BREAKING NEWS
Search

ரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள் – பகுதி -3

ரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள் – பகுதி -3

சில கதைகளை யாரை மனதில் நினைத்து இயக்குநர்கள் உருவாக்குகிறார்களோ, அவர்களை வைத்து இயக்க முடியாமல் போகும். அப்படியொரு கதைதான் இயக்குநர் ஹரியின் அதிரடி வெற்றிப் படமான சாமி.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் ரஜினிதான் தலைமை விருந்தினர். பாபாவுக்குப் பின் படங்கள் பண்ணாமல் இருந்த ரஜினி இந்த விழாவுக்கு வருகிறார் என்று தெரிந்ததும், காமராஜர் அரங்கில் அப்படியொரு கூட்டம். வழக்கம்போல ஒப்பனையின்றி, தனது வெள்ளை முடி, தாடியோடு பைஜாமா குர்த்தாவில் வந்திருந்தார் தலைவர்.

அந்த விழாவில் அவரது பேச்சு, விக்ரம் வாங்கிய ஷீல்டை விட ஆயிரம் மடங்கு பெரிய விருது எனலாம். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு நிலைக்கு வந்திருந்தார் விக்ரம். இதனைக் குறிப்பிடும் வகையில், “பல வருடங்களாக கடுமையாகப் போராடி, விக்ரம் மக்கள் மனதை வென்று, சினிமாவிலும்ஜெயித்து விட்டார்,” ரஜினி அவருக்கு வெளிப்படையாக புகழாரம் சூட்டினார்.

சூப்பர் ஸ்டார் பதவி எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதை அந்த விழாவில்தான் ரஜினி சொன்னார்.

ரஜினியின் பேச்சை முதலில் தந்துவிடுகிறேன்…

“படையப்பா படத்துக்குப் பின் ஒரு சினிமா வெற்றி விழாவில் இப்போதுதான் கலந்து கொள்கிறேன். சாமி படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விஜய்குமார் சொன்னார். பார்த்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே விறுவிறுப்பு. டெம்போ எங்கேயுமே குறையலை.

இந்தப் படத்தில் ஒரு சாமி, இரண்டு சாமி, மூணு சாமி, நாலு சாமி, அஞ்சு சாமி, ஆறுசாமி என்று விக்ரம் வேகமாககூறிப் பேசுவதைப் பார்த்தபோது, அடடா, நாம் இதைச் செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

இந்தப் படத்தில் வில்லனை வித்தியாசமாக பழி வாங்குகிறார் ஹீரோ.  கெட்டவனை தந்திரம் செய்து அழிக்கிறார். அதாவது கிருஷ்ண பரமாத்மா மாதிரி. எங்கு அக்கிரமம் நடக்குமோ அங்கு தோன்றுவேன் என்று கீதையில் கூறியிருக்கிறார் கிருஷ்ணர். பத்து பேருக்கு, ஆயிரம் பேருக்கு நல்லது நடக்கும்னா, கெட்டவங்களை தந்திரம் செய்து அழிக்கலாம்.

அதில் தப்பேயில்லை. அந்த டெக்னிக்கை சாமி படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்கள். இயக்குனர் ஹரி ரொம்ப அழகா கதையை கையாண்டிருக்கிறார்.

விக்ரம் இந்த வெற்றிக்கு முழு தகுதியுடையவர். 10 வருடம் ரொம்பக் கஷ்டப்பட்டு அவர் ஜெயித்திருக்கிறார். அந்த கடுமையான போராட்டத்தின் விளைவாக இப்போது அவர் ஸ்டார் ஆகியிருக்கிறார். பாலசந்தர் சார் எனக்கு ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டார், அதனால் ஸ்டார் ஆகிட்டேன்.

விக்ரம் சேதுவில் தன்னை அடையாளம் காட்டினார். தில் மூலம் 20 சதவீத மக்கள் அவருக்கு ரசிகர்கள் ஆனார்கள். காசியில் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபிச்சார். ஜெமினியில் அவரது மாஸ் 40 சதவீதம் ஆனது.

தூள் படத்தின் மூலம் 60 சதவீத மக்களை வசீகத்தார். சாமி மூலம் 100 சதவீத மாஸையும் தன் வசப்படுத்தி விட்டார்.

நல்ல படங்கள், கேரக்டர்கள் கிடைத்தால்தான் சூப்பர் ஸ்டாராக முடியும். எனக்கு அண்ணாமலை, முத்து, பாட்ஷா, படையப்பா, வேலைக்காரன் என நல்ல படங்களும், கேரக்டர்களும் கிடைத்தன. இன்று அது விக்ரமுக்குக் கிடைத்துவருகிறது.

அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இன்னும் நிறைய நல்ல படங்களைச் செய்வார்.

சூப்பர் ஸ்டார் பதவி எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அந்தந்த கால கட்டத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பார். அது நிரந்தரமான பதவி அல்ல. யாருடைய படத்தை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்களோ, யாருடைய படத்திற்குஅதிக வசூல் கிடைக்கிறதோ, யாருடைய படங்கள் நன்றாக ஓடுகிறதோ அவர்தான் சூப்பர் ஸ்டார்.

எனக்கு எதிரி யாரும் கிடையாது, நான்தான் எனக்கு எதிரி. நண்பனும், நானே, எதிரியும் நானே.

படையப்பாதான் எனக்கு இப்போது போட்டி. அதை விட நல்ல படம் செய்யனும். நல்ல கதை, உங்களுக்கும், எனக்கும் பிடிக்கிற மாதிரி கிடைத்தால் அடுத்த படம் நச்சயம் செய்வேன்.

இங்கே வந்திருக்கும் விஜய் நேரில் பார்ப்பதற்கு ஒரு மாதிரி அமைதியாக இருக்கிறார். ஆனால், ஸ்கிரீன்ல புதுஅவதாரமே எடுத்திடறார்.

காக்க.. காக்க படத்தை மாறு வேஷத்துல போய் தியேட்டர்ல பார்த்தேன். ஒரு ஐபிஎஸ் ஆபீசர் எப்படி இருக்கனும்அப்படிங்கிறத பிசிக்கலா மட்டுமில்லாம, பாடி லாங்க்வேஜ்லயும் காட்டியிருக்கிறார் சூர்யா”, என்று மிக யதார்த்தமாகப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி பேசும்போதுதான் அந்த ரகசியத்தை சொன்னார்.
“ஆக்ஷன் கதைகள் என்றால் எப்போதும் ரஜினியைத் தவிர வேறு யாரையும் மனதில் வைத்து உருவாக்க முடியாது. அந்த வகையில் ரஜினி சார்தான் முதலில் மனதில் வந்து நிற்பார். எனக்கும், இந்த சாமி கதைக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவரோட அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர்தான் இந்த சாமியை எழுதும்போது என் மனசு முழுக்க இருந்தது.

இந்தக் கதை ரஜினி சாரிடம் சொல்லப்பட்டது. ஆனால் நான் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் ரஜினி சார் அப்போதைக்கு படம் செய்யாத சூழல் என்பதால், நான் விக்ரமை வைத்து செய்தேன்,” என்றார்.

சாமி 2003-ல் வெளியானது. சாமியில் ரஜினியை வைத்து இயக்க முடியவில்லையே என்ற ஹரியின் ஏக்கத்துக்கு அடுத்த ஆண்டே ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால்…

அது அடுத்த பகுதியில்…

ஹிஹி… தேதி சொல்றதா இல்ல… எப்ப வேணா வரும்!!

முந்தைய பகுதிகள்…

ரஜினி தெரிந்தே தாரை வார்த்த கதைகள்!– பகுதி -1

ரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள்…! – பாகம்-2

முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காமல் போனது பற்றி ஷங்கர்…

 

 
4 thoughts on “ரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள் – பகுதி -3

 1. Yuvan Rasigan

  ரஜினி அடுத்த படம் – டைரக்டர் கே.வி.ஆனந்த். இன்று ஜூனியர் விகடன் செய்தி.

  கே.வி.ஆனந்த் டைரக்டர் என்றால் ஹாரிஸ் தான் மியூசிக். வினோ & fans ரஜினி சார் + யுவன் கூட்டணி வேண்டும்.

  – யுவன் ரசிகன்

 2. r.v.saravanan

  ஹிஹி… தேதி சொல்றதா இல்ல… எப்ப வேணா வரும்!!

  எப்ப வரும் எப்படி வரும் என்பதெல்லாம் இல்லே வர வேண்டிய நேரத்திலே கரெக்டா வரும் இப்படி சொல்லுங்க வினோ

 3. LAx

  ஹிஹி… தேதி சொல்றதா இல்ல… எப்ப வேணா வரும்!!

  எப்போ தான் வரும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *