BREAKING NEWS
Search

கோவையில் தலைவர் ரஜினி… சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்!

கோவையில் தலைவர் ரஜினி… சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்!

11225257_827098264010788_760986758883221170_n

கோவை: நேற்று கோவை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்.

பெங்களூரில் நடந்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் மகள் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி, அங்கிருந்து நேராக கோவை சென்றார்.

நேற்று காலை  10.45 மணிக்கு விமானத்தில் கோவை வந்த அவர், ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்ய குருகுல ஆசிரமத்திற்கு காரில் சென்றார். அங்கு சுவாமி  தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்.

ஆசிரம வளாகத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி, முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர்  தயானந்த சரஸ்வதியுடன் சில நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். மதியம் 2.45 மணிக்கு காரில் பீளமேடு விமான நிலையம் வந்து விமானத்தில் சென்னை புறப்பட்டார்.

rajini-kovai2

சில ஆண்டுகளுக்கு முன் ஆனைகட்டி ஆசிரமத்தில் தங்கி ரஜினிகாந்த் தியான பயிற்சி பெற்றது நினைவிருக்கலாம்.

ரஜினியின் ஆன்மிக குருவான தயானந்த சரஸ்வதி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நல குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

rajini-kovai1

குணமடைந்த அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவே ரஜினி திடீரென நேற்று வந்துள்ளார். அவரது வருகைபற்றி யாருக்கும் தெரியவில்லை.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் ரஜினி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதியை சந்திக்க வந்தேன், வேறு ஒன்றுமில்லை’’ எனக் கூறி புறப்பட்டார்.

-என்வழி




3 thoughts on “கோவையில் தலைவர் ரஜினி… சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்!

  1. ஸ்வேதா ரவி

    நான் வணங்கும் தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.
    தலைவா உங்கள் வருகை தான் எங்களுக்கு உயிர் துடிப்பு.
    நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  2. குமரன்

    சிங்காரவேலன் கொடுக்கும் தொடர் தொந்தரவும், மன உளைச்சலும் தாங்காமல் தலைவர் சுவாமிகளைத் தரிசனம் செய்து தியானம் செய்து மன அமைதி பெற வந்தார் என்று கூறுகிறார்கள்.

    அவர் மன அமைதியுடன் உடல் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்.

  3. siva

    டியர் மனோ,
    என்ன தான் நடக்குது லிங்க படத்தில தலைவருக்கு .
    மீடியா டெய்லி கிவ் வ்ரோங் மெசேஜ்
    நீங்க எல்லாரும் என்னதான் பண்ணிட்டு இருகீங்க
    நீங்க இப்படி நியூஸ் தலைவர் அப்டேட் எல்லாம் ஓகே தான்
    பட் டூ சம்திங்
    ப்ளீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *