BREAKING NEWS
Search

சுந்தரபாண்டியன் – பட விமர்சனம்

சுந்தரபாண்டியன் – பட விமர்சனம்

டிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: ச பிரேம்குமார்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
தயாரிப்பு: எம் சசிகுமார்
எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன்

ண்மணக்கும் கிராமிய சூழல்.. நெஞ்சுக்குகந்த நண்பர்கள்… மனதை வருடம் காதல்..

-தமிழ் சினிமாவின் இந்த எவர்கிரீன் ஃபார்முலாவை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்கள் சசிகுமாரும் அவர் சிஷ்யர் எஸ் ஆர் பிரபாகரனும்.

சினிமா என்றல்ல… உலகில் கதைகளின் அடிப்படை ஒன்றுதான். நிகழ்வுகளே அவற்றி வேறுபடுத்திக் காட்டுகின்றன.  சொல்லும் விதத்தில் சொல்லத் தெரிந்திருந்தால் போதும்.. ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதற்கு சுந்தரபாண்டியன் இன்னும் ஒரு சாம்பிள்!

மதுரைப் பக்கத்து கிராமம் ஒன்றில் ரஜினி ரசிகனாக நண்பர்கள் சூரி, பிரபாகரன் உள்ளிட்ட பஞ்சபாண்டவ நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் சசிகுமார், காதலி லட்சுமிக்காக நடக்கும் சண்டையில் கொலைப்பழியோடு சிறைக்குப் போகிறார். சிறை மீண்டு திரும்பிய அவர் காதலியை கைப்பிடிப்பதற்குள் சந்திக்கும் நட்பு துரோகங்கள்தான் சுந்தரபாண்டியன்! (பாலு மகேந்திரா சார்.. நல்லா பாத்துக்கங்க, கதையை நாலே வரியில முடிச்சிட்டேன்!!)

கட்டு செட்டான திரைக்கதை என்பார்களே… அதை இந்தப் படத்தில் பார்க்கலாம். தேவையில்லாத திணிப்புகள் இல்லை.. போரடிக்கும் காட்சிகள் இல்லை.. முதல் பாதி படு கலகலப்பு என்றால், க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க மனதைப் பரபரக்க வைக்கின்றன காட்சிகள்.

நண்பனுக்காக தூது போய், தானே காதலனாகிவிட்ட நிலைமையை விளக்கும் காட்சி, அப்புக்குட்டியை தனியாகக் கூட்டிப் போய் கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல மென்மையாக எச்சரிக்க, அவர் அப்புராணி போலவே வெளிப்படுத்தும் வில்லத்தனம், தன்னை புறக்கணிக்கும் காதலியை அவள் சித்தி முன்பாகவே இழுத்துப் பேசமிடம்… இப்படி சொல்ல நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு.

இவற்றுக்கெல்லாம் சிகரமாக அமையும் காட்சி, சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், லட்சுமியைப் பெண் கேட்கும் விதம்… ஹீரோ ரஜினி ரசிகன் என்பதால் இந்தக் காட்சியை பாட்ஷா ஸ்டைலில் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. டாப் க்ளாஸ்!

வசனங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். ஒவ்வொன்றும் ஒரு இயல்பான பஞ்ச்தான்!

ரொம்ப இயல்பான நடிகராகிவிட்டார் சசிகுமார். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் என அத்தனை ஏரியாவிலும் முத்திரை பதிக்கிறார்.

புது நாயகி லட்சுமிக்கு இப்போதே நிறைய வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றனவாம்!

மகளின் காதலை முதலில் வெறுத்து, பின் யோசித்து, ஒப்புக் கொண்டு, நெகிழ்ச்சியோடு மகளை அணைத்துக் கொண்டு கலங்குமிடத்தில் தென்னவன் மனதில் பதிகிறார்.

முதல் பாதியில் ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் பரோட்டா சூரிக்கு. ரொம்ப இயல்பாக செய்திருக்கிறார்.

நண்பர்களாக வரும் இனிகோ, சவுந்தரராஜன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி, அந்த பாட்டிகள், சித்தி, அத்தைப் பெண் என எல்லோரும் கண்டமனூர் அல்லது சீமனூத்துக்காரர்களாகவே தெரிகிறார்கள்.

படத்தின் இசை – இளையராஜா என்றே போட்டிருக்கலாம். இரண்டாவது படத்திலேயே ரகுநந்தன் சரக்கு தீர்ந்துவிட்டது பரிதாபம்தான்.

ஒளிப்பதிவு சில காட்சிகள் நண்பனாகவும், சில காட்சிகளில் கண்களை உறுத்தும் வில்லனாகவும் தெரிகிறது. ஆனால் அந்த முள்காட்டு பயங்கரத்தை காட்சிப்படுத்தியதில் நல்ல நுட்பம்…

க்ளைமாக்ஸை நெருங்கும்போது, கொஞ்சம் சுப்பிரமணியபுரமும், நாடோடிகளும் நினைவுக்கு வருகிறது. ஆனால் முடிவை வேறுவிதமாக அமைத்ததில், இயக்குநர் பிரபாகரனின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

-வினோ

என்வழி ஸ்பெஷல்

சுந்தரபாண்டியன் – பட கேலரி
4 thoughts on “சுந்தரபாண்டியன் – பட விமர்சனம்

 1. kabilan

  வினோ அண்ணனிடம் இருந்து ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு திரை விமர்சனம் .நல்ல படம் .சசிகுமருகும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்

 2. Manoharan

  படம் நன்றாகவே உள்ளது. எல்லா கேரக்டர்களும் மனதில் பதிகின்றன. ஒரு துளிகூட போரடிக்காமல் செல்கிறது.

 3. கணேசன் நா

  வினோ சாரிடம் இருந்து ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு திரை விமர்சனம்

 4. r.v.saravanan

  படம் நல்லாருக்கு வினோ சசிகுமாருக்கு இப் படம் இன்னும் கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *