BREAKING NEWS
Search

ஏழைகளுக்கு பால் பாக்கெட்… இது தலைவர் ரஜினி ரசிகர்களின் புது சவால்!

ஏழைகளுக்கு பால் பாக்கெட்… இது தலைவர் ரஜினி ரசிகர்களின் புது சவால்!

DSC_7243

லகமெங்கும் ஐஸ் பக்கெட் குளியல், ரைஸ் பக்கெட் தானம், மரம் நட்டு தண்ணீர் ஊற்றுதல் போன்ற சவால்கள் பிரபலமாகி வருகின்றன.

இவை அனைத்துமே ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக செய்யப்படுபவை என்பதால் மக்களின் ஆதரவும் பெருகுகிறது.

இப்போது நமது தலைவரின் ரசிகர்களான நமது சொந்தங்கள் ஒரு புது சவாலை அறிவித்துள்ளனர். அதுதான் பால் பாக்கெட் வழங்குவது. எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் காலையில் பால் வாங்க வழியில்லாமல் தவிக்கின்றனர்.

அவர்களுக்கு பால் பாக்கெட் வாங்கித் தருவதுதான் இந்த சவால்.

10643290_686991298043614_1861048973_n

நேற்று இதனை சமூக வலைத்தளங்களில் தம்பி கார்த்திக் (ஆர்பிஎஸ்ஐ) முதலில் ஆரம்பித்ததோடு, “அண்ணன் என்வழி வினோ அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..

தற்போது பரவி வரும் ஐஸ் பக்கெட் சேலென்ஜ் போன்று, தலைவர் ரசிகர்கள் சார்பாக ”சூப்பர் ஸ்டார் பான்ஸ் சேலென்ஜ்” துவக்கப்பட்டுள்ளது, இந்த முயற்சிக்கு தங்களின் அன்பான ஆதரவையும் பங்களிப்பையும் கேட்டு கொள்கிறோம்.

முதல் சாலேஞ்ச் என்வழிக்குத்தான், ஆரம்பிக்கலாமா உடன்பிறப்பே?” என்று கேட்டிருந்தார். நானும் ‘ஆரம்பிச்சிடலாம் தம்பி..’ என்றதோடு, அந்த செய்தியை ஊடகத்திலும் வெளியிட்டேன். இதோ இப்போது என்வழியிலும்…

செய்தி வெளியானதுமே உடனடியாக சக ரசிகர்கள் செயலிலும் இறங்கிவிட்டனர். அந்தந்தப் பகுதியில் உள்ள ரசிகர்கள், தங்களால் இயன்ற அளவு பால் பாக்கெட்டுகளை வாங்கி ஏழைக் குடும்பங்களுக்கு பரிசளித்தனர்.

10668198_10204698467569902_630747728_n

அந்தப் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு, சக ரசிகர்கள் மற்றும் பொது மக்களையும் இதே போன்று செய்யுமாறு சவாலுக்கு அழைத்துள்ளனர்.

சேலென்ஜில் நாமிநேட் செய்யப்பட்டவர்கள் அடுத்த  48 மணி நேரத்தில், தங்கள் பகுதியில் உள்ள ஏழ்மையான ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கும் மேற் பட்டவர்களுக்கு ஏதேனும் ஒரு நன்கொடை (உணவு, புத்தகம், பால், உடை) வழங்க வேண்டும் என்பதுதான் இதன் ஒரே விதி.

10668261_10204698466009863_1280346674_n

இந்த சேலஞ்ச் ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு பால், உணவு, உடை என வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளனர்.

என்வழி நண்பர்களே.. சவாலுக்கு தயாரா!10660862_10204698466049864_831207472_n

-என்வழி




3 thoughts on “ஏழைகளுக்கு பால் பாக்கெட்… இது தலைவர் ரஜினி ரசிகர்களின் புது சவால்!

  1. anbudan ravi

    மனித நேயம் இன்னும் இருக்கிறது என்று சொல்வதற்கு அன்புத்தம்பிகளின் இந்த செயல் எடுத்துக்காட்டு. சிறிய உதவியோ பெரிய உதவியோ முடிந்ததை செய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று……மிக்க நன்றிகள்.

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *