BREAKING NEWS
Search

இன்று தலைவர் ரஜினி – லதா 34வது திருமண நாள்!

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி – லதா 34வது திருமண நாள்! – வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்

rajini-latha1

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – லதா தம்பதியரின் 34வது திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள்  திரண்டனர்.

திரையுலகில் பிற நடிகர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் உதாரணமாகத் திகழும் தம்பதியர் ரஜினிகாந்த் – லதா.

இருவருக்கும் கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடந்தது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர வேறும் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பு தரவில்லை.

பத்திரிகையாளர்கள் நிச்சயம் வரவேகூடாது என பிரஸ் மீட் வைத்தே கூறிவிட்டார். அப்படியும் மீறிச் சென்ற பத்திரிகையாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினார் ரஜினி.

அதன் பிறகு சென்னையில் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்தினார்.

rajini-latha-spl1

ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், திரையுலகைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தாலும், குடும்பத்தைப் பொருத்தவரை ஒரு எளிய தலைவனாக, மனைவிக்கு மரியாதை கொடுத்து, அதற்கேற்ப நடக்கும் ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அன்பான தகப்பனாகத் திகழ்கிறார். கணவருக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள இல்லத்தரசியாகத் திகழ்கிறார் லதா அம்மா.

இந்த ஆண்டு திருமணம், அடுத்த ஆண்டு விவாகரத்து, அதற்கடுத்த சில மாதங்களில் மறு திருமணம்.. என்பதே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த திரையுலகிலும் சமூக சூழலிலும்… ரஜினி- லதா தமிழர்களின் உதாரணத் தம்பதியராகத் திகழ்கின்றனர்.

rajini-latha-3

இந்த ஆண்டு இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்து, 34 ஆவது ஆண்டு பிறக்கிறது. ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்ல, திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று இனிப்பு வழங்குவார் லதா ரஜினிகாந்த்.

இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலிருந்து ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.

-என்வழி




15 thoughts on “இன்று தலைவர் ரஜினி – லதா 34வது திருமண நாள்!

  1. ROSHAN , MUMBAI

    இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள் தலைவா

  2. srikanth1974

    தலைவரும்,அண்ணியாரும் நூறாண்டு காலம் வாழ அந்த ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.

    வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன் தலைவா’
    தாங்களும்,அண்ணியாரும் எங்களை ஆசீர்வதியுங்கள்.

    என்றும் உங்கள் அன்பு ரசிகன்
    ப.ஸ்ரீகாந்த்.

  3. கணேசன் நா

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தலைவா!

  4. manivannan

    என் அன்புத் தலைவா நீ வாழ்க பல்லாண்டு புன்னகை அரசன் ரஜினி மன்றம் திருவல்லிகேணி 9940364579

  5. jawahar

    இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள் தலைவா

  6. kumaran

    அன்பு தலைவருக்கு – திருமண நாள் வாழ்த்துக்கள் , many more returns .

  7. s venkatesan

    இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள் தலைவா

  8. மிஸ்டர் பாவலன்

    சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் மட்டும் இல்லாமல் அவர்
    வாழ்விலும் ஒரு நல்ல மனிதர், நல்ல ஹீரோ.
    இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள் !!

    உலகநாயகனுக்கும் இது போல் நான் வாழ்த்து தர விரும்பினாலும்
    அவர் திருமணம் என்பதிலேயே எதுவும் நம்பிக்கை இல்லாதவர்
    என்பதால் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை!

    நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  9. Deen_uk

    எனது அன்பு தலைவருக்கு எனது அன்பான திருமண தின நல்வாழ்த்துக்கள்.சீரோடும் சிறப்போடும் மகிழ்வோடும் முழு ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  10. deepa

    வாழ்த்துக்கள் ரஜினி – லதா அவர்களே.

    மிஸ்டர் பாவலன். நீங்களே உங்களுக்கு மிஸ்டர் போட்டு காமெடி பண்றீங்க.

    உலக்கை நாயகனுக்கு வாழ்த்தா? ஒரு பொண்டாட்டி என்றால் வாழ்த்தலாம். ரெண்டை கட்டிக்கிட்டு ரெண்டை கல்யாணம் கட்டாம வச்சு வாழும் மிருகம் அய்யா அவன்

    ரஜினி -க்கு மட்டும் வாழ்த்து சொல்லுங்கள்.. கண்டவர்களை பற்றி நமக்கு எதுக்கு பேச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *