BREAKING NEWS
Search

டிஎம் சவுந்திரராஜனுக்கு காலம் முழுக்க கவுரவம் தந்த சூப்பர் ஸ்டார்!

டிஎம் சவுந்திரராஜனுக்கு காலம் முழுக்க கவுரவம் தந்த சூப்பர் ஸ்டார்!

thalaivar-new2

தான் ஹீரோவாக நடித்த முதல் படத்தில் முழுப் பாடலுக்கும் முதல் குரல் கொடுத்தவர் என்பதாலோ அல்லது சிறு வயதிலிருந்தே அவர் கேட்டு வளர்ந்த குரல் என்பதாலோ என்னமோ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டிஎம் சவுந்திரராஜன் மீது தனி மதிப்பு, அபிமானம்.

டிஎம்எஸ்ஸுடன் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்ட நாளிலிருந்து, அவர் மறைந்த தருணம் வரை சூப்பர் ஸ்டார் அவருக்கு கவுரவமும் மரியாதையும் தந்து வந்தார்.
டிஎம்எஸ் மறைவதற்கு சில தினங்களுக்கு முன்பு கூட, சத்தமில்லாமல் அவரை மருத்துவமனையில் போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, எந்த உதவியாக இருந்தாலும் செய்வதாகக் கூறிவிட்டு வந்தவர் ரஜினி ஒருவர்தான்!

ரஜினி நடிக்க வந்தபோது முழுக்க முழுக்க வில்லனாகத்தான் பல படங்களில் நடித்தார். அவர் வில்லனாக நடித்த இரண்டாவது படம் மூன்று முடிச்சு. அதில் ரஜினி நான்கு வரிகளை மட்டுமே பாடுவதாக காட்சி. அதற்கு குரல் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.

பின்னர் வந்த படங்களில் அவருக்கு பாடல் காட்சிகளே இல்லை. புவனா ஒரு கேள்விக்குறியில் ஒரு பாடல். அதை எஸ்பிபி பாடியிருப்பார்.

thalaivar-tms

ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படம் பைரவி. கலைஞானம் தயாரித்த இந்தப் படத்தில் ரஜினிக்கு மூன்று பாடல்கள். அதில் நண்டூறுது, கட்டப்புள்ள குட்டப்புள்ள.. ஆகிய இரண்டு பாடல்களை டிஎம்எஸ்தான் ரஜினிக்காகப் பாடியிருப்பார்.

அதன் பிறகு வந்த தாய்மீது சத்தியம் மற்றும் அன்னை ஓர் ஆலயம் ஆகிய படங்களில் ரஜினிக்கு சில பாடல்களைப் பாடினார் டிஎம் சவுந்திரராஜன். அதன் பின்னர் ரஜினிக்கு பாடும் வாய்ப்பு டிஎம்எஸ்ஸுக்கு அமையவில்லை. ரசனை மாற்றம், ரஜினிக்கு அவர் குரல் பொருந்தி வருவதில் ஏற்பட்ட சிக்கல் என அதற்கு நிறைய காரணங்கள்… ஆனாலும் டிஎம்எஸ்ஸுக்கு ரஜினி எப்போதும் தனி மரியாதை செலுத்தி வந்தார். அவருக்கு பல தருணங்களில் ரஜினி தோள்கொடுத்திருக்கிறார்.

ரஜினியை எப்போதுமே அய்யா என்றுதான் டிஎம்எஸ் அழைப்பார். ரஜினி அவரை சித்தரே என்றே அழைப்பது வழக்கம்.

சந்திரமுகி படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் டிஎம் சவுந்திரராஜனை வரவழைத்து மரியாதை செய்தார் ரஜினி. அந்த மரியாதை டிஎம்எஸ்ஸுக்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டார் தலைவர்.

அதேபோல, தனக்கு ரஜினிகாந்த் என பாலச்சந்தர் பெயர் சூட்டிய ஹோலி தினத்தன்று திரையுலகில் தன்னை கைதூக்கிவிட்ட அத்தனை முன்னோடிகளையும் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார் ரஜினி. அதில் தவறாமல் இடம் பெற்றவர் டிஎம்எஸ்.

அதே ஆண்டில் நடந்த ராணா படத் தொடக்க விழாவுக்கு, தனது குரு பாலச்சந்தர், தனக்குப் பிடித்த இயக்குநரான மகேந்திரன், பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்ட முன்னோடிகளை அழைத்த ரஜினி, டிஎம்எஸ்ஸையும் தவறாமல் அழைத்து குத்து விளக்கேற்ற வைத்து மரியாதை செலுத்தினார்.

சில தினங்களுக்கு முன் டிஎம்எஸ்ஸுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்து, உடனடியாக மருத்துவமனைக்குப் போய் உடல் நலம் விசாரித்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்ததும் சூப்பர் ஸ்டார்தான்.

ஒரு மூத்த கலைஞரை அவரது கடைசி மூச்சுள்ளவரை மதித்துப் போற்றியவர் தலைவர் ரஜினி என்பதற்காகவே இந்தக் கட்டுரை.. சுய தம்பட்டம் அல்ல.

அமரர் டிஎம்எஸ்ஸுக்கு என்வழி மற்றும் தலைவர் ரஜினியின் ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்!

-என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “டிஎம் சவுந்திரராஜனுக்கு காலம் முழுக்க கவுரவம் தந்த சூப்பர் ஸ்டார்!

 1. கணேசன் நா

  அமரர் டிஎம்எஸ்ஸுக்கு என்வழி மற்றும் தலைவர் ரஜினியின் ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்!

  அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

 2. Jude Romesh

  வினோ, நீங்கள் கூறியது மெத்தச் சரி. இத்துடன் அனுப்பும் யு டுயுப் வலைபின்னல் முகவரி அதனை நிரூபிக்கிறது. இறுதியாக இசபேலா வைத்தியசாலையில் வைத்து சந்தித்த கடைசி நடிகன் சூப்பர் ஸ்டார் ஆகத்தான் இருக்க முடியும்.

  http://www.youtube.com/watch?feature=player_embedded&v=1NslmcbXBjw

  அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திபோம் !!!

 3. srikanth1974

  அமரர்; திரு.T .M .S .அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
  மண்ணில் என்னத் தோன்றக்கூடும் மழையில்லாதப் போது
  மனிதனோ ,மிருகமோ தாயில்லாமல் ஏது.
  தனது கம்பீரக் குரலால் தமிழ்த்திரை இசையை
  வாழ வைத்த தெய்வம் இன்று
  வானம் சென்றதேனோ?
  உலகிலே உன்மகன் நீரில்லாத மீனோ?
  இது அய்யா அவர்கள் பாடியப் பாடல் வரிகளில்
  என்னை மிகவும் கவர்ந்த வரிகள்.

 4. பிரகாஷ்

  தங்கள் வருமானத்துக்கு ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து மத்திய அரசு கொண்டு வர இருந்த சேவை வரியை எதிர்த்து திரையுலகம் உன்ணாவிரதம் இருந்த போது காலையிலேயே முதல் ஆட்களாக பந்தலுக்கு வந்த ரஜினி டி.எம்.எஸ்ஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை.

  அவரோட இறுதி சடங்குல கலந்துகிட்ட போட்டோ எதாச்சும் இருக்கா??
  இருந்த அப்லோட் பண்ணுங்களேன்..

 5. kumaran

  சோ ராமசாமி MGR இக்கு பின் அஜித் என்று கூறியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை .

 6. indumathy

  இறுதி சடங்கில் கலந்து கொண்ட நல்ல மனிதர் ரஜினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *