BREAKING NEWS
Search

‘எதிரிகள் இல்லை…’ – சூப்பர் ஸ்டார் பாடிய பாடல்!

‘எதிரிகள் இல்லை…’ – சூப்பர் ஸ்டார் பாடிய பாடல்!

IMG_9239spl copy1

‘கோச்சடையான்’ படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொந்தக் குரலில் பாடிய பாடல், ‘எதிரிகள் இல்லை’ எனத் தொடங்குகிறது.

மோஷன் கேப்சர் 3 டி எனும் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோச்சடையான்’. வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ரஜினி.

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். இவர்களுடன், சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் வருகின்றனர். கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் சொந்தக் குரலில் பாடல் ஒன்றை பாடியுள்ளது தெரிந்ததே. வைரமுத்து எழுதியுள்ள இந்தப் பாடல், ‘எதிரிகள் இல்லை’ எனத் தொடங்குகிறது. வசனமாகத் தொடங்கி பாடலாக மாறுகிறதாம் இந்தப் பாடல்.

ஏற்கனவே 1992-ல் ‘மன்னன்’ படத்தில் ‘அடிக்குது குளிரு.. ‘ என்ற பாடலை இளையராஜா இசையில் பாடிய ரஜினி, இருபது ஆண்டுகள் கழித்து இப்போது மகள் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடியிருக்கிறார்.

-என்வழி செய்திகள்




One thought on “‘எதிரிகள் இல்லை…’ – சூப்பர் ஸ்டார் பாடிய பாடல்!

  1. குமரன்

    ஆஹா, கேட்கக் காத்திருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *