BREAKING NEWS
Search

நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் தலைவர் – சிறப்புப் படங்கள்

நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் தலைவர் – சிறப்புப் படங்கள்

Rajini-pc-book-envazhi2

Rajini-pc-book-envazhi6

Rajini-pc-book-envazhi7

Rajini-pc-book-envazhi8

Rajini-pc-book-envazhi9

Rajini-pc-book-envazhi10

Rajini-pc-book-envazhi15

Rajini-pc-book-envazhi16

thalaivar-fasting-tamileelam16

இந்த ஒரே ஒரு மனிதர் வந்த பிறகுதான் இந்த உண்ணாவிரதம் வட இந்திய தொலைக் காட்சிகளை கவனிக்க வைத்தது... அதனால்தான் அவரைத் தலைவர் என்கிறோம்!

இந்த ஒரே ஒரு மனிதர் வந்த பிறகுதான் இந்த உண்ணாவிரதம் வட இந்திய தொலைக் காட்சிகளை கவனிக்க வைத்தது… அதனால்தான் அவரைத் தலைவர் என்கிறோம்!

-என்வழி ஸ்பெஷல்
23 thoughts on “நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் தலைவர் – சிறப்புப் படங்கள்

 1. karthi

  இந்த ஒரே ஒரு மனிதர் வந்த பிறகுதான் இந்த உண்ணாவிரதம் வட இந்திய தொலைக் காட்சிகளை கவனிக்க வைத்தது… அதனால்தான் அவரைத் தலைவர் என்கிறோம்!

 2. Manoharan

  இதத்தான் நான் அன்றைக்கு சொன்னேன். ரஜினி மட்டும் மாணவர் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை கொடுத்து பின் ரசிகர்கள் உண்ணா விரதத்தை நடத்தியிருந்தால் அதன் வீச்சு இந்தியா முழுவதும் பரவியிருக்கும். எத்தனையோ போராட்டங்கள் நடந்தும் வட இந்திய சேனல்களில் தலைப்பு செய்தியாகாத விஷயம் இன்று ஒரே மனிதனால் தலைப்பு செய்தியாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் பேசக் கூட இல்லை. இவ்வளவு மக்கள் சக்தியை வைத்துக் கொண்டு 2009ல் ஏன் ரஜினி மவுனமாக இருந்தார் என்பது இன்னும் என் மனதில் தீராத வேதனையாக உள்ளது. கருணாநிதியை எல்லோரும் திட்டுகிறோம். ஆனால் ரஜினி மட்டும் 2009ல் வாய் திறந்திருந்தால் இந்திய அரசியலே அதிர்ந்து போயிருக்கும். வெகு நிச்சயமாக இவ்வளவு உயிர் பலி ஏற்ப்பட்டிருக்காது. என்னவோ போங்க ரஜினி விஷயத்தில் என் மனதில் ஒரு முள்ளாக உறுத்திக்கொண்டிருப்பது இந்த ஒரே விஷயம் மட்டும் தான்.

 3. srikanth1974

  புகைப் படங்கள் அனைத்தும் மிக அருமை.
  தலைவர் சட்ட கலரு -white
  தலைவர் வழி என்றும் -right .

 4. Raja gomez

  உண்மை உண்மை உண்மை ……காவிரி பிரச்சனையிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள் இருபிரிவாக….விசயராஜ் (விஜயகாந்த்) மற்றும் நம்ம தலைவரும் இருந்தார்….விசயராஜ் இருந்த உண்ணாவிரதம் பிசுபிசுத்து போனது.. நமது தலைவர் இருந்த உண்ணாவிரதம் ஒரே நாளில் அரசியல் ஹீரோ வானார் என்பது வரலாறு …… (பிரபல நாளிதழில் தலைப்பு செய்தியாக போட்டார்கள்)
  அதுதான் நமது தலைவர்…….

 5. Jegan

  I think due to pressure from govt,
  No actors were given mikes to speak,…otherwise they ll create new issues through their speech……..bcz colleges reopens from wednesday…

 6. Ravi

  தன் ரசிகன் குடும்பமே கஷ்டப்படகூடாது என நினைப்பவர் மாணவர் சமுதாயம் குறித்து எவ்வளவு கவலை கொள்வார்?

 7. rishi

  again sathyaraj poison talk against rajini at amaidhipadai 2 audio release function with support from many drohis from industry

 8. Mahendran

  நானும் தலைவரின் தீவிர ரசிகன் தான். மனோகரன் அவர்களின் கருத்துதான் என் கருத்தும். தலைவர் இன்னும் தன் செல்வாக்கை தமிழக மக்களுக்காக பயன்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. அவர் எந்த மக்கள் பிரச்னைக்காகவும் குரல் கொடுக்க யோசிக்கிறார். தலைவரை பிடிக்காத பலரும் என்னிடம் வாதம் செய்யும்போது என்னால் அவரை தற்காத்து பேசமுடியவில்லை. மற்ற நடிகர்கள் எப்படியோ இருக்கட்டும். அவர்களைவிட தலைவர் உயர்ந்தவர் அல்லவா? பல நல்ல குணங்கள் கொண்ட தலைவர் இதுபோன்ற விஷயத்தில் சமூக அக்கறை இல்லாதவராக இருக்கலாமா? எனக்கு தெரியும். அவர் அரசியல்வாதி அல்ல. இருப்பினும் தன்னை வாழவைத்த தெய்வங்களுக்கு அவர் எப்போது எப்படி நன்றி செலுத்தப்போகிறார்?

 9. saranya

  இந்த நாட்டில் எந்த பிரச்சனைக்காக யாரும் குரல் கொடுத்து ஒன்றும் ஆகபோவதில்லை பா. என்ன கொஞ்ச நாளைக்கி newsla போட்டு இருப்பாங்க அதுக்கு அப்பறம் எல்லாம் நார்மல் ஆயிடும்… எல்லாரும் அவங்க அவங்க வேலைகள பார்க்க போய்டுவாங்க. இதுவரைக்கும் எந்த பிரச்சனைய தீர்த்து வச்சிருக்காங்க. அந்த பிரச்சனைக்காக கடவுளே குரல் கொடுத்தாலும் ஒன்றும் ஆகபோவதில்லை. அவருக்கு தெரியும் எதற்கு எப்போது குரல் கொடுக்க வேண்டும் என்று.. காவிரிக்காக ஒரு நாள் முழுக்க உண்ணாவிரதம் இருந்தாரே அந்த பிரச்சனையை இந்த அரசியல்வாதிகள் தீர்துவிட்டர்களா?

 10. kabilan

  சரண்யா அவர்களே,அருமையாக கூறி உள்ளீர்கள்.உணமையான கருத்து.நடக்கும் உண்மை

 11. sidhique

  இங்கே ரஜினியை எதிர்த்து கருத்து சொல்பவர்களை எதிர்கொள்ள முடியவில்லை என்பதற்காக நாம் அவர் என்ன நன்றி செய்யப்போகிறார் என்று கேள்வி கேட்கும் நண்பரே ! தீவிர ரசிகன் தலைவனை சந்தேகிபபது நியாயமா ? அவரின் தீவிர ரசிகர்கள் என்ன தெளிவாக எதிர்பார்க்கிறோம் எது செய்தால் தமிழக மக்களுக்கு நன்மை விளையும் ? அரசியல் என்று மிகக் குறுகிய எண்ணஓட்டத்தை தவிர்த்து வேறு என்ன தெளிவாக ஒரு செயல், திட்டம் உள்ளது அரசுக் கட்டிலில் அமர்ந்த உடன் தமிழர்கள் எல்லாம் குடியை விடப்போகிறார்களா? ஒருகுசெலன், பாபா பட விவகாரத்தில் நடந்த உள்கட்சி அரசியலும் அதன் கேவலமான மனிதர்களை மறந்து விட்டு பேசக்கூடாது ? தலைவன் தயார் தான் ஆனால் எங்கே அந்த தலைவனின் தொண்டர்கள் ..? தொண்டன் என்பவன் தலைவன் சொன்னதை முழு நம்பிக்கையுடன் நடப்பவன் . அவர் சொன்னார், இவர் சொன்னார் தலைவர் என்ன செய்யப்போகிறார் என்று சந்தேகம் கொள்ளும் ரசிகர்கள் தான் இங்கே உண்டு வெகு சிலரே யார் சொன்னாலும் எது சொன்னாலும் என் தலைவனை நம்புகிறேன் என்று தொடர்ந்து இருப்பவர்கள். ஒன்றும் இல்லை வினோவை எடுத்துகொள்ளுங்கள் . இந்த தளத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடத்தி வருகிறார் எத்தனை வசை பாடிகள் எத்தனை கேட்ட வார்த்தை கமெண்ட்டுகள் என்று வந்திருக்கும் அவர் இது வரை ஒரு நாளாவது சோர்வை காட்டியிருகிறாரா ? தலைவனுக்கு உடல் நலம் குன்றிய போதும் அதே நம்பிக்கை என் தலைவனுக்கு எதுவும் ஆகிவிடாது அவர் வருவார் என்று மற்றவருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் தன் நிதானத்தை
  விடாமல் . எவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று சும்மா சொல்லி விடுவது எளிது ஆனால் அவர் என்ன செய்தால் நல்லது என்று எவருக்கும் தெரியவில்லை . அடுத்தவனை நோக வைத்து சீண்டி விட்டு சிரிப்பவர்கள் இருப்பார்கள் அவர்களை சமாளிக்க தெரியவில்லை என்று நம் சொந்தத வாழ்வை அடகு வைக்க முடியுமா ?

 12. kabilan

  simple fan of rajini sir ,மிக அருமையாக கூறி உள்ளீர்கள் . முதலில் அணைத்து பதிர்வகளும் தெளிவு பெறுங்கள்,தலைவர் அரசியல்வாதி அல்ல .அறிக்கை விட்டு கொண்டு இருபதற்கு.

 13. raj

  what happened to this sothairaj . why again attacking thalaivar. He is a jealousy guy, thatswhy his son is like this.

 14. Mahendran

  ஒரு சாதாரண ரசிகனாக தலைவரிடம் நான் எதிர்பார்ப்பது இதுதான். அவர் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி அழகுபார்த்த தமிழ் சமூகத்துக்கு உதவிகள் செய்யவேண்டும். தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைபோல எல்லா விஷயங்களிலும் தன் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவவேண்டும். அரசியல்வாதிகளை கண்டு அவர் பயப்படக்கூடாது. எந்த ஒரு பிரச்னையிலும் நியாயத்தை பேச தயங்ககூடாது. அவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல. இவ்வளவு மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவர் இன்னும் நிறைய சாதிக்கலாம். ஒரு நடிகனாக அவர் எவ்வளவோ சாதித்துவிட்டார். ஒரு சிறந்த குடிமகனாக அவர் இன்னும் செய்யவேண்டியது இருக்கிறது.

 15. மிஸ்டர் பாவலன்

  //அரசியல்வாதிகளை கண்டு அவர் பயப்படக்கூடாது.// (மகேந்திரன்)

  “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என ‘அறிவுடைமை” என்ற
  அதிகாரத்தில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

  உலகநாயகன் கமல்ஹாசன் இந்த திருக்குறளின் வழியில் ஆட்சியில்
  இருக்கும் அரசியல்வாதிகள், நாளை ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல்
  வாதிகள், நாளை ஆட்சிக்கு வரலாம் என்ற அரசியல்வாதிகள், விட்டுப்
  போன அரசியல்வாதிகள் என “எதுக்கு risk?” என்று சந்தர்ப்பம்
  கிடைக்கும் போதெல்லாம் எல்லாரையும் பாராட்டி வைத்து விடுவார்.
  இதை ரசிகர்கள் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *