BREAKING NEWS
Search

மே 20-ல் புதிய படம்… ரஜினிக்கு இரட்டை வேடம்.. நாயகிகள் அனுஷ்கா, சோனாக்ஷி … கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!

மே 20-ல் புதிய படம்… ரஜினிக்கு இரட்டை வேடம்.. அனுஷ்கா, சோனாக்ஷி ஜோடி… கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!

rajini-new

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் குறித்த உறுதியான செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

இத்தனைக்கும் இன்னும் இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவிக்கவில்லை. ஆனால் செய்தி உறுதியானதுதான் என்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ரஜினியின் நண்பர் கேஎஸ் ரவிக்குமார்.

ரஜினிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அனுஷ்கா. மற்றொருவர் சோனாக்ஷி சின்ஹா என்கிறார்கள்.

ரஜினிக்கு இரட்டை வேடம்

இந்தப் படத்திலும் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இரட்டை வேடங்களில் நடித்த அத்தனை படங்களுமே பெரும் வெற்றி என்பதால், இந்த முறையும் அதே பாணி கதையை தயார் செய்துள்ளாராம் கேஎஸ் ரவிக்குமார்.

இந்தப் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான். அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு இம்முறையும் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர் ரத்னவேலு. எந்திரனுக்கு ஒளிப்பதிவாளர் இவர்தான்.

மே 20-ல் பூஜை

படத்தின் பூஜை வரும் மே 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. அடுத்த நாளே படக்குழுவுடன் ரஜினி மைசூருக்கு செல்கிறார் படப்பிடிப்புக்காக. தொடர்ந்து 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை தயாரிப்பவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் நிறைய படங்கள் பண்ணவர். தமிழில் குத்து, மஜா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

ரஜினியின் இந்தப் புதுப்படம் தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்துடன்  தயாரிக்கப்படுகிறது.

என்ன தலைப்பு?

கே எஸ் ரவிக்குமார் இதுவரை 10 தலைப்புகளை எழுதி ரஜினியிடம் கொடுத்திருக்கிறாராம். தலைப்பை தலைவர்தான் முடிவு செய்வார் என்பதால் மற்ற வேலைகள் ஜோராக நடக்கின்றன.

-என்வழி ஸ்பெஷல்
18 thoughts on “மே 20-ல் புதிய படம்… ரஜினிக்கு இரட்டை வேடம்.. நாயகிகள் அனுஷ்கா, சோனாக்ஷி … கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!

 1. amudha

  இந்த வருட தீபாவளி? நம்பிட்டோம் 🙂

 2. kumaran

  இந்த செய்தி எப்போது என்வழியில் வரும் என்று காத்திருந்தேன் , மகிழ்ச்சி .

 3. saranya

  rockline venkatesh thaan rajini padathai thayaarikkavillai endru avare sila thinangaluku munbu koori irukkirar.

 4. மிஸ்டர் பாவலன்

  கலைச்செல்வி த்ரிஷாவிற்கு முதல் கதாநாயகி வேடம் தரலாம்.
  அனுஷ்கா இரண்டாவது கதாநாயகி வேடத்திற்கு ஓ.கே.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 5. மிஸ்டர் பாவலன்

  இளையராஜா இசை இன்றைய ரசிகர்களுக்கு ஒத்து வருமா என்பது
  சந்தேகம். உலகநாயகன் கமல் அவர்கள் இளைய இசையமைப்பாளர்களுக்கு
  சான்ஸ் குடுத்து வருவது பாராட்டத் தக்கது. நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 6. Marthu

  இந்த்ச் செய்தியை படித்தவுடன் நமது என்வழிக்குத்தான் வந்தேன்…

  வழக்கமாக வினோ செய்தியை உறிதிப்படுத்திவிடுவார், இதையும் வேகமாக உறுதிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

  அண்ணாமலை, பாட்சா, படையப்பா போல நம் தலைவரை ரசிக்க காத்துக்கிடக்கும் ரஜினி ரசிகன்

 7. மிஸ்டர் பாவலன்

  //கடைகாரர் ஒரு மாதத்தில் ஒரே ஒரு காஸ்செட் மட்டும்தான் விற்றது என்று கூறி கவலை பட்டார்.//

  கமல் ரசிகர் ஒருவர் – புலவர் அவர் – ஒரு வேளை வாங்கி இருக்கலாம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. anbudan ravi

  கோச்சடையான் ஏப்ரல் 11-ல் வெளிவரும் என்று நம்ம ஏமாற்றி விட்டார் சௌந்தர்யா. இப்பொழுது மே-1-ல் வெளி வரும் என்று செய்தி வருகிறது. இதுவும் உறுதியான செய்தியா என்று தெரியவில்லை.

  நான் சௌந்தர்யா அவர்களை குறை சொல்லவில்லை….தலைவரை தரிசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான்.

  அன்புடன் ரவி.

 9. Mahendran

  தலைவர் படம் நடிப்பது மகிழ்ச்சி! ஆனால் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பதுதான் உறுத்துகிறது! அனுஷ்காவே தலைவரின் வயதில் பாதிதான்! இருந்தாலும் அது பரவாயில்லை! ஆனால் சோனாக்ஷி மிகவும் சிறிய பெண்! ஒரு இந்தி படத்தில் தலைவருடன் குழந்தையாக நடித்தவராம்! தலைவர் ஒரு ரேஞ்சுக்கு மேல் போய்விட்டார்! அவரது வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் நடிப்பதுதான் நல்லது! அது இல்லாமல் இன்னமும் காதலிப்பது, டூயட் பாடுவது என்று நடித்துக்கொண்டிருந்தால் அதை அவரது பரம ரசிகர்கள் வேண்டுமானால் ரசிப்பார்கள்! மற்றவர்கள் கிண்டலடிப்பார்கள்! அஜித் கூட டூயட் பாடல்களை கூடுமானவரை தவிர்க்கிறார்!

 10. மிஸ்டர் பாவலன்

  //இப்பொழுது மே-1-ல் வெளி வரும் என்று செய்தி வருகிறது//

  தீபாவளி ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!

  === மிஸ்டர் பாவலன் ==-

 11. மிஸ்டர் பாவலன்

  // அவரது வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் நடிப்பதுதான் நல்லது! //

  இவர் குருவி ரசிகரா தெரியலையே!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 12. Thalaivar fan

  It looks like, no matter wat the post is about, pavalan just cant resist to talk unnecessarily abt local nayagan. 🙂

  Rajeshkv sonnathu pol, Thalaivar padathukku yaaru music director irunthalum vetri tan.
  From deva to vidyasagar, dey can deliver their best for thalaivar.
  Kamal songs never had the grandeur no matter how extravagant he tried to portray them to be. Face it.

  @Mahendran, mattavangga padthi namma yethukku kavalai padanum?
  Thalaivarukku teriyatha? Its not like they gonna b overly intimate. Just look at Endhiran, he had maintained a distance with aish who was 37 then. Their romantic scenes and duet songs r cute to watch.
  Btw, ajith actually romancing young girls while he is in old get up… Now that’s gross.

 13. மிஸ்டர் பாவலன்

  //It looks like, no matter wat the post is about, pavalan just cant resist to talk unnecessarily abt local nayagan. :)// (Thalaivar Fan )

  சூப்பர் ஸ்டாரை வாழ்த்தி நான் எழுதிய பாடலை கீழே தருகிறேன்.
  (நான் கமல், ரஜினி இருவரையும் பாராட்டி எழுதி வருகிறேன்..
  இந்த பாடல் முன்பு இதே வலையில் வெளிவந்தது)

  —-
  மிஸ்டர் பாவலன் says:
  August 3, 2012 at 11:54 am

  “பரமசிவன் ..” பாட்டு மெட்டில்…
  (சூர்யகாந்தி படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
  அதை நண்பர்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்!!)

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  சூப்பர் ஹிட்டு கொடுக்கும் போது
  இண்டஸ்ட்ரி உன்னை மதிக்கும்
  பிளாப் படம் கொடுத்து வந்தால்
  நிழலும் வெறுத்து ஒதுக்கும்

  சூப்பர் ஹிட்டு கொடுக்கும் போது
  இண்டஸ்ட்ரி உன்னை மதிக்கும்
  பிளாப் படம் கொடுத்து வந்தால்
  நிழலும் வெறுத்து ஒதுக்கும்

  “உன் வாழ்க்கை உன் கையில்” என்று
  உண்மையான ரசிகனுக்கு தலைவர் சொன்னது
  அது தலைவர் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  படம் ஓட கதையும் நடிப்பும் இரண்டுமே வேண்டும்
  அந்த இரண்டில் ஒன்றும் இல்லையென்றால்
  எந்த படம் தான் ஓடும்
  ரீமேக்கை விட்டு விட்டு படம் எடுக்க வேண்டும்
  பணிவோடும் உழைப்போடும் படம் எடுப்பது ..
  அது கடமை என்பது.. அது தலைவர் கண்டது..

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *