BREAKING NEWS
Search

மகா சொதப்பலாய் நடந்த ஐ இசை வெளியீட்டு விழா… மானம் காத்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

மகா சொதப்பலாய் நடந்த ஐ இசை வெளியீட்டு விழா… மானம் காத்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

Shankar's I Audio Launch Stills (6)

ஆடியோ வெளியீட்டு விழா மகா சொதப்பலாக நடந்து முடிந்தது. ரஜினி என்ற ஒரு மாமனிதர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், இந்த நிகழ்ச்சி அத்தனை கேவலப்பட்டிருக்கும். அந்த மனிதரும் பொறுமையின் சிகரமாய் அமர்ந்து, ஷங்கர் மானத்தைக் காப்பாற்றிவிட்டுத்தான் போனார்.

மாலை 3.30 முதல் 5.30-க்குள் அரங்குக்குள் வந்துவிட வேண்டும் என ஸ்கூல் பிள்ளைகளுக்குச் சொல்வது போல், நிபந்தனை விதித்திருந்தார்கள் அந்த டிக்கெட்டில் (நல்ல வேளை.. நிகில் உதவியாளர் அறிவுரைப்படி மாலை 5.30 மணிக்குப் போனேன். 3.30 மணிக்கே போயிருந்தால் நிலைமையை யோசித்துப் பாருங்கள்!)

5.30 மணியிலிருந்து வெறும் சப்தங்களைத்தான் இசை என்ற பெயரில் கேட்டுக் கொண்டிருந்தோம். 6 மணி தாண்டி, 6.45 மணி கடந்தது. தனக்குச் சொன்ன நேரத்துக்கு ஒரு நொடி கூட தாமதிக்காமல் சரியாக 6.45க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தார். வந்தவரை 1 மணி 17 நிமிடங்கள் காக்க வைத்தனர்.

அவ்வப்போது ரஜினியின் பஞ்ச் வசனங்கள், அவர் படங்களின் மறக்க முடியாத பின்னணி இசைத் தொகுப்புகளைப் போட்டு அவருக்கே சீன் காட்டினர். அவர் பார்க்காத சீனா.. இந்த நிகழ்ச்சியின் போக்கைப் புரிந்து, ஒரு சித்தரைப் போல சலனமின்றி அமர்ந்திருந்தார்.

ஆடியோவை வெளியிட வரவழைக்கப்பட்டிருந்த அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் 7.45-க்கு வந்தார். அவர் இவர்களுக்கு ஒதுக்கியிருந்த நேரம் 120 நிமிடங்கள் மட்டுமே. இடையில் இவர்களே ஏற்பாடு செய்த டிவி பேட்டி வேறு. அட, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அர்னால்டுக்கும் சரியான இருக்கையையாவது ஒதுக்கியிருக்கலாமே.. அதையும் செய்யவில்லை. நடுவில் ஷங்கர்… இருபக்கமும் ரஜினி, அர்னால்ட். இதனால் இந்த இரு பெரும் நட்சத்திரங்களையும் ஒன்றாக அமரவைத்து தரிசிக்கும் பாக்கியம் சினிமா ரசிகனுக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை.

Shankar's I Audio Launch Stills (29)
விழாவுக்கு வந்த அர்னால்ட், இவர்களின் அலப்பறை மற்றும் சொதப்பலில் ‘மெர்சலாகி’ப் போனார் என்பதே உண்மை. அவரிடம் நிகழ்ச்சி விவரங்களைக் கூட சரியாக சொல்லாமல் விட்டிருக்கிறார்கள்.

அந்த பாடி பில்டர் ஷோ முடிந்ததுமே, இதுதான் சரியான நேரம் என்று மேடைக்குப் போய் பேசத் தொடங்கினார். அதையும் ஆரம்பத்திலேயே நிறுத்தி, ‘நீங்க அப்புறம் பேசலாம்’ என தொகுப்பாளர்கள் சொல்ல, ‘விடுங்க இது என் பாணி’, என்று கூறியவர், சில வரிகள் மட்டும் பேசிவிட்டு, சட்டென்று பாதியில் கிளம்பி… போயே போய் விட்டார்.

எனக்கு அப்போதே ஏதோ அசாதரணமாய் தெரிந்தது, ஆடியோவை அர்னால்ட் வெளியிட சூப்பர் ஸ்டார் பெற்றுக் கொள்வார் என்று கூறியவர்கள், அடுத்த நொடியே, சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்வார் என தோசையைத் திருப்பிப் போட்டனர். விழா அம்பேல்!

இந்த வெளியீட்டு சடங்கு முடிந்து மேடையிலிருந்து இறங்கும்போது, ‘ஷங்கர்… முடிஞ்சிடுச்சில்ல.. நான் கிளம்பட்டா’ என ரஜினி கேட்கிறார். ஷங்கரோ ‘இன்னும் பாதி கூட முடியல.. வாங்க சார்’ என அழைக்கிறார். வேறு வழியின்றி நட்பை மதித்து மீண்டும் தன் இருக்கைக்குப் போய், ஏ ஆர் ரஹ்மான் பியானோ இசைக்க, ஒரு அரைவேக்காட்டு குரலை, கேவலமான தமிழ் உச்சரிப்பில் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ரஜினிக்கு!

விழாவில் கடைசி வரை அமர்ந்து ஆடியோ மற்றும் ட்ரைலரைப் பார்த்து, மணிக்கணக்கில் அமர்ந்திருந்து வாழ்த்திப் பேசிச் சென்றவர் ரஜினி மட்டும்தான்.

நிகழ்ச்சியைத் தொகுத்த இருவரையும் (சின்மயி, பாபி சிம்ஹா) குறைந்தபட்சம் நான்கு நாட்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் நிற்க வைக்க வேண்டும். குறைந்தபட்ச நாகரீகமோ, மரியாதையோ தெரியாதவர்கள். ஜெயா டிவிக்காக நிகழ்ச்சியை ஜவ்வாக இழுத்ததைக் கூட மன்னிக்கலாம்… ஆனால், தலைவரிடம் போய், “தலைவா..” எனக் கூவியபடி, “விக்ரம் பத்திப் பேசுங்க” என்று கேட்க, அவர் சட்டென்று, “அதான் ஸ்டேஜில் பேசப் போறேனே.. போங்க” என்று பட்டென்று திருப்பிச் சொன்னதை என்னவென்பது!

மிகுந்த உற்சாகத்துடன் மைக்கில் பேச ஆரம்பித்த அர்னால்டிடமிருந்து, கிட்டத்தட்ட மைக்கைப் பிடுங்கியது எத்தனை பெரிய அவமானம்!

படத்தின் நாயகன் விக்ரமால் குறைந்தபட்சம் ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை அர்னால்டுடன், இந்த நிகழ்ச்சியில்! ஆனால் ஜிம்முக்குப் போய் சூர்யா அந்த பெருமையைத் தட்டிக் கொண்டார். இதானா உங்க டக்கு!

இந்த நிகழ்ச்சி இப்படி சொதப்பியதற்கு முழு காரணமும் ஏற்பாட்டாளர்களே. ரஜினி, அர்னால்ட் எனும் இரு பெரும் சாதனையாளர்களை அவர்கள் அவமதித்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு.

நிகழ்ச்சி முடியும் முன்பே மகா கடுப்புடன் வெளியில் வந்தால்… பெரும் மழை… அதை ரசிக்க முடியாத மனநிலையோடு வீடு வந்து சேர்ந்தோம்.

ஐ படம், இந்த நிகழ்ச்சி மாதிரி இல்லாமல் இருக்கட்டும்!

-வினோ
என்வழி




12 thoughts on “மகா சொதப்பலாய் நடந்த ஐ இசை வெளியீட்டு விழா… மானம் காத்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. R O S H A N

    சூப்பர் வினோ ஜி……..அங்க நடந்தத அப்படியே எழுதியிருக்கீங்க……என் friend நேத்தே பாத்துட்டு சொன்னான்……தலைவரையும் அர்னால்டயும் அவமாணபடுதிட்டாங்க டா…….அதுவும் சிம்ஹா போயி அர்னால்ட பேச விடாம மைக் மறச்சது எல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்……சின்மயி கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம தலைவர எதோ சின்ன நடிகர் மாதிரி உங்க கருத்த சொல்லுங்க நு சொன்னதெல்லாம் டூ மச்…….

    ஹோஸ்ட் பண்ண சொன்னா ஓவர் advantage எடுத்துகுறது…..சின்ன பசங்கள எல்லாம் விட்டா இப்படி தான் 🙁 ஆக மொத்ததுல organisers சொதப்பு சொதப்பு நு சொதப்பி பெரிய பெரிய லெஜெண்ட்ச அவமதிச்சுருக்காங்க……..தலைவர் மட்டும் இல்லாம இருந்திருந்த கேவலமா இருந்திருக்கும்….ஷங்கர் காக தலைவர் வந்து இருந்து சிறப்பிச்சுடு போயிருக்காரு………

  2. Manoharan

    ஆஸ்கர் ரவிசந்திரன் எப்போதுமே சொதப்பல் திலகம்தான்.

  3. கிரி

    இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு எந்த முன் மேடை அனுபவமும் இல்லாத பாபி சிம்ஹாவை எப்படி ஒப்புக்கொண்டார்கள்!!

    தலைவர் ஷங்கருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்.

  4. மிஸ்டர் பாவலன்

    உலக நாயகன் இந்த “ஐ” படத்தின் இசை வெளியீட்டு விழாவை
    தவிர்த்தது அவரது ஏழாவது அறிவைக் காட்டுகிறது.

    அறிவுடையார் ஆவதறிவார்.. நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  5. s venkatesan, nigeria

    இயக்குனர் ஷங்கர் சுயநலவாதி போல தெரிகிறது. நடுவில் ஆர்னொல்ட் உட்கார்ந்து இருந்தாலும் பரவாயில்லை. இந்த போட்டோவை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. தலைவர் பெருந்தன்மையாக இருப்பதால் ரசிகர்களும் பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

  6. naarathar

    “உலக நாயகன் இந்த “ஐ” படத்தின் இசை வெளியீட்டு விழாவை
    தவிர்த்தது அவரது ஏழாவது அறிவைக் காட்டுகிறது.”

    இதில் ஏழாம் அறிவுக்கும் எட்டாம் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…

    கால சக்கரத்தில் கடந்துவிட்ட சில கடமைகளையும் கடன்பட்டவர்களையும் மறந்துவிடுவது ஏழாவது அறிவை மட்டுமல்ல அவர்களது சுய அறிவையும் காட்டாது ??
    இதில் உயர்ந்த பண்பாளர்கள் மட்டுமே பகுத்தறிவுடன் பக்குவமாய் நடந்துகொள்வார்கள்…

    அறிவிலார் யாதரிவார்….நாராயணா ! நாராயணா !!

  7. anbudan ravi

    எதற்காக அர்னால்ட் என்பதே எனது கேள்வி. விளம்பரத்திற்கு தலைவர், அமிதாப், மம்மூட்டி மற்றும் சிரஞ்சீவி போதுமே….அகில இந்தியர்களுக்கும் ஒரே நாளில் இந்த படத்தை பற்றி கொண்டு செல்லலாமே…..

    அதோடு, என்னதான் மிகப்பெரிய உலக நட்சத்திரமாக இருந்தாலும் ஒருவருடைய தனி மனித நடவடிக்கைகளையும் உற்று நோக்கும் மனப்பான்மை அனைவரிடமும் இருக்கும்….அமெரிக்கர்களும் இதற்க்கு விதி விலக்கல்ல. அர்னால்டின் குடும்ப வாழ்க்கை சந்தி சிரித்து அவரை அமெரிக்கர்களே வெருத்துவிட்டனர். அப்படி இருக்க அவருக்கு வெற்றிலை பாக்கு வைத்து பல கோடிகள் செலவு செய்து அழைத்தது வந்தது மிகப்பெரிய கொடுமையான வீணான செயல். இந்தியாவில் யாராவது ஒழுக்க கேடான நடிகர் இருந்தால் அவரை நாம் மதிப்போமா?
    வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மனப்பான்மை இன்னும் நம்மிடம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

    எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஒரு குழந்தையாய் வீற்றிருந்த தலைவரை நம்மால் பாராட்ட முடியுமா…….

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *