BREAKING NEWS
Search

மனோரமாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் அஞ்சலி

மனோரமாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் அஞ்சலி

DSC_3739

சென்னை: நடிகை மனோரமா மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

79 வயதான ஆச்சி மனோரமா, இன்று அதிகாலை மாரடைப்பால் சென்னையில் மரணமடைந்தார்.

ரஜினியுடன் பல படங்களில் நடித்தவர் மனோரமா. பில்லா, பாயும் புலி, குருசிஷ்யன், மன்னன், எஜமான், அண்ணாமலை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர்.

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ரஜினியை மனோரமா விமர்சித்துப் பேசி, பட வாய்ப்புகளே இல்லாமலிருந்த நேரத்தில், தனது அருணாச்சலம் படத்தில் வாய்ப்பளித்தார் ரஜினி.

மனோரமா உடல் நலம் குன்றியிருந்தபோது, அவரை நலம் விசாரித்த ரஜினி, அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது கேட்டு வந்தார்.

இன்று மனோரமா மரணச் செய்தி அறிந்ததும், தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ரஜினி தெரிவித்ததோடு, நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தினார்.

என்வழி




One thought on “மனோரமாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *