BREAKING NEWS
Search

ஒரு இதய நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

அதான் தலைவர் ரஜினி!
rajini-fan3
கோலாலம்பூர்: இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தார் ரஜினிகாந்த்.
ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள்.
பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர்.
rajini-fan4
இதய நோயால் பாதிக்கப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த ஒரு ரசிகர் நீண்டநாளாக ரஜினியைப் பார்க்க ஆசை கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்ட ரஜினி,  அந்த ரசிகரை நேரில் வரவழைத்து அவருடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார். மிகப்பெரிய நடிகர், பிசியான நேரத்திலும் ஒரு ரசிகரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவரை சந்தித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ரஜினி அந்த ரசிகருடன் சிரித்து பேசுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 




6 thoughts on “ஒரு இதய நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. yaseenjahafar

    மனித நேயம் படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்

  2. ரஜினி தாசன்

    சகோதரி, சீக்கிரமே குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மனித நேயம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

  3. rajaboopathi

    அன்புள்ள வினோ

    நம் தலைவர் சபரிமலை சென்று இருக்கங்களா?

    நாளை கார்த்திகை ஒன்று ……..

    அன்புடன்
    பூபதி
    பனவெளி,
    தஞ்சாவூர்

  4. enkaruthu

    மலேசியாவில் கடவுள் தலைவருக்கு உணர்த்துவது இதற்கு மேல் இவர் மனதுக்கு சந்தோசம் தருவது இவரின் ரசிகர்கள் மட்டுமே என்பதே.தலைவர் மட்டும் தமிழ் நாட்டில் ஒரு டூர் அடித்தால்தான் தெரியும் இந்த சீமான் போன்ற ரஜினி ( ரசிகர்களை அமைதியாக தலைவர் வைத்ருப்பதை நன்கு தெரிந்துகொண்டு)ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் சீமானுக்கு .அங்கு தமிழின தலைவர் பிரபாகரன் போராடியபொழுது இங்கு சில்க் ஸ்மிதா வைத்து சீமான் என்ற படத்தில் ஜாதி பார்க்காத இவர் நாட்டுகோட்டை செட்டியாரு என்ற பாடல் மூலம்தமிழ் நாட்டு மக்களுக்கு குலுக்கல் டான்ஸ் காட்டினார்.ஏன் அன்று இவர் தலைவரே பிரபாகரன் என்று சொல்லி கொண்டு இலங்கைக்கு போய் போரடவேண்டியதுதனே .தமிழின தலைவர் பிரபாகரனின் புகழை வைத்து இங்கு வியாபாரம் செய்யும் சீமான் போன்றோர்களை endr

  5. jegan N

    Thalaivarதலைவர் ஒரு மஹான்…

    அன்ணா தீபாவளி ரிலீஸ் ஆன் ஒரு படம் வசூல் …உண்மயா …அது பத்தி உங்கள் கருத்து …?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *