BREAKING NEWS
Search

பஞ்சு அருணாச்சலத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல்!

 இரங்கல்!

rajini

தாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகள் கொண்ட பஞ்சு அருணாசலம் (75) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஏற்கெனவே இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பஞ்சு அருணாசலத்தின் உயிர் செவ்வாய்க்கிழமை முற்பகலில் தூக்கத்திலேயே பிரிந்தது. மறைந்த பஞ்சு அருணாசலத்துக்கு மனைவி மீனா, மகன்கள் சண்முகம், சுப்பிரமணியம் (நடிகர் சுப்பு), மகள்கள் கீதா, சித்ரா உள்ளனர்.

இவருடைய மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினி கூறியதாவது: “பஞ்சு சார், உங்கள் மறைவை தனிப்பட்ட இழப்பாக உணர்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார்

-என்வழி




2 thoughts on “பஞ்சு அருணாச்சலத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல்!

  1. srikanth1974

    அமரர்’ பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *