு வர்றதுதான் ரஜினி மேஜிக். ஆனா, சினிமாவுல அவர் நிஜ வெள்ளைத் தாடியோடு நடிச்சது இல்லை. ‘கபாலி’யில ஒரிஜினல் தாடியோடு நடிக்கணும்னு அவர்கிட்ட சொன்னேன்.  ‘எதுக்கு?’னுகூட ஒரு வார்த்தை கேட்கலை. தாடியை ட்ரிம் பண்ணாம வளர்ப்பதில் மும்முரமாகிட்டார்.

‘கபாலி’யில் ரஜினிக்கு ரெண்டு வேடங்கள்னு பரவுற தகவல்கள்ல உண்மை இல்லை. ஒரே கேரக்டர்தான். ராதிகா ஆப்தே, தன்ஷிகா,  ‘அட்டகத்தி’ தினேஷ், கிஷோர், கலையரசன், ரித்விகானு பலர் நடிக்கிறாங்க. இவங்களைத் தவிர சீன நடிகர் ஒருவர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

‘கபாலி’ – ரஜினி ரசிகர்களுக்கும்… தமிழ் சினிமாவுக்கும் செம ட்ரீட்டா இருக்கும்!,” என்று கூறியுள்ளார்.

-என்வழி
5 thoughts on “ஒரே நாளில் 220 பக்க கபாலி ஸ்க்ரிப்டை படித்து முடித்த சூப்பர் ஸ்டார்!

 1. S.Karuppasamy

  என்னமோ ஜி படம் பட்டைய கிளப்புன போதும் எங்களுக்கு அதாவது தலைவரோட அன்பு உள்ளமான நமக்கு தான் என்ன நான் சொல்றது
  சரிதானே!

  ஸ்டில் பார்த்து பலர் பொறமைபடுவர்கள்

  சும்மா அதிருதுல்லே

 2. Rajagopalan

  This anantha vikatan makes money on puting thalaivar news.
  But after the release on thalaiar movie, these vikatan people writes some nonsense
  in the name of reviews….

 3. jegan N

  Vera level nu oru word iruku……….thalaivar Ku ithu Vera level padama amayaum…..padathoda success paathutu pala singaravelan kal niraye per thunda kaanom thunia kaano. Nu odanum…

 4. Anu

  விஜயோட புலி தலைவர் , விக்ரமோட படங்கள விட மிஞ்சி விட்டதாக pesugirargal….. புலி எலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *