BREAKING NEWS
Search

இன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்! – ‘சிவாஜி வில்லன்’

இன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்! – சிவாஜி வில்லன்

Suman, Rajini in Sivaji The Boss 3D Movie Stills
னது இன்றைய நிலைமைக்கே காரணம் ரஜினி சார் தந்த வாய்ப்புதான். அவருடன்  கபாலி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. வாய்ப்புக் கிடைக்குமா? என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார் நடிகர் சுமன்.

சேலத்தில் நடந்த ஒரு பள்ளி விழாவில் பங்கேற்ற சுமன் பேசுகையில், “சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் நடித்தது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்தளவிற்கு எனக்கு அந்த படம் பெயர் பெற்று தந்தது.

இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நான் மீண்டும் பிஸியாகி பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். இந்தியில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் சிவாஜியால்தான். எல்லாவற்றுக்குமே ரஜினி சார்தான் காரணம்.

தற்போது ரஜினிசார் கபாலி படத்தில் நடிக்கிறார். இதிலும் எனக்கு நடிக்க ஆசை. வாய்ப்பு தந்தால் கட்டாயம் நடிப்பேன்.

சினிமா இண்டஸ்டிரி நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். நடிகர்கள், நடிகைகள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் ரஜினி சார். அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இதைத்தான் அவரது ரசிகர்களும் என்னைப் போன்ற அவரது அபிமானிகளும் விரும்புகிறோம்,” என்றார்.

-என்வழி




2 thoughts on “இன்றைக்கு நான் இவ்வளவு படங்கள் பண்ண ரஜினி சார்தான் காரணம்! – ‘சிவாஜி வில்லன்’

  1. Rajagopalan

    சேலத்தில் நடந்த ஒரு பள்ளி விழாவில் பங்கேற்ற மோகன் பேசுகையில் – Please correct this Mr Vino – Mohan…

  2. Rajini Arul

    தலைவரின் நல்ல மனசுக்கு நடிகர் சுமனின் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு.
    சுமன் பார்க்கலாம். தலைவரின் அருள் இருந்தால் கபாலியில் நீங்கள் நடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *