BREAKING NEWS
Search

தலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்! #Thalaivar168

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

ரஜினியை வைத்து எந்திரன், பேட்ட ஆகிய ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், மூன்றாவது இந்தப் படத்தைத் தயாரிக்கிறது,

தலைவர்168 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பணியாற்றவிருக்கும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், படப்பிடிப்பு நடக்கும் தேதி போன்றவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கிராமத்துப் பின்னணியில், குடும்பக் கதை அம்சம் கொண்ட ஜனரஞ்சகப் படமாக இந்தப் படம் அமையும் என்று இயக்குநர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

“சிறு வயதிலிருந்தே நான் மிகப் பெரிய ரஜினி ரசிகன். இப்போது அவரை வைத்து சன் பிக்சர்ஸ் பேனரில் படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் படைப்பாக இந்தப் படம் இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் படம் குறித்த விரிவான தகவல்களை வெளியிடவிருக்கிறோம்,” என்றார்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *