BREAKING NEWS
Search

கவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…

பேட்ட வசூலை அதிகாரப்பூர்வமாவே அறிவிப்பாங்க சன் பிக்சர்ஸ்!

சமூக வலைத்தளங்களில் சிலர் திட்டமிட்டு ரஜினியின் பேட்ட பட வசூலை குறைத்துக்காட்டியும், விஸ்வாசம் படம் தான் முதல் இடத்தில் என்றும் கூசாமல் பொய்களை அடித்து விடுகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது சன் நெட்வொர்க் என்ற மிகப்பெரிய கார்ப்பரேட்டின் அங்கம். இந்த நிறுவனம் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எந்திரன் படத்தை எடுத்தது. பட்ஜெட் கிட்டத்தட்ட 162 கோடி. அதை வெளிப்படையாகவே அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், படம் வெளியான சில நாட்களில் அதன் உண்மையான வசூல் எவ்வளவு என்பதையும் அறிவித்தது. அதன்படி எந்திரன் ரூ. 375 கோடியை குவித்ததாக தெரிவித்தது. இதனை இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களை முறைப்படுத்தும் செபி அமைப்புக்கும் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் சன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 33% உயர்ந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சாதனை இன்று கவர்கள், கோல்ட் காயின்கள் பெற்றுக் கொண்டு பொய்யான வசூல் கணக்கு விவரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் சிலருக்கு தெரிந்திருக்காது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் முதல் முறையாக முழு வசூலையும் வெளிப்படையாக அறிவித்த சன் நிறுவனம், ஒன்றுக்கு பத்தாக பொய்களை பரப்பும் இந்த வாட்ஸ்ஆப், ட்விட்டர் காலகட்டத்தில் மட்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்களா என்ன? விரைவில் பேட்ட படத்தின் முதல் நாள் மற்றும், முதல் வார வசூலை அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கவிருக்கிறார்கள்.

பின் குறிப்பு : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, அவர் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனமோ பத்திரிக்கையாளர்களையோ, ட்விட்டர் குருவிகளையோ மகிழ்விக்க கவர், கோல்டு காயின் அல்லது சரக்கு பார்ட்டி என எதையும் தந்ததில்லை என்பதை கவனத்தில் கொள்க!

– என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *