BREAKING NEWS
Search

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 5 கோடி நிவாரணப் பொருள்கள்… ரஜினி & குடும்பத்தினர் ஏற்பாடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி குடும்பத்தினர் ரூ 5 கோடி நிவாரணப் பொருள்கள்!

rajini-help
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கு உதவ ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு கடந்த டிசம்பர் முதல் தேதி ரூ 10 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த், அதன் பிறகு பெய்த பெருமழை, சென்னை – கடலூரைத் தாக்கிய வரலாறு காணாத வெள்ளத்துக்குப் பிறகு தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருள்களை அனுப்ப உத்தரவிட்டார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்தில் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் நேரில் இருந்து இந்த உதவிப் பொருள்களை கடந்த 5 நாட்களாக விநியோகித்து வருகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நிவாரண உதவி மையமாக மாறியுள்ளது.

உதவி கேட்டு ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரும் அனைத்து மன்ற நிர்வாகிகளும் வுண்டர்பார் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் கொண்டு வரும் வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

fans-2

சென்னையில் நிவாரணப் பொருள்கள் கிடைப்பது கஷ்டமாக இருப்பதால், ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன.

போர்வைகள், புதிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடைகள், நாப்கின்கள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், பிரட், பால் போன்ற உணவுகள், ப்ளீச்சிங் பவுடர், கொசுவர்த்தி, அத்யாவசிய மருந்து மாத்திரைகள், வெள்ளத்தால் அனைத்தையும் முற்றாக இழந்தவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை ரசிகர்கள் மூலமே விநியோகிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளதாக ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர்.

fans -3

நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் தனுஷ் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களுடன் கைகோர்த்துள்ளனர்.

ஆர்பிஎஸ்ஐ என்ற பேஸ்புக் ரசிகர்கள் குழு மூலமும் உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

fans-1

சென்னை மற்றும் தமிழகத்தின் மழை வெள்ள துயரம் காரணமாக டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதேபோல வெள்ள நிவாரண உதவிகளை விளம்பரமின்றி அமைதியாகச் செய்ய வேண்டும் என குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே கடந்த 5 நாட்களாக இந்த வேலைகள் நடந்து வருகின்றன.

-என்வழி
23 thoughts on “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 5 கோடி நிவாரணப் பொருள்கள்… ரஜினி & குடும்பத்தினர் ஏற்பாடு!

 1. Rajagopalan

  I hope this is true…
  what else to say on this….
  I guess still rajini has got bad name on this issue…coz except here, no where else this news came…
  After seing the news that thalaivar pays only 10 lakhs, i was frustrated to the core…
  since even actors like lawrence are shelling out 1 crore…

 2. Syed

  தலைவர் தமிழக மக்களுக்கு எதாவது செய்வேன் என்று கூறுகிறார், இப்பொழுது. அதற்கான சந்தர்பம். அமைந்தும் தலைவர் அமைதியாக இருப்பது ஏன் , என்னை போன்ற ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக இருக்கின்றது .

 3. jegan N

  Vino Anna…..intha visayathil..thalaivar name rempo spoil panranga…..unmai nilai ungalai ponta press people Ku terium…can u Pl post real cover story on this matter …and wat other actors have done???so that v ll share that to the maximum

 4. anbudan ravi

  வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்பதில் உறுதியாய் இருப்பவர் தலைவர்….குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும் இறுதியில் உண்மையே வெல்லும்.

  அன்புடன் ரவி.

 5. Prasanna

  shame few thalaivar fans also failed to understand thaliavar for all I can say dey r not thalaivar fans. dey want proof and publicity what thaliavar did for tn being thalaivar fans club members from 1985 I ll say only thing thalaivar never do many things without publicity. so sad few thalaivar fans r immatured.

 6. Kumar

  ஏன் நீங்கள் ஒன் இந்தியாவில் எழுதவில்லை? என் வழியில் மட்டுமே இந்தச்செய்தி வந்துள்ளது… அதுவும் மிக தாமதமாக! அதற்குள் தலைவரின் இமேஜ் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இது தான் அவர் தமிழக மக்களுக்கு செய்யும் உபகாரமா என்று மிகவும் கேவலமாக விமர்சிக்கிறார்கள். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்வேன் என்று அவ்வப்போது தலைவர் சொல்கிறார். அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வந்தபோது, ஏன் வெறும் 10 லட்சத்தோடு நிறுத்திவிட்டார் என்று புரியவில்லை. எல்லா விஷயங்களிலும் இப்படி அஅமைதியாகவும் இருந்து தன் பெயரை தானே கெடுத்துக்கொள்கிறார். முகநூலில் இவரைப்பற்றி வரும் கமென்ட்களை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது!

 7. Rajagopalan

  I also has the same thoughts like Mr Kumar…
  Now we are in a very fast & interconnected life through technology…
  Valadhu Kai, Edadhu Kai ellam enime udhavadhu…
  When thalaivar entered movie industry, i was born (1975) …I was very arrogant about being an thalaivar fan…I will support & fight for thalaivar with all my friends, wife & mother…
  But in this issue, when they are questioning me, iam not able to answer…

 8. Rajagopalan

  Also Mr Shankar, you had itself written that Thalaivar gave only 10 Lakhs in Thats tamil & you had Criticized him…

 9. hussain

  தலைவருக்கு இன்னும் நேரம் இருக்கின்றது உதவி செய்வதற்கு, சங்கர் மற்றும் மன்ற நிர்வாகிகள் தற்பொழுது உள்ள சூழ்நிலையை தலைவருக்கும் அவரது குடும்பத்தினற்கும் தெரியபடுத்துங்கள்., அதை விட்டுவிட்டு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்பது போன்ற சமாதான வார்த்தைகள் வேண்டாம்., 10 லட்சம் கொடுத்தபோது எல்லோருக்கும் தெரியும் வகையில் தானே தலைவர் கொடுத்தார்., இனிமேல் செய்யும் உதவிகள் அனைவருக்கும் தெரியும் வகையில் இருக்கவேண்டும் ., நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகன்.

 10. srikanth1974

  \\ஏன் நீங்கள் ஒன் இந்தியாவில் எழுதவில்லை? என் வழியில் மட்டுமே இந்தச்செய்தி வந்துள்ளது//

  இல்லை நண்பரே! நேற்றைய தின தந்தி யிலும் இந்த செய்தி
  வெளிவந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 11. Gokuladass

  ஏன் நீங்கள் ஒன் இந்தியாவில் எழுதவில்லை? – Please reply..

 12. Rajagopalan

  Sorry Mr Shankar, as per reports in all media now, Thalaivar had given / agreed to give to 10 C it seems… But in Thats Tamil , you had written it is a rumor…
  I dont know what to beleive…
  But If thalaivar did not done as per your news, he is getting his name spoiled further (already spoiled)…that too almost in his fag end of carrier… we have to accept the facts…
  Endhiran 2 issue because of Lyca, now this….
  I hope thalaivar do something on this…
  I sincerely dont want thalaivar to spoil his name….

 13. yaseenjahafar

  நானும் ஒரு ரஜினி ரசிகன் தான் ஆனால் ஏன் பணம் கொடுக்க வில்லை கோடி ருபாய் அது தான் பேச்சா இருக்கிறது இப்பொழுது சிஸ்யியன் கொடுக்கும் பொழுது குரு ஏன் கொடுக்க முடியாது இப்ப நமது சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களால் பிற பலம் அடைந்தவர் இந்த நேரத்தில் கொஞ்சம் கருணை அதிகம் காடினால் நன்றகா இருக்கும் தலைவர் விளம்பரம் வெறும்ப மாட்டார் என்பது ஒரு கேள்வி போனது போகட்டும் இருக்கும் நேரம் இன்னும் அதிகம் கொடுக்க வேண்டும் இந்த தமிழ் மக்களுக்கு அது தான் எங்கல் விருப்பம் சமயத்தில் தலைவர் கமலை பேஸ் பண்ணுவார் அவர் எவளவு கொடுப்பர் என்று பார்பார் பிறகு இருவரும் முடிவு பண்ணுவார்கள் ஆனால் இப்ப கொடுப்பதற்கு கமல் இடம் ஒன்றும் இல்லை ஆதலால் ரஜினியும் குறைத்து கொடுக்கிறார் அப்படி ஒன்றும் இல்லை என காட்ட வேண்டும் highest paid actor in asia after jackey chan அது போல இதிலயும் காட்டினால் இன்னும் நன்றகா இருக்கும் தமிழ் மக்கள் மீகவும் அவதி படுகிறார்கள் கொஞ்சம் குறல் கொடுன்கள் உங்களை தவிர யார் தெரியும் இந்த தமிழ் மக்களுக்கு நீங்கல் தான் செய்ய வேண்டும்

 14. yaseenjahafar

  இது உண்மையன தகவல இருந்தால் இதை விட சந்தோசம் எந்த ரசிகரும்
  இருந்து இருக்க மாட்டார்கள் இதை நீன்கால் நீரூபியுங்கல்

 15. yaseenjahafar

  மற்றவர்கள் கேவலமாக பேசாமல் ஏதாவது செய்ய வேண்டும் பணம் மட்டும்
  சம்பாரித்து என்ன பயன் தமிழ் மக்களுக்கும் செய்ய வேண்டும் ஊடகதுக்
  தெரிய வேண்டாம் என்றால் என்ன அர்த்தம் ஒன்றும் புரிய வில்லை வினோத் அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் ரஜினி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்

 16. Siva

  எனது ஆபீஸ் நண்பர்கள் அனைவரும் , ரஜினியை அள்ளி கொடுக்க மனமில்லாதவர் என ஏலேனம் செய்கிறார்கள் ………… இது போன்று சொல்வது முதல் முறை அல்ல ……

 17. yasinjahafar

  ரஜினிக்கு இது தான் முகியமான நாள் சந்தர்பம்மான நாள் இது மாதரியான செய்ய வேண்டும் அது தான் முக்கியம் இதை விட்டு விட்டு மிஸ் பண்ணி விட்டார்

 18. மிஸ்டர் பாவலன்

  ரஜினி கொடுத்தது பத்து லட்சம்..
  கமல் கொடுத்தது பதினைந்து லட்சம்…

  ரெண்டு பேர் கொடுத்ததும் ரொம்ப கம்மி.. ஆனால் கமல்
  தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில்
  சூப்பர் ஸ்டார் ரஜினி அதிகம் கொடுத்திருக்கலாம்..

  ஷா ரூக் கான் ஒரு கோடி கொடுத்தது அவர் பெரிய மனது..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 19. சேரன்

  ராகவேந்திரா மண்டபத்தில் 1000 துப்புரவுப் பணியாளர்களுக்கு தங்குமிடம்.. ரஜினி ஏற்பாடு! சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த். வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி. இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *