BREAKING NEWS
Search

தாக்கரே என் தந்தைக்கு நிகரானவர்! – சூப்பர் ஸ்டார் இரங்கல் அறிக்கை

தாக்கரே என் தந்தைக்கு நிகரானவர் – சூப்பர் ஸ்டார் ஆழ்ந்த வேதனை

சென்னை: பால் தாக்கரே மரணம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்பவே பாதித்துள்ளது. என்னைப் போன்ற பலருக்கும் தந்தைக்கு நிகராகத் திகழ்ந்த அவரது மரணம் ஈடு செய்ய முடியாதது என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த ரஜினி, இன்று பிற்பகல் தாக்கரே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிந்ததும் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்தாராம்.

முன்பு எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்ற ரஜினி, நேராக பால் தாக்கரே வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து ஆசி பெற்றார்.

தனது தந்தைக்கு நிகரான பாசம் காட்டும் உயர்ந்த மனிதர் பால் தாக்கரே என்று ரஜினி அப்போது கூறியிருந்தார்.

ரஜினியைப் பற்றி எப்போதுமே மிக உயர்ந்த கருத்து கொண்டிருந்தார் பால் தாக்கரே. மும்பையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பின்பற்ற வேண்டும். தான் வசிக்கும் மண்ணுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று முன்பொரு சமயம் தாக்கரே ரஜினியைப் பாராட்டியிருந்தார்.

ரஜினியின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தபோது, சிவசேனையின் ஆதரவு பூரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆழ்ந்த இரங்கல்

தாக்கரேயின் மறைவுக்கு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார். தனது செய்தியில், “ஸ்ரீபாலாசாஹேப் தாக்கரே மாபெரும் தலைவர். நான் உள்பட பலருக்கும் ஒரு தந்தையைப் போல திகழந்தவர். அவரது மறைவு அனைவருக்கும் பெரிய இழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்த்தினருக்கும் உலகமெங்கும் உள்ள அவரது தொண்டர்களுக்கும் என் ஆழந்த இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

-ரஜினிகாந்த்

-என்று குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் இரங்கல் அறிக்கை:

 
5 thoughts on “தாக்கரே என் தந்தைக்கு நிகரானவர்! – சூப்பர் ஸ்டார் இரங்கல் அறிக்கை

 1. srikanth

  தலைவர் வழியே,நாங்களும் பிராத்திக்கிறோம்.

 2. simple fan of superstar!

  எங்கேயப்பா நம்ம சொம்பு தூக்கிங்களை காணோம் வந்துruவாngகளே ரஜினி தமிழ் மக்களை ஏமாத்துறார்நு .
  தாக்கரே அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்

 3. chozan

  ரஜினி அவர்களின் கருத்து மிகவும் உண்மையானது. மும்பை மக்கள் ஒரு பாதுகாவலரை இழந்த ஒரு உணர்வை அனுபவிக்கிறார்கள். மற்ற அரசியல்வாதிகளை போல் பதவிக்காக இனத்தை கொள்கையை விட்டுகொடுக்காதவர். தமிழர்களை போல் ஈழ ஆதரவும் அமைதிப்படையை எதிர்த்தவரும் இவரே. தமிழர்களுக்கு ஈழம் வேண்டும் என்று சொன்னவர். ஈழ மக்கள் தமிழ் தலைவர்களை நம்பியதை விட இவரை நம்பி இருந்தால் கண்டிப்பாக இந்தநிலைமை நமக்கு இருந்து இருக்காது என்று நினைக்கிறேன். பதவி இருக்கும் பொழுது பதவியை காக்க இனத்தை காட்டிகொடுப்பதும் பதவி போன பிறகு பதவிக்காக ஈழத்தையும் இனத்தையும் கையில் எடுக்கும் தலைவர்கள் மத்தியில். இவர் நினைத்து இருந்தால் பதவிக்காக மாற்றி மாற்றி கூட்டணி அமைத்தும் கூட்டணியை மிரட்டியும் பதவி பணம் என்று இந்தியாவையே பலவகைகளில் சுருட்டி இருக்க முடியும். உண்மையான சிங்கம் இவர்தான். எந்த பதவியும் வகிக்காதவர் எந்த பதவிக்காகவும் போட்டி இடாதவர். ஆனாலும் மகாராஷ்டிராவை அரசியலிலும் சரி சினிமாவையும் சரி இதுவரை இவரே ஆண்டவர். இவர் இந்துக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு பாதுகாவலர். மிக தைரியசாலி. இறந்த முப்பது நிமிடங்களில் மும்பை அடைக்கப்பட்டு விட்டது இது பயம் மட்டுமல்ல மரியாதையும் கூட. நான் மும்பையில் இருந்து அனுபவித்து இதை எழுதுகிறேன். அதற்காகவே ரஜினியும் கண்ணீர்வடித்து உள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய மனதார பிரார்த்திப்போம். நன்றி.

 4. subash

  thalaiva ne politcs ku varatha iruntha varenu sollu varalana kamal maathri varamaatenu sollu ..athula ungalugu enna thayakam …related illama nan comment post pannalam .. daily room la ungala vachu thaan sanda poodurom … varuvara maataranu… open statement kuduka ungaluku thairiyam illaya?
  0 years ah neenga periya hit kuduthu niraya producer sambathichutanga….neenga matha heros maathiri saatharana hero kidayathu neenga padam nadichu atha paathu naanga santhosha padurathuku.. athayum thandi enkayo poiteenga ..ungaluku udambu sariyillama irrukum poothu ungalukaga prayer pannavangaluku enna kaimaaru panna poren nalla movie nadikirathu naala thaan thirupikuduka mudiyum nu sollurathu new actor jeeva kooda solluvan nanga ellam ungala appadi paarkala 30 thu varshama atha thaan panringa …innum oru 15 varsham neenga uiroda irrukura varaikum makalukaga poorada vendiyathu thaanne ellarukum atha aandavan kuduka maatan …ungaluku kedachatha yen use panna mattengiringa …innum ethana varsham thaan rasigana yeematha pooringa… ?bal thakerey va unga appa maathiri solringa avara maathiri pooradavendiyathu thanae….tamilnaatula ungala thavira arasiyaluku va va nu makal yaara sir kootanga ..ungala thaana koopuduranga ….athuku kooda pathil sollalana neegal makal manasila idam pudichirukirathuku arthamae illa ya ……………unmaya solla poona rasigana yeemathi producer ah vaala vaikiringa …athaan nijam…aana unga rasigar yaarum ungala appadi paarkala ..ungala kaduvula paakuranga… yenna thaan paana pooringa thalaiva …makalukaga pooradu nee thaan makal manasula aasaya valarthuvita .thirumbavum padam nadichu makala yeemathathinga…ungalukaga illanaalum tamilnaatukaaga uyirayum kuduka nirayaperu irukanga avangaluaachum poorada va ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *