BREAKING NEWS
Search

சென்னையில் தலைவர் ரஜினி… கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்!

சென்னையில் தலைவர் ரஜினி… கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்!

rajini-karu

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பினார். இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மைசூரில் கடந்த 35 நாட்களாக லிங்கா படப்பிடிப்பில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இன்று அவர் சென்னை திரும்பினார்.

முதல் வேலையாக தனது நெருங்கிய நண்பரான திமுக தலைவர் மு கருணாநிதியைச் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி ஆகும். அன்றும் அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

இருந்தாலும் இன்று நேரிலும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்தத் தகவலை கருணாநிதியே பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தெரிவித்து படத்தையும் வெளியிட்டுள்ளார்.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *