BREAKING NEWS
Search

ஜஸ்ட் 24 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் லிங்காவுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார்!

ஜஸ்ட் 24 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் லிங்காவுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார்!

Lingaa - envazhi special

சென்னை: ‘லிங்கா’ பட டப்பிங்கை ஓய்வெடுக்காமல் 24 மணி நேரத்தில் ரஜினி பேசி முடித்துள்ளார். அவர் வேகத்தை கண்டு படக்குழுவினர் வியந்துள்ளனர்.

‘லிங்கா’ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது டப்பிங் ரீ ரிக்கார்ட்டிங் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.

டப்பிங் ஸ்டுடியோவுக்கு சென்று ரஜினி தனது குரலைப் பதிவு செய்தார். தான் பேச வேண்டியவைகளை 24 மணி நேரத்தில் பேசி முடித்துள்ளார். டப்பிங் பணியின்போது அதிகம் அவர் ஓய்வு எடுக்கவில்லையாம். இடையில் 5 நிமிடம், 10 நிமிடம் என்று மட்டும் ஓய்வு எடுத்து விட்டு தொடர்ந்து பேசினாராம்.

அதிவேகத்தில் வசனத்தை உச்சரிப்பது தலைவர் ரஜினியின் அக்மார்க் ஸ்டைல். எண்பதுகளில் இந்தியில் அவர் இப்படி வேக வேகமாகப் பேசியதைப் பார்த்து அவரை செல்லமாக ‘கெத்திகாந்த்’ என்று அழைத்தனர். அந்த வேகம் அப்படியே இருக்கிறது அவரிடம்!

“பொதுவாக சில வரிகள் கொண்ட வசனங்களைப் பேசக் கூட பல நடிகர்கள் அதிக ‘டேக்’ எடுத்து திரும்ப திரும்ப பேசுவது உண்டு. ஆனால் ரஜினி நிறைய வரிகள் ஒரு பக்கம் கொண்ட வசனங்களைக் கூட ஒரே டேக்கில் பேசி முடித்துள்ளார். இது அவரது தொழில் ஈடுபாட்டை காட்டுகிறது,” என்றனர் ரஜினி பேசும்போது உடனிருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்.

ரஜினி அறிமுக பாடல் ஒன்றும், டூயட் பாடல் காட்சியொன்றும் மட்டுமே பாக்கி உள்ளது. இதை விரைவில் படமாக்க உள்ளனர்.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “ஜஸ்ட் 24 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் லிங்காவுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார்!

  1. கணேசன் நா

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.

  2. குமரன்

    கெத்திகாந்த் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?

  3. S Venkatesan, Nigeria

    திரு வினோ அவர்களுக்கும், தலைவரின் ரசிகர்களுக்கும், என்வழி வாசகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  4. Marthu

    கந்தேன் இருக்குமிடம் கந்தர்கோட்டம்

    எங்க அண்ணே இருக்குமிடம் போயஸ்தோட்டம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *