BREAKING NEWS
Search

‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி

என் நண்பர் சோ! – ரஜினி

rajini-cho2
சென்னை: மறைந்த அரசியல் விமர்சகர், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பன்முகம் கொண்ட ஆளுமையான சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.  அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சோவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியளர்களிடம் கூறுகையில், “1978-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு சோ நல்ல நண்பர். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன்.
rajini-cho
பத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர். பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர். அவர் பொய் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல, டெல்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். இவ்வளவு பெரிய மனிதரின் இழப்பு சாதாரணமானது இல்லை,” என்று கூறினார்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படம் வெளியானபிறகு, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த ரஜினி, முதன் முதலாக சோ ராமசாமியை நேரில் அழைத்து அவருக்கு ‘கபாலி’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த சோ, ரஜினியை வெகுவாகப் பாராட்டினார். இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணுவைப் பாராட்டினார்.

-என்வழி




5 thoughts on “‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி

  1. srikanth1974

    நம் அன்புத் தலைவருக்கு ஒரு சிறந்த நண்பராகவும்,ஆலோசகராகவும் விளங்கியவர்
    நம் தலைவர் ஒருசில நபர்களாலும் சில பத்திரிகைகளாலும்,கடுமையான விமர்சனங்களால் வறுத்தெடுக்கப்படும் காலங்களில் எல்லாம் தலைவருக்கு ஆறுதலாகவும்,ஆதரவாகவும் துணை நின்றவர் அமரர்; சோ .ராமஸ்வாமி
    அவர்கள். அவரின் ஆன்மா’ சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
    வருத்தத்துடன்
    ஸ்ரீகாந்த் பரமேஸ்வரன்

  2. Rajagopalan

    December Madham Tamil natuku ennum ethanai thuyarangalai / sedharangalai thara pogiradho….
    Andava…

    Sunami, Floods, Amma & Cho…

  3. Rajagopalan

    How r u boss? Power came to your area?
    Hope everything is safe at your end.
    We got power yesterday only.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *